SMS Question: 9884387847
(1) தேவனுடைய வார்த்தையைக் கொண்டு D. L. மூடி மூலமாய் அமெரிக் காவில் ஒரு பெரிய ஆவிக்குரிய முன் னேற்றம் உண்டாகியிருக்கும் நேரத் தில், விவேகானந்தாவை தேவன் ஏன் அனுமதித்தார்?
Answer:
 விசுவாசமுள்ள ஆபேலைக் கொல்ல, காயினை தேவனா அனுமதித்தார்? ஏதேனிலே ஏவாளைச்சோதிக்க பிசாசுக்கு தேவனா உத்திரவு கொடுத்தார்? இல்லையே! மனிதன் தன் சுயசித்தத்தில் செய்கிறான். பிசாசும் அப்படியே! அதுபோல விவே கானந்தர் தம் சித்தப்படியே செயல்பட்டார். தேவன் நேரடியாய் வந்து தடுத்து நிறுத்தும் சர்வாதிகாரி அல்ல. தேவமனுஷர்கள் மூலமே அவர் செயல்படுகிறார். ஒரு சில அசாதாரண வேளைகளில் அவர் நேரடி யாய் ஈடுபடலாம். செயல்படலாம். ஆனால் அதுவும் தேவ பிள்ளைகளின் விருப்பத்திற் கும் வேண்டிக் கொள்வதற்கும் ஏற்பத்தான். அந்த காலத்தில் விவேகானந்தருக்கு ஈ.க. மூடியின் சத்தியம் கிடைத்து அவர் இரட்சிப்புக்குள் வர தேவன் விரும்பி யிருப்பார். ஆனாலும் விவேகானந்தர் இரட்சிப்புக்குள் வரவில்லை; அது விவேகானந்தருடைய சுயசித்தம்.
(2) பூமியானது கிட்டத்தட்ட 4.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உரு வானது என்று விஞ்ஞானி சொல் கிறான். ஆனால் வேதத்தின்படி 6000 வருடங்களுக்கு முன்புதான் பூமி உண் டானது என்று பாஸ்டர் சொல்கிறார். எது சரி?
Answer:
 பாஸ்டர் சொல்வது மகா தவறு. 1ம் நாள், 2ம்நாள் என்று ஆதி 1ல் வருகிறதே அந்த 1ம் நாளிலிருந்துதான் 6010 ஆண்டுகள் ஆகின்றன. பூமியானது அந்த 1ம் நாள், 2ம் நாள் படைக்கப்படவில்லை. ஆதி 1:1 ஐ வாசித்தால் ஆதியிலே பூமி படைக்கப்பட்டது என அறியலாம். ஆதியிலே என்றால் Dateless Past  - தேதி நிர்ணயிக்க முடியாத மிகப் பழமையான காலமாகும். (யோ 1:1ல் ஆதியிலே வார்த்தையிருந்தது என்ற வசன ""ஆதியிலேயும்'' இதே பொருள்தான்) கோடானுகோடி ஆண்டுகளுக்கு முன்பே வானமும் பூமியும் படைக்கப்பட்டாயிற்று. நம்முடைய வேதம் விஞ்ஞான கண்டு பிடிப்புக்கு என்றென்றும் இசைந்தே போகும் இது உண்மையான வேதம் (படைப்பின் இரகசியம் என்ற தலைப்பில் உள்ள ஆசிரியரின் செய்திகளைப் படியுங்கள்)
(3) நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றவே வந்தேன் என்று இயேசு மத் 5:17ல் கூறுகிறார். ஆனால் இயேசுவின் மரணத்திற்குப் பின் நியாயப் பிரமா ணம் தேவையில்லை என்று உங்கள் பத்திரிகையில் எழுது கிறீர்கள். வேதத்தின்படி விளக்குங்கள்.
Answer:
 மத் 5:17ஐப் படிக்கும் நீங்கள் 5:18ஐயும் படியுங்கள். வானமும் பூமியும் ஒழிந்து போனாலும், நியாயப் பிரமாணத்திலுள்ள தெல்லாம் நிறைவேறும்போது, அவைகள் ஒழிந்துபோகும். See ரோ 10:4. மேலும், எபே 2:14,15ன்படி கிறிஸ்துவின் சரீரத்தோடு சிலுவையிலே பத்து கற்பனைகளடங்கிய நியாயப்பிரமாணம் தானாய் ஒழிந்து போகின்றது. ஏனெனில் கிறிஸ்துவே நிறை வேற்றி நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக் கிறார். மத் 5;17, 18ன் படி நிறைவேறிய பின் அழிந்து போகும், அதுவரை அழியாது. ஆமென். இயேசு நிறைவேற்றினார். தற்போது அது நமக்கு இல்லை.
(4)தற்போது ஏதேன் எங்கே இருக்கிறது?
Answer:
ஆதாமுக்குப்பின் கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளில் வந்த ஜலப்பிரளயத்தால் ஏதேனை கண்டு கொள்ள முடியவில்லை. தற்போது ஏதேனே இல்லை, அது அழிந்து போயிற்று.
(5) ஒரு கன்வென்ஷன் மீட்டிங்ல் ஒரு சுவிசேஷகர் - தசமபாகம் கொடுப்பது நமக்காக. ஏனெனில் நாம் கொடுப் பதை தேவன் நமக்காகத்தான் திரும்பத் தரப் போகிறார் என்று சொன்னார். இது உண்மையா?
Answer:
 மல் 3:10ன் படி, தசமபாகம் கொடுத்தால், தேவன் இடங்கொள்ளாமற்போகும் மட்டும் நம்மை ஆசீர்வதிப்பார். அப்படி ஆசீர்வதிப் பாரா இல்லையா என்று தேவனையே சோதித்துப் பார்க்கச் சொல்கிறார். அப்படி யானால் கர்த்தருக்குரிய தசம பாகத்தை (லேவி27:30) அவருக்குச் செலுத்தும்போது, அதனால் நமக்கு பெருத்த ஆசீர்வாதம் தேவனிடமிருந்து உண்டு. ஆமென். எனவே அந்த சுவிசே ஷகர் சொன்னது சரியே! செலுத்திய தசம பாகம் மட்டுமல்ல, வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங் கொள்ளாமல் போகுமட்டும் ஆசீர்வதிப்பார். அல்லேலூயா!
(6) மே'10 விசுவாச முழக்கம் (11) பக்கம் 14ல் வந்த ஏ.வி. ராயனின் 2வது கேள்வி நம்பக்கூடியதாக இல்லை, அது ஆச்சரியப்படத் தக்க தாகவும், எனக்குப் புதியதாகவும் உள்ளது. தயவு செய்து வேத ஆதாரத்தோடு விளக்கவும்.
Answer:
 கிறிஸ்தவ வட்டாரத்தில் நடப்பதைத்தான் அவர் கேட்டார். பிரபல ஊழியர் பென்ஹின் வழியாகத்தான் இப்படி விழுகிற முறை வந்தது. இப்படி பின்னிட்டு விழுவதெல்லாம் தேவ மகிமையால் அல்ல என்று ஆசிரிய ரின் ""தெரிந்து கொள்ளுங்கள்'' என்ற ஆராய்ச்சி செய்தியான ''இரண்டு ஊதுதல்கள்'' மூலம் விளக்கமாய் படித்து அறியலாம்.
(7) பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்று விஞ்ஞானி சொல்கிறான். இதைத்தான் கலிலேயு சொன்னான். அதை கத்தோலிக்க சபை தலைவர்கள் ஏற்கவில்லை. மாறாக, பூமியைமையமாக வைத்து அனைத்து வானராசிகள் எல்லாம் சுற்றுகின்றன என்றார்கள். எது உண்மை?
Answer:
 பூமி உருண்டையாயிருக்கிறது என்று தான் கலிலேயு சொன்னான். வேதமும் அப்படியே தான் சொல்கின்றது (ஏசா40:22). மற்றப்படி நீங்கள் சொன்னது போல் கலிலேயு சொன்னதாகத் தெரியவில்லை.

வினோத், வல்லவிளை, K.K. Dt
(1)  ஊமையர், செவிடர், குருடர் ஆகியோரைப் படைத்தது தேவனல் லவே. பின் ஏன் யாத் 4:11 இவ்வாறு கூறுகிறது?
Answer:
 ஆதி 1ம் அதிகாரத்தோடு படைப்பின் காரியம் முடிந்தது. அதன்பின் தேவன் யாரையும் படைப்பதில்லை. ஆதி 1:28ன் படி நாம்தான் பிள்ளைகளை உருவாக்குகி றோம். அதற்கு தேவனுடைய ஒத்தாசை யிருந்தால் நல்ல குழந்தை பிறக்கும். பிசாசின் ஒத்தாசையானால் இப்படிப்பட்ட அவலநிலையில் குழந்தை பிறக்கும். பொல்லாத காயீனை கர்த்தர் கொடுத்தார் என்று ஆதி 4:1 சொல்கின்றது. ஆனால் 1 யோ 3:12ன் படி அவன் பொல்லாங்கனால் உண்டாயிருக்கிறான். இந்த அடிப்படைக் கருத்தில்தான் கர்த்தர் உண்டாக்கினார் என்று யாத் 4:11ல் சொல்லப்பட்டுள்ளது. இது குறித்த ஆசிரியரின் வியாதியா? மரணமா? என்ற ஆராய்ச்சிப்புத்தகத்தில் ""குருடர்க ளை, செவிடர்களை தேவன் படைக்கி றாரா?'' என்ற செய்தியை வாசித்து தியானியுங்கள்.
(2) ஆதி 15:11-14ல் பறவைகள் உடலின் மேல் இறங்கினதால் ஆபிரகாமின் சந்ததிக்கு தண்டனை வந்ததா? அவன் பறவைகளை துரத்தினான் என்றும் எழுதியிருக்கிறதே!
Answer
 பலியிடப்பட்ட அந்த உடல்கள் வானத்திலிருந்து இறங்கி வந்து பட்சித்துப் போடும் அக்கினிக்காகவே காக்கப் பட்டிருந்ததால், பறவைகள் இறங்கினாலும் ஒன்றும் பலியிடப்பட்ட உடல்களைத் தொடவில்லை, ஆபிரகாம் அவைகளை அதற்காகவே துரத்தினான். மற்றப்படி ஆபிரகாமின் சந்ததிக்கு சாபம் வந்தது ஆதி 15:13ன் படிதான். இஸ்ரேலர்கள் அந்நிய தேச முறைமைப்படி சேவித்து வாழ்ந்ததால் அத்தனை வருஷம் அடிமைத்தனம்.
(3) எமோரியருடைய அக்கிரமம் நிறைவாகாததால் இஸ்ரேலருக்கு 430 வருடம் தண்டனை வந்ததா? அப்படி யானால் எமோரியரைப்போல அக்கிரமம் நிறைவான தேசத்தை அழிப்பாரா?
Answer:
""சாபம் நீங்கும்; தண்டனை நீங்காது'' என்ற செய்தியை ஆசிரியரின் ""விசுவாசித்தேன். ஆகையால் பேசு கிறேன்'' என்ற ஆராய்ச்சி நூலில் வாசியுங் கள். 430 வருட அடிமைத்தனம் தண்டனை அல்ல; சாபம். ஆதி 15:16ஐ வாசியுங்கள். இங்குள்ள எமோரியர் என்பது கானான் தேசத்தில் வாழும் கானானிய மக்களாகும். அவர்களின் அக்கிரமம் 100க்கு 100 வளரும் போதுதான், தேவனு டைய பிள்ளைகளான இஸ்ரேலர்கள் கானானில் நுழைந்து அவர்களை அழிப்பார்கள்; துரத்தியடிப்பார்கள். ""பிணம் எங்கேயோ அங்கே கழுகு'' (மத் 24:28) என்ற வசனம் இப்படியும் நிறைவேறும். இஸ்ரேலருக்கு 430 வருடம் அடிமைத்தனம் வந்தது அவர் களது சாபத்தால்தானே ஒழிய, எமோரியரின் அக்கிரமம் நிறைவாகாததால் அல்ல. சோதோம் கொமாரா, நோவாகால ஜலப் பிரளயம் போன்ற அழிவுகளெல்லாம் அக்கிரமம் பெருகியதால்தானே! அப்படியே இந்த உலகமும் உலகத்திலுள்ளவைகளும் ஒரு நாள் அழியப்போகிறது. இஸ்ரேலரின் 4ம் தலைமுறையில் இந்த அழிவு நிறை வேறியது. முதல் தலைமுறை லேவியன்; 2ம் தலைமுறை கோகாத்; 3ம் தலை முறை அம்பராம்; 4ம் தலைமுறை மோசே.
(4) நியாயப்பிரமாணப்படி கண்ணுக்குக் கண் பல்லுக்குப்பல் என்று தேவன் கொடுத்திருக்கிறார். மோசேயை தேவன் கொல்லவும் போகிறார் (யாத் 4:24) இந்தக் காலத்திலோ ஏழெழுபது முறை மன்னிக்கச் சொல்கிறார். மோசேயைப்போல பாவம் செய்த வரையும் மன்னிக்கிறார். ஆனபடி யால் ஆதியில் பொல்லாங்கால் சிட்சித்ததேவன் இந்த கிருபையின் காலத்தில் சிட்சிப்பதில்லை என்று நிதானிக்கலாமா?
Answer:
 சிட்சை என்பது Chastening - reprimand  நல்வழிப்படுத்த கண்டிப்பது, தண்டிப்பது. எபி 12;9ன் படி மாம்ச தகப்பன்மார் மாம்சத்தில் தண்டிப்பர். ஆவியின் தகப்பனாம் நம் ஆண்டவரோ ஆவியிலேதான் சிட்சிப்பார். நம் தேவன் பொல்லாங்கினால் சிட்சிக்கவேமாட்டார். பொல்லாங்கானது பிசாசினுடையது. எப்போதுமே நம் தேவன் நல்வழிப்படுத்த பொல்லாங்கினால் சிட்சிக்கவேமாட்டார். மோசேயின் பாவத்தை அவன் மனைவி மூலம் உணர வைத்து, இருவரும் இணைந்து பாவ அறிக்கையை விருத்த சேதன கிரியைமூலம் (யாத் 3:24-26) காட்டியதால் தான் தேவன் மோசேயை மன்னித்தார். இன்றும் அதே இதயம்தான் தேவனுக்கு. மாற்றமே இல்லை. மற்றப்படி கண்ணுக்குகண், பல்லுக்குப்பல் என்ற தண்டனை நியாயப்பிரமாணத்தோடு முடிந்ததால் இந்த கிருபையின் காலத்தில் அது இல்லை.
(5) மத் 28:19ன் படியான ஊழியம், வேதம் அனைத்தையும் கற்றபின் தான் நான் செய்ய வேண்டுமா?
Answer:
 அப் 1:8ன்படி பரிசுத்த ஆவியை அந்நிய பாஷை அடையாளத்தோடு பெற்றுக் கொண்டு, ஆவியின் வல்லமையோடு ஊழியத்திற்கு புறப்பட வேண்டும். எபி 6:1,2ல் உள்ள மூல உபதேசங்கள் தெரிந்தால் போதும்; ஊழியம் செய்யலாம். மற்றப்படி வருகை வரை நாம் வேதம் அனைத்தையும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.
(6) இரட்சிக்கப்படாத சகோதரர் களோடு - இரட்சிக்கப்பட்டும் ஞானஸ் நானம் பெற்று சபையில் சேராதவர் களோடு பிசினஸ் பண்ணலாமா?
ட 1கொரி5:9-13ஐ தியானியுங்கள். நாம் உலகத்தில் வாழ்வதால் இரட்சிக்கப்படாத வர்களோடு பிசினஸ் பண்ணலாம், தவறில் லை. ஆனாலும் நம் சத்தியத்திலி ருந்து எள்ளளவும் மாறிடக்கூடாது. இரட்சிக்கப் பட்டும் ஞானஸ்நானம் பெறாமல் சபையில் சேராமல் கடினமனதுடைய வரோடு பார்த்துப் பழக வேண்டும். அவர்களை சபையில் சேர்ப்பதற்காகவே அவர்களோடு பிசினஸ் பண்ணலாம் (1கொரி 9:20, 21 ஐ வாசியுங் கள்) எதையுமே ரோ14:21ன் படி செயல் படுத்துவோம்.
(7) பழைய ஏற்பாட்டில் எதனால் நீதிமான்கள் ஆனார்கள்? (கலா 2:16)
Answer:
 இரண்டு ஏற்பாடுகளிலும் விசுவாசத்தால் தான் நீதிமான்கள் ஆகிறார்கள். பரிசுத்த வானாய் மாறியவன், பழைய ஏற்பாட்டில் விசுவாசத்தோடு நியாயப் பிரமாணக்கிரியை களை செய்து, பரிபூரணப்பட வேண்டும் (யாக்2:22). புதிய ஏற்பாட்டிலும் விசுவாசத் தோடு இயேசுவின் ஆவியின் பிரமாணக் கிரியைகளாலே பரிபூரணமாக வேண்டும். கலா 2:16ன்படி பழைய ஏற்பாட்டில் பலர், விசுவாசமின்றி நியாயப்பிரமாணக்கிரியை களாலே நீதிமான்களாக முயற்சித்தனர். ஆனாலும் ஆக முடியவில்லை.
(8) பேதுருவை பவுல் எதற்காக எதிர்த் தார்? (கலா 2:12,13) விளக்கவும்.
Answer:
 கிறிஸ்தவர்களான யூதர்கள் மத்தியில் பேதுரு நியாயப்பிரமாண கிரியைகளை காட்டுகிறான். கிறிஸ்தவர்களான புறஜாதியா ரைக் கண்டாலோ புதிய ஏற்பாட்டு பிரமாணக் கிரியைகளை காட்டுகிறான். சுவிசேஷசத்தின் சத்தியத்திற்கு ஏற்றபடி பேதுரு நடக்க வில்லை. எனவே பவுல் எதிர்த்தான். கலா 2 முழுவதும் வாசியுங்கள்.

Beatly Choak, திண்டுக்கல்
(1) இயேசுவில் ""தேவன் 100 சதவீதம் மனிதன் 100 சதவீதம்'' என்றால் 200 சதவீதமா? அப்படியானால் அவரில் பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டி ருக்க வேண்டியதில் லையே!
Answer:
 கொலோ 2:9ன்படி தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருந்தது. ஆவியாயிரு ந்த வார்த்தையாகிய தேவன், மாம்சமானார் (யோ 1:14) பிலி 2:6-8ன்படி தம்மைத்தாமே வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலானார். இந்த மனுஷகுமாரன், சரீரப்பிரகாரமாகவே கடல்மேல் நடந்தார். மரித்தோரை உயிர்ப்பித்தார், பிறவிக்குருடர், செவிடர், முடவர் ஆகியோரை சுகமாக்கி னார், தண்ணீரை திராட்சை ரசமாக்கினார். எல்லாவற்றுக்கும் மேலாக, சொன்னபடியே சரீரத்தில் மரித்து, சொன்னபடியே உயிர்த் தெழுந்தார். எனவே தான் தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக இருந்தது என்று பவுல் கூறுகிறான். இப்படி இருக்கவைத்ததே, அவர் சரீரரீதியிலேயே ஆவியானவரை பெற்றுக்கொண்டு செயல் பட்டதால்தான். இதே தன்மையை, நிலை யை நாமும் பெற வேண்டும் என்பதால் தான் ஆவியானவரை நமக்களித்தார். ""என்னிலும் மேலான காரியங்கள் செய்வீர்கள்'' என்று தேவன் விரும்புகிறார். ஆமென். மற்றப்படி 100, 100, 200 என்ப தெல்லாம் மனிதர்களின் அறிவுக்கேற்ற கணக்கு; அவ்வளவுதான்.
சுரேஷ், அழகுமலை
(1) ஆதி 46:26,27ல் எகிப்துக்கு வந்தவர்கள் 66+யோசேப்பின் குமார்கள் மொத்தம் 70 பேர். ஆனால் அப் 7:14ல் ஏற்கெனவே இருக்கிற தன் இனத்தார் 75 பேரை அழைக்க யோசேப்பு அனுப்பினான் என்று உள்ளது. இதில் யோசேப்பையோ அவர் குமாரர்களையோ சேர்க்க முடியாது. அப்படியானால் 66 பேர் பேக மீதி 9 பேர் யார்?
Answer:
 கிரேக்க பாஷையிலுள்ள செப்டுவாஜிந்ல் மனாசேக்கும் எப்பிராயிமுக்கும் 5 பிள்ளைகள் என்று உள்ளது. ஆனால் ஆதி 46:20ல் எபிரேயு வேதத்தில் இது எழுதப்படவில்லை. இந்த 5ஐயும் சேர்த்தால் மொத்தம் யாக்கோபின் இனத்தார் 75 ஆகும். அப் 7:14ன் படி இந்த 75 பேரை அழைக்க அனுப்பினான் என்று எடுக்க முடியாது. ஏனெனில் ஆதி 46:26ன்படி  அவர்கள் 66 பேர்தான். அப்படியானால் ஸ்தேவானின் பிரசங்கம் பொய்யா? இல்லை. ஆதி 46:26ஐ வாசித்தால், இந்த 66 பேர் என்பது யாக்கோபுடைய குமாரரின் மனைவிகளைத் தவிர மற்றவர்கள். யோசேப்பு அழைத்தது இந்த மனைவி களையும் சேர்த்துத்தான். அவர்கள் 9 பேராயிருக்கலாம். ஆக மொத்தம் 66+9=75 பேர் அழைத்து வரப்பட்டனர்.
(2) மத் 9:9ல் நான் எழுந்து அவருக்கு பின் சென்றேன் என்று எழுதாமல் 3வது நபர் சொல்வதுபோல இருக் கிறது ஏன்?
Answer:
 எழுத்தாளர்கள் சிலவேலைகளில் இப்படி எழுதுவது உண்டு. 2கொரி12:2-5ல் பவுல் 3வது நபர் போல தன்னை எழுதுகிறாரே! 5ஆகமங்களிலும் மோசே, ''தேவன் மோசேயோடு பேசினார்'' என்று 3வது நபர்போல தன்னைதானே எழுதுகிறார். இது எழுத்தாளர்களின் ஒருவித கலை.
(8)  ராஜ்யத்தின் சுவிசேஷம் பிரசங்கிக் கப்பட்டது (மத் 4:23) அது என்ன?
Answer:
 தேவனுடைய ராஜ்யம் பூமிக்கு வரப் போவதை சொல்லும் நற்செய்தி இது. 1000 வருட ஆட்சியில் இது அமையும். சுவி சேஷங்கள் பலவிதம் என்ற செய்தியை ஆசிரியரின் ""தெரிந்து கொள்ளுங்கள்'' என்ற நூலில் வாசியுங்கள்.