ஏ.வி. ராயன், தூத்துக்குடி
(1) 1பேது 2:2ன் படி கிறிஸ்து இவ்வுலகில் பாடுகள் பட்டு பரலோகம் சென்றது போல வே நாமும் பரலோகம் செல்ல பலபாடுகள் அனுபவிக்க வேண்டுமா? நாம் பாடுகள் அனுபவிக்க வேண்டாம் என்று தானே இயேசு எல்லாபடுகளையும் ஏற்றார்?
Answer:
  பாடுகள் இரண்டு வகை (1) ஊழியத்தினி மித்தம் வரும்பாடுகள் (2) உலகக்காரியங் களால் வரும் பாடுகள். இரண்டு பாடுகளை யுமே பிசாசுதான் தருகிறான். வியாதி, வறுமை, அகாலமரணம், சமாதானக்கேடு, போன்ற பாடுகளெல்லாம் உலகக் காரியங் களால் - பிசாசினால் வருபவை. இவை களை இயேசு சிலுவையில் சுமந்து தீர்த்து விட்டார். இதை விசுவாசித்து செயல்படுகிற கிறிஸ்தவன், இந்த பாடுகளிலிருந்து விடுதலை - வெற்றி வாழ்வே வாழ்வான். இயேசு இந்த பாடுகளை படவில்லை. ஊழியத்தினிமித்தம் வரும்பாடுகளை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். அதிலே இரத்த சாட்சியாய் மரிக்கக்கூட-இயேசுவைப் போல - தேவன் தீர்மானித்திருக்கலாம். இந்த ஊழியப்பாடுகளால் கிறிஸ்துவின் வசனம் பரவுகிறது, கிறிஸ்துவின் மகிமை வெளிப்படுகிறது, ஆத்ம ஆதாயம் பெறு கிறது. இந்த பூமியிலும் வெற்றியை அனுபவிக்க முடியும், பரலோகிலும் கிரீடங்களைப் பெற்று அனுபவிப்போம்.

(2) லூக்23:41,42; அப்8:37,17:33 போன்ற வசனங்களில் பாவ அறிக்கைசெய்யாமலே ஞானஸ்நானம் பெற்றார்கள். ஆனால், தற்காலத்திலோ ஞானஸ் நானம் பெறு முன் கண்டிப்பாக பாவ அறிக்கை செய்ய வற்புறுத்துவது சரியா?
Answer:
லூக் 23:41,42ல் ஞானஸ்நானம் பற்றி இல்லை, மற்ற இடங்களிலெல்லாம் தற்காலத்தில் சொல்கிற பாவ அறிக்கை செய்ய தேவையில்லை, அது தவறானது. மற்றப்படி, ரோ10:9,10ன் படி இரட்சிக்கப் பட்டவன் - மறுபடி வார்த்தையினால் பிறந்தவன் (யோ3:3,5,1பேது1:23; யாக்1:18)  பெறுவது, பாவத்திற்கு மரித்து நீதிக்கு பிழைத்ததற்கு அடையாளமாய்த்தான் தண்ணீர் ஞானஸ் நானம். 1பேது3:21ன்படி இது தேவனோடு பண்ணுகிற உடன்படிக்கையும் கூட. அப்2: 38ன்படி, பாவமன்னிப்பைப் பெற்று விட்டேன் என்று விசுவாசித்துதான் தண்ணீர் ஞானஸ்நானம். எந்த பாவ மன்னிப்பை? யோ16:8,9ன்படி இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்காத-ஆவியானவர் உணர் த்தியும் இதுவரை கேட்காத-அந்த மகா பெரிய பாவத்தை அறிக்கை இட்டு மன்னிப்பு பெற்றுவிட்டால் போதும், மற்ற எல்லா சாதாரண பாவங்களும் - மரணத்துக் கேது வல்லாத பாவங்களும் (1யோ5:16) தானாய் மறைந்து போகும். மேலும், ஞானஸ்நானம் எடுக்கும் நாள் வரை உள்ள அத்தனை பாவங்களையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள முடியுமா? ஆவியானவர் வெளிப் படுத்துவார் என்று சொல்வ தெல்லாம், மறக்கிறார் - மன்னிக்கிறார் என்ற சத்திய த்திற்கு விரோதமானது. அவர் பழைய பாவத்தை நமக்கு ஞாபகப்படுத்து பவரல்ல. இவைகளைக்குறித்து ஆராய்ச்சிப் புத்தகங் களிலும், மாதப் பத்திரிகையிலும் ஏராளம் தாராளம் எழுதியிருக்கிறேன். தயவு செய்து வாசியுங்கள்.

(3)தேவனைத் தொழ இடமில்லாதவர்கள் ஓட்டல்களில் ரூம் வாடகைக்கு எடுத்து ஆராதித்து நற்செய்தி அறிவிக்கிறார்கள், வேத பாடம் நடத்துகிறார்கள், திருவிருந்து நடத்துகிறார்கள், இது வேத ஒழுங்கின்படி சரியா? தவறா?
Answer:
இந்த இடமாவது கிடைத்ததே என்று சந்தோசப்படுங்கள். யோ4:21ன்படி எங்கும் தொழுது கொள்ளும் காலம் இந்தக்காலம். இடமல்ல, மனமே முக்கியம், கல்யாண மண்டபங்களிலும், பீச்களிலும், தெருக்க ளிலும் நற்செய்தி அறிவிக்கிறது இல்லையே! சங் 1:1 தான் மிக முக்கியம்.

(4) இந்த வருடமும் தூத்துக்குடி நகரில் விசு வாச முழக்க கருத்தரங்கு நடை பெறுமா?
Answer:
இந்த ஆண்டு தான் பொங்கல் விடு முறையில் கருத்தரங்கு தூத்துக்குடியில் நடந்ததே! அடுத்த ஆண்டு கர்த்தரின் சித்தப் படி நடக்க ஜெபியுங்கள்.

(5) கத்தோலிக்க சபை உலக முடிவு வரை நிலைத்து நிற்குமா?
Answer:
அர்மெகதோன்யுத்தம் வரை நிலைத்தி ருக்கும்.

(6) ரோ10:4; எபேசி2:15ன் படி இயேசு கிறிஸ்துவோடு நியாயப்பிரமாணம் ஒழிந் தது. பின் ஏன் 1யோ3:4ல் நியாயப் பிரமா ணத்தை மீறுகிறதே பாவம் என யோவான் எழுதி உள்ளார்?
Answer:
"நியாயப்பிரமாணம்'' என்று 1யோ3:4.ல் தமிழில் உள்ளது. ஆங்கிலத்தில் Law   என்று உள்ளது. கிறிஸ்தவனுக்கு, Law , சட்டம், பிரமாணம், கற்பனை எல்லாமே ஆதிமுதல் கேட்ட வசனமே (1யோ2:7) இந்த வசனம் தான் பாவி என்று நியாயந்தீர்க்கும் (யோ 12:48) இதுதான் இயேசுவின் புதிய கட் டளை; ஆவியின் பிரமாணம் (யோ 13: 34, 15, ரோ8:1) இந்த பிரமாணத்தின் விரி வாக்கம் தான், இயேசுவின் உபதேசமும் அப்போஸ்தலர் உபதேசமும் (மத்28:20, யூதா17: ரோ 6:17, அப்16:4) ஒழிந்துபோன பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் ஒரு போதும் நம்மை ஆளாது.

(7) தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யான் என்று 1யோ3:9 கூறுகிறது. யோ4:5ன் படி பிறந்தவன் இன்னும் பாவம் செய்து கொண்டுதானே இருக்கிறான். 1யோ3:8ல் பாவம் செய்கிறவன் பிசாசி னால் உண்டாயிருக்கிறதாகக் கூறுகிறது. இதன் தாற்பரியம் என்ன? அநேக மாதாந் திர உபவாசக் கூட்டங்களில் கலந்து கொள்கிறவர்களிலும் சில பாவங்கள் வெளிப்படுகிறதே! விளக்கம் தேவை.
Answer:
உபவாசக்கூட்டங்கள் வல்லமையைப் பெற்றுக் கொள்ளத்தானே ஒழிய பாவங்கள் வெளிப்பட அல்ல. தேவ மனுஷனுக்கு பாவ ங்கள் எப்போதும் வெளிப்பட வாய்ப் புண்டு. 1யோ3:9ன் மூல பாஷையில், தேவனால் பிறந்தவன் பாவத்தை தொடர்ந்து செய்யா ன், பாவத்தில் நிலைத்திரான் என்று உள் ளது. அப்படி தொடர்ந்து பாவம் செய்து, பாவ த்தில் நிலைத்திருப்பவன், பிசாசினால் உண் டாகியிருக்கிறான்காயீனைப்போல(1யோ3:12)

(8)வெளி17:15ல் சொல்லப்பட்டுள்ள வேசி யார்?வெளி17:18ல்சொல்லப்பட்டமகாநகரம் எது?வெளி18:24ல்சொல்லப்பட்டஅவள்யார்?
Answer:
வெளி17:15ல் சொல்லப்பட்டது போப் மார்க்கம். வெளி17:4-6ஐ வாசித்தால் போப் அணிந்திருக்கும் உடையும், போப்மார்க்கம் பரிசுத்தவான்களை கொன்றதும் விளக்கப் பட்டிருக்கிறது. இதுகுறித்து, பழைய முழக் கங்களிலும், ஆராய்ச்சிப் புத்தகங்களிலும் விளக்கப்பட்டிருக்கிறது (See  "அந்தி கிறிஸ்துவின் மணவாட்டி'' என்ற செய்தி; விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன் என்ற நூலில்) வெளி17:18ல் வரும் நகரம் வெளி 17:5ல் சொல்லப்பட்டுள்ள மகா பாபிலோன் நகரம். அதாவது குழப்பம் நிறைந்த மதசம் பந்தமான பாபிலோனை-போப்மார்க்க த்தைக் குறிக்கிறது. வெளி18:24ல் வரும் "அவள்'' என்பது வரப்போகிற அரசியல் சம் பந்தமான பாபிலோனைக் குறிக்கிறது. இது குறித்து அக்"10 விசுவாசமுழக்கம் ""வெளி யரங்கமாக வேண்டிய தீர்க்கதரிசனங்கள் 14ல்'' வாசிக்கவும்.

கோபி, ஆவடி
(1) 2ராஜா5:27ல் குஷ்டரோகியான கேயாசி, 2 ராஜா 8:4ல் எப்படிவருகிறான்?
Answer:
குஷ்டரோகியான உடனே எலிசாவின் சமூகத்தைவிட்டு புறப்பட்டும் போய்விட்டான் (2ராஜா5:28) பிற்பாடு, கேயாசி, யோராம் ராஜாவுக்கு வேலைக்காரனாகி, எலிசா செய்த அற்புதங்களை விளக்கிச் சொல்லி யிருக்கலாம். அல்லது அவன் குஷ்ட ரோகி யாகு முன்னேயே இந்த ராஜா வோடு பேசியிருக்கலாம். குஷ்டரோகியோடு ராஜா பேசுவது அவ்வளவாய் நடக்காத ஒன்று. எனவே இந்த 2வது அனுமானமே சரியாக இருக்கலாம். வேதத்தில் இது குறித்து விளக்கமில்லை. ராஜாக்கள் புஸ்தகத்தில் உள்ள நிகழ்ச்சிகளெல்லாம் தொடர்ச்சியாய் கோர்க்கப்படவில்லை என்று முந்தி அறிக.

(2) பிரச 12:3-6 வசனங்களை விளக்கவும்?
Answer:
முதிர்வயதில் மனிதனின் சரீர நிலை எப் படியிருக்குமென்று பிர12:1-6 வரை ஞானி எழுதுகிறான். இது குறித்து பழைய முழக்கங்களில் எழுதியிருக்கிறேன். பல கணியாகிய கண் பார்வை குன்றிப் போகும். திரும் பத்திரும்ப சிறுநீர் வெளிவரும், சரீரக் காவ லாளிகளான கைகளும் கால்களும் தள்ளாடும். பெலனற்றுப் போகும். அரைக் கிற எந்திரமான பற்கள் கொஞ்சமாகும். அரவை களும் சத்தமும் ஓய்ந்து போகும், தெரு வாசலின் கதவாகிய காது கேட்காமல் போகும், அதிகாலமே விழிப்பு வரும். பயங்கள் உருவாகும். வாதுமை மரப்பூப் போல முடி நரைக் கும், வெட்டுக்கிளியால் வரும் பாரம்போல பயங்கரமான பலமில்லாத நிலை வரும், பசி எடுக்காமல் சாப்பாடு குறையும், ஆசைகள் அற்றுப்போகும், கல்லறைப் பயம் வரும், தண்டு வடம் கட்டு விடும், பொற் கிண்ணி யா கிய மண்டை நசுங்கும், உருளுகிறவைகள்- Circulatory Systems - உருளாமற்போகும்.

(3) சகோ.தாயன்பன் எழுதிய என் அழுகையும் ஆனந்தப் புது வாழ்வும் என்ற நூலைப் படித்தீர்களா?
Answer:
இல்லை. தங்களிடமிருந்தால் தயவு செய்து நான் படிக்கக் கொடுங்கள்.

வினோத், வல்லவிளை
(1) யோவேல் 1:4ன் அர்த்தமென்ன? ஆபகூக்3:16,17 இதோடு சம்பந்தப்படுமா?
Answer:
ஒரு பூச்சியின் மாற்றங்கள் சொல்லப் பட்டிருக்கிறது. பச்சைப்புழுவிலிருந்து, வெட்டுக்கிளி, வெட்டுக்கிளியிலிருந்து பச் சைக்கிளி, பச்சைக்கிளியிலிருந்து முசுக் கட் டைப்பூச்சி, இது இஸ்ரேலரின் கடைசி காலத்தில் படிப்படிப்படியாய் நடக்கப்போகும், புறஜாதியார்காலம், அர்மக தோன் யுத்தம், இஸ்ரேலர் கூட்டிச்சேர்தல், ராஜ்ய ஆசீர் வாதம் போன்ற பல காரியங்களை திருஷ்டாந்தப் படுத்துகிறது. இதற்கும் ஆபகூக் 3:17க்கும் சம்பந்தமில்லை.

(2) யோவேல் 2:3-10ஐ விளக்கவும்
Answer:
கர்த்தரின் பகிரங்க வருகைக்குமுன் இஸ்ரேலருக்கு எதிராக வடதிசையிலிருந்து எழும்பப்போகும் (சிரியா மற்றும்பாபிலோன், அசீரியா) அந்திகிறிஸ்துவின் ராஜ்யத்தை அழிக்ககிளம்பும் தேவனின் சேனையைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. இது இயற்கைக்கு அப்பாற்பட்ட நிலையில் செயல்படும்.

(3)யோனா எதற்காக எப்போதும் என்பிராணனை எடுத்துக்கொள்ளும் என்கிறார் (4:1-3,8,9) நினிவே மக்கள்மனந்திரும்பியதால் மகிழ்ச்சியடையவேண்டுமே!(யோனா 3)
Answer:
"நினிவே கவிழ்க்கப்படும் இன்னும் 40 நாளில்'' என்று கர்த்தர்சொன்னதையோனா பிரசங்கித்து, நினிவே பட்டணத்தாரின் மன மாற்றத்தால் அது நடக்கவில்லை என்பதற் காக சந்தோசப்படாமல், ஊழியத்திற்கு வரா மல் தர்ஷீக்குப் போனவனை திரும்ப அழைத்து வந்து பிரசங்கிக்க வைத்தது வீணென்று எண்ணி, இப்படி வார்த்தைகளைச் சொல் கிறான். தேவனின் மாறாத சித்தத்தை உணராதவனாய் தன் அறிவுக் கேற்ற சிந்தனையில் இப்படிச் சொல்கிறான்.

(4) R.C.சபையில் உள்ளவர்களிடம் எதைப்பற்றி அதிகமாய் சொல்லி, அவர்களை இரட்சிப்புக்குள் கொண்டு வரலாம்?
Answer:
யோவான்3:3,5ன்படி பிறவாவிட்டால் பர லோகம் கிடையாது என்று சொல்லி ரோ 10:9,10ன் படி அவர்களை இரட்சிப்புக்குள் கொண்டு வர வேண்டும். இரட்சிக்கப்பட்ட பின், அப்2:40ஐ விளக்கி, அந்த சபையை விட்டு வெளிவரச் செய்து, ஆவிக்குரிய சபை யில் இணைக்க வேண்டும். இயேசுவின் உபதேசம், அப்போஸ்தல உபதேசம் ஆகிய வற்றால் அவர்களை வளர்க்க வேண்டும்.

(5)இரட்சிக்கப்படாத சபையைச் சார்ந்த புத்தகங்களோ, திருக்குறள் போன்ற புறஜாதிகளின் பாடமோ நல்லதாக இருந் தால் அதன்கருத்தை நம் வாழ்க்கை யின் அடிச்சுவடாக ஏற்றுக் கொள்ளலாமா?
Answer:
எந்த கருத்துக்களும் நம் வேத வசன த்திற்கு ஒத்திருந்தால், அவைகளை ஏற்றுக் கொள்ளலாம். தவறில்லை.

ராஜாசிங், சேர்வைக்காரன்மடம், தூத்துக்குடி
(1) "இயேசு சுவாமி'' என்று ஜெபிப்பது மகா பாவம் என்றும், அந்நிய தெய்வத் திற்கு சமமாக்கப்படுகிறதென்றும், கேள்வி நேரம் பகுதியில் எழுதப்பட்டுள்ளது. அந்த காலகிறிஸ்தவ பாடல்களிலும், வீரமா முனிவரும் கூட சுவாமி என்று பாடியிருக் கிறார்கள். யோனா1:6ல் சுவாமி நம்மை நினைத்தருளுவார் என்றும் யோனா 1:14ல் அப்பொழுது அவர்கள் கர்த்தரை... "தேவரீர் கர்த்தர் உமக்கு சித்தமானதை செய்கிறீர்'' என்கிறார்கள். இந்த காரியம் அந்நிய தெய்வத்தை அழைப்பதா?
Answer:
அந்தகால கிறிஸ்தவ பாடல்களோ, வீரமா முனிவரோ நமக்கு வழிகாட்டியல்ல, வேதமே நமக்கு வெளிச்சம் (நீதி 6:23) இதனால்தான் "ஆட்களைப் பாராதே ஆண்டவனைப்பார்'' என்று அடிக்கடி நான் எழுதுகிறேன். மாலுமிகள், யோனா1:14ல் கர்த்தர், தேவரீர் என்று சொன்னாலும், யோனா1:6ல் ""சுவாமி'' என்று நம் தேவனை அழைக்கிறார்கள் என்று தமிழில் உள்ளது. சுவாமி என்ற வார்த்தைக்கு நியா,17:5ல் god  என்று எழுதப்பட்டுள்ளது. நம் தேவ னை God  என்றுதான் எழுதப்படும். அந்நிய தெய்வங்களை எல்லாம் gods  (சிறிய எழுத்தில்) என்று தான் வேதத்திலே எழுதப் படும். (யாத்15:11, சங்89:6, 86:8, 16:4; 1கொரி8:5,6). இந்த அந்நிய தெய்வ ஞ்ர்க் என்ற வார்த்தைதான் ""சுவாமி'' என்று அழைக்கப்பட்டிருக்கிறது. எனவே நம் தேவன், god  - சுவாமி - அல்ல, நம் தேவன் God  -கர்த்தர். எனவே பல கிறிஸ்தவ பாடலாசிரியர்கள் வெளிப்பாடில்லாமல் வசனத்தை அறியாமல் எழுதியிருப்பதால் அதைஏற்றுக் கொள்வது வசனவிரோதம். தற்கால த்தில் இயேசு வந்தபிறகு வெளியரங்க மாகாத மறை பொருளோ, இரகசி யமோ இல்லை (லூக் 12:2). ஆமென்.

(2) R.C.யாய் C.S.I.யாய் இருந்து மனந் திரும்பி பரிசுத்த ஆவியைப் பெற்று வாழ் கிறவர்கள் உண்டு. பிறமதங்களி லிருந்து இயேசுவை ஏற்பவர்கள்உண்டு.காணாமல் போன ஆடுகள் கண்டு பிடிக்கப்பட வேண் டாமா? வேசிகள், ஆயக்காரர் கள்வன் இரட்சிக்கப்பட்டு பரதேசில் இருக்கவைத்தாரே ஆண்டவர்! "பாரம்பரிய கிறிஸ்தவர்கள்-தொடாதே ருசிபாராதே'' என்றுபழைய மாவையே ஆட்டுவதில் என்ன மேன்மை?
Answer:
மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டவன் அப் 2:40ன் படி, சத்திய மாறுபாடு ஜீவிய மாறு பாடுள்ள சந்ததியை விட்டுவிலக வேண்டா மா? அப்2:47ன் படி இரட்சிக்கப்படுகிறவர் களின் கூட்டமே சபை (அப்11:26) அந்த சபையில் இணையாமல், இரட்சிக்கப்பட்ட பின்னும் இயேசுவின்மரணத்தையும்உயிர்த் தெழுதலையும் அவமாக்கும் பழைய, ""குழந் தை ஞானஸ்நானம்'' கொடுக்கும் சபை யிலும், ஆசாரிய முறைப்படி அங்கி, கச்சை மற்றும் செயல் பாடுகளை செய்யும் சபை  யிலும், ஈனச் சிலுவைக்கு துண்டு, மகிமை செலுத்தி, விக்ரக வழி பாடு கள் செய்யும் சபையிலும், கொலே2:16,17ன் படியான கிறிஸ்துவுக்கு நிழலாட்டமான பண்டிகை களை கொண்டாடி முதலாம் வருகையை அவமதிக்கும் சபையிலும் இருக்கலாமா? சிந்தியுங்கள். நீதிமான்களாக்கப்பட்டவர் களின் ஆவிக்குரிய சபை தான் கிறிஸ்தவ சபை. இதில் இல்லாதவர் கள் பாவிகள் ( சங் 1:5). எபி6:1,2ன்படியான மூல உபதேச சபை யில் இணையாதவர்கள் இரட்சிக்கப் பட்டும், பாரம்பரியமாய் - பெயர்க் கிறிஸ்தவர்களாய் இருப்பவர்கள்தான். சிந்தியுங்கள், செயல் படுங்கள், வசனப்படி நடங்கள். இரட்சிக்கப் பட்ட பின்னும் பிற மதத்திலேயே இருக்க லா மா? பெயர்க் கிறிஸ் தவ மற்றும் பாரம்பரிய சபைகளில் இருக்கலாமா? விசுவாசிக்கும் அவி சுவாசி க்கும் சம்பந்தமேது?(2கொரி6)

(3) K.P. யோகன்னானுக்கு பேராயர் பட்டம் கொடுத்ததில் உங்களுக்கு ஏன் பொறாமை? சாம் ஜெபதுரை, மோகன் சி.லாசரஸ், வின்சென்ட்ராஜ் மூலமும் DGS மூலமும் ஆவிக்குரிய அனுபவம் பெற்று ஊழியம் செய்பவர்கள் இல்லையா? நான் சொல்வதுதான் சரி என்றுவாதிடக்கூடாது.
Answer:
யோகன்னானுக்கு பட்டம் கொடுத்ததில் பொறாமை இல்லை, குழந்தை ஞானஸ் நானம் கொடுக்கும் பாரம்பரிய சபையாரிடம் பட்டம் வாங்கியிருக்கிறார் என்று தான் வரு த்தம், இந்த நிலைபிரித்தெடுக்கப்பட்டகிறிஸ்த வனுக்கு அழகல்ல என்பது தான் என் வாதம் (யோ17:16) ஆவிக்குரிய சபை ஊழியர் சாம் ஜெபதுரை, பாரம்பரிய-பெயர் கிறிஸ்தவ-சபை ஊழியர்களை சேர்த்து ஊழியம் செய்கி றாரே என்பது தான் என் ஆதங்கம். மாறு பாடுள்ள சந்ததியோடு அவருக்கென்ன ஐக்கி யம் என்பது தான் என் கேள்வி. அந்த ஊழி யர்கள் மூலம், அநேக ஊழியர்கள் எழும் பட்டும். ஆனால், மாறுபாடானசத்தியமுறை களுடைய ஊழிய சந்ததிகள் அவர்கள் மூல மாய் எழும்பி, ஆவிக்குரிய சந்ததி யை கெடுத்து விடக்கூடாது என்பது தான் என் கவலை. வசனத்தை, ஆவியாகிய இரு தய த்தில் எழுதி (எபி8:10) அதன்படி நடப் பவனே (ரோ)ஆவிக்குரியவன்,ஆவிக்குரியஊழியன். அடிப்படைச் சத்தியத்திற்கு விரோத மாய் (எபி6:12) எழும்புகிறயாரும் ஆவிக் குரிய ஊழியனல்ல, அப்படிப் பட்டவர்களை எழுப்பு கிறவர்களும் ஆவிக்குரியஊழியர்கள்அல்ல.