"கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்'' - இது சரியா?
                யோபு என்ற தேவ மனுஷனின் எருது கள், கழுதைகள், ஒட்டகங்கள் போன்ற வற்றை எதிரிகள் கொள்ளை யடித்து விட்டனர், வேலையாட்கள் வெட்டிப் போடப் பட்டார்கள், அக்கினியால் சுட்டெரிக்கப் பட்டார்கள். ஆடுகளும் சுட்டெரிக்கப் பட்டன. குமாரரும் குமாரத்திகளும் பெருங் காற்றி னால் மடிந்து போனார்கள். இந்த செய்தி யோபுவுக்கு தெரிவித்தபோது, ""கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார். கர்த்தரு டைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்'' (யோபு 1:21) என்று யோபு சொல்கிறான். இந்த யோபு வின் வார்த்தையை வைத்துக் கொண்டு, கர்த்தரே மேற்கண்ட பொல் லாத காரியங்களைச் செய்தார், அல்லது அனுமதித்தார் என்று பல ஊழியர்கள் பிரசங்கிக்கிறார்கள். இது சரியா? இந்த கருகலான சத்தியத்தை தேவ ஆவி யானவர் வெளிப்படுத்துவராக!
                யோ10:10ன் படி தேவன் தந்த நமது ஆசீர்வாதங்களையும், வல்லமையையும், மகிமையையும் சாத்தான் தான், திருடு வான், கொல்லுவான், அழிப்பான். தேவ னோ நமக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் செயல்படுகிறார். நன்மையே அவரின் குணாதி சயம், செய்கை (எபே -2:10, அப்10:38; யாக்1:17) தீமை செய்வது - சோதிப்பது - எல்லாமே பிசாசின் குணாதி சயம், செய்கை (யாக்1:13) உண்மை இப்படியிருக்க, கர்த்தர் கொடு த்தார் என்ற யோபு வின் வார்த்தை சரியே! ஆனால் கர்த்தர் எடுத்தார் என்ற யோபு வின் வார்த்தை சரியல்ல, தவறானது, தேவ னைப் பற்றிய வெளிப்பாடு இல்லாமல் சொல்லப்பட்ட வார்த்தை. ""என்னை ஆட்கொண்ட இயேசு உம்மையாரென்று நானறிவேன். உண்மை உள்ளவரே, என் றும் நன்மை கள் செய்பவரே'' என்ற பாடலைப் பாடுகிற ஊழியர்கள், யோபு 2:10ல் உள்ள யோபுவின் ஆவியால் ஆட் கொண்டு, ""சாத்தானின் கையிலே அவனுக்குண்டான வையெல்லாம் இருக் கிறது, யோபுவின் மேல் கை நீட்ட அவனு க்கு அதிகாரமிருந்தும் அவனுக்கு பாது காப்பாய் தேவன் நிற்கிறார்'' (யோபு 1:12, 2:6,7) என்ற சத்தியம் புரியாமல், ""கர்த்தர் எடுத்தார்; கர்த்தர் கொடுத்தார்'' என்று எல்லா இடங்களிலும் ஏன் கல்லறை யிலும் கூடச் சொல் கிறார்கள். யோபு1:21 என்பது வேதமல்ல, தேவனுடைய வார்த் தையல்ல, இது யோபுவின் சிந்த னையில் உதித்த வார்த்தை என்பதை அறிய வேண்டும். வானத்திலிருந்து பிசாசும் அக்கினியை இறக்குவான் (வெளி13:13) என்ற அறிவு இல்லாமல், ஆடுகளையும் வேலையாட்களையும் தேவனுடைய அக்கினி சுட்டெரித்தது என்று சொன்ன யோபுவின் வேலைக் காரனைப் போல் நாம் இல்லையல்லவா!
                உபா32:39ஐ வைத்துக் கொண்டு ""கர்த்தர் கொல்லுகிறார், உயிர்ப்பிக்கிறார்'' என்று சொல்வது போல யோபு1:21ஐயும் சொல்கிறார்கள். உபா32:39ஐ வாசிக்கு முன்னே உபா32:35 முதல் வாசிக்க வேண்டும். பழிவாங்குபவர் - நியாயத் தீர்ப்பு செய்பவர் நம் ஆண்டவர். இந்த ஆண்டவர் நியாயத்தீர்ப்பிலே கொல்லு கிறார், உயிர்ப்பிக்கிறார். காயப்படுத்து கிறார், சொஸ்தப்படுத்துகிறார். இந்த நியாயத் தீர்ப்பு என்பது, ஆக்கினை யில்லாத நியாயத்தீர்ப்பு, சரித்திர நியாயத் தீர்ப்பு, இறுதி நியாயத் தீர்ப்பு போன்ற பல பிரிவுகள் உண்டு என அறிக. கொல்லுவதும் காயப்படுத்து வதும் ஆக்கினை நியாயத்தீர்ப்பு (ரோ8:1) இந்த நியாயத் தீர்ப்புகளை தேவன் செய்ய முடியும் என்று தான் வேதம் சொல்லு கிறதே ஒழிய, ஒரே மனிதனையே அவர் கொன்று  பிறகு உயிர்ப்பிக்க மாட்டார், காயப்படுத்தி பிறகு சொஸ்தமாக்க மாட்டார், அவர் எல்லோருக் கும் செய்யும் காரியங்கள் இது தான். சத்தி யத்தை அறிந்தால்தான், சாத்தானின் கட்டு களிலிருந்து முழுமையான விடுதலை கிடைக்கும். இந்த வெளிச்சத்தில் 1சாமு 2:6, 2ராஜா5:7 போன்ற வசனங் களையும் தியானியுங்கள்.
                தாலந்து பற்றிய நீதிக்கதையில், (மத் 25:14-30) கொடுத்த ஒரு தாலந்தை, பொல்லாதவனும், சோம்பலுமான ஊழிய க்காரனிடமிருந்து எஜமான் திரும்ப எடுத் துக் கொண்டான் என்று அறிகிறோம். இதை வைத்துக் கொண்டு சிலர், கொடு க்கிற கர்த்தர் எடுத்துக்கொள்வார் என்றும் நம்புகிறார்கள். அந்தக் கதையை தியானித் தால் நியாயத்தீர்ப்பின் அனுப வமே அதில் வெளிப்படும். மத்25:30ஐ வாசித்தால் அவனுக்கு தண்டனை அளிக்கப்படுகிறது என அறிகிறோம். ஆக, இடையிலே, தேவன் கொடுத்ததை திரும்ப எடுக்கவே மாட்டார்; அல்லேலூயா! இடையிலேயே திரும்ப எடுப்பது - பிடுங்குவது - திருடுவது எல்லாமே பிசாசின் வேலையாகும். ரோ 11:29ஐ வாசித்தால் அவர் கொடுத்த கிருபை வரங்கள் மாறாதவை. கொடுத்தது கொடுத்துதான். அக்கிரமச் செய்கைக் காரனாய் (Lawlessness) இருந்தாலும் கிறிஸ்தவன் தனக்குக் கொடுத்த வரங் களிலே பெரிதாய் காணப்படுகிறான் என்று மத்7:21,22ல் அறிகிறோம். தவறு செய் வதால் வரங்கள் மாறாது. ...... பாரு ங்கள். தாவீதைக்கொல்ல தேடும் சவுல், கடைசி வரை தீர்க்கதரிசன வரத்தில் நிலைத் திருந்தான். இயேசுவை சிலுவையிலே தொங்கவிடப் போகும், காய் பாவும், இயேசுவைப்பற்றிய தீர்க்க தரிசன வரத்தில் நிலைத்திருந்தான். விழுந்து போன தூதர்களுக்குக் கூட தேவன் தமது வல்லமை யை எடுத்துக் கொள்ளவே இல்லை. கொடுத்தவரங்களும் வல்லமை யும் நியாயத் தீர்ப்பிலேதான் பிடுங்கப் படும். நம் தேவன் கொடுப்பதிலே வள்ளல்,கொடுத்துக் கொடுத்து சிவந்த கரம் நம் தேவனின் கரம்.
                யோபுவுடைய காரியத்தில் கூட, தே வன் கொடுத்ததை - செல்வத்தை, பிள் ளைகளை தெய்வீக ஆரோக்கியத்தை, சமாதானத்தை, விசுவாசத்தை - பிசா சானவன் எடுத்தான் (யோபு2:7) பிசாசின்  சிறையிருப்புக்குள் யோபுவை ஆழ்த் தினான், தேவனோ யோபுவின் சிறையி ருப்பை மாற்றி, தான் கொடுத்ததை எடுத்த பிசாசின் நிலைக்கு மாறாக, மறுபடியும் இரண்டு மடங்காய் கொடுத் தார்! (யோபு 42:10) அல்லேலூயா! இதை வாசிக்கும் தேவபிள்ளையே! நம் தேவன் ""கொடுக்கிற தேவன், கொடுத்ததை எக்காரணம் கொண்டும் எடுக்காத தேவன்'' என்பதை மட்டும் மறந்துவிடாதே! ஜீவனைக் கொடுக்கவும் அந்த ஜீவன் பரிபூரணப் படவுமே அவர் வந்தார் (யோ10:10) ஆமென். தேவனால் கிடைக்கப்பட்ட ஆசீர் வாதங்களெல்லாம் உம்மைவிட்டு எடு பட்டுப் போவதற்கு காரணம் உன் பாவமே! உன் சாபமே! எல்லாவற்றுக்கும் மேலாக சாத்தானே! மாறாக, தேவன் மேல் குற்றம் சாட்டுவது அறியாமை! தேவனைப் பற்றிய அறிவு இல்லாமை! (ஓசி4:6) தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப் படியாமை! இந்த ஆமைகள் உனக்குள் புகுந்து கொள்ள இடங்கொடாதே! ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது! இயேசு சீக்கிரம் வருகிறார்! ஆயத்த மாவோம்! ஆயத்தமாக்குவோம்!!


மற்றவர்களை குற்றவாளியாகத் தீர்க்கலாமா?

               ரோ 14:4; யாக் 4:12; மத் 7:1 போன்ற வசனங்களை வைத்துக் கொண்டு, பலர் ""மற்றவர்களை குற்றவாளியாகத் தீர்க்கக் கூடாது; நியாயத்தீர்ப்பு செய்கிறவர் தேவனே'' என்று சொல்கின்றனர். இன்னும் சிலர் அப்படி குற்றவாளியாகத் தீர்ப்பதில் தவறில்லை என்கின்றனர். இது குறித்து வேதம் என்ன சொல்கின்றது என்று பார்ப் போம். மற்றவர்களை குற்றவாளியாய்த் தீர்க்கிறது சம்பந்தமாய் சொல்லப்பட்ட வசனங்கள் எந்த சந்தர்ப்பத்தில் சொல்லப் பட்டது என முதலில் உணரவேண்டும். ஆறு விதமான சந்தர்ப்ப ங்கள் இருப்பதாய் அறிகிறேன். ஒன்று:- முழுமையாய் எந்தக் காரியங்களும் தெரியாமல் ஏதோ தெரிந்தவற்றை மட்டுமே வைத்து குற்ற வாளியாய்த் தீர்ப்புச் செய்வது. இது தவறானது, என்று வேதம் சொல்கின்றது. முழுமையான  காரியம் தெரியாத போது, நியாயத்தீர்ப்பை கர்த்தரிடத்தில் விட்டுவிட வேண்டும். அவரே இருளில் மறைந்திருக் கிறவைகளை வெளியரங் கமாக்குவார் (1கொரி4:4-5) இரண்டாவது:- தேவன் ஒருவனைத் தெரிந்து கொண்டு நீதிமானாக் கியிருக்கும் போது அவனின் பழையக் காரியங்களைக் குறித்து அவன் மேல் குற்றம் சாட்டக் கூடாது. (ரோ8:33), மூன்றா வது:- மற்றவனின் வேலைக்காரனையோ, மற்றவனுக்கு உரிமை உள்ளவர்களையோ குற்றம் சாட்டவோ, நியாயந்தீர்க்கவோ, நமக்கு அதிகாரமில்லை (ரோ14:4) நான்காவது:- மற்றவர்கள் மேல் உள்ள பொறாமையினாலோ அல்லது தனக்குள்ள மேட்டிமையினாலோ கர்வத்தினாலோ மற்றவன் மீது குற்றம் சாட்டி நியாயந்தீர்ப்பது கூடாது. விரோதம், கோபம், தாபம், வீம்பு இவைகள் அதற்கு அடிப்படையாய் இருக்க கூடாது (யாக்4:10-17). ஐந்தாவது:- உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உண ராமல், உன் சகோதரன் கண்ணிலிருக் கிற துரும் பைப் பார்க்கக் கூடாது. நீங்கள் குற்ற வாளி களென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர் களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதி ருங்கள் (மத்7:1-5). ஆறாவது:- உன் சகோ தரன் உனக்கு விரோதமாய் குற்றம் செய் தால் அவனிடத்தில் தனிமையில் போய் அவன் குற்றத்தை உணர்த்த வேண்டும். அவன் செவி கொடமாற் போனால், இரண்டு மூன்று சாட்சிகளோடு அவனிடம் போ. அப்போதும் அவன் செவி கொடாமற் போனால், சபைக்கு தெரியப்படுத்து, சபைக்கும் செவி கொடமற் போனால் அவன் உனக்கு அஞ்ஞானியைப் போலவும், ஆயக்காரனைப் போலவும் இருப்பான். (மத்15:15-17)
               வேதத்திலே மற்றவர்களை குற்றவாளி யாக தீர்த்த ஒரு சில காரியங்களைப் பார்ப்போம். கொரிந்து சபையிலே ஒரு விசுவாசி அஞ்ஞானி களுக்குள்ளும் சொல்லப் படாத விபச்சாரம் செய்துவந்தான். அதைப்பவுல் ஆவியிலே உணர்ந்து, ஏன் அவனை சபையை விட்டு நீக்காமலும், அவனைப் பற்றி துக்கப் படாமலும் இறுமாப் போடு இருக்கிறீர்கள் என்று சபையாரை குற்றம் சாட்டுகிறான். அப்படிப் பட்டவனுடைய மாம்சத்தின் அழிவுக்காக அவனைச் சாத்தானுக்கு ஒப்புக் கொடுத்து தீர்ப்புச் செய்கிறான். (1 கொரி 5:1-5) இவன் செய்கிற தீர்ப்பு ஆக்கினைத் தீர்ப்பு போல தெரிந் தாலும், இயேசுகிறிஸ்துவின் வருகையிலே அவன் இணைந்து கொள்ள ஏதுவா யிருக் கும்படி தான் பவுல் செய்கிறான். நம்முடைய குற்ற ஞ்சாட்டுதலும் நியாயத் தீர்ப்பும் இப்படித்தான் இருக்கவேண்டும். நரகத்திலே தள்ளு வதற் குரிய அதிகாரம் நமக்கில்லை. அடுத்ததாக. பேதுரு யூதர்களோடு சேர்ந்து புறஜாதிகள் மத்தியிலே மாய்மாலம் செய்த தினாலே அதைக் கண்டித்து பவுல் உணர்த் தினான். சத்தியத்திற் கேற்றபடி நடவாததால், சத்தியம் தூஷிக்கப் படாதபடி பவுல் இப்படியாய் குற்றஞ் சாட்டுகிறான். (கலா 2:11-14). இது தவறல்ல, தேவையானதே! தேவ நாமம் தூஷிக்கப்படும் படி எந்த காரியம் நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்பது தவறல்ல.
               எனவே மற்றவர்களுக்குப் பயமுண் டாகும்படி, பாவம் செய்தவர்களை எல்லா ருக் கும் முன்பாகவும் கடிந்து கொள்ள வேண்டும் (1 தீமோ 5:20) எல்லா நீடிய சாந்தத்தோடும், உபதேசத்தோடும், கண்டனம் பண்ணி, கடிந்து கொண்டு புத்தி சொல்ல வேண்டும் (2தீமோ4:2). விசுவாசத்திலே ஆரோக் கியமுள்ளவர்களாய் இருக்கும்படி, கண்டிப் பாய் கடிந்து கொண்டே ஆக வேண்டும். (தீத் 1:14) கிறிஸ்துவினி மித்தம், சபையினிமித்தம், சாட்சியினிமித்தம் குற்றம் சொல்லி, திருந்த வைப்பது கிறிஸ்த வனுக்கு தேவையான ஒன்று. மேலே சொன்ன ஆறு காரியங்களை மனதில் வைத்து அப்போஸ்தலர் களின் நடபடிகளைப் பின்பற்றி இந்தக் காரியத்தில் செயல்பட வேண்டும். ஒரு சில வசனங்களை ஏனோ தானோவென்று வாசித்து விட்டு மற்றவர்  களைக் குற்றப்படுத்தி சொல்லவே கூடாது என்று திட்டமாய்ச் சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாதது; அது சபை வளர்ச்சி க்கும் ஒத்து வராதது. ஆமென்.


மீகாளுக்கு 5 பிள்ளைகளா
?

               2சாமு6:23ன்படி மீகாளுக்கு மரண மடையும் வரை பிள்ளையில்லாதிருந்தது என அறிகிறோம். தாவீதின் துதியோடு கூடிய நடனத்தை மீகாள் அவமதித்தால், அவளை தேவன் மலடியாக்கினார் என்று பிரசங்கிப் போரும் உண்டு. ""மீகாளுக்கு பிள்ளை இல்லையே ஏன்?'' என்ற தலைப்பில் ஆசிரி யரின் ""விசுவாசித்ததேன் ஆகை யால் பேசுகிறேன்''.என்ற ஆராய்ச்சிப் புத்தகத்தில் வாசித்தறியுங்கள். ஏசா66:9, மல்2:15; சங்113:9, ஆதி1:28 போன்ற பல வசனங் களின்படி தேவன் மலடியாக்குகிறவர் அல்ல, பிள்ளைகளைப் பெற சித்தமுள்ளவர் என்றும், யாத்23:26ன்படி மலடு என்பது சாபம் என்றும் அறிவோம். தேவ ஆராத னையை அவமதித்து பெண் களின் மத்தியில் ஏளனமாய்மீகாள் பேசிய தால் (2சாமு6:16,20) தேவனுக்கே முதலிட மளித்து, தேவனின் இருதயத்திற் கேற்ற வனாகிய தாவீது, தான் விரும்பிய அவ ளோடு கடைசி வரை சேராததால் அவள் பிள்ளையில்லா திருந்தாள். பிள்ளையில்லா திருப்பது என்பது வேறு, மலடியாயிருப்பது என்பது வேறு.
               ஆனால் 2சாமு21:8ல் மீகாளுக்கு 5 மகன்கள் இருப்பதாய் உள்ளது. இந்த 5 பிள்ளைகளும் ஆதரியேலின் பிள்ளைகள். இந்த ஆதரியேலுக்குத்தான் சவுல் தன் மூத்தமகளை மணமுடித்தான் (1சாமு18:19) ஆதரியேலுக்கும் மீகாளுக்கும் பிறந்தது தான் இந்த 5 பிள்ளைகளும் என்று தமிழ் வேதாகமத்தை படித்த, நம்மவர்களின் பிரசங்கத்தை நம்பி, பலர் அப்படியே நம்புகின்றனர். இது தமிழ் மொழி பெயர்ப்பின் தவறால் வந்த விளைவு. ஆனால், ஆங்கிலத்திலே Whome She brought up for Adriel என்று தான் உள்ளதே ஒழிய, Whome she begotten to Adriel என்றில்லை. Begotten என்றால் பெற்றெடுப்பது, Brought up என்றால் வளர்ப்பது. ஆதரியேலுக்கும் தன் அக்காவுக் கும் பிறந்த பிள்ளைகளைத்தான் மீகாள் வளர்த்தாள் என்று அறிகிறோம். ஆதரியே லுக்கு அவள் பெற்றெடுக்கவில்லை. ஆக, மீகாளுக்கு பிள்ளையே இல்லை என அறிகிறோம். இதனால் தாவீதின் அந்தஸ்து (Status - dignity) உயர்கிறது. தேவனின் துதியின் மேலிருந்த உன்னத உறுதிப்பாடு புலனாகிறது. தான் காதலித்த அழகிய மனைவியல்ல, ஆடுமேய்த்த தன்னை உயர்த்திய தேவனைத்துதிப்பதே மேன்மை என்று உணர்ந்து செயல்பட்டான் (2 சாமு 6:21,22) இதைவாசிக்கும் தேவபிள்ளையே சிற்றின்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பேரின்பத்தை இழந்து போகாதே!

வாக்குத்தத்தம் வேறு; ஆசீர்வாதம் வேறு

               வருடாவருடம்டிசம்பர் 31 இரவு பழைய வருட புதுவருட ஆராதனையில் பங்கு கொண் டிருப்பீர்கள் என்று நான் கர்த்தருக்குள் நம்புகின்றேன். வேதத்தின் படி ஒரு நாள் முடிகிறது சாயங்காலத்தில் தான். இரவு 12 மணியில் அல்ல. (சாயங்காலமும் விடியற் காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று என்ற வசனங்களை ஆதி 1ல் காண்க). இரவு 12 மணியில் தான் ஒருநாள் முடிகிறது என்பது ரோமசர்க்காரின் ஏற்பாடு. சூரியன் அஸ்தமிக்கும் நேரம் தான் ஒருநாள் முடியும் நேரம். எப்படியோ இன்றைக்கு எல்லாக் கிறிஸ்தவர்களும் இந்த ரோம காலண்டர் முறைமைகளையே பயன்படுத்துகின்றனர். எந்த முறைமைகளைப் பின்பற்றினாலும் வசனத்துக்கு விரோதமாய் இல்லாமலி ருந்தால் போதும். ரோ14:21ன் படி செயல்படலாம். எப்படியோ புது வருஷம் உலகப் பிரகாரமாய் கிறிஸ்தவர்கள் எல்லோ ருக்கும் டிசம்பர்31 இரவு 12 மணிக்கு பிறந்தது. அப்போது ஒவ்வொரு சபையிலும் ஒரு வாக்குத்தத்தம் சொல்லப்பட்டிருக்கும். இந்த புதிய ஆண்டில் இந்த ஒரு வாக்குத் தத்தின் படியே தான் தேவன் ஆசீர்வதிப்பார் என்று பிரசங்கம் வேறு. அப்படியானால் வேதத்தில் சொல்லப்பட்ட மற்றவாக்குத் தத்த மெல்லாம் இந்த வருஷம் நடக்காதா? வேதத் தில் சொல்லப்பட்ட அத்தனை வாக்குத் தத்த மும் விசுவாசி களுக்குத்தானே! அப்படியி ருக்க ஒன்றை மட்டும் ஏன் பிடித்துக் கொள்ள வேண்டும்? வாசிக்கிறவர்கள் சிந்தியுங்கள். அடுத்து, வாக்குத்தத்தம் என்றால் Promise ""உறுதிப்பாடு'' ""சத்திய ஒப்பந்தம்'' என்று அர்த்தம். இந்த வாக்குத்தத்தப்படி நம் தேவன் கண்டிப்பாய் செய்தே முடிப்பார். அவர் சொன்னதைச் செய்கிறவர்;செய்கிறதை சொல்கிறவர். நாம் அவரோடு ஒத்துப் போகா விட்டாலும் அவர் சொன்ன வாக்குப்படி செய்தே தீருவார். மீண்டும் வருவேன் என்று வாக்குப் பண்ணிய தேவன் நிச்சயம் வருவார். உலகத்தார் எல்லாரும் அவரை ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நிச்சயம் வருவார். கானான் தேசத்தை கொடுப்பேன் என்றவர் கண்டிப்பாய் கொடுப் பார். (ஆதி17:8) யார் பின் மாறிப் போனாலும் அவர் சொன்ன வார்த்தையில் பின்மாற மாட்டார். ஆனால் Blessings அதாவது ஆசீர்வாதம் என்பது Conditional. இதை நீ செய்தால் நான் அதைச் செய்வேன் என்று சொல்லி செய்வது. ஆனால் Promise நிபந் தனை இல்லை. இஸ்ரவேலர் பரிசுத்த ஜாதியானது ஒரு நிபந்தனையின் பேரில் தான். அதாவது தேவனின் உடன் படிக்கை யைக் கைக் கொண்டால் இந்த ஆசீர்வாத ங்கள். This is Conditional (யாத்19:5,6). இன்றைய பெரும்பாலான சபைகளிலே வாக்குத்தத்த வசனம் என்று சொல்லி ஆசீர்வாதங்களை பிரசங்கிக் கிறார்கள். அது தவறு. இதை வாசிக்கும் தேவ பிள்ளையே! வாக்குத்தத்தங்கள் எல்லாமே உனக்குத் தான். தேவையானவைகளை எடுத்து உபயோகித்து வெற்றிப் பயணம் தொட ருங்கள். நிபந்தனையோடு கூடிய ஆசீர்வா தங்களை அனுதினமும் பெற்று மகிழுங்கள். ஆசீர்வாதங்களை, வாக்குத் தத்தம் என்று சொல்லி ஏமாந்து போகாதீர்!

விசுவாசிகளுக்குத் தேவை வரமா? கனியா?

               விசுவாசிதான் ஊழியக்காரன்; ஊழியக் காரன் தான் விசுவாசி. 1பேது2:9ன் படி இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் எல்லாருமே இராஜரீக ஆசாரியக்கூட்டம். நாணயத்திற்கு இரண்டுபக்கம் இருப்பது போல, ஊழியத் திற்கும் 2 பக்கங்கள் உள்ளன. ஒன்று:- சபைக்குள் செய்யும் ஊழியம், இதற்குத் தான் 5 விதமான ஊழியர்களை தேவன் உருவாக்கியிருக்கிறார் (எபே4:11-13) இரண்டாவது:- சபைக்கு வெளியே ஊழி யம். இதற்குத்தான் நாம் ஆசாரியர்களாக் கப் பட்டோம், இதை நாமெல்லாரும் செய்யத் தான் தேவன் நமக்கு உத்தர விட்டிருக்கிறார் (மத் 28:18,20) 1 கொரி 12:8-10ல் சொல்லப் பட்ட வரங்கள் எல்லாமே எப்பொழுதுமே புறஜாதிக்காகத்தான்; ஆத்ம ஆதாயத் திற்காகத் தான் (1 கொரி 14:22, மாற் 16:20) ஆனாலும் ஒருசில வரங்கள் (விசுவாச மாகிய வரம், தீர்க்கதரிசன வரம் போன்ற வை) சபை மக்களுக்காகவே கொடுக்கப் பட்டுள்ளன. எபே4:13ன் படியான 5 ஊழி யத்தில் இல்லாத விசுவாசிகளுக்கும் வரங் கள் நிச்சயமாய் ஊழியத்திற்கு தேவைப் படுகிறது. வரங்களில்லாத ஊழியம் ஊழி யமல்ல (அப்1:8) ஆக எல்லோருக்கும் வரங்கள் தேவைப்படுகின்றது.
               மற்றப்படி, மத் 7:22,23ஐ வாசித்தால், வரங்களோடு ஊழியம் செய்தாலும், Lawlessness  அக்கிரமச் செய்கைக் காரர்கள்; அதாவது கிரமமாய் - ஒழுங்காய் - வசனப்படி செயல்படாவிட்டால் பரலோகத் தில் யாரும் பிரவேசிக்கமுடியாது. அவர்கள் அக்கினி நரகத்திற்கே சொந்தக்காரர்கள். அக்கிரமச் செய்கை என்று அறிவது எப்படி? மத்7:19,20,21ஐ வாசித்தால் பரலோக பிதாவின் சித்தம் நல்லகனிகளைக் கொடுப் பது, நல்லகனி கொடுக்கவில்லை என்றால் நரகம்தான். கிரமமாய் வசனத்தின் படி செயல்படுபவன் நல்லகனியைக் கொடுப் பான். இந்தக்கனிகள்தான் ஆவியின் கனியும், நீதியின் கனியுமாகும். (கலா 5:22, 23; பிலி 1:10; யாக் 3:18) ஆக அனைவருக் குமே கனிகள் கண்டிப்பாய் தேவை.
               பரலோகம் போக விசுவாசிகள் மட்டு மல்ல. எல்லோருக்குமே கனிகள் தேவை. அப்படியே இரண்டுவிதமான - இர ண்டு பக்கம் - ஊழியத்தில் ஒன்றான புறஜாதி களுக்கான ஊழியத்திலே வரங்கள் எல் லோருக்குமே அதிகம் தேவை; சபைக்கு ள்ளான ஊழியத்திலேயும் தேவை. இந்த  வரமுள்ள ஊழியத்தினாலே பரலோகில் கிரீட ங்கள் உள்ளன. ஆக, பரலோகம் போவது முக்கியமா? பரலோகம் போய் கிரீடம் பெறு வது முக்கியமா? இரண்டுமே முக்கியம்தான். பரலோகிலே கிரீடம் பெறாமலிருக்கும் வரைக்கும், வரங்கள் தேவையில்லை. ஆனால், பரலோகம் வரும் அனைவருக்கும் கிரீடங்கள் உண்டு என்ப தால், நமக்குத் தேவை வரமும், கனியும். வரமானது தேவ ஆவியானவரின் சித்தப்படி அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கப் படுகிறது. (1 கொரி 12:16) இதற்கு நாம் விருப்பம் தெரிவிக்கும் அந்த நோக்கமே போதுமானது. பாவிகளுக்கு ள்ளும் வரங்கள் கிரியை செய்யலாம், பரிசுத் தம் தேவையில்லை இதற்கு. ஆனால் பரலோகம் போகவோ கனிகள் தேவை. இது நமது, கிரியைகளின் பலனைப் பொறுத்தது; பரிசுத் தத்தைப் பொறுத்தது. இதற்கு விசுவாசக் கிறிஸ்தவர்களின், ஆவியான வரின் ஒத்தா சையோடு கூடிய வசன விசுவா சக்கிரியை தேவை. ஆக, மொத்தத் தில் விசுவாசிக்கு வரமும் கனியும்-இரண்டுமே- கண்டிப்பாய் தேவை. கனி மட்டும் போதும் என்பது கள்ள உபதேசம்.