"இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான், அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்?" -  இது சினிமா பாடல் மட்டும் அல்ல; நவ நாகரிக உலகில் இது சிந்திக்க வேண்டிய பாடல். மனிதனுக்கு என் இந்த கேள்வி வருகிறது? கஷ்டங்கள், கவலைகள், கண்ணீர், வியாதிகள், மரணங்கள், விரக்திகள் வரும்போது நிரந்தரமாய் ஆறுதலும் தேறுதலும் சொல்லி சமாதானம் கொடுக்க யாருமே இல்லாதபோது, விடுதலை தர யாருமே இல்லாதபோது இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று உலகம் சொல்லும் அந்த மகா வல்லமை உள்ளவன் எங்கே என்று கேள்வி கேட்கிறான் மனிதன். நன்மையான காரியம் ஒன்று இருக்கும்போது, தீமையான ஒன்றும் இருக்கிறது என்று நம் உள்ளுணர்வு ஒப்புகொள்ளுகின்றது. மனிதன் நல்லவைகளைத்தான் அனுபவிக்க நினைக்கிறான் அதற்காய் என்னென்னவோ காரியங்களை செய்ய விழைகிறான். அனால் அவனை அறியாமலே தீமையான் ஒரு காரியம் அவனில் கிரியை செய்கிறது. இது எங்கிருந்து வந்தது. நமக்குளே இரண்டு விதமான சக்திகள் (தூண்டுதல்கள்-Power) கிரியை செய்கிறதை நாமே அறிதிருக்கிறோமே! ஒரு சக்தி கிரியை செய்யும்பொழுது தவறான எண்ணங்கள், தவறான செயல்கள் ஏற்பட்டு வாழ்வே அழிந்து போகும் அளவிற்கு ஆகின்றது. அதுதான் தீய சக்தி, இந்த தீய சக்திக்கு எதிரான ஒன்றுதான் நல்ல சக்தி, அதுதான் மகா சக்தி. இப்படி ஒரு சக்தி மனித வல்லைமைக்கு அப்பாற்பட்ட சக்தி இருப்பதால்தானே மனிதனுக்கு வரும் மரணத்திலிருந்து விடுதலையை மனித சக்தியால் கொடுக்க முடியவில்லை! மரணத்தை ஜெயிக்கக் கூடிய மனிதன் யார்? மனிதால் கூடாத ஒன்று மனிதனையே நடத்துவிக்கின்றது என்றால் அதுதான் தெய்வம். அதுதான் மகா சக்தி. அதை யார் கண்டது? இது கேள்வி. காணாததை எப்படி நம்புவது? இதுவும் கேள்வி. காற்றை யார் பார்த்தது? ஒருவனுமில்லை. ஆனால் உணர முடிகின்றதே! அப்படியேதான் தெய்வமும். இவர்தான் என்னுடைய அப்பா என்று உன் அப்பாவை நம்புகின்ற மனிதனே! அதற்கு மட்டும் எப்படி உன் உணர்வு ஒத்துழைக்கிறது?
                       பூமி, சந்திரன் மற்றும் அண்டசராசரங்கள் அனைத்தும் தமக்கென்று நியமிக்கப்பட்ட விதிமுறைக்குள் இன்றுவரை செயலாற்றுகின்றன. எந்த ஒன்றும் செயல்படுகிறது என்றால், அதை செயல்படுத்துகிற ஒரு சக்தி - உந்து சக்தி இருக்க வேண்டுமல்லவா? இயக்குனர் (Direcor) இல்லாத இயக்கம் (Movement) உண்டோ? அந்த இயக்குநரைத்தான் - மகா சக்தியைத்தான் இயற்க்கை என்று சிலர் சொல்லுகிறார்கள். இந்த இயற்கையானது (Nature) உணர்வின்றி, அறிவின்றி, இருக்குமானால் அது ஆக்ரினையில் சேர்ந்து விடும். ஆனால் இது அண்டசராசரங்களையும், அதில் வாழும் உயிரினங்களையும், மனிதனுக்கு எட்டாத அறிவோடு, சிந்தனையோடு, உணர்வோடு, வல்லமையோடு செயல்பட வைக்கிறதை கண்ணாரப்பார்க்கிறோமே! இந்த இறைவன் தானாகவே இருக்கிறவன்; இவரை யாரும் உண்டாக்கவில்லை என்று சொன்னால் பலர் அதை ஏற்க மறுக்கின்றனர் . ஆனால் விஞ்ஞானம் சொல்கின்றது. "Energy can neither be created nor be destroyed" (சக்தி அல்லது வல்லமையை சிருஷ்டிக்கவும் முடியாது; அழிக்கவும் முடியாது) என்று. எனவே தானாகவே இருக்கும் இந்த மகா சக்தியான இறைவனை அவரால் உருவாக்கப்பட்ட சிருஷ்டிபுக்களே நம்மக்கு வெளிபடுத்துகின்றன.
                      பூமி எப்போது உருவாயிற்று என்றும் அப்போது மனிதன் எங்கே இருந்தான் என்றும் யாரேனும் சொல்ல முடியுமா? பூமியின் ஆதாரங்கள் எத்தின மேல் போடப்பட்டது? கர்ப்பத்தில் இருந்து உதிக்கிறது போல் சமுத்திரம் புரண்டு வந்தபோது அதைக் கதவுகளால் தாழ்ப்பாளிட்டு அடைப்பது யார்? விடியர்காலத்துக்கும் சூரியனுக்கும் கட்டளை கொடுப்பது யார்? வெளிச்சத்திற்கும், இருளுக்கும் எல்லை நமக்கு தெரியுமா? வெளிச்சமும் காற்றும் எங்கிருந்து எப்படி வீசுகிறது என்று தெரியுமா? மழைக்கு ஒரு தகப்பன் உண்டோ? பனித்துளிகளை படைத்தவர் யார்? அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பந்தத்தை நாம் இணைக்கக்கூடுமோ? அல்லது மிருகசீரிஷத்தின் கட்டுகளை அவிழ்க்க முடியுமா? ராசிகளை அதினதின் காலத்தில் வரப்பண்ணமுடியுமா? ஆகாயத்துப்பறவைகளுக்கு ஆகாரத்தை ஆயதம்பண்ணுகிறவர் யார்? காடுப்புஷ்பங்களை விதவிதமாய் உடுத்துவிக்கிறது யார்? வாரத்திற்கு 7 நாட்களும், வருஷத்திற்கு 12 மாதங்களும் இருக்கின்றனவே எப்படி? இரவிலே சூரிய ஒளியும், பகலிலே சந்திர ஒளியும் கிடைக்காமல் செய்தது யார்? இவைகள் எல்லாவற்றிற்கும் ஒரே பதில்..... அவர்தான் கடவுள் - God - இறைவன் - கர்த்தர்.
                      உலகிலுள்ள அத்தனை ஜீவா ராசிகளையும் ஆள்வதற்கான அதிகாரம் மனிதனுக்கு எங்கிருந்து வந்தது? அந்த ஜீவராசிகளை விட அதிக அறிவு மனிதனுக்கு மட்டும் என் தேவை? ஞானமும் பலத்த அறிவும் மனிதனுக்கு மட்டும் இருக்கிறதே எப்படி? மனிதனால் ஆளப்படும் ஜீவராசிகளும் மரிக்கின்றன; மனிதனும் மரிக்கிறான்; மரித்தபின் நிலை என்ன? அவனது வாழ்வு அத்தோடு முடிந்தது என்றால் அவனுக்கு உலக வாழ்க்கை எதற்கு? இவனும் மற்ற ஜீவராசிகளைப்போலவே வாழ்ந்திருக்கலாமே! அன்பு, அறம், ஒழுக்கம், உத்தமம், கற்பு போன்றவைகள் எல்லாம் மனிதனக்கு மட்டும் எதற்கு? கட்டுபாடின்றி மனம் போன போக்கில் வாழ்ந்தாலென்ன? பாவம் செய்யக்கூடாது என்று என் மனிதன் நினைக்கிறான்? இவைகள் எல்லாவற்றிற்கும் ஒரே பதில் இறைவன்; God; கடவுள்; கர்த்தர் இருக்கிறார் என்பதுதான்.
                           குரங்கிலிருந்து மனித வந்தான் என்ற டார்வின், தன் ஆராய்ச்சியின் ஆரம்பத்திலேயே திட்டமாய் (Confirm) சொல்லாமல், I suppose என்றே எழுத தொடங்குகிறார். குரங்கிலிருந்து ஒரே ஒரு மனிதன் தான் வந்தானா? தினந்தோறும் குரங்கிலிருந்து மனிதன் வந்துகொண்டே இருக்கலாமே ஏன் வரவில்லை? அப்படி வந்திருந்தால் குரங்கு இனமே இல்லாமல் போயிருக்குமே பின் ஏன் இருக்கிறது? குரங்கிலிருந்து மனித வந்தால் குரங்கின் இரத்தத்தை டாக்டர் மனிதனுக்கு உபயோகிக்கலாமே ஏன் உபயோகிக்கவில்லை? இவைகளையெல்லாம் சிந்தனைக்காய் சொல்கிறேன்!
                                 இதை வாசிக்கும் சகோதரனே! உன்னை அறியாமலே உனக்குள்ளே தேவனைப்பற்றிய உணர்வு இருக்கிறது என்பதை மட்டும் மறந்து போகாதே! அந்த இறைவனைப்பற்றி கொஞ்சம் சிந்தித்துப்பார்! உன் வாழ்வே செழிப்பாகும்!


யார் அந்த கடவுள்?........ இதுவே உன் கேள்வி!

(குறிப்பு: "யார் அந்த இறைவன்? " என்ற செய்தியை படியுங்கள்)