இரட்சிக்கப்படாமல் மரித்தவர்களுக்கு மறுபடியும் இரட்சிப்பு உண்டா? 
                   1பேது3:19,20; 4:6; 1கொரி15:29 போன்ற வசனங்களை வைத்து, மரித்த பின்னும் இரட்சிக்கப்படுகிறதற்கு தருணம் உண்டு என்று சிலர் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்தது தான் ரோமன் கத்தோலிக்கர் போதிக்கும் உத்தரிக்கிறஸ்தலம் (Purgatory) என்பது. 1 யோ 2:2, 1 தீமோ 4:10; 2:4; யோ 4:42 போன்ற வசனங்களை வைத்துக் கொண்டு, இரட்சிக்கப்படாத உலகத்தாருக்கும், மரித்த பின் இரட்சிப்பு உண்டு என்றும் சிலர் போதிக்கின்றனர். இப்படி போதிப்போர் ஆவிக் குரிய சபையார் என்று தங்களை வெளிச்சம் காட்டுகிறார்கள். இந்தக் காரியங்கள் பற்றி, ஆவியானவர் விளக்கு வாராக!
                   வேதத்திலில்லாத ஏதேனும் வெளிப் பாடுகளோ, தரிசனங்களோ கிடைத்தாலும் அது வேத வார்த்தைக்கு ஒத்திருந்தால் மாத்திரமே ஏற்றுக் கொள்ள வேண்டும். (ள்ங்ங் வெளி22:18-19) வேதத்தையும் சாட்சியா கமத்தையும் கவனியுங்கள் (Law & Testimony) இந்த வார்த்தையின்படி (ஏசா 8:20) சொல்லாவிட்டால் அவர்களுக்கு விடியற்காலத்து (இயேசுவின்) வெளிச்ச மில்லை. மனிதன் ஒரே தரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்படைவதும் நிச்சயிக்கப் பட்டிருக்கிறது. (எபி 9:27) அவனவனுடைய பூமியின் கிரியைகளின்படி இயேசு அளிக்கும் பலன் அவரோடே கூட வருகின்றது. (வெளி 22:12) இந்த பூலோக வாழ்க்கையிலே நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் (மத் 7:19) என்று வேதம் சொல்கின்றது. பரலோகப் பிதாவின் சித்தப்படி இந்தப்பூமியில் செய்பவர்மட்டுமே பரலோகம் போவர் (மத் 7:21)
                   லாசரு - ஐஸ்வர்யவான் நிகழ்ச்சியில், பாதாளம் போன ஐஸ்வரியவான், பரதீசு போக சாத்தியம் இல்லாததால்தானே தன்சகோதரர்களும் தன்னைப்போல் வரக்கூடாது என்றெண்ணி, பூமியிலேயே அவர்கள் தேவ வசனத்திற்குள் வாழ்ந்து மரித்து பரலோகம் போக வேண்டுமென்று எண்ணி, லாசருவை மறுபடியும் பூமிக்கு அனுப்ப கேட்டுக்கொண்டானல்லவா (லூக் 16:19-31) ! இந்த பூமியில் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் பரலோகம் போக முடியாது என்று இயேசு பழைய ஏற்பாட்டு காலத்திலே சொன்னது பொய்யா குமா? (யோ 3:3-5) இயேசுவின் இரத்தத் தால் கழுவப்பட்ட இரட்சிக்கப்பட்ட நீதிமானே, பரலோக வாழ்வை அடையப் போவது அரிது என்று 1 பேது 4:18 சொல்வதை தியானியுங் கள். ஆக, மனிதன் இந்த பூமியிலேயே இரட்சிக்கப்பட்டு, அந்த இரட்சிப்பில் பூமியில் சாகும்வரை இருந்தால்தான் பரலோகம் கிடைக்கும் (மத் 24:13) இவைகௌல்லாம் வேதசத்தியங்கள். ஆமென்
                   1 பேது 3:19, 20ஐ வாசியுங்கள் (இதன் விளக்கம் ஆசிரியரின் தெரிந்து கொள்ளுங் கள் என்ற நூலில் வாசிக்கலாம்) இயேசு மரித்த பின் தான் பாதாளம் போனாரே ஒழிய, உயிர்ப்பிக்கப்பட்ட பின் பாதாளம் போக வில்லை என்று முதலில் அறிக. எந்த ஆவியிலே இயேசு கிறிஸ்து உயிர்ப்பிக்கப் பட்டாரோ, அந்த ஆவியிலேதான், நோவா காலத்திலே கீழ்ப்படியாமல் போனவர் களுக்கு பிரசங்கித்திருக்கிறார். இந்த ஆவி, நித்தியம் நித்தியமாய் இருக்கும் பரிசுத்த ஆவிதான். இந்த பரிசுத்த ஆவியில் தான், நோவாகால மனிதர்களோடு தேவன் போராடி, அவர்கள் கீழ்ப்படியாததினால் அவர்களைப் படைத்த தற்காகவே மனஸ் தாபப்பட்டு ஜலப் பிரளயத்தால் அழித்தார். (ஆதி6:3,6). இயேசுவை உயிரோடு எழுப்பின ஆவியிலே பிரசங்கித்த வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந் தோர், நோவாவின் குடும்பத்தார் மட்டுமே! கீழ்ப்படியாதவர்கள்தான் பிசாசின் கட்டுக்குள், காவலுக்குள், சிறைக்குள் இருந்தவர்கள். இப்படிப்பட்ட ஆவிகளை விடுவிப்பதுதானே தேவசித்தம் (ஏசா 61:1-3) அல்லேலூயா! எனவே பாதாளப் பிரசங்கம் தேவையில்லை, அதனால் இரட்சிப்பும் இல்லை, இரட்சிக்கப்பட, மரித்தபின் இன்னொரு தருணமும் இல்லை. ஆமென். பாதாளத்தில் சரீரம் இல்லை, ஆவியில்தான் இருக்கிறார்கள் என்று உணர்ந்தால், 2 கொரி 5:10ன் படி ""(சரீரத்திலே அவனவன் செய்த நன்மைக் காவது தீமைக்காவது கிருபாசனத்திற்கு முன்னே நிற்க வேண்டும்)'' ஆவியா யிருக்கும் நிலையில் வசனம் பிரசங்கிப் பதோ அல்லது பிரசங்கிப்பதை கேட்பதோ  ஒன்றுக்கும் உதவாது என்று உறுதியாய்ச் சொல்லலாம். எனவே இரட்சிக்கப்பட மரித்த பின் தருணமே இல்லை. அப்படியிருந்தால் சரீரத்தில் இருக்கும் போதே இரட்சிக்கப் படாமல் ஜாலியாக இருந்து விட்டு மரித்த  பின் இரட்சிக்கப்படலாம் என்று நாமும்  இருக்கலாமல்லவா!
                   1 பேது 4:6ஐ வைத்துக் கொண்டு மரித்தவர்களும் இரட்சிக்கப்படும்படியாய் அவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படும் என்கின்றனர். இங்கே சொல்லப்பட்ட மரித்தவர்கள், சரீரத்தில் மரித்தோர் அல்ல என்றும் ஆவியிலே மரித்தோர் என்றும் உணருங்கள் (ள்ங்ங் எபே 2:1) 1 கொரி 5ல், பாவமனுஷனை, இந்த உலகிலேயே பவுல், பிசாசுக்கு ஒப்புக்கொடுத்து ஆக்கினைக் குள்ளாக்கியது போல, ஆவியிலே மரித்த இரட்சிக்கப்படாதோர் எத்தனையோ பேர் நம் கண் முன்பாகவே மாம்சத்திலே ஆக்கினைக் குள்ளாக்கப்பட்டிருப்பதை காண்கிறோம். இப்படியான மாம்ச ஆக்கினை, மாம்சம் உள்ள பூமியில் தானே இருக்கும், பாதாள த்தில் இருக்காது அல்லவா! எனவே இங்கே யே இரட்சிக்கப்பட்டு பூமியிலே வாழ தேவன் விரும்புகிறார். அதுவே சத்தியம், மேலும், 1கொரி 15:29ல் பேசப்படுவது மனிதனின் உயிர்த்தெழுதலைப் பற்றி. அதற்கு ஆதாரம் இயேசுவின் உயிர்த் தெழுதல். இயேசு உயிர்த்தெழாவிட்டால் மரித்த இயேசுவை சொல்லி ""இயேசு மரித்தார் ; அடக்கம் பண்ணப் பண்ணப்பட்டார்; 3ம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு அடையாள மாய் ""ஏன் முழுக்கு ஞானஸ் நானம் எடுக்கிறீர்கள்'' என்று பவுல் கேள்வி கேட்டு ""நீங்கள் மரித்தோரை வைத்து எடுக்க வில்லை, உயிர்த்தோரை வைத்துதான் எடுக்கிறீர்கள்'' என்று எழுதுகிறான். (மரித்தோர் களுக்கு ஞானஸ் நானமா? என்ற தலைப்பில் கருகலான சத்தியம் என்ற ஆசிரியரின் ஆராய்ச்சி நூலில் உள்ளதை வாசியுங்கள்)
மரித்தபின் இரட்சிக்கப்பட ஞானஸ்நானம் கொடுப்பதில்லையே!
                   1 யோ 2:2, யோ 4:42, 1 தீமோ 4:10, 2:4, போன்ற வசனங்களில் இரண்டு வித இரட்சிப்பு இருப்பதாய் சிலர் போதிக்கின்றனர். ""கிறிஸ்தவர்களுக்கு மாத்திரமல்ல, உலக மக்கள் அனைவருக்கும் பாவநிவர்த்தி மற்றும் இரட்சிப்புத் தருபவர் நம் ஆண்டவர். இரட்சிக்கப்பட்ட பின்னும் செய்யும் பாவங் களுக்கு பாவ நிவர்த்தி வேண்டாமா? இறுதி இரட்சிப்பு (மத் 24:13) வேண்டாமா?'' என்ற அர்த்தத்தில் தான் அந்த வசனங்கள் எழுதப்பட்டுள்ளன. 1000 வருட ஆட்சியில், ஆதாமிலிருந்து இரட்சிக்கப்படாத அனை வரும் (ஹிட்லர் - சதாமுசேன் போன்ற வர்களும்) பங்கேற்பர் என்றும், அப்படிப் பட்டவர்கள் அப்போது தவறான யோசனை செய்தாலும், உடனடியாக தேவதூதர்கள் வந்து இரும்புகரத்தைக் கொண்டு நொறுக்கி  அவர்களை இரட்சிப்புக்குள் நடத்துவார்கள் என்றும் அவர்கள் போதிக்கிறார்கள். 1000 வருட அரசாட்சியில் யாருக்குமே இரட்சிப்பு இல்லை இஸ்ரேலரைத் தவிர (ரோ 11:25-27). இப்படித்தான் வேதம் போதிக்கிறது. மற்றப்படி வசன ஆதாரமின்றி எதையும் கிறிஸ்தவன் நம்பத்தயாராய் இல்லை.
                   இதை வாசிக்கும் தேவபிள்ளையே! மரித்தபின் இரட்சிப்புக்கான தருணமே இல்லை என்று ஆணித்தரமாய் விசுவாசி, அதை அப்படியே மற்றவர்களுக்குச் சொல். பிசாசின் ஆவி, கிரியை செய்யும் கால மென் பதால் காதுள்ளன் கேட்கக்கடவன். இந்த காலத்தில்தானே உத்தரிக்கிற ஆத்மாக்கள் திருவிழா, All Saints Day, திவசம் செய்தல், ஆறுகளிலும் கடல்களிலும் அஸ்தி கரைத் தல், ஆத்மா சாந்தியடைய ஜெபம், பிராத் தனைக் கூட்டங்கள், ஏழைகளுக்கு தரு மங்கள் செய்தல் போன்றவை நடக் கின்றன. இப்படிப்பட்ட காரியங்களால் மரித்தபின்னும் இரட்சிப்புக் கிடைக்க தருணம் உண்டெ ன்றால், பூமியிலிருக்கும் போது நாம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து, இப்படிப் பட்ட சடங்குகளை மரித்த பின் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு, பலமிருக்கும் வரைக்கும் பாவங்கள் செய்து விட்டு, மரித்துப் போகலாமல்லவா! இரண்டாவதாய் இரட்சிப்பை பெற்றுக் கொள்ளலாமல்லவா! சிந்தியுங்கள்! நாமும் வாழ்ந்து மரித்து 1000 வருட ஆட்சியில் இரட்சிப்பைப் பெறலாமா? 2வது தருணம் பெற்று இரட்சிக்கப் படுவோர்தான் புதிய பூமியில் வாழ்வார்களா? மிருகங்கள், பறவைகள், மச்சங்கள் அங்கே உண்டா? அவைகளை இவர்கள் ஆளுவார் களா? இவைகளுக்கெல்லாம் வசன ஆதாரம் இல்லையே! வசன ஆதாரம் இல்லாத போதனைகள் எல்லாமே பிசாசின் போதனைகள் தானே!

யார் அந்த 24 மூப்பர்கள்?

                   வெளி4:4;5:7-10 போன்ற வசனங் களில் வரும் 24 மூப்பர்கள் யார்? இயேசு மரித்து உயிர்த்த போது, உயிர்த்து யூதர்களுக்கு காட்சியளித்த பரிசுத்தவான் களை (மத் 27:52-53) இயேசு, எபே4:8ன் படி பரலோகிற்கு கொண்டு போனாரென்றும், அவர்களிலிருந்து எழுந்தவர்கள்தான் 24 மூப்பர்கள் எனவும் ஒருகள்ள உபதேசம் வெளிவந்திருக்கிறது. இதைப்பற்றி வசனத் தின்படி தெளிவாய் தெரிந்து கொள் வோம். எபே 4:8ல் அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களை சிறையாக்கி மனுஷர் களுக்கு வரங்களை அளித்தார் என்று உள்ளது. சிறைப்பட்டவர்கள் என்றால் பிசாசின் பிடியில் இருந்தவர்கள் என்று பொருள். அதாவது இரட்சிக்கப்படாதவர்கள். இவர்களை இயேசு கிறிஸ்து - சுவிசேஷத் தினாலே சிறைப்படுத்தி, இரட்சித்தார். அப்படிப்பட்டவர்களுக்கு, பரலோகத்தி லிருந்து பரிசுத்த ஆவியானவர் மூலமாய் வரங்களை அளித்தார். நாம்தான் அவர்கள். அல்லேலூயா! உண்மை இப்படியிருக்க, மத் 27:52-53ல் உயிர்த்தவர்களைத்தான் பரலோகம் கொண்டுபோனார் என்று எபே 4:8ஐக் காட்டி, அவர்கள்தான் 24 மூப்பர்கள் என்று பொல்லாத போதனை உலா வரு கின்றது. எச்சரிக்கையாயிருங்கள். இந்தப் போதனை மனுஷ கற்பனை.
                   தேவனின் சிங்காசனத்தை சூழ 24 சிங்காசனங்கள் பரலோகில் இருந்தன. அந்த சிங்காசனங்களின் மேல், 24 மூப்பர்கள், வெண் வஸ்திரந்தரித்து, பொன்முடி சூடி உட்கார்ந்திருந்தனர். (வெளி 4:4). தானி 7:9,10ல் சிங்காசனங்கள் காணப்பட்டன, ஆனால் ஒன்றில்தான் மனுஷகுமாரன் இருந்தார். மற்றவைகள் காலியாக இருந்தன. தானியேல் காலம் பழைய ஏற்பாடு. வெளி 4ம் அதிகாரம், கிறிஸ்தவ சபை இயேசுவின் இரகசிய வருகையில் எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு சம்பவிப்பவை (ள்ங்ங் வெளி 4:1) கிறிஸ்தவ சபை பரலோகம் போன பின்தான், காலி யாயிருந்த சிங்காசனங்களில் 24 மூப்பர் கள் இருந்தார்கள் என்றால் நிச்சயமாய் அவர்கள் எடுத்துக் கொள்ளப் பட்ட கிறிஸ்துவுக்குள்ளானவர்களைச் சார்ந்தவர் கள் தான் என அறியலாம். (ள்ங்ங் 1 தெச 4:16-18) மேலும் வெளி5:9,10 ஐ வாசித்தால் இவர்கள் இயேசுவின் இரத்தத் தால் மீட்கப்பட்டவர்கள் என அறியலாம். இதனால் இவர்கள் தேவ தூதர்களோ, வேறே சிருஷ்டிகளோ அல்ல. ஏனெனில் மனிதன் மாத்திரமே இயேசுவின் இரத்தத் தால் மீட்கப்பட்டவன். இவர்கள் கிரீடங்களைப் பெற்றிருப்பதால், நியாய விசாரணையில் கௌரவிக்கப் பட்டிருக்க வேண்டும். வெளி 5:8ன் படி, ஆசாரியர் களுக்குரிய வெண்ணங்கிதரித்து, ஆசாரிய ஊழியம் செய்வதால் அவர்கள் யாத் 19:5,6; 1 பேது 2:9; வெளி1:6ல் சொல்லப் பட்டவர் களாகத்தான் இருக்க முடியும். வெளி 5ல் ஆளும் வேளை வராததால் ராஜ உடைத் தரிக்கவில்லை.
                   மூப்பர் என்னும் பட்டம் சபையில், தலைவர் அல்லது பிரதிநிதி என்ற அர்த்தத்தில் தான் வேதம் சொல்கின்றது. (1 தீமோ 5:17; தீத் 1:5) 1 நாளா 24:1-19ன்படி, 24 என்பது ஆசாரியத்துவ முறைமைகளுக் கான எண்ணிக்கை என்று காணலாம். தாவீது, ஆசாரிய குடும்பங்களை பவுஞ்சு பவுஞ்சுகளாகப் பிரித்த போது 24 தலைவர்களின் கீழ் அந்தக் குடும்பங்கள் ஆயின. அந்த 24 தலைவர்களும், ஆசாரி யத்துவ முறைமைக்குட்பட்ட அனைவ ருக்கும் பிரதிநிதிகளானார்கள், மூப்பர்களா னார்கள். அதுபோல இங்கே (வெளி 4:4) 24 மூப்பர்களும், பழைய, புதிய ஏற்பாட்டு இரட்சிக்கப்பட்ட பரிசுத்தவான் களாகிய ஆசாரியத்துவ பிரதிநிதிகளுக்கு - விசுவாசி களுக்கு ஒப்பாவார்கள். அதாவது பழைய ஏற்பாட்டிலுள்ள இஸ்ரேலரின் 12 கோத்தி ரங்களின் பிரதிநிதிகளோடு, புதிய ஏற்பாட்டில் வரும் ஆட்டுக்குட்டியானவரின் 12 அப்போஸ்தலர்களையும் சேர்த்து 24 மூப்பர்கள் எனப்படுவர். இது வெளி21:10-14ல் உள்ள புதிய எருசலேமின் அஸ்தி பாரகற்களாலும், வாசல்களாலும் மேலும் உறுதிப்படும். ஆமென் அல்லேலூயா!
                   ஆக, 24 மூப்பர்கள் என்போர் இரகசிய வருகையில் எடுத்துக் கொள்ளப்பட்ட பரிசுத்த வான்களின் பிரதிநிதிகள் என்றும், மத் 27:53ல் சொல்லப்பட்ட பரிசுத்தவான்கள் அல்ல என்றும் அறிகிறோம். அப்படி யானால் அன்று உயிர்த்த பரிசுத்த வான்களின் நிலை என்ன? மத் 27:51 ஐயும் வாசியுங்கள். இயேசுமரித்த அன்றே கல்லறைகள் திறந்தன, பரிசுத்தவான்களின் சரீரங்களும் எழுந்தன. ஆனால் 3ம் நாள் இயேசு உயிர்த்தெழுந்த பிறகுதான் கல்லறைகளை விட்டுப்புறப்பட்டு நகரத்தில் காட்சிதந்தார்கள். அப்படியானால், வெள்ளி மாலையில் உயிர்த்தும் ஞாயிறு காலை வரை கல்லறையிலேயே இருந்திருக் கிறார்கள். காட்சி தந்தவர்கள் சரீரப்பிரகாரம் காட்சி தந்தனர். அவர்கள் மறுரூபமாகி பரலோகம் போனதாய் தெரியவில்லை. அல்லது மறுபடியும் கல்லறைக்குப் போயிருக்கலாம் என்றும் நிதானிக்கலாம். பரலோகிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட எலியாவும் ஏனோக்கும் என்ன ஆனார்கள், எங்கே காக்கப்படுகிறார்கள் என்ற எந்த ஒரு குறிப்பும் வேதத்தில் இல்லை. வேதத்தில் குறிப்புகள் இல்லாதபோது நம் அறிவுப்படி நிதானிப்பது தேவதுரோகமாகும். (மறைந்த சகோ.தினகரன், தலைமை மூப்பராக பரலோகில் செயல்படுகிறார் என்ற               பொல்லாத செய்தி தற்போது பரவி வருகிறது.)

பழைய ஏற்பாட்டில் இரண்டு பிரமாணங்களா?
                   சீனாய் மலையில் மோசேமூலம் உண்டானது பழைய ஏற்பாடு. அதற்கு முன்னான காலமெல்லாம் பழைய ஏற்பாடு அல்ல, சிலுவையில் இயேசுவின்மூலம் உண்டானது புதிய ஏற்பாடு. அதற்குப்பின் வருபவைதான் புதிய ஏற்பாடு, இயேசு வாழ்ந்த காலம் பழைய ஏற்பாடு (கலா 4:21-31, யாத் 24: மத் 20:28) பழைய ஏற்பாட்டில் தேவன் தன்கையினால் எழுதிக் கொடுத்த 10 கற்பனை தேவனின் நியாயப் பிரமாணம் என்றும், 10 கற்பனை அல்லாத மற்றப் பிரமாணங்களெல்லாம் மேசேயின் பிரமாணம் என்றும் இரண்டு பிரமாணங்கள் இருப்பதாய் வாதிடுவோர் உண்டு.
                   தேவன் கையினால் எழுதிக் கொடுக்கும் முன்பே வாயினால் 10 கற்பனை சொல்லப் பட்டது சீனாய் வனாந்திரத்தில் தான். (யாத் 20) இந்த 10 கற்பனை இஸ்ரேல் மக்கள் காதுகேட்க மோசேயிடம் தேவனால் சொல்லப்பட்டது. ஏன் இஸ்ரேலரிடம் நேரிடையாய் சொல்லாமல், மோசேயிடம் மட்டும் பேசினார்? ""உன் மூலமாய் நான் சொல்லப்போகும் இது போன்ற கற்பனை களை பிரமாணங்களை இஸ்ரேலர் கேட்டு இவைகள் கர்த்தருடைய பிரமாணங்கள் - வார்த்தைகள்தான் என்று உணர்ந்து அவர்கள் மோசேயை - மோசேயின் வார்த்தையை விசுவாசிக்க வேண்டும்'' என்பதற்காகவே இப்படிப் பேசினார். (யாத் 19:9) இடி முழக்கம், மின்னல், எக்காள சத்தம் மத்தியில் தேவன் பேசிய 10 கற்பனை வார்த்தைகளை கேட்கப் பயந்து, மோசேயை மட்டும் தேவனோடு பேச சொன்னார்கள். ஏனென்றால் தேவனின் சத்தம் அவ்வளவு வல்லமையுள்ளதாயிருந்தது (யாத் 20: 18,19) மோசே இந்த நியாயப்பிரமாண தேவனின் வார்த்தைகளை எல்லாம் தேவனிடம் கேட்டு (யாத் 20 முதல் 23 வரை) அவைகளை இஸ்ரேலரிடம் அறிவித்தான். கர்த்தர் அருளின எல்லாவார்த்தைகளின் படியும் செய்வோம் என்று இஸ்ரரேலர் எல்லாரும் ஏக சத்தமாய் சொன்னார்கள். (யாத் 24:3) ஆக, 10 கற்பனையும் தேவன் அருளிய வார்த்தை. அந்த 10 கற்பனைப் படியேயும் செய்வோம் என்றுதானே இஸ்ரேலர் சொல்லியிருக்க முடியும் ! மட்டுமல்ல. மோசே கர்த்தருடைய வார்த்தை களை எல்லாம் (யாத் 20,21,22,23) உடன்படிக்கையின் புஸ்தகத்தில் எழுதி, அவைகளை ஜனங்களின் காது கேட்க வாசித்தான். கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்வோம் என்று இஸ்ரேலர் சொன் னார்கள் (யாத்24:4,7). இந்த நியாயப் பிரமாண புத்தகத்தில் தேவனின் 10 கற்பனை எழுதப்படவில்லை என்றால், 10 கற்பனை அல்லாத மற்றப் பிரமாணங் களைத்தான் கைக்கொள்வோம் என்றார் களா? 10 கற்பனையை கைக்கொள்ள மாட்டோம் என்றார்களா? சிந்தியுங்கள்.
                   இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் 10 கற்பனையும் சேர்த்து மோசேயால் எழுதப்பட்டிருக்கிறது. இந்த புஸ்தகத்தில் உள்ளது எல்லாமே தேவன் வாய் மொழி யாய் மோசேயிடம் கொடுத்த பிரமாணங் கள்தானே! அப்படியானால் இவைகள் எல்லாமே தேவனின் பிரமா ணங்கள் தானே! இந்த தேவனின் பிரமாணங்கள் தானே ஒவ்வொருகூடாரப் பண்டிகையின் போதும், ஓய்வு நாளின் போதும் ஜனங்களின் காது கேட்க வாசிக்கப்பட்டது. அதிலே 10 கற்பனை இல்லைஎன்றால், 10 கற்பனை இஸ்ரேலருக்குத் தெரியாமல் போகுமல்லவா அல்லது 10 கற்பனைப் பலகைகளை உடன்படிக்கைப் பெட்டியி லிருந்து எடுத்து ஜனங்கள் கேட்க வாசிக்கப்பட்டதாக வசனம் ஏதும் உண்டா? இல்லையே! எனவே இஸ்ரேலர் வாய்மொழி யாய்க் கேட்ட 10 கற்பனையும் மோசே நியாயப்பிரமாணப்புஸ்தகத்தில் எழுதப்பட்டு வருடாவருடம் முழுவதுமாய் வாசிக்கப்பட்டது என அறிகிறோம். இந்த புஸ்தகத்தை மோசே எழுதியதால் இது மோசேயின் நியாயப்பிரமாணம் என்று சொல்லப் படுகிறது. முதலாம் உடன்படிக்கை - பழைய உடன்படிக்கை - யாத்24:8ல்  வைத்துதான் பண்ணப்பட்டது. அதுவரை தேவன் வாயினால் இஸ்ரேலர் கேட்கும்படி மோசேயிடம் சொன்ன 10 கற்பனையை கற்பலகைகளில் எழுதிக் கொடுக்கவில்லை என்றும், உடன்படிக்கைப் பெட்டியும் செய்யப் படவில்லை என்றும் முதலில் அறியுங்கள். ஆக, மோசேயின் நியாயப் பிரமாணம் என்றால் மோசே எழுதிய நியாயப்பிரமாணப் புத்தகத்திலுள்ள 10 கற்பனைகளடங்கிய நியாயப்பிரமாணம் என்று அறிகிறோம்.
                   நமக்குத் தெரிந்தபடி உபாகமம் என்பது யாத்திராகமத்தின் மறுபதிப்பாகும். ஆனால் ஒரு வித்தியாசம்; இந்த உபஆகமத்தில் (துணை ஆகமத்தில்) யாத்திராகமத்தில் சொல்லப்படாத புதிய நிகழ்ச்சிகளும் எழுதப்பட்டுள்ளதாகும். உபா 31:24-26ஐ வாசித்தால், யாத் 24ல் எழுதிய நியாயப் பிரமாணத்தில் சேர்க்கப்படாத- பிற்பாடு தேவனால் சொல்லப்பட்ட எல்லாப் பிரமா ணங்களையும் மோசே எழுதியிருக்கிறான் என்று தெரிகிறது. இப்போது உடன்படிக்கைப் பெட்டியும் செய்தாயிற்று, அதற்குள்ளே தேவன் எழுதிய 10 கற்பனைப் பலகை களும், மன்னாவும் ஆரோனின் தளிர்த்த கோலும் உள்ளன (See எபி 9:4) என்று அறிகிறோம். இங்கே உடன்படிக்கை செய்யப்படவில்லை என்று முந்தி அறிய வேண்டும். 10 கற்பனைகளடங்கிய நியாயப் பிரமாணப் புஸ்தகம் உடன்படிக்கைப் பெட்டிக்கு பக்கத்தில் வைக்கப்பட்டது. அதிலுள்ள, தேவனால் சொல்லப்பட்டு மோசேயால் எழுதப்பட்ட 10 கற்பனை முதலான அத்தனை தேவனின் பிரமா ணங்களும், இஸ்ரேலருக்கு விரோதமாய், ""குற்றவாளி, குற்றவாளி'' என்று சாட்சி யிடுமாம். இப்படி விரோதமான சாட்சி யாயிருந்த இந்த எல்லாத் தேவனின் பிரமாணங்களும் இயேசுவின் சிலுவை மரணத்தோடு ஒழிந்துபோய்விட்டது என்று, கொலோ 2:14;15 எபே 2:14;15, மத் 5:17,18 ரோ10:4 போன்ற வசனங்கள் விளக்குகி ன்றன. ஆக, பழைய ஏற்பாட்டில் இரண்டு பிரமாணங்கள் இல்லை என்றும், தேவன் வாய்மொழியாய்க் கொடுத்த தேவனின் பிரமாணங்கள்தான் மோசேயால் எழுதப்பட்டு, மோசேயின் பிரமாணம் என்று அழைக்கப் பட்டது என்றும் அறிகிறோம். ஒரே பிரமாணம் ""தேவனின் நியாயப் பிரமாணம்'', ""மோசேயின் நியாயப் பிரமாணம்'', ""உடன்படிக்கை யின் பிரமாணம்'' என்ற பல பெயர்களில் அழைக்கப்பட்டது. கர்த்தருடைய நியாயப் பிரமாணம் என்பது 10 கற்பனை மட்டும்தான் என்றால் எண் 19:2-10ல் சொல்லப்பட்ட கர்த்தர் கற்பித்த நியாயப் பிரமாணம் 10 கற்பனûயா? சிந்தியுங்கள். இதுபோல நிறைய கேள்விகள் கேட்கலாம்.
                   10 கற்பனையை மட்டும் தேவன் ஏன் கையால் எழுதிக் கொடுக்க வேண்டும்? அதை மட்டும் ஏன் உடன்படிக்கைப் பெட்டிக்குள் வைக்க வேண்டும்? இது கேள்வி : பழைய உடன்படிக்கையின் ஷரத்து நியாயப் பிரமாணம்தான். நியாயப் பிரமாணத்தின் அடிப்படை Basic - மூலம் - 10 கற்பனையாகும். இந்த அடிப்படையான பழைய ஏற்பாட்டு உடன்படிக்கை ஷரத்தை கற்பலகைகளில் தேவன் எழுதி, உடன் படிக்கைப் பெட்டிக்குள் வைக்கச் செய்தார். புதிய ஏற்பாட்டு ஷரத்துதான் ரோ 8:2ல் சொல்லப்பட்ட ஆவியின் பிரமாணம், இதுதான் இயேசு தந்த புதிய கட்டளை (யோ 13:34; 15:10) இதை தேவன் நம் ஆவியாகிய இருதயத்தில் எழுதி உள்ளார். (எபி 8:10) (இப்படி எழுதப்படும் என்று எரே 31:33ல் தீர்க்க தரிசனமாகவே சொல்லப் பட்டுள்ளது.) 10 கற்பனையாகிய பழைய உடன்படிக்கை ஷரத்தின் விரிவாக்கம் நியாயப்பிரமாண புஸ்தகம். ஆவியின் பிரமாணமாகிய புதிய உடன்படிக்கை ஷரத்தின் விரிவாக்கம் இயேசுவின் உபதே சங்களும் அப்போஸ்தல உபதேசங்களும் (மத்28:20, யூதா17;அப்16:14; ரோ6:17) உடன்படிக்கைப் பெட்டிக்குள் மன்னா வைக்கப்பட்டதும், ஆரோனின் தளிர்த்த கோல் வைக்கப் பட்டதும் பழைய ஏற்பாட்டு சரித்திர அடை யாளத்திற்காகவே! அப்படியே 10 கற்பனைப் பலகைகள் வைக்கப்பட்டதும் பழைய உடன்படிக்கைக்கு அடையாள மாகவே! அதற்காகத்தானே உடன்படிக்கைப் பெட்டியே செய்யப்பட்டது! 10 கற்பனையை இன்றும் கைக்கொள்ள வேண்டுமென்றால், இன்றும் மன்னாதான் சாப்பிட வேண்டும், ஆசாரியனாக்கப்படும் போது இன்றும் அன்று போல் கோல் தளிர்க்கப்பட வேண்டும் அல்லவா! 10 கற்பனை வேண்டாமென்றால் பொய் சொல்லலாமா? விபச்சாரம் செய்ய லாமா? இதுகேள்வி? இயேசுவின் உபதேச மும், அப்போஸ்தல உபதேசமும் என்ன வெல்லாம் செய்யச் சொல்கிறதோ அவைகளை மட்டும் செய்தால் போதும்; இந்த வசனங்கள்தான் கடைசி நாளில் நம்மை நியாயந்தீர்க்கும் (யோ12:18).
                   தானி 9:11 நெகே 9:13,14 போன்ற வசனங்களை எடுத்துக்கொண்டு, தேவனு டைய நியாயப்பிரமாணம் 10 கற்பனை என்றும், 10 கற்பனைகள் அல்லாத மற்றப் பிரமாணங்கள் மோசேயின் பிரமா ணம் என்றும் போதிக்கின்றனர். வேதத்திலுள்ள அத்தனை பிரமாணங்களும் தேவனின் பிரமாணம்தானே! தேவனின் நியாயப் பிரமாணம் என்பது 10 கற்பனை மட்டுமல்ல, தேவன் தமது தீர்க்கதரிசி களாகிய ஊழியக்காரரைக் கொண்டு இஸ்ரேலருக்கு முன்பாக வைத்த அத்தனை பிரமாணங் களும் தேவனின் பிரமாணம் என்று தானி 9:9 சொல்வதை தயவு செய்து சிந்தியுங்கள். இதை வாசிக்கும் தேவ பிள்ளையே! பழைய ஏற்பாட்டில் இருந்தது ஒரே பிரமாணம்தான் என்றும், அதுதான் ""தேவனின் பிரமாணம்'', ""மோசேயின் பிரமாணம்'', ""உடன் படிக்கை யின் பிரமாணம்'' என்றெல்லாம் சொல்லப் படுகின்றது என்றும் அறிந்து கொள்! சத்திய மாறுபாடுள்ள சந்ததி யை விட்டு விலகு (அப் 2:40) இயேசு சீக்கிரம் வருகிறார். ஆயத்தமாவோம்!! ஆயத்தமாக்கு வோம்!!

எது கிறிஸ்துவின் சபை?
...""நீ பேதுருவாய் இருக்கிறாய்: இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்''- மத் 16:18.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான் சபையைக் கட்டினார். இயேசு பிறந்து கட்டு வதற்கு முன்பெல்லாம் இருந்த தேவ ஜனங்களுக்கு சர்ச் (Church) என்று பெயரில்லை. Assembly, Congregation என்று தான் இருந்தது. அந்த சபை கட்டப்படும் என்ற காரியம், மணவாட்டி சபை உருவாகும் என்ற தீர்க்கதரிசனம், பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் ஒருவருக்குமே வெளிப் படுத்தப்படவில்லை. இந்த இரகசியம் பவுலுக்கு மட்டுமே வெளிப் படுத்தப்பட்டது. எபே 2:19 முதல் 3:3 வரை உள்ள வசனங்கள் இதை தெளிவாக்கு கின்றன. இப்படி மறைத்து வைக்கப்பட்டு, பவுலால் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற தென்றால் அது எவ்வளவு முக்கியமானது, உன்னதமானது, மகத்துவ மானது என்று புரிகிறதல்லவா! இதற்கு நிழலாட்டம் தான், ஏவாளைத் தேவன் படைத்தது. ஆதாமுக்கு அயர்ந்த நித்திரை கொடுத்து அவன் விலா எலும்பிலிருந்தே ஏவாளைப் படைத்தார். அப்படித் தான் நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை நமக்காக மரணத்துக்கு ஒப்புக் கொடுத்ததன் நிமித்தம் மணவாட்டியாக கிறிஸ்தவசபை வந்தது. அல்லேலூயா ! இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்து எழாவிட்டால், மணவாட்டி சபையே இராது.
இந்த கிறிஸ்துவின் சபை எதன் மேல் கட்டப்பட்டது? இயேசுவின் மேல் கட்டப் பட்டது. மூலைக்கல் அவர்தான். ஆகாத தென்று வீடுகட்டுகிறவர்கள் தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல் ஆயிற்று (எபே 2:20; சங் 118:22; 1 பேது 2:4-7) எப்பொழுது இயேசு மூலைக் கல்லானார்? இயேசுவாகிய கல் தள்ளப்பட்டபின்; அதாவது மரித்த பின்; அதாவது மரித்த இயேசு உயிர்த்து எழுந்த பின். மத்16:18ல் சொல்லிய தீர்க்க தரிசனத்தை அப்போது தான் நிறைவேற்றி காட்டினார். கர்த்தருக்குத் தோத்திரம்! இந்த சபை பெந்தகொஸ்தே நாள் முதல் (அப் 2) இரகசிய வருகை வரை (1கொரி 15:52) இருக்கும். பலர், வசன வார்த்தைகளை வைத்து, கிறிஸ்துவின் சபை பேதுருவின் மேல் கட்டப்பட்டதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். வசன வார்த்தையை மட்டும் கணிக்கக் கூடிய தவறான காரியம் ஒன்றை மட்டும் ஆராய் வோம். 1 பேது 5:8ன் படி நமக்குச் சத்துரு பிசாசு, இதை, உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள் என்ற மத் 5:44ம் வார்த்தை யோடு இணைத்தால், சத்துருவாகிய பிசாசை சிநேகிக்க வேண்டுமல்லவா? உண்மை அப்படி யல்லவே! இங்கே சொல்லப்பட்ட சத்துரு உலகப் பிரகாரமான மனித எதிரிகள்.
""நீ பேதுருவாய் இருக்கிறாய்'' மூல கிரேக்க பாஷையிலே பேதுரு என்பதை டங்ற்ழ்ர்ள் ஒரு கல் என்று போடப்பட்டுள்ளது. இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன் என்பதை - மூல பாஷையிலே இந்தக் கல் என்பதை, டங்ற்ழ்ஹ - ஒரு பெரிய பாறை என்று போடப் பட்டுள்ளது. இந்தப் பெரிய பாறையின் மீது தான் கிறிஸ்துவின் சபை கட்டப்பட்டதே ஒழிய, கல்லின்மேல் கட்டப்படவில்லை என்பதை பேதுருவும் 1 பேது 2:4-8ல் விளக்குகிறார். சபைக்கு அஸ்திபாரம் இயேசுவே என்று பவுலும்  1 கொரி 3:11ல் சொல்கிறார். கல்லாகிய பாறை இயேசு; சிறிய கல் பேதுரு.
இப்படி கிறிஸ்துவின் மேல் கிறிஸ்து வால் கட்டப்பட்ட சபையில் அங்கத்தினர் கள் யார்?  1கொரி12:12-13ன் படி, ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு ஒரே ஆவிக் குள்ளாகவே தாகந் தீர்க்கப்பட்ட பிள்ளைகள் தான் உறுப்பினர்கள். இந்த சபைக்கு தலைவர் யார்? கிறிஸ்து தான் (எபே1:22-33) தேவன் தங்கும் ஆலயம் இந்த சபைதான் (எபே2:21-22, 1கொரி3:16) கிறிஸ்துவோடு ஒரே சரீரமாயிருக்கிறது இந்த சபை (எபே5:30-31) இப்படிப்பட்ட இலக் கணங் களை உடைய இந்த சபைதான் கற்புள்ள கன்னிகையாக, கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்காய் நியமிக்கப் பட்டிருக்கிறது. இந்த சபை இந்தக் காலத்திலே திரளாய்ப் பரவிக் கிடக்கும் உலகப் பெயர்களுள்ள எந்த சபை? இது அநேக ருடைய கேள்வி. வானவில் சபையா, கிருபாசனமா, அ.எ.,இ.ட.ங., ஐ.ட.ங., ஐ.ட.இ.  திருத்துவ பூரண சுவிசேஷ சபையா, அ.இ.அ. வா, விடுதலை கிறிஸ்துவின் சபையா? எது? இங்கே சொல்லப்பட்ட சபைகளுக் கெல் லாம் தலைவர் யார்? நிச்சயமாய் உலகப் பிரகார மனிதர் தானே! கிறிஸ்து அல்லவே! இந்த சபைகளை நடத்திச் செல்வது யார்? நிச்சயமாய் உலகப் பிரகாரமான மனிதர் தானே! ஆனால் ஆவிக்குரிய கண்ணோ ட்டத்தோடு பார்த்தால், இப்படிப் பட்ட சபைகளை ஸ்தாபித்ததோ, பெயரிட்டதோ, நடத்திச் செல்வதோ ஆவிக்குரிய ரீதியில் கிறிஸ்து என்று ஏற்றுக் கொள்ளும் போது, ஆவிக்குரிய சபை என்ற ஒன்றே ஒன்று, ஆவிக்குரிய கிறிஸ்துவின் சபை என்ற பெயரிலே இயங்குகின்றது என்று உணரலாம் அல்லவா! அல்லேலூயா! மனிதன் ஸ்தாபித்து, பேரிட்ட சபையை அழைக்க இயேசு வரப் போவ தில்லை. அவர் ஸ்தாபித்த ஆவிக்குரிய சபையை மட்டுமே அழைக்க வருகிறார். மேலே சொல்லப்பட்ட இலக்கண வரம்புகளை உடைய, எபி 6:1,2ல் சொல்லப்பட்ட அடிப்படை சத்தியங்களை உடைய சபைகளில் உள்ள தேவனுடைய பிள்ளை களைத்தான் தேவன் அழைப்பார் என்பது நிச்சயமே! சபைப் பெயர் முக்கியமில்லை.
அப்படியென்றால், ""கிறிஸ்துவின் சபை யார்'' உங்களை வாழ்த்துகிறார்கள் (ரோ : 16:16) என்ற வசனத்தால் அறிவது என்ன? ரோமாபுரியிலுள்ள, ஆவிக்குரிய ரீதியில் கிறிஸ்துவால் கட்டப்பட்ட சபையில் உள்ள பரிசுத்தவான்கள் தான் இந்த கிறிஸ்துவின் சபையார். மற்றப்படி கிறிஸ்துவின் சபை என்ற பெயர் வைத்தால்தான் கிறிஸ்துவின் சபை என்றல்ல; ஸ்தாபித்து (ஆவிக்குரிய சபையை) வைத்தவர் இயேசு ; நாமல்ல. உலக சபைகள் எல்லாமே மனிதர்களால் ஸ்தாபித்து பெயர் வைக்கப்பட்டு அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டவை.
(1) வெளி:2,3 அதிகாரங்களிலே சொல்லப்பட்ட ஏழு சபைகளிலும், ஒன்றுக்குக் கூட கிறிஸ்துவின் சபை என்று பெயரில்லையே! அப்படியானால் அவைகள் ஒன்றும் கிறிஸ்துவின் சபை இல்லையா? வெளி3:7-13ல் சொல்லப்பட்ட நல்ல சபையாகிய பிலதெல்பியா சபை இயேசுவின் வருகையில் செல்லும் என்ற வார்த்தை தவறா?
(2) மேலே சொன்ன சபைகள், ஊர்களை வைத்து அழைக்கப்படுகின்றன. ஆனால் அவைகளின் பெயர் கிறிஸ்துவின் சபை தான் என்போருக்கு கீழ்க்கண்ட விளக்கம்:-
a. கொரிந்து பட்டணத்திலே இருந்த கொரிந்திய சபைக்கு தேவனுடைய சபை (இட்ன்ழ்ஸ்ரீட் ர்ச் எர்க்) என்று பவுல் அழைக்கி றாரே ஏன்? (1கொரி1:2,10:33), 11கொரி1:1) அந்த சபை கிறிஸ்துவின் சபை இல்லையா?
b. தீமோத்தேயுவுக்கு எழுதும்போது ஜீவனுள்ள தேவனுடைய சபை இட்ன்ழ்ஸ்ரீட் ர்ச் ற்ட்ங் கண்ஸ்ண்ய்ஞ் எர்க் என்று எழுதுகிறாரே ஏன்? (1தீமோ3:15) அது கிறிஸ்துவின் சபை இல்லையா?
c. தெசலோனிக்கேயருக்கு பவுல் எழுதும் போது, உங்களைக் குறித்து தேவனுடைய சபைகளிலும் மேன்மை பாராட்டுகிறோம் (11தெச1:4) என்று கூறுகிறாரே ஏன் ""கிறிஸ்து வின் சபைகளிலும்'' என்று சொல்லவில்லை.
சபைப் பெயர் நம்மை இரட்சிக்காது, பரலோகம் கொண்டு போகாது. சபையின் சத்தியமும் நடக்கையுமே நம்மைப் பரலோகம் கொண்டு போகும்.  இப்படியாய் சபைப்பெயர்களை வைத்துக் கொண்டு கடைசி காலத்தில் பெருத்த கள்ள உபதேசங் கள் வரும். ஜாக்கிரதையாய் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்று எண்ணித்தான், தன்மேல் கட்டப்பட்ட சபைக்கு ஒரு குறிப்பிட்ட பெயரை வைக்காமல், ஆவிக்குரிய சபையாக ஸ்தாபித்தாரோ என்று அறிந்து உவகை கொள்ளலாம். இந்த, கிறிஸ்து உண்டாக்கிய, ஆவிக் குரிய சபையிலே, ஏதோ ஒரு அவயத்தின் பேரிலே உத்தமாய் இருந்து, தேவனுடைய கற்பனை கைளயும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத் தையும் காத்துக்