சுரேஷ், அழகுமலை, திருப்பூர்
(1) எபிரேயு மொழியிலிருந்து பைபிளை தமிழுக்கு மொழி பெயர்த்தது யார்?
Ans:
 புதிய ஏற்பாடு, சீகன்பால்க் ஐயர் மூலமும், பழைய ஏற்பாடு, பெஞ்சமின் சூல்ச் மூலமும்
17ம் நூற்றாண்டில் மூலபாஷையிலிருந்து முதன்முதலாய் மொழி பெயர்க்கப்பட்டது.

(2) உபா 2:17ன் படி அம்மோனியரின் தேசம் லோத்புத்திரருக்கு கொடுக்கப்பட்டதாக வாசிக்கிறோம். யோசு13:24ல் காத் புத்திரருக்கு பங்கிட்டதாக வாசிக்கிறோம். விளக்கவும்.
Ans: லோத்புத்திரருக்கு கொடுத்தது, அம்மோனி யரின் முழுதேசமும் அல்ல உபா2:9 ஐ வாசித்தால், அம்மோனியரின் தேசத்திலுள்ள ஆர் என்னும் பட்டணத்து சீமை மட்டும் கொடுக்கப்பட்டது என அறியலாம். அப்படியே, காத்புத்திரருக்கு அம்மோனியரின் முழு தேசமும் கொடுக்காமல், பாதி தேசம் மட்டும் கொடுக்கப்பட்டதாக யோசு 13:25ன் மூலம் அறிகிறோம்.

(3) ரோ3ம் அதிகாரத்தை வாசிக்கும் பொழுது சிறுகுழப்பம் ஏற்படுகிறது. பவுல் தேவனுக்கு மகிமை உண்டாக பொய்பேசலாம் என்கிறாரா? விளக்கவும்.
Ans: 
ரோ3:7-8ஐ தியானித்தால் உண்மை புரியும். பொய் பேசுவது எவ்விதத்திலும் தவறு என்றும், நன்மை வரும்படிக்குப் பேசினாலும், அப்படிப் போதிக்கிறவர்கள் மேல் நீதியான ஆக்கினைத் தீர்ப்பு வரும் என்றும் பவுல் திட்டமும் தெளிவுமாய் எழுதியிருக்கிறான்.

(4) இயேசு மனிதர்களுடைய பாவங்களுக் காக மரிக்க விரும்பினால், அவர்தற்கொலை தான் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் யூதர்களின் சதி ஆலோ சனைப்படி, ரோமர் களால் கொலை செய்யப்பட்டிருக்க, அவர் எப்படி மனிதர்களுக்காக மரித்தாக எடுத்துக் கொள்ள முடியும்? விளக்கவும்.
Ans: 
தூக்கிலடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படி சுதந்திர தியாகி? ""எங்கள் பூமியை நாங்களே ஆள்வோம். வெள்ளையனுக்கு அடிமையாக மாட்டடோம். சுதந்திரமாய் நாங்களே ஆள்வோம்'' என்று வீர முழக்க மிட்டான் சுதந்திர ஆட்சிக்காக, அதனாலே தூக்கிலிடப்பட்டான், அதனாலே சுந்திர தியாகியானான். அப்படியே வெறுமனே பாரம்பரியத்தாலும், மனுஷருடைய கற்பனை களாலும் கிரியைகள் நடப்பித்து, தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாய் செயல்படும் இஸ்ரேலரும், ஊழியரும் நரகம் போகக் கூடாது என்று முழக்கமிட்டார் இயேசு. இதனை ஏற்று செயல்படுவோர், காளை, வெள்ளாட்டுக் கடாவின் இரத்தம் மேசியாவின் இரத்தம் என அறிக்கையிட்டால், மோட்சம் நிச்சயம் உண்டு என விளக்கினார். இது நமது பாவ விடு தலைக்காக, நாம் பாவ மன்னிப்பைப் பெற்று மோட்சம் போக வேண்டும் என்பதற் காக. இதற்காகவே இயேசு சிலுவையிலறையப் பட்டார். அதனாலேயே அவருடைய மரணம் நமது விடுதலைக்காக - மீட்புக்காக - இரட்சிப்புக்காக என்று அறிகிறோம். ஆமென்.

ரெத்தினம், மணப்பாறை
(1)கலிலேயா பெண்கள் இயேசுவின் கல்லறையிலிருந்து திரும்பி, ஓய்வு நாளில் ஓய்ந்திருந்து, பின்னர் வாரத்தின் முதல் நாளில் சுகந்தவர்கங்களோடு கல்லறைக்கு சென்றது ஏன்?
Ans: 
இவர்கள் நியாயப்பிரமாணக்கால இஸ் ரேலர்கள். எனவே இவர்கள் ஓய்வு நாளில் ஓய்ந்திருக்க வேண்டுமென்பது பிரமாணம் - கற்பனை. அதன்படியே ஓய்ந்திருந்தனர். மற்றப்படி புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்களாகிய நம்மை நியாயப்பிரமாணம் ஆண்டு கொள்ளாது. அது இயேசுவின் சரீரத்தோடே மரித்தது என்று விசுவாசிக்கிறவன் (எபே 2:14,15, ரோ7:1-6) இப்படியாய் ஓய்ந்திருக்க தேவையில்லை.

(2)மத்24:20ல் இயேசு, நீங்கள் ஓடிப்போவது மாரிக்காலத்திலாவது, ஓய்வு நாளிலாவது சம்பவியாதபடிக்கு வேண்டிக் கொள்ளுங்கள் என்று சொல்வது ஏன்?
Ans: 
மத்24,25ன் தீர்க்கதரிசனம் இயேசு பூமிக்கு வரும் 2ம் வருகையில் சம்பவிப்ப தாகும். மத்-24ல் உள்ள சில காரியங்கள் கி.பி.70ல் எருசலேம் ஆலயம் அழிக்கப்படும் போதும் நடந்தன. ரோ11:25-27ன்படி புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் இஸ்ரேலரில் ஒரு பங்கு இரட்சிக்கப்படாமல் - மேசியாவை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவர்களாய் - ஆகாமல் இருப்பார்கள். அவர் வரும் போது இரட்சிக்கப் படுவார்கள் (வெளி1:7; சகரி 12:10) அதுவரை இஸ்ரேல் ராஜ்யம் நியாயப் பிரமாணத்தின் கீழ்தான் ஓடிக்கொண்டிருக்கும். நியாயப் பிரமாணப்படி, ஓய்வுநாளில் எருசலேமின் வாசல்கள் எல்லாம் மூடப்படும். அப்படி மூடப்பட்டால் புறஜாதி ராஜாக்களால் வரப்போகும் பாழாக்குகிற அருவருப்பு களிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது அல்லவா! ஆகவே ஜீவனோடு ஓடிப்போவது அந்த ஓய்வுநாளில் சம்பவியாதபடி ஜெபித்துக் கொள்ளுங்கள் என்று இஸ்ரேலரின் மேலுள்ள அன்பால் இயேசு சொல்கிறார். அப்படியே மாரிக்காலத்திலும் ஓடிப்போய் தப்பித்துக் கொள்வது கஷ்டமாகும்.

(3) 10 கட்டளைகள் ஒழிந்த நிலையில் எதன் அடிப்படையில் இயேசு நியாயத்தீர்ப்பு வழங்குவார்? அல்லது நியாயத் தீர்ப்புக்கே இடமில்லாது அனைவரும் இலவசமாய் கிருபையால் இரட்சிக்கப்பட்டு விடுவார்கள் என்று சொல்கிறீரா?
Ans:
எபே 2:8ன் படி இரட்சிப்பு கிருபையால் விசுவாசத்தைக் கொண்டு கிறிஸ்தவனுக்கு கிடைத்திருக்கிறது. மத் 24:13ன்படி இந்த இரட்சிப்பில் முடிவு பரியந்தம் நிலைத்திருந் தால்தான், பரம இரட்சிப்பு - அதாவது அநித்யத்திலிருந்து நித்யத்திற்காக இரட்சிப்பு. இப்படி முடிவுபரியந்தம் நிலைத்திருக்க வழி நடத்துவதுதான், இயேசுவின் உபதேசமும் அப்போஸ்தலரின் உபதேசமும் (மத் 28:20, யூதா 17; ரோ 6:17; அப் 16:4) இந்த வழி நடத்தும் தேவனின் வார்த்தைகள் தான் கிறிஸ்தவனை கடைசி நாளில் நியாயந் தீர்க்கும் (யோ12:48) ஆமென்.

(4) கி.பி.537ல் தான் போப், வாரத்தின் முதல் நாளாகிய சூரிய வணக்க நாளுக்கு ஓய்வு நாளை மாற்றினார் என்று உமது முந்தைய முழக்கங்களில் முழங்கியுள்ளீர். அப்படி யானால், கி.பி. 537 வரை நீர் சொல்கிற புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களால் கூட வாரத்தின் 7ம் நாள் ஓய்வு நாளாக அனுசரிக்கப்பட்டு வந்ததது தானே உண்மை?
Ans: 
போப் மார்க்கத்தாரோ அல்லது அவர் களைச் சார்ந்தவர்களோ கிறிஸ்தவர்கள் அல்லர். கிறிஸ்தவ சபை சரித்திரத்தில் அவர்கள் இடம் பெறுவதில்லை. கிறிஸ்தவ சபை, ரிக்கார்டு பூர்வமாக பெந்தகொஸ்தே நாளில் உருவாகியது. அந்தியோகியாவில் வாழ்ந்த இயேசுவின் சீஷர்கள் முதல் முதலில் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஸ்தேவான் கொல்லப்பட்ட பின்னும், எரு சலேமின் கி.பி.70ன் அழிவுக்குப் பின்னும் கிறிஸ்தவர்கள் சிதறடிக்கப்பட்டு பலதேசங் களில் வெளிப்படையாகவோ மறைமுகமாக வோ வாழ்ந்து, இயேசுவின் வார்த்தைகளை - நற்செய்தியாய்ப் பரப்பினர். அப்படிப்பரப்ப இந்தியாவிற்கு வந்தவர்தான் தோமா. கி.பி. 1905ல் ஆவியானவரின் வல்லமை கிறிஸ்த வர்களுக்கு ஊற்றப்பட்டதால், பெந்தகொஸ்தே மார்க்கம் என்ற பெயரில் அவர்கள் வெளிப்பட்டு, இயேசுவின் வருகைக்காய் அதிதீவிரமாய் ஆயத்தம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பெந்தகொஸ்தே நாளிலிருந்து 7ம் நாளாகிய ஓய்வு நாளைக் கைக்கொண்டதே இல்லை. ஆமென்.

(5) புதிய ஏற்பாட்டுக்காரர்களுக்கு 10 கட்டளைகள் தேவையில்லை என்கிறீர். ஆனால் இயேசுவின் கற்பனைகளைக் கொள்ளாதவன் பொய்யன், அவனுள் சத்தியமில்லை. நாம் தேவனுடைய கற்பனை யைக் கைக்கொள்வது அவரிடத்தில் அன்பு கூருவதாம் என்று புதிய ஏற்பாட்டில் தானே யோவான் கூறுகிறான். (1யோ 2:4;5:3)
Ans: 
இதிலே 10 கற்பனை என்று சொல்லப்பட வில்லை. இந்த இயேசுவின் கற்பனைதான் யோ13:34;15:10ல் சொல்லப்பட்ட- அது வரைக்கும் சொல்லப்படாத - புதிய கற்பனை யாகும், இதுதான் கிறிஸ்துவின் பிரமாணம், (கலா6:2) இதுதான் ஆவியின் பிரமாணம் (ரோ8:2) இதன்படி நடந்தால் ஆக்கினைத் தீர்ப்பில்லை. இதன் விளக்கம் - விரிவாக்கம் தான் அப்போஸ்தல உபதேசங்கள்; இயேசுவின் உபதேசங்கள்.

(6) கிருபைக்கு கிழ்ப்பட்டிருக்கிறபடியால் பாவம் செய்யலாமா? கூடாதே என்று பவுல் கூறுகிறார். (ரோ6:15) அப்படியானால் அவர் எந்த பாவத்தை சொல்கின்றார்?
Ans: 
தேவனுடைய வித்தாகிய அவருடைய வார்த்தை - உபதேசம் - கற்பனை - பிர மாணம், கிருபையின்காலத்தில் வாழும் கிறிஸ் தவனை ஆள்கிறது. எனவே அதை விட்டு விலகி அவன் தொடர்ந்து பாவம் செய்யான், பாவத்தில் நிலைத்திரான் (1 யோ 3:9) அவனை தேவவித்தாகிய சகல சத்தி யத்திற்குள்ளும் ஆவியானவர் நடத்துகிறார். (யோ 16:13)

(7)ரோ7:7லும்,13,8,9லும் எந்த பிர மாணங்கள் குறித்து புதிய ஏற்பாட்டில் பவுல் போதிக்கிறார்?
Ans: 
இவைகளில் சொல்லப்படுவது 10 கற்பனைகளடங்கிய நியாயப்பிரமாணமே! நியாயப்பிரமாணமோ வேறு எந்தப் பிரமாணமோ அன்பு கூரவேண்டும் என்று தான் போதிக்கிறது. இப்படி அன்பு கூருவது 10 கற்பனைகள் அடங்கிய நியாயப் பிரமாணக் கிரியைகளாலா அல்லது இயேசு கிறிஸ்துவின் புதிய கட்டளையைக் கைக்கொள்வதாலா? இதுதான் கேள்வி. பழைய ஏற்பாட்டு மக்கள் நியாயப்பிரமாணக்கிரியைகளால்தான் காட்ட வேண்டும். அவர்களில் பலர் நீதிமானில்லை (ரோ 3:10-18) எபி 11ல் சொல்லப்பட்ட விசுவாச வீரர்களைத் தவிர. ஆனால் புதிய ஏற்பாட்டு மக்கள் - இயேசுவின் புதிய கட்டளையைக் கைக்கொள்ள வேண்டியவர்கள் கிருபையி னாலேயே எல்லோரும் நீதிமான்கள் (ரோ 3:23,24) ஆமென்! நீதிமான்களாக்கப்பட்ட நாம் இயேசுவின் மற்றும் அப்போஸ்தலர் களின் உபதேசத்தில் நிலைத்திருந்து பரலோகம் போவோம். அடிமையான நியாயப் பிரமாணம் வேண்டாம் (கலா4:21-31) சுயாதீனப்பிரமாணப்படி நடப்போம் (யாக் 1:25,2:12)

அந்தோணி பீரிஸ், விக்ரமசிங்கபுரம்
(1)எங்கள் கத்தோலிக்க சபையில் கும்பம், பொட்டு, சந்தனம், ஆரத்தி, குத்துவிளக்கு, பொன்னாடை, கைதட்டல் போன்றவைகளை பண்பாட்டுமையம் என்று கூறி அமர்க்களப் படுத்துகிறார்களே. இது சரியா? தவறா? சரியென்றால் கோவிலுக்குள் நுழையும் போது இருகைகளாலும் தலையில் கொட்டு போட்டு, தோப்புகரணம் போடலாமல்லவா!-
Ans:  இந்த அமர்க்களம் மகா தவறு, இதைத் தான் மத்15:3,9 சொல்கின்றன.

ஷியாம்,
பெங்களூரு.
(1) பாவிகள் எத்தனை ஆண்டுகள் நரகத்தில் இருப்பார்கள்? சதாகாலமும் இருப்பார்கள் என்றால் இந்திய சட்டப்படி தவறு செய்த வனுக்கு ஏற்ற தண்டனை கொடுத்த பிறகு விடுதலை பண்ணப்படுவார்கள் என்று உள்ளதே அப்படி ஏதாவது சான்ஸ் உண்டா?
Ans: 
  நரக ஆக்கினை என்பது சதாகாலமம் தான். இந்தியசட்டப்படி தவறு செய்தவனுக்கு சிறைத் தண்டனை மட்டுமல்ல, தூக்குத்தண்டனையும் உண்டு. தூக்குதண்டனை பெற்றவனுக்கு விடுதலை உண்டா? இல்லையே! அந்த தண்டனை நித்தியமானதே! அப்படித்தான் நரக தண்டனையும் for ever-eternal ஜீவ புஸ்தகத்தில் பெயரெழுதப்படதாக காணப் படாதவர்கள் அனைவருக்கும் இந்த நிலை (வெளி20:15) இவர்கள்தான் பிரதான பாவிகள் (See யோ 16:8,9;1யோ5:16)

(2) பரலோகில் இருக்கும் மனிதன், அன்று சாத்தான் பாவம் செய்தது போல செய்தால், அவனின் நிலை என்ன?
Ans: 
  தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய் யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் புதியவானம் - புதிய எருசலேமில் பிரவேசிப் பதில்லை (வெளி 21:27) வெளி 22:3ன்படி அங்கே ஒருசாபமுமிராது என்பதால் பாவம் உருவாக வாய்ப்பே இல்லை என உணரலாம். எனவே சாத்தான் பாவம் செய்தது போல, செய்யவே முடியாது என வசன வெளிச்சம் கூறுவதை விசுவாசிப்போம். மேற்கொண்டு நடப்பதை அங்குபோய் பார்த்துக்கொள்வோம்.

(3) வெளி 22:12ன்படி கிடைக்கும் பலன்கள் (reward) என்னென்ன?
Ans: 
  பாவிகளுக்கு நரகம் என்று நாம் நன்றாய் அறிந்திருக்கிறோம். மற்றப்படி சொர்க்கம் செல்வோருக்கு கிரீடங்கள் கொடுக்கப்படும். (ஆசிரியரின்""கருகலான சத்தியம்''புத்தகத்தில் ""நியாயத்தீர்ப்பு எங்கே யாருக்கு நடக்கும்'' என்ற செய்தியில் வாசியுங்கள்)

(4) 1 தீமோ 12:8-10ன் படி கிறிஸ்தவன் நகை அணியலாமா?
Ans: 
  1 பேது 3:3,4ன் படியும், கிறிஸ்தவர்கள் நகை அணியலாம், பாவமில்லை. 1தீமோ 2:10ல் உள்ள ""தகுதியான வஸ்திரம்'' என்றால் துணி என்று மட்டுமல்ல, Modest Apparel அதாவது உடம்பின் மேல் உடுத்துகிற அனைத்தும் என்று பொருள். தகுதியானபடி நகைகள், மயிரைப் பின்னுதல், உடையணிதல் போன்றவற்றை ஸ்திரிகள் அணியலாம். செய்யலாம் தவறி ல்லை மனைவிகள் அமைதலும் சாந்தமும் உள்ள குணத்தோடு புருஷனை மகிழ்விக்கும் படி அணியலாம். தவறில்லை ரோ14:21 ஐ தியானியுங்கள்.

(5) இயேசுவை கண்டேன்; தொட்டேன்; இங்கே நடமாடுகிறார் என்று ஊழியர்கள் சொல் கிறார்களே அந்தப்படி ஏன் எல்லோரும் காண முடியவில்லை? மத் 18:20ன் விளக்கமென்ன?
Ans: 
  யோ 14:1-3ன் படி பரலோகம் போனவர் நம்மை அழைக்கத்தான் வருவார் 1யோ 2:1ன்படி பிதாவின் வலது பக்கம் அமர்ந்து நமக்காய் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். எனவே அவர் பூமிக்கு வருவதே இல்லை. இப்படி ""கண்டேன், தொட்டேன்'' என்பதெல்லாம் தரிசனமாக இருக்கலாம். மற்றப்படி மத் 18:20 மற்றும் யோ 14:23 ன்படி தேவ பிரசன்னத்தை உணரமுடியும் இந்த கண்களால் அந்த மகிமையின் தேவனை காணவே முடியாது, கண்டால் பவுல் போல குருடாக வேண்டியது தான் (அப் 22:11)

(6) யோவான் 5ல் 38 வருடம் வியாதிப் பட்டுக்கிடந்தவனை மட்டுமே சொஸ்த மாக்கினார், ஏன் அங்கிருந்த மற்றவர்களை எல்லாம் சொஸ்தமாக்கவில்லை?
Ans: 
  விசுவாசித்தால்தான் தேவமகிமை வெளிப்படும் (யோ11:40) அங்கிருந்தவர் களிலேயே இவனது விசுவாசமே மேலாய் இருந்தது என்று இயேசு கண்டிருக்கிறார். சுகமாக்கப்பட்டான். அல்லேலூயா!

(7) இயேசு 12 முதல் 30 வயது வரை எங்கி ருந்தார்? அது ஏன் எழுதப்படவில்லை?
Ans: 
  நாசரேத்தூரில் பெற்றோருடன் வாழ்ந்தார் என லூக் 2:51, 52 சொல்கின்றது.