ஆதி 1 :26ஐ வைத்துக் கொண்டு பலர் தேவனுக்கு ரூபம்  இருக்கிறது என்றும், அது மனிதனைப் போல கையும் காலும் உள்ள ரூபம் என்றும் சொல்கின்றனர். நம்மைப் போல ரூபம் என்றால், இரண்டு கண், இரண்டு காது, ஒரு வாய் இப்படி எல்லாம் இருக்க வேண்டும்! அப்படிஎன்றால் இரண்டு கண் உடைய மனிதன் அமெரிக்காவை நோக்கிப் பார்க்கும்போது, ஆஸ்திரேலியாவை பார்க்க முடியாதே! அப்படியென்றால் பரலோகத்தின் தேவன் எப்படி அண்டசராசரங்களையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியும்? இதனால்தான் இந்துக்கள் ஆறுமுகம், நான்கு முகம் கொண்ட ரூபங்களை உடைய தேவர்களை வைத்துகொள்கின்றனர். ஆதி 1 :27 சொல்கின்றது. "மனுஷனை ஆணும் பெண்ணுமாக சிருஷ்டிதாராம்." அப்படியென்றால் ஆணின் ரூபமும், பெண்ணின் ரூபமும் வேறுவேறாய் இருக்கிறதே! பின்பு எப்படி இவர்களைப் போல தேவன் இருப்பார்? இதனால்தான் இந்துக்கள் பாதி ஆண் உருவமும், பாடி பெண்ணின் உருவமும் கொண்ட தேவர்களை வைத்துகொள்கின்றனர். தேவன் ஆவியாய் இருக்கிறார்; ஆவியான தேவனின் ரூபத்தை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை (யோ 4 :24 ;5 :37 ) தேவனுடைய ரூபமாய் இருந்த இயேசு (பிலி 2 : 6 ) நாம் காணும் மாமிச மனுஷரூபமாய் வந்தார்(பிலி 2 : 8 ). இதனால் தேவ ரூபம் இந்த மனுஷ ரூபம் அல்ல என அறியலாம். அப்படியானால் மனுஷனை தமது சாயலாகவும் ரூபத்தின்படியேயும் (image) எப்படி உண்டாக்கினர். ரூபம் என்ன? தேவன் ஆவியாய் இருக்கிறார்; மனுஷனும் ஆவியாய் இருக்கிறான், அவன்தான் உள்ளன மனுஷன் (2 கொரி 4 :16 ). ஆவிக்கு ஒரு மேனி உண்டென்று பவுல் சொல்லுகிறான் (1 கொரி 15 : 40 , 44 ) அப்பிடியானால் ஆவியாய் இருக்கிற உள்ளான மனுஷனுக்கு ஒரு மேனி உண்டு. இதிலே ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமில்லை. எல்லாம் ஒன்றுதான். இந்த ரூபத்தில் தான் தேவன் படைத்த உள்ளான மனுஷன் இருக்கிறான். இதுதான் தேவனின் ரூபம்; அவர் நமது புறம்பான ரூபத்தில் இல்லை. அந்த தேவனின் ரூபம் எப்படி இருக்குமென்று அவரை காணும்போது அறிவோம் என்று 1 யோ 3 : 2 ல் சொல்லப்பட்டுள்ளது. அல்லேலுயா! உள்ளான மனுஷனை தேவன் ஒன்றுமில்லாமையிலிருந்து சிருஷ்டித்தார். புறம்பான மனுஷனையோ மண்ணிலிருந்து உண்டாக்கினார். (ஆதி 1 : 27 ; 2 : 7 )