ஆவியானவர் "டிக்டேட்(Dictate)'' பண்ணி எழுதப்பட்டதுதான் வேதமா?
        வேத வாக்கியங்கள் எல்லாம் இரட்சிக்கப் பட்ட தேவ மனுஷன் தேறினவ னாவதற்கு எழுதப்பட்டது. எந்த நற்கிரியையும் செய்யத் தகுதியாக்க எழுதப்பட்டது (2 திமோ. 3:16,17). இப்படி நன்மைக்காகவே கொடுக்கப்பட்ட வேத வார்த்தை, அதுவும் விசேஷமாய் பழைய ஏற்பாட்டு வேதவார்த்தை, முன்னுக்குப்பின் முரணாய்த் தெரிவதால் தேவசித்தம் இன்னதென்று புரிந்து கொள்ள இயலாமல், பல சபைகள் பலவாறாய்ப் போதிக்கின்றன. கேட்கறவர்களும் ஆராய்ச்சி சிந்தனையோடு கேட்காததால் அனைத்திற்கும் ஆமென் போடுகின்றனர். இதனால் சாத்தான் சந்தோ சமடைகிறான். ஆவியானவர் துக்கப்படுகிறார். (எபே 4:30) இப்படிப்பட்ட நிலையிலிருந்து கிறிஸ்தவனுக்கு விடுதலை யே இல்லையா? ஆவியானவர் விளக்கு வாராக.
        பூர்வகாலம் முதல் பங்கு பங்காகவும் , வகை வகையாகவும் ,தீர்க்கதரிசிகள் மூலம் திருவுளம் பற்றின தேவன், கடைசி நாளில் குமாரன் மூலமாய் திருவுளம் பற்றினார் (எபி. 1:1,2) எப்படி திருவுளம் பற்றினார்? 2 தீமோ 3:16ன்படி தேவ வார்த்தைகள் பரிசுத்த ஆவியினால் அருளப்பட்டது. (Inspiration) தூக்கிக் கொடுக்கப்படவில்லை அல்லது ஆவியானவரால் வரிக்கு வரி "டிக்டேட்'' பண் ணப்படவுமில்லை. ஆவியானவர் கருத்துக் களை கொடுப்பார். எழுத்தாளர்கள் தங்கள் திறனுக்கும், அறிவுக்கும், சிந்தனைக் கும், ஞானத்திற்கும், காலத்திற்கும், சூழ்நிலைக் கும், பண்பாட்டிற்கும் ஏற்றபடி எழுதுவார்கள். இப்படிக் கொடுக்கப்பட்டு எழுதப்பட்ட முறையை 4 விதமாகப் பிரிக்கலாம் :-
(1) தேவனே நேரிடையாய் சொன்ன வார்த்தை (யாத் 32:16, உபா 5:4; 24: மத் 3:17)
(2) பேசுகிறவர்கள் வாயிலே தேவன் வார்த்தை களை போட்டு, ஆவியானவரின் உள்ளு ணர்வுடன் வெளிவருகின்ற வார்த்தை - யாத். 4:12, எண்.23:5, எசே2:7; 3:10;11 : அப் 3:21.
(3) ஆவியானவரின் அசைவாடுதலால் அப்போதைக்கப்போது வரும் வார்த்தை - யாத் 34:27, 2பேது1:21.
(4) எழுத்தாளர் தம் சொந்தத்தில் எழுதும் வார்த்தை - தானி12:8:9, லூக்1:1-4; யோ20:30,31; அப்.1:1,2. 
        இப்படி நான்கு விதமாக வேதம் எழுதப்பட்டிருந்தாலும், (வேதம் என்றாலே பொதுவாகவே பழைய ஏற்பாட்டைத் தான் குறிக்கிறது என்று முந்தி அறிக) யோ 1:17ன்படி இயேசு கிறிஸ்துவின் மூலம் தான் கிருபையும் சத்தியமும் வெளிப் பட்டதாக அறிகிறோம். இப்படியானால் அவருக்கு முன் கிருபையும் சத்தியமும் இல்லையா? இருந்தது. ஆனால் இயேசுகிறிஸ்துவின் மூலமாய்த் தான் முழுமை யாய் வந்தது. தகுதியில்லாதவர்களை தகுதிப் படுத்துவது கிருபை; பாவி களை மன்னித்து இரட்சிப்பது கிருபை. பைத்தியக் காரர்களை ஞானிகளாக் குவது கிருபை. இப்படிப்பட்ட கிருபையால் தேவன் காரியம் செய்ய, அந்தக் காரியத்திற் குரிய சித்தம், விருப்பம் அவரிடம் இருந்தாக வேண்டும்.""நானே சத்தியம், சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் விடுதலை யாக்கும், ஆவியானவர் சகல சத்தியத்திற் குள்ளும் நடத்துவார்'' என்றெல்லாம் இயேசு சொல் வதால் அந்த சத்தியம் முழுமையாய் வெளிப்பட தேவனுக்கு அதற்குரிய சித்தமும், விருப்பமும் இருக்க வேண்டும். ஆக, இயேசு மூலமாய் முழுமையாய் வெளிப்பட்ட கிருபை யும், சத்தியமும் இன்னது என்று அறிய வேண்டுமானால் தேவனின் சித்தமும் விருப் பமும் தேவ வார்த்தை மூலம் முதலில் அறிந்தாக வேண்டும்.
பழைய ஏற்பாட்டு மக்களை, சீயோன் குமாரத்தி, மனைவி என்றெல்லாம் தேவன் அழைத்துப் பார்த்தார். அவர்களோ சிநேகிதர், தாசர் என்ற நிலையிலேயே இருந்தனர். இதனால் மோசே, தாவீது, ஏசாயா, எரேமியா போன்ற எல்லோருக் குமே முழுதேவ சித்த த்தையும் தேவனால் சொல்ல முடிய வில்லை. அதனால் தான் அவர்களுக்கு துன்பம் வரும் போது, ''தேவனே வாதிக்கிறார். தண்டிக்கி றார். சிறுமைப் படுத்துகிறார். தோல்வி, பஞ்சம், வியாதி, அகாலமரணம் எல்லாம் தருகிறார்'' என்று எழுதுகின்றனர். இடையி டையே அவர்கள் செய்த குற்றங்களையும். பாவங்களையும் அறிக்கையிடுகிறார்கள். முடிவில், தேவன் நன்மையைத் தருவார் என்று விசுவாச அறிக்கையிடுகிறார்கள். இது முன் னுக்குப் பின் முரணாயிருக்கிறது. உதார த்திற்கு ஒன்றிரண்டைப் பார்ப்போம் (1) நெகே 9:26,27ல் நாரதர்பாணியில் தேவன் செயல்படுவதாய் உள்ளது. ஏன் இப்படி? ஆசீர்வாதம், சாபம் போன்ற காரியங்கள் (உபா 11:26,28:30,15,19) நெகேமியாவுக்கு முழுமையாய்ப் புரியவில்லை. இயேசுவின் மூலம் வெளிப்பாட்டை அறியவில்லை. இப்படி எழுதப்பட்டதை மேற்சொன்ன 3வது முறைப் படி எழுதியதாக எடுத்துக் கொள்ளலாம். (2) சங்83ல் எதிரிகளை அழிக்க தாவீதுதேவனிடம் சொல்கின்றான். முடிவில் இரட்சி ப்பையும் காட்டச் சொல்கின்றான். இங்கே இயேசுவின் மூலம் வெளிப்பட்ட மத்5:44ன் படியான கிரு பையும் சத்தியமும் முழுமையாக அவனுக்கு புரியவில்லை. (3) யோபு 2:10,5:18; 1:21; 19:8-13; 10:18,22 போன்றவைகளில், யோபுவுக்கு இயேசுவின் மூலம் முழுமையாய் வெளிப்பட்ட மத்.19:17; யாக்1:17;அப்.10:38 போன்றவை புரிய வில்லை. யோபு42:2,3,5ன்படி மனக்கண் திறக்கப்பட வில்லை. இதை மேற்ச்சொன்ன 4வது முறைப்படி எழுதியதாக எடுத்துக் கொள்ளலாம். மட்டுமல்ல, பரிசுத்த ஆவி யினால் சத்தியத்தை அறிகிற நம்ம வர்க்கும் (யோ 16:13) எண்.16:35ல் அக்கினியால் அழித்தது திருஷ்டாந்தமான தேவனின் சரித்திர நியாயத்தீர்ப்பு என்றும், 1தீமோ5:24 ஐ வைத்து தியானிக்காமல் ""கொள்ளிவாய் சர்ப்பம் வந்தது'' போன்ற சாபங்களையும் (எண்21:6 With உபா32:24) தேவனே செய்கிறார் என்றும் தவறான கணிப்பு இருக்கிறது. அறிவு பெருகிப்போன இந்த நாட்களில் வேதத்தை தியானிப் பாரில்லை.
        இன்னும் ஏராளம் எழுதிக்கொண்டே போகலாம். இப்படியான வசனங்களை எல்லாம் வாசிக்கும்போது புறஜாதியார் சொல்வது போல, நம் வேதம் தேவனால் கொடுக்கப்பட்டது அல்ல என்று சுலபமாய் சொல்ல வாய்ப்புள்ளது அல்லவா! நன்மையும் அன்புமான தேவனின் பரிபூரண சித்தம் இன்னது என்று புரியாத வரைக்கும் நம் மனம் தினந்தோறும் மறுரூபமாகாத வரைக்கும் பகுத்தறிவு நம்மில் ஆவியானவரால் வளராத வரைக்கும், நம்மனக் கண் பிரகாசமாகாத வரைக்கும், ஆத்மா செழிப்படையாத வரை க்கும் (ரோ12:2, யூதா22) மேற் சொன்ன வசனங்கள் நமக்கு விளங்காது; அந்த வசனங்கள் எல்லாம் மேலே சொன்ன 4 முறைகளின்படிதான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற உண்மை வெளிப்படாது. புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்களுக்கு, தேவ சித்தம் முழுமையாய் வெளிப்படுத்தப் பட்டிருப்பதால் புதிய ஏற்பாட்டு வசனங்களில் சத்திய-தேவசித்த மாறுபாடு காண முடியாது.
        அப்படியானால் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து மூலமாய் ஆவியானவரைக் கொண்டு முழுமையாய் வெளிப்படுத்தப்பட்ட ஆதி முதலான தேவசித்தம்தான் என்ன?                 (1) பரலோகம் எப்படியோ அப்படியே பூலோகம் எல்லா நன்மைகளோடும் இருக்க வேண்டும் (மத் 6.10) (2) எல்லோரும் சுகமாய் இருக்க வேண்டும் (மத் 8:3) (3) ஒருவனும் கெட்டுப் போகக்கூடாது (மத் 18:14, யோ.3:16, 1 தீமோ 2:4) (4) எல்லோருக்கும் பரிபூரண ஜீவன் தேவை (யோ 10:10) (5) ஒருவரையும் இழந்து போகக் கூடாது (யோ (6:39) (6) தாவீதைப் போல தேவனுடைய வார்த்தையாகிய உடன் படிக்கைப் பெட்டியாலேதான் ஆசீர்வாதம் உண்டு என்று உணர்ந்து அதற்குரிய முக்கியத்துவம் கொடுத்து அவனைப் போல ஊழியம் செய்ய வேண்டும் (அப் 13:36) (7) வரங்கள் கொடுக்கப்பட வேண்டும் (1 கொரி 12:11, எபி 2:4) (8) நன்மைக்கேற்றபடியாய் பரீட்சை வேண்டும் (ரோ 5:3 யாக். 1:3) (9) பொல்லாத உலகிலிருந்து விடுதலை (கலா 1:4) (10). ஊழியர்களை உருவாக்குவது (எபே 4:13) (11) புத்திரசுவீகாரம் அளிப்பது (எபே 1:6, யோ 1:12) (12) பரிசுத்தமாக வேண்டும், அதுவும் வசனத்தாலே ஆக வேண்டும் (1 தெச 4:3; யோ 15:13; 17:17) (13) எல்லாக் காரியத்திலும் அவருக்கு நன்றி (வெளி. 4:11) (14) நாம் இரட்சிக்கப்படுவது (யாக் 1:18) (15) சகல சிருஷ்டிப்பும் அவர்சித்தம் (வெளி 4:11), (16) நன்மை செய்வதே அவர் சித்தம் (எபே 2:10; 1 யோ 11 : அப் 10:38; யாக் 1:17) (17) நம்மை ஆசீர்வதிப்பேத பிரியமான சித்தம் (எண்.24:1; சங் 149:4) (18) நம் தேசம் வாழப்பிரியம் (ஏசா 62:4) (19) துன்மார்க்கர் கூட பிழைக்கணும் (எசே 18:23) (20) கொடுப்பதில் பிரியப்படுவது (2 கொரி 9:7) (21) விசுவாசமாயிருந்தால் பிரியம் (எபி.11,12:1) (22) நீதி நியாயத்தின் மேல் பிரியம் (சங் 33:5) இன்னும் ஏராளம் எழுதிக்கொண்டே போகலாம்.
        இதை வாசிக்கும் தேவபிள்ளையே! வேத வார்த்தைகளின் மூலம் தேவனின் பிரியமும் நன்மையுமான பரிபூரண சித்தம் வெளிப் படுகிறது என்றும், அந்த வார்த்தைகள் நான்கு விதமான முறைகளில் எழுதப்பட்டிருப்பதால் முன்னுக்குப்பின் முரண்போல தெரியுமென் றும், தேவசித்தம் முழுமையாய் இயேசு கிறி ஸ்து மூலமாய் வெளிப்பட்டுள்ளது என்றும், பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களால் முழு மையாய் அது அறியப்படவில்லை என் றும் நமக்குள் இருக்கும் ஆவியானவரால் விளக் கப்பட்டதற்காய் தோத்திரம். ""வெளியாக்கப் படாத மறைபொருளுமில்லை ; அறிய ப் படாத இரகசியமில்லை'' இனிமேல் இந்த கரு கலாக் கப்பட்ட சத்தியமெல்லாம் துளிர்விட்டு வளரட்டும்! இயேசு சீக்கிரம் வருகிறார்! ஆமென்.

சோதனையை தாங்குகிற மனுஷன் பாக்கியவான்

       
சோதனை - உபத்திரவம் -பொல்லாத காரியங்கள்  எல்லாமே பிசாசு கொடுப்பது (யாக் 1: 13) இதை தேவன் கொடுப்பதுமில்லை ; அனுமதிப்பதுமில்லை. இந்த சோதனை களுக் கெல்லாம் அடிப்படைக் காரணங்கள்:- பாவம், சாபம், பிசாசு. இம்மூன்றுக்கும் அடிப்படையே பிசாசானவன்தான். இந்த சோதனை இரண்டு வகை, ஒன்று:- ஊழியத்தில்; இன்னொன்று :- உலக வாழ்க்கையில். இரண்டையுமே தாங்குகிற மனுஷன் (enduring-சகிக்கிறவன்) பாக்கிய வான். ""ஐயோ சோதனையே! நான் உத்தமனாய் வாழ்ந்தேனே தேவன் ஏன் என்னைக் கைவிட்டார்?'' என்றைல்லாம் அலறி, நமக்குள் வசனத்தால் வளர்ந்துவரும் விசுவாசத்தை கெடுத்துக் கொள்ளக் கூடாது. இப்படித்தான் யோபு அலப்பினான் (யோபு 42: 2). இந்த உலகம் தற்போது பிசாசுடையது, இந்த உலகில் வாழும்வரை உபத்திரவங்கள் நிச்சயம் வரும். இந்த உலக வாழ்க்கை பஞ்சு மெத்தையல்ல, சொகுசு பங்களா அல்ல, ஈசிசேர் அல்ல (யோ 6: 33, 10: 10). உபத்திரவ மில்லாதவன் கிறிஸ்த வனல்ல, இயேசு ஜெயித்தார். நீயும் நானும் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவே "திடன் கொண்டு முன்னேறுங்கள்'' என்கிறார். அதைத் தாங்க பெலன் தருகிறார், தப்பிக்க வழிகாட்டு கிறார். திராணிக்கு மேலாய் சோதிக்கப்பட விடமாட்டார் (1கொரி10:13). பாவ சோதனை, தரித்திர சோதனை, வியாதி சோதனை, கடன் பிரச்சனை, நம்பியவர்கள் கைவிடல், தோல்வி, சமாதானக் குறைவு, வேலை யில்லாப் பிரச்சனை, திருமணப் பிரச்சனை, ஆபீஸ் பிரச்சனை, இப்படி ஏராளம் சோதனைகள் உண்டு. இவைகளைத் தாங்குகிறவன் பாக்கிய வான். பாக்கியவா னென்றால் (Blessed) விடுதலை பெறுபவன், வெற்றி பெறுபவன், ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று பொருள். உதாரணத்திற்கு லுக் 6: 20 ஐ வாசித்தால், தரித்திரர்கள் பாக்கியவான்கள் என்று உள்ளது. எப்படி? தேவனுடைய ராஜ்யம் அவர்களுடைய தாயிருப்பதால். தேவனுடைய இராஜ்யத்துக்குள் வந்துவிட்டால் , எல்லா உலகத்தேவைகளும் கூடக்கொடுக்கப்படும் (மத் 6: 33) ஆமென். அப்படியே, சோதனையைத் தாங்குகிறவர்கள் பாக்கிய வான்கள். அவர்களுக்கு விடுதலை கிடைப்பதோடு மட்டுமன்றி, உத்தமர்களாகி றார்கள். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஜீவகிரீடம்- பரலோகம், நித்தியம் கிடைக்கிறது. இரட்சிக்கப்பட்டவனுக்கு தேவைப்படுவது இதுதானே (எபி 10: 34) . சோதனையிலிருந்து விடுதலையாகி, உலக ஆசீர்வாதமும் பெற்று பரலோக ஆசீர்வாதமும் கிடைக்கிறது என்றால் பாக்கியவான்தானே!
        எபி10:32-ஐ வாசித்தால், எபிரேய மக்களின், மிகுந்த போராட்டம், நிந்தை, உபத் திரவம் மத்தியிலே, ஆஸ்தி கொள்ளை யாடப் பட்டிருக்கிறது. மற்றவர் மத்தியில் வேடிக் கையாக் கப்பட்டார்கள், தங்களைப் போல சோத னைக்குட்படுபவர்களுக்கு பங்காளி களாயி ருந்தார்கள். இவர்கள் தங்களது சோதனை களைத் தாங்க-சகிக்க-என்னென்ன தேவையா யிருந்தது என்பதைப் பாருங்கள். (1) பொறுமை வேண்டும். (வச 36) (2) தைரியம் வேண்டும் (வச 35) (3) விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் என்ற வசன விசுவாசம் வேண்டும் (வச 38) இம்மூன்றும் இருந்தால் சோதனை யைத் தாங்கி பாக்கியம் பெற முடியும். இம் மூன்றும், ஆவியானவரின் ஒத்தாசையோடு நாம் பெரும் வசனத்தால் வந்து சேருகிறது. 
        வேதத்திலே சோதனையைத் தாங்கிய ஒரு சிலரைப் பார்ப்போம். முன்னால் செங்கடல், பின்னால் பார்வோனின் சேனை, தப்பிக்க வழி தெரியாத சூழ்நிலையில் இஸ்ரேலர்கள் பயந்து கூக்குரலிட்டார்கள் (யாத் 14: 11,12) ஆனாலும் மோசே மூலமாய் யாத் 14: 13,14ன் விசுவாச வார்த்தைகளை கேட்ட உடனே, அவர்களுக்கு தைரியம் வந்தது. பொறுமையோடும் விசுவாசத்தோடும் இரண்டு புறத்திலும் மதிலைப்போல நின்ற ஜலத்தின் மத்தியில் நடந்துபோய் வெற்றியைக் கண்டார்கள். சோதனையைத் தாங்குகிறவன் பாக்கியவான். அல்லேலுôயா ! அப்படியே எசேக்கியா ராஜாவைப் பாருங்கள். வியாதியினால் மரண சோதனை வந்தது, தீர்க்கதரிசியால் உறுதி யாக்கப்பட்டது (2ராஜா 20:1). ஆனாலும் யோபுவைப்போல அலப்பல் இல்லாமல், தைரியமாய், பொறுமையோடு, விசுவாசத்தோடு தேவனிடம் கேட்டான். நீடித்த ஆயுசுநாளைப் பெற்று பாக்கியவானானான். மிலேத்து பட்டணத்தில் பவுல் கூறியதைப் பாருங்கள் :- வெகு மனத் தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய தீமையான யோசனைகளால் எனக்கு நேரிட்ட சோதனை களோடும், நான் கர்த்தரை சேவித்தேன் (அப் 20: 19) மட்டுமல்ல.... உபத்திரவம், வியாகுலம், துன்பம், பசி, நிர்வாணம், நாசமோசம், பட்டயம் போன்ற சோதனைகள் (ரோ 8: 36). இப்படிப் பட்டதான சோதனைகளை, தைரியமாய், பொறுமையோடு, விசுவாசத்தோடு, தாங்கி யதால்தான், அவன் நல்ல போராட்டத்தைப் போராடினான், ஓட்டத்தை முடித்தான், நீதியின் கிரீடம் பெறப்போகின்றான் (2தீமோ4:7,8). 
        சோதனை வந்தால் தாங்கி ஜெயம் பெறவேண்டும் என்று பார்த்தோம். இப்படிப்பட்ட ஜெயம் மூன்று வகைப்படும். (1) பிசாசின் சோதனையை இறுதிவரை எதிர்த்துப் போராடி மரித்துப் போகிறவர்களும் உண்டு. இப்படியே போரில் மார்பிலே குத்தப்பட்டு மரிப்பவனை வீரன் என்றுதானே தமிழர் களின் புறநானுôறு கூறுகின்றது . போர்த்தர்மமும் அப்படித்தானே ஒத்துக் கொள்கின்றது. (2) பிசாசை எதிர்த்துப் போராடி விழுப்புண்கள் தாங்கி வெற்றியோடு நிற்பவனும் வீரன்தான். (3) பிசாசை எதிர்த்து, தைரியத்தோடு, விசுவாசத்தோடு, வல்லமை யோடு நிற்பதைப்பார்த்து பிசாசை புறமுதுகிட்டு ஓடவைப்பவனும் வீரன்தானே. இம்மூவரிலே மூன்றாவது வீரன்தான் மாவீரன். இப்படிப்பட்ட வீரனாய் நாம் வாழ வேண்டும் என்றுதான் தேவன் எதிர் பார்க்கிறார். 
        இதை வாசிக்கும் தேவ பிள்ளையே, சோதனையே வராத நிலை உண்டா என்று நீ கேட்பது எனக்குப் புரிகிறது. இந்த உலகம் பிசாசின் கையில் இருக்கிறது என்றும் (யோபு 1: 12;2 :6) இந்த உலகத்தின் அதிபதி பிசாசுதான் என்றும் நாமறிவோம் (2கொரி 4: 4; யோ14:30). இயேசு சிலுவையிலே பிசாசை ஜெயித்த போதும், (கொலோ 2: 13, 14) அவன் இன்னும் நம் காலடியில் வரவில்லை (ரோ 16: 20). அவனை வென்ற இயேசுவின் நாமத்தை - வார்த்தையை வைத்துத்தான் அவனுடைய சோதனை நமக்கு வராதபடி செய்ய முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டியது (1) பிசாசுக்கு, ஏவாளைப்போல எந்தக் காரியத்திலும் இடங்கொடாதே (எபே 4: 27) (2) பிசாசை எதிர்த்து நில். (1பேது 5: 9, யாக் 4: 7) (3) அதற்கு முன் பிசாசின் தந்திரங்களை அறிந்து கொள்ள வேண்டும் (2கொரி 2: 11) 
        நம் தேவன், சோதனை வராத படிக்கு வருமுன் காக்க வழியையும் சொல்கிறார், சோதனை வந்தபின்னும் அதிலிருந்து விடுதலையாவதற்கான போக்கையும் தருகிறார். என்னே நம் தேவனின் அன்பு! Prevention is better than cure என்று நாம் அறிந்திருக்கிறது போல, சோதனை வருமுன்னே காத்துக் கொள்வதுதான் தேவன் அதிகமாய் விரும்பு வதாகும். இதைத்தான் வருமுன் காப்போம் என்று அரசாங்கமே சொல்கின்றது. ஆமென். யோ 16: 33ன்படி, வருமுன் காக்கும் காரியம் பெரும்பாலான நேரங்களில் சாத்தியமில் லாமல் காணப்படுவதால், சோதனை வந்தபின்தாங்குகிற - ஜெயங் கொள்ளுகிற பாக்கியவானாய் ஜீவிப்போம், உலகில் சாட்சியாய் வாழ்வோம்! இயேசு சீக்கிரம் வருகிறார்! ஆயத்தமாவோம்! ஆயத்த மாக்குவோம்!

பெண்கள் பாஸ்டர் ஆகலாமா?

“கடைசிகால விடுதலை முழக்கம்” 46-ல் இதே தலைப்பில் ஒரு செய்தி எழுதி இருக்கிறேன். அதிலே, ""வேதத்தின்படி ஆளுகை புருஷனுக்கே உரியது என்பதாலும், பெண்கள் பலவீனமுள்ளவர்கள் என்பதாலும், மாதவிலக்கு, கர்ப்பம் தரித்தல், குழந்தை களுக்கு பால் கொடுத்தல் போன்ற பல காரியங்கள் பாஸ்டர் ஊழியத்திற்கு தடையாய் காணப்படும் என்பதாலும், வேதத்தில் பெண்கள் பாஸ்டராக இருந்தார்கள் என்று வெளிப்படையாக வசனம் இல்லாததாலும், அவர்கள் பாஸ்டர் ஊழியம் செய்ய இடமில் லை'' என்று நான் எழுதியிருந்தேன். பவுல் அப்போஸ்தலன் ஊழிய ஆரம்பத்தில், ""நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை'' (1கொரி 15: 51) என்று எழுதியவர், ஊழிய முடிவில், ""நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது"" (2தீமோ 6 6) என்ற புதிய வெளிப்பாட்டை எழுதினார். அதுபோல பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்கு வெளியரங்க மாகாத மறைபொருள் எல்லாம் இயேசு கிறிஸ்து மூலமாய், புதிய ஏற்பாட்டு பரிசுத்த வான்களுக்கு வெளியரங்கமாக்கப்பட்டது என்று நாமறிவோம் (லுôக் 12: 2). அப்படியே இந்த நாட்களில் அடியேனுக்கு ""பெண்கள் பாஸ்டர் ஆகலாமா?"" என்பது சம்பந்தமாய் கிடைத்த வெளிப்பாடுகளை நான் விசுவா சித்துப் பேசுகிறேன்; நீங்களும் கேளுங்கள், தியானியுங்கள். (இதை “வசனமுழக்கம்” 40,41-ல் கேள்வி-பதில் பகுதியில் எழுதியிருக்கிறேன்).  
        (1) கலா 3: 28-ன் படி, ஆண்டான்-அடிமை, யூதன்-கிரேக்கன், ஆண்-பெண் என்ற வேறுபாடே கிடையாது..எல்லோரும் சமமே. கணவன்-மனைவி என்ற உலகக் குடும்ப உறவில், குடும்பத்தலைவன் ஆண் என்றும்,தலைவனை நல்வழியில் நடத்திச் செல்லும் துணையாளர் மற்றும் ஆலோசகர் பெண் என்றும் நாமறிவோம். ஆனால் தேவன் உண்டாக்கிய (மத் 16:18) கிறிஸ்தவ சபையில் இருவரும் சமம்தான். சபையிலே கொடுக்கப்பட்ட 5 விதமான ஊழியங்களும் (எபே4:13) ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் உரியது ஆகும். அதிலே ஒன்றுதான் பாஸ்டர் ஊழியம். தேவனால் அழைக்கப்பட்ட அனைவருக்கும் இந்தப் பதவிகள் உண்டு. ரோ16:1-ல் பெபேயாள் என்ற பெண்மணி ஊழியராய் இருந்தாள் என்பதால், அவள் பாஸ்டராகவும் இருந்திருக் கலாம் அல்லவா ! சரித்திர ஆராய்ச்சிப்படி அவள் பாஸ்டராக பணிபுரியவில்லை என்று கணித்தாலும், அந்த ஒரு உதாரணத்தால், பெண்கள் பாஸ்டராக ஆகக்கூடாதா? ரோ 14: 21-ன்படி யாரும் பெலவீனப்படவோ, இடறவோ, தவறவோ ஏது இல்லாதபடி பாஸ்டர் ஊழியம் பெண்கள் செய்யலாமே!
        (2) பெண்கள் பலிபீடத்து ஆசாரிய ஊழியம் செய்ய வேதத்தில் ஆதாரமில்லை என்றும் ஆசாரியத்துவம் பெண்களுக்கு கிடையாது என்றும் சிலர் கூறுகிறார்கள், அவர்களுக்கு நான் சொல்வதாவது :- இயேசுகிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்த பின்னே, பலிபீடமுமில்லை ; பலிபீட ஊழியமு மில்லை ; எருசலேம் தேவாலய முமில்லை ; லேவியர் வழிவரும் மக்கள் தான் ஆசாரியர் என்ற முறைமையும் இல்லை. இப்போது ""ராஜாக்களும் நாங்களே, ஆசாரியரும் நாங்களே'' என்ற சகோ. பெர்க்மான்ஸின் பாடல்படி, இரட்சிக்கப்பட்ட ஆண், பெண் அத்தனை பேரும் ராஜரீக ஆசாரியக்கூட்டம் (1பேது2: 9), இந்த ஆசாரியத்துவம் - Royal Priesthood , மத்28:18-20-ன்படி சபைக்கு வெளியே ஊழியம் செய்வதற்காக. மற்றப்படி, சபைக்குள்ளே ஊழியம் செய்ய ஒரு சிலருக்கு 5 விதமான ஊழியங்களில், சிலவற்றையோ அல்லது எல்லாவற் றையுமோ தேவன் பகிர்ந்தளித்திருக்கிறார் (எபே 4: 13). இதிலே மேய்ப்பர் ஊழியம்தான் பாஸ்டர் ஊழியம். இந்த பாஸ்டர் ஊழியம் ஆணுக்கு மட்டும்தான் என்றோ, பெண்களுக்கு கிடையாது என்றோ வேதம் சொல்லவே இல்லை. அதிலும் புதிய ஏற்பாட்டில், புருஷன்- மனைவி என்ற குடும்ப காரியங்களைத் தவிர வேறு எதிலுமே தேவன் அவர்கள் பிரித்துக் காட்டவில்லை. சிலரை மேய்ப்பராகவும் போத கராகவும் ஏற்படுத்தினார் என்றுதான் போடப் பட்டுள்ளது.. 
        அப்படியிருக்க, பெண்கள் பாஸ்டர் ஆகக்கூடாதா? நம்மோடு பரலோகம் வந்து, நம்மைப்போல் கிரீடங்கள் பெறப்போகும் பெண்களுக்கு, இந்த உரிமை வேதத்தில் எங்காவது மறுக்கப்பட்டிருந்தால் சொல் லுங்கள் ஏற்றுக் கொள்கிறேன். ஒவ்வொரு ஆண், பெண்ணின் சரீர பெலவீனங்களை வைத்து, ஒருசில ஊழியங்களை, அவர்களே செய்யாமல் விட்டுவிடலாமே ஒழிய, மற்றப்படி தேவன் பட்சபாதம் பாராதவர் (கலா 3:28) இரட்சிப்பு, ஞானஸ்நானம், வரங்கள் போன்ற அனைத்து காரியங்களும், ஆண்பாலிலேயே எழுதப்பட்டிருப்பதால் (யோ 3: 5, மாற் 16: 16, எபே 4: 13) பெண்களுக்கு இவைகள் எல்லாம் சொல்லப்படவில்லை என்று எடுத்துக் கொள் ளலாமா? பெண்கள் இரட்சிக்கப்படவே தேவை யில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லவே ! 
        உலகத்து சாட்சிகளை வைத்து வேதத்தை எடை போடவேண்டாம். பாஸ்டர் என்ற பட்டத்தைப் போட்டுக்கொள்ளாமல், இத்தனை ஆண்டுகளாய், சகோதரி. சாராள் நௌரோஜி, (சென்னை) அவர்கள் மேய்ப்பர் ஊழியம் செய்யவில்லையா? திருவிருந்து ஆராதனை யின் போது மட்டும், ஒரு ஆண் மேய்ப்பர் வந்து ஊழியம் செய்வார். இப்படியும் செயல்படலாம் தவறில்லை. எப்படியோ புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் ரோ 14: 21-ன்படி மேய்ப்பர் ஊழியத்தில் மட்டுமல்ல... எல்லா காரியத்திலும் செயல்படுவோமாக
.

உனக்குள் பிறந்தவர் இரட்சகரா?

        இயேசுகிறிஸ்து டிசம்பர் 25ல் பிறந்தார் என்று சொல்லி, உலகிலுள்ள பெரும்பாலான கிறிஸ்தவர்கள், தேவன் சொல்லாத - ரோமன் கத்தோலிக்க போப் ஏற்படுத்திய பண்டிகையை கிறிஸ்துமஸ் என்ற பெயரில் கொண்டாடு கின்றனர். கிறிஸ்துமஸ் என்றால் Christ + Mas அதாவது கிறிஸ்துபூஜை என்று பொருள். நவம்பர், டிசம்பர் மாதங்களெல்லாம் இஸ்ரேல் நாட்டிலே மழை காலமும், பனிக்காலமு மாகும். இந்த காலக்கட்டத்தில் மேய்ப்பர்கள் மந்தையை வெளியில் கிடை போட்டு காவல் காக்க முடியாது. காவல் காத்த மேய்ப்பர் களிடம் இயேசு பிறந்த செய்தி சொல்லப் பட்டதால், நிச்சயமாய் அந்தக்காலம் வசந்த காலமாயிருக்க வேண்டும். அப்படி யானால் டிசம்பர் 25 எப்படி வந்தது?
        எகிப்தியரின் சூரிய தேதையின் விழா டிசம்பர் 25ல். அதற்கு முன்னாலே கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் அவர்கள் தங்கள் உற்றார் உறவினர்கள் நண்பர்களோடும் வீடுவீடாகப் போய் ஆடிப்பாடி களித்து மகிழ்வார்கள். இப்படிப்பட்டவர்கள் கிறிஸ்தவத்தில் இணை ந்த உடனே அந்த பெரிய பண்டிகையை  கொண்டாடாமல் இருக்க முடியவில்லை. இதனால் பின் மாற்றம் பெருகத் துவங்கியது இதை கண்ட கத்தோலிக்க மார்க்கம் அந்த நாளில் இயேசுகிறிஸ்து பிறந்த நாளை கொண்டாட ஏற்பாடு செய்து, கையில் குழந்தையோடு நிற்கும் சூரிய தேவதைப் போல், மரியாள் கையில் குழந்தை இயேசு வை வைத்து, கிறிஸ்துமஸ் கொண்டாட வைத்தது. வீடுவீடாய் போகும் கேரல் சர்வீஸ÷ம் ஆரம்பமாயிற்று. எனவேதான் பாரம்பரிய பண்டிகையில் கிறிஸ்தவன் மூழ்கி போய் மீள முடியாமல் கிடக்கிறான். நடசத்திரம் தொங்க விட்டு கிறிஸ்மஸ் மரம் வைத்து, மாட்டுத் தொழுவம் கட்டி, கிறிஸ்மஸ் தாத்தாவை உருவாக்கி வசனமில்லாத பண்டிகையை கொண்டாடுகின்றான். பண்டிகைக்கு முன் னாலே, ராத்திரிதோறும் சபையாரின் வீடுக ளுக்கு போய் ஏற்கனவே இரட்சிக்கப்பட்ட வீட்டைப் பார்த்து இன்று இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது, என்று கூறி கிறிஸ்து பிறந்தார் எனப் பாட்டுப்பாடி பணம் வசூலித்து திரிகிறான். வேதத்திலே நியாயப் பிரமாணத் தில் ஆசரித்த பண்டிகைகள் எட்டு (லேவி23). அவைகளும் கிறிஸ்துவுக்கு நிழல்;நிஜம் வந்தவுடன் தேவையில்லை. (கொலோ2:16-17). இயேசு மரித்த பின் பவுல் மூலமாய் வெளிப்படுத்தப்பட்ட ஒரே பண்டிகை இராப் போஜனப்பண்டிகை(1கொரி5:7,8)தான். இதைத்தான் ஆசரிக்க இயேசு கட்டளையிட்டார் (1கொரி11:24,25) மற்றப்படி கிறிஸ்தவன் ஆசரிக்க வேண்டிய பண்டிகை ஏதுமில்லை. வேதத்தில் சொல்லப் பட்ட பல காரியங்களை செய்யாமல், சொல்லாத காரிய ங்களை பாரம்பரியமாய் செய்து பிசாசுக்கு அடிமை யாகிறான் தற்கால கிறிஸ்தவன்.
        இயேசு பிறந்தார் என்று உலகிற்கு சொல்லி மகிழ்வது என்ன தவறு? இது பலருயை கேள்வி. கிறிஸ்துவுக்கு பின் (கி.பி.), கிறிஸ்துவுக்கு முன் (கி.மு.) என்று உலக சரித்திரமே சாட்சி சொல்லும்போது, நாம் பண்டிகை கொண்டாடி சொல்ல வேண்டிய கட்டாயம் என்ன? அதுவும் டிசம்பர் 25ல்  ஏன் சொல்ல வேண்டும்? இயேசு சொன்னது: உலகமெங்கும் போ: சகல ஜாதியையும் சீஷராக்கு ; ஞானஸ்நானம் கொடு; இயேசு வின் உபதேசத்தை கைக் கொள்ளும் படி போதி (மத்28:18-20). கிறிஸ்துமஸ் கொண் டாடி தன்னை வெளிப்படுத்த அவர் சொல்லவே இல்லை. அப்1:8ன்படி தான் அவருக்கு சாட்சி யாய் வாழச் சொன்னார். மேலும், மரிக்கப் போகிற மனிதனுக்குத்தான் பிறந்த நாள் விழா வே ஒழிய, மரணத்தை ஜெயித்த ஆண்டவ ருக்கு அல்ல. காந்தி ஜெயந்தி, கிருஷ்ண ஜெய ந்தி போல கிறிஸ்து ஜெயந்தியா? இயேசுவை தேவன் என்று சொல்லாத படிக்கு கிறிஸ்துமஸ் கொண்டாடி அவரை மனிதனாகவே காட்ட நினைக்கும் பிசாசின் தந்திரம் இது. தேவத் துவத்தின் பரிபூரண மெல்லாம் அவருக்குள் சரீரப்பிரகாரமாய்  இருந்ததே (கொலோ2:9). பிசாசின் தந்திரங்களை அறியாத கிறிஸ்தவர் களின் (2கொரி2:11) மனக்கண்கள் பிரகாச மடைய ஜெபிப்போம் (எபே1:19). 
        இந்த இயேசு உலகில் பிறந்தார் என்று காட்டுவதல்ல. உனக்குள் பிறந்தார் என்று காட்டுவதுதான் அவர் விரும்புகிறகாரியம். இந்த விருப்பத்தை தேவதூதர்கள் மூலமாய் அன்றே மேய்ப்பர்களிடம் சொல்ல வைத்தார் தேவன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என் னும் இரட்சகர் உங்களுக்கு தாவீதின் ஊரிலேபிறந்திருக்கிறார்(லூக்2:11).குழந்தை-பாலன்-இயேசு அல்ல ; நமக்கு ஒரு பால கன் பிறந்தார் ; ஆனால், நமக்கு கொடுக்கப் பட்டதோ ஒரு குமாரன். அதாவது வளர்ந்து கர்த்தத்துவம்- ஆளுகை கொண்ட ஒரு இரட்சகர் (ஏசா9:6). இது எப்போது இயேசு வுக்கு வந்தது? உயிர்த் தெழுந்த பிறகுதான் சகல அதிகாரங்களும் அவருக்கு கொடுக்கப் பட்டன (மத்25:18-20). உயிர்த் தெழந்த தினாலேதான் குமாரன் - இயேசு-உங்களில் பிறக்க வேண்டும். இதைத்தான் இரட்சிப்பு என்கின்றோம். இதைத்தான் மறுபடியும் ஆவியிலே வசனத்தால் ஆவி யானவரைக் கொண்டு பிறப்பது என்கின் றோம் (ரோ10:9-10; யோ3:3,5 ; 1பேது1: 23; யாக்1:18). இதுதான் நற்செய்தி சுவிசேஷம் (லூக்2:10; 1கொரி 15:8; 2தீமோ2:8-10). இதனாலே உனக்கும் மகிழ்ச்சி ; இதை மற்றவர் களுக்கும் சாட்சி யாய் பிரசங் கிக்கும் போது அவர்களுக்கும் மகிழ்ச்சி. இந்த மகிழ் ச்சி தான் உண்மையான கிறிஸ்மஸ். ஆமென்.
        ஆக, புத்தாண்டிலே காலடி வைக்கப் போகும் தேவ பிள்ளையே ! உனக்குள் இரட் சகர் இயேசு பிறந்திருக்கிறார் என்ற மகிழ்ச்சி யோடு புறப்படு. ஊருக்கும் உலகுக்கும் இதையே சுவிசேஷமாய் சொல்லி, அவர் களுக்கும் இதே மகிழ்ச்சியை உண்டாக்கு. இதனால் பரலோகமே களிகூரும். வீணே பிசாசுகள் விரும்பும் பாரம்பரியப் பண்டிகை களை விட்டு விலகு. தேவநாமத்தை மகி மைப்படுத்து. அறியாமல் செய்தாலும் அடி கள் உண்டு. இயேசு சீக்கிரம் வருகிறார். ஆயத்தமாவோம். ஆயத்தமாக்குவோம்.