1. கனி கொடுக்கும் காலம் இல்லாவிட்டாலும் பழம் இருக்குமா?

           “அத்திப்பழம் காலமாயிராதபடியால் அவர் அவ்விடத்தில் வந்தபோது, அதில் இலைகளையல்லாமல் வேறொன்றையும் காணவில்லை” (மாற் 11:13). “இனி ஒருக் காலும் உன்னிடத்தில் கனி உண்டாகா திருக்கக்கடவது என்றார்” (மத் 21:19). இந்த வசனங்களைப் பார்க்கும் போது அத்திப்பழம் பழுக்கும் காலம் இல்லாத போது அத்திமரத்தில் தேவன் எப்படி பழத்தை எதிர்பார்க்கலாம்; எப்படி சபிக்கலாம் என்ற கேள்விகள் எழுகின் றன. நமக்குள் இதுவரை கருகலாய் இருந்த சத்தியத்தை பரிசுத்த ஆவி யானவர் இன்று விளக்குவாராக.
           இயேசுகிறிஸ்து சீஷர்களோடு பெத்தானியாவிலிருந்து புறப்பட்டு வருகின்றார். ஆனாலும் சீடர்களுக்கு, சபித்தப்போது புரியவில்லை. மறுநாள் காலையிலே அந்தவழியாய் வரும் போது தான் பட்டுப்போனதைக் கண்டார்கள் (மாற்11:20). இது சம்பந்தமாய் இயேசு சொன்னதைப் பாருங்கள். (மாற்11:22)  ‘பெத்தானியா’ என்றால் ‘அத்திப்பழவீடு’ என்று அர்த்தமாகும். பெயருக்கு ஏற்ற படியே இந்த ஏரியாக்களில் அத்திப்பழம் கிடைக்குமாம். இயேசு வரும்போது பசி உண்டாகி, இலைகளுள்ள ஒரு அத்தி மரத்தை துôரத்திலே கண்டு, கனியைத் தேடி வந்தார். அத்திமரத்தில் இலைகள் துளிர்விட்டு பசுமையாக இருந்தாலே கனி இருக்கும் என்று அர்த்தம். இலைகள் இல்லாத போது கனி இருக்காது. ""இந்த அத்தி மரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதிலே இளங் கிளை தோன்றி துளிர்விடும்போது வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்'' (மத் 24:34) என்று இயேசு இஸ்ரவேலரின் அரசியலமைப்பைப் பற்றிச் சொன்னதை நினைவு கூறுங்கள். வசந்தகாலத்தில்தான் அத்திமரம் பழம்கொடுக்கும். ஆனால் இங்கோ அத்திப்பழக் காலமில்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது அந்தக் காலம் வசந்தகாலமில்லை என்று அறிகிறோம். அப்படியானால் அந்த மரத்தில் இலைகள் எப்படி இருக்கும்? இயேசு கனிகளை எப்படி எதிர்பார்த் திருப்பார்? இதற்கு பதில் கிடைக்குமுன் அத்திமரத்தைப் பற்றி அறிந்து கொள்வது நல்லது. அத்திமரங்களிலே இரண்டு வகை உண்டு என வேதத்தின்மூலம் அறிகிறோம். ஒன்று பழக்காலத்துக்கு முன்பே கனி கொடுக்கும் மரம் (எரே 24:2 எசே 28:4)மற்றது பின்னால் கனி கொடுக்கும் மரம் (எரே 8:19; 28:17). எந்தக்காலத்தில் கனி கொடுத்தாலும் இலைகள் நிறைந்து இருக்கும்போதே அது கனி கொடுக்கும். இங்குள்ள சம்ப வத்தில், இது பழக்காலமல்ல என அறிகி றோம். பழக்காலமில்லாததற்கு முன்பே கனிதரும் மரமாய் இந்த மரம் இருந்தி ருக்க வேண்டும். (ஏனென்றால், இந்த ஊரின் பெயரே அத்திப்பழவீடு என்ப தால் எப்போதுமே பலவகைப்பட்ட மரங் களில் பழங்கள் எப்போதுமே கிடைக்க வாய்ப்பு பெயருக்கேற்றபடி இருந்தி ருக்கலாம்). அதனால்தான் இலைகள் வளர்ந்தி ருந்தன; இலைகள் இருந்தாலே கனிகள் வேண்டும்; காலம் பற்றி கவலையில்லை. ஏனென்றால் காலத் திற்கு முன்பே கனி தரும் மரவகை களில் ஒன்றாய் இந்த மரம் இருக்கல்ôம். இது சம்பந்தமாய் தேவன் தரும் ஆவிக் குரிய கருத்து என்ன? பழம் பழுக்கும் காலம் இல்லாத போது கனி கொடுக்கத் திராணி யை தேவன் கொடுக்கிறார். இலைகள் துளிர் விடுகின்றன. அப்படியே நீயும் நானும் கடைசி காலத்தில் இருந்தாலும் சரி, இராக்காலத்தில் இருந்தாலும் சரி, உன் னையும் என்னையும் தேவன் ‘ஜீவன்’ தந்து துளிர்விட வைத்திருக்கிறார். பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைக்கும் நீதிமானாய் ஆக்கியிருக்கிறார்; பரிசுத்த ஆவியினால் நிரப்பி இருக்கிறார். பல தரப்பட்ட வரங்களால் நிறைத்திருக்கிறார். அப்படி அவர் செய்ததற்கு காரணம் என்ன? பசி தாகம் என்ன? அவருடைய பசி தாகத்திற்கு அவர் என்ன எதிர் பார்க்கிறார்? உன்னோடே போஜனம் பண்ண விரும்புகிறாரே அது என்ன போஜனம்? (வெளி 3:20). அதுதான் அவர் விரும்புகிற உன் ஆவியின் கனி; நீதியின் கனி. அந்தக் கனி உன்னில் இருக்க வேண்டும் என்றுதான் (கலா 5:22) இம்மட்டுமாய் உன்னைப் பராமரிக்கிறார். இந்தக் கனி இல்லா விட்டால் நமக்கு அக்கினியும் கந்தகமும் எரிகிற கடல்தான். லுôக் 13-ல் தேவன் சொன்ன உவமையைப் பாருங்கள். கனி கொடாத மரத்தை வெட்டிப்போடு என்கிறார் தோட்டக்காரர். ஆக, ஆவியின் கனி இல்லாவிட்டால் உனக்கும் எனக்கும் தண்டனை தான். இயேசுவோடு வந்த சீடர் களுக்கு இந்த உண்மையை புரிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் தேவன் அந்த அத்தி மரத்தை சபித்தார். (See மத்3:10)
           நமக்கு விசுவாசம் பெருகவே தேவன் இப்படியாய் சபித்திருக்கக்கூடும் என்று நிதானிக்கலாம். இந்தக் காலம் எப்படிப் பட்ட காலமாயிருந்தாலும் உன்னைத் துளிர்விட வைத்தாலே நீ கனி கொடுத்தே ஆகவேண்டும். கனிகொடாத மரம் சபிக்கப்படும் என்ற விசுவாசம் உனக்கு இப்போதே வரவேண்டும். அல்லேலுôயா! நீ காலம் பற்றி கவலை யில்லாமல் எப்போதும் கனி கொடுக்கிற வனாக - மரமாக வாழ்ந்து காட்டு.

2. துரும்பையும் துôணாக மாற்றுகிறவர் நம் தேவன்

           தேவ பிள்ளையே! இன்றைக்கு பல கிறிஸ்தவர்கள் ""நான் ஏழை; அறிவில்லாத வன்; அழகில்லாதவன்; கருப்பு; குண்டு; ஒல்லி; குட்டை; நெட்டை; தாழ்ந்த ஜாதி” என்றெல்லாம் எண்ணி தங்களை தரக் குறைவாக்கிக் கொள்கிறார்கள். இப்படி அவர்கள் தவறாய் விசுவாசித்து அறிக்கை இடுவதால், அவர்களின் விசுவாசத்தின் படியே அவர்களுக்கு உயர்வே இல்லை; மகிமையே இல்லை; செழிப்பே இல்லை. 1கொரி1:27ஐ வாசியுங்கள். நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தம்மை விசுவாசிக்கிற பலவீனர்களை பலவான் களாக மாற்றுகிறார்; பைத்தியங்களை ஞானிகளாய் மாற்றுகிறார். அல்லேலுôயா!  நீ துôசிதான்; குப்பைதான்; துரும்புதான்; ஆனால் என்றைக்கு நீ இயேசுவை ஏற்றுக்கொண்டாயோ அன்றே அவர் உன்னை சிங்காரமாய் மாற்றிவிட்டார் (ஏசா61:3). விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் (யோ11:40). 
           “வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்க வேண்டும்; இந்த வார்த்தையின் படியே சொல்லாவிட்டால் அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை” (ஏசா 8:20). விடியற்காலத்து வெளிச்சம் என்றால் (Light of Morning Star)  நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் கிடைக்கிற வெளிச்சம், அதாவது வசன ஆசீர்வாதம் என்று பொருள் (வெளி2:28; 22:16). எந்த மனுஷனையும் பிரகாசிப் பிக்கிற ஒளி அவரன்றோ! (யோ1:9) இந்த இயேசுகிறிஸ்து மூலமாய் வெளிச்சமும்-ஆசீர்வாதமும்-வேண்டுமென்றால், வேதத்தை-அதாவது தேவனின் வார்த்தை யை கவனிக்கவேண்டும்; மட்டுமல்ல, அந்த வார்த்தையின்படி நடந்த தேவமனுஷர்களின் சாட்சி ஆகமங்களையும் வேதத்திலிருந்து கவனிக்க வேண்டும். கவனிப்பதோடு மட்டுமல்ல; சங்1:2ல் சொல்லப்பட்டபடி, அதை விசுவாசித்து அப்படியே அறிக்கை யிட்டுச் சொல்ல வேண்டும். அதைத்தான் விசுவாச அறிக்கை என்கிறோம். இப்படி அறிக்கையிடும் போதுதான் விடியற்கால வெளிச்சம்-இயேசுகிறிஸ்துவின் வசன ஆசீர்வாதம் நம்மில் வெளிப்படும். அல்லேலுôயா! 
           மேலே நாம் பார்த்தோம்; வேதம் சொல் கிறது:- “விசுவாசிக்கிறவன் சிங்காரம்; விசுவாசிக்கிறவன் ஞானி; பெலவான்” என்று. இதற்கு ஒத்த சாட்சி ஆகமத்தை-சாட்சிகளை வேதத்திலிருந்து பார்க்க வேண்டாமா? வேதத்திலே துரும்புகள் துôணாய், கோபுரமாய், சிங்காரமாய் மாறியிருக்கிறதா? 
           தாவீது:- ராஜாவாய் அபிஷேகம் பண்ண தன் தகப்பனால் சாமுவேலிடம் கொண்டு செல்லாமல் புறக்கணிக்கப்பட்ட ஒரே கடைசி மகன்; இவனை ஈசாய் துரும் பாகவே நினைத்தான்; ஆடு மேய்க்க விட்டு விட்டான். ஆனால் உலகத் தோற்றத்திற்கு முன்னமே தெரிந்து கொண்ட ஆண்டவர் (எபே 1:4) தாயின் கர்ப்பத்திலேயே முன் குறித்த ஆண்டவர் (எரே1:5), தாவீதை துரும் பாக விடுவாரா? துôணாக மாற்ற மாட்டாரா? தேவன் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது (யோபு 42:2). நம் தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை (லுôக் 1:37). 1சாமு 16:1-13ஐ வாசித்தால், சாமுவேல் தீர்க்கத்தரிசி துôணாகத் தெரிந்துகொண்ட ஈசாயின் முதல் மகனைக் கூட தேவன் துôணாகக் கருதவில்லை; துரும்பென்றே தள்ளிவிட்டார். உலகத்துப் பார்வையில் துôணாய் பலரிருக்கலாம். தேவனின் பார்வையிலோ அவர்கள் துரும்புகள் (ள்ங்ங் 1சாமு16:7) ; 7 மகன் களும் துரும்புகள்தான் தேவனின் பார்வை யில். கடைசியில் ஆடு மேய்க்க விட்டுவந்த துரும்பாய் கருதப்பட்ட தாவீது அழைக்கப் பட்டான்; ராஜாவாய் அபிஷேகம் பண்ணப் பட்டான்; தூணாக் கப்பட்டான். அல்லேலுயா! அதன் பின்னும், ஈசாய் தன் எல்லா மக்களையும், சவுல் ராஜாவின் பட்டாளத் திற்கு அனுப் பினான்; தாவீதையோ ஆடு மேய்க்க வைத்துக்கொண்டான். துôணாய் பட்டாளம் போனவர்கள், அங்கே பெலிஸ் தன் கோலியாத்தின் முன்னாலே துரும்பு களாய் நின்றார்கள். துôணாக்க எண்ணிய நம் தேவன், சகோதரர்களைக் காண போர்க் களம் வந்த தாவீதை, தகப்பனாலும், சகோ தரர்களாலும் துரும்பாக எண்ணப்பட்ட தாவீதை, ராட்சதன் கோலி யாத்தாலும் துரும்பாக எண்ணப்பட்ட தாவீதை துôணாக மாற்றினார்; கோலி யாத்தின் தலையோடு அரண்மனைக்கு வருகிறான்; ராஜாவின் மருமகனாகிறான்; “சவுல் கொன்றது ஆயிரம்; தாவீது கொன்றது பதினாயிரம்” என்று புகழப் பட்டான் (1சாமு 17:20- 18:27). இதை வாசிக்கும் தேவபிள்ளையே! துரும்பென்று எண்ணி துவண்டு போகாதே! தேவனின் நாமம் தரிக்கப்ட்டால் போதும் நீ துôணாக்கப்படுவாய்!
           லேயாள்:-  ராகேலின் மூத்த சகோதரி. உண்மையிலேயே அவள் கூச்சப்பார்வை உடையவள்தான்; அழகில்லாதவள்தான்; அற்பமாய் எண்ணப்பட்டவள்தான். ஆனால் அவள் இஸ்ரேல் வம்சத்தின் தகப்பனாம் யாக்கோபுக்கு முதல் மனைவியாக்கப் பட்டாள்; இது தேவனின் அநாதி தீர்மானம். அல்லேலுôயா! அழகாயிருந்தாள்; யாக் கோபை காதலித்தாள்; அந்த ராகேலுக்கோ குழந்தையே இல்லாதிருந்தது; லேயாளுக் கோ 6 மகன்கள்; 1 மகள். அதிலும் 2 மகன்கள், மாத விலக்கு நின்ற பின்னும் பிறந்தனர். இவளின் மகன்களில் ஒருவ னின் வம்சத்தில்தான் யூத ராஜசிங்கமாம் இயேசு ராஜா உதித்தார். அல்லேலுôயா! இதை வாசிக்கும் தேவ பிள்ளையே! உலகத் தாரால் ஈனமாக்கப்பட்டவர்களையும், மானமுள்ளவர்களாய், மரியாதைக் குரியவர் களாய் மாற்றுகிறவர் நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து! அல்லேலுôயா! (ஆதி30,31)
           அன்னாள்:- மலடியாயிருந்தவள்; தன் சக்களத்தியால் அற்பமாய் எண்ணப் பட்டவள்; ஆனாலும் ஏலியின் தேவ வார்த்தையை விசுவாசித்து அன்றுமுதல் கண்ணீர் விடாதவள். அவளுடைய வயிற் றிலே சாமுவேல் தீர்க்கதரிசி உதித்தான். இவன்தான் இஸ்ரவேலின் முதல் ராஜாவை அபிஷேகம் பண்ணினான். அற்பமாய் இருந்தவள் அற்புதமாய் மாறினாள்;  துரும்பாய் இருந்தவள் துôணாய் மாற்றப் பட்டாள். என்னே தேவனின் சித்தம்! கிரியை! அவளுடைய விசுவாசத்தின் வல்லமையின் படியே அவள் விரும்பியதற்கும் வேண்டிக் கொள்கிறதற்கும் மேலாய் கண்டடைந்தாள் (எபே 3:20). அல்லேலுôயா! (ள்ங்ங் 1சாமு1)
           இன்னும் இதுபோல ஏராளமான சாட்சியாகமங்களை சொல்லிக்கொண்டே போகலாம். நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைப் பாருங்கள்; வீடு கட்டுகிறவர்களால் ஆகாதென்று தள்ளப்பட்ட கல்; அது நம் தேவனால் மூலைக் கல்லாயிற்று (1பேது2:4-6). அதன்மேல் சபை கட்டப்பட்டது (எபே2:19,20) அது விலையேறப்பெற்ற கல்லாயிற்று; அதை விசுவாசிக்கிறவன் ஒருவனும் வெட்கப் படுவதே இல்லை. ஆமென். அல்லேலுôயா! 
           இதை வாசிக்கும் தேவ பிள்ளையே! நீ துரும்பாய்-சாதாரணமாய்- அசிங்கமாய்-ஆகாத கல்லாய் உலகத்துப்பார்வையில் இருக்கலாம். உன்னையோ அவர் துணாய்-அசாதாரணமானவனாய்-சிங்கமாய்-மூலைக்கல்லாய் மாற்ற வாஞ்சிக்கிறார். நீ எங்கேயிருக்கிறாய்? எப்படியிருக்கிறாய்? தேவனிடத்தில்-தேவனோடு-தேவன் கையில் இருக்கிறாயா? விடியற்காலத்து வெளிச்சம் உதிக்கும் என்று நம்புகிறாயா? உன் நம்பிக்கை வீண் போகாது! தாவீதை, லேயாளை, அன்னா ளை ஏன் தள்ளப்பட்ட இயேசுவையே உயர்த்தியவர், மகிமைப்படுத்தியவர், செழிக்கப் பண்ணியவர் உன்னையும் மாற்றத் தயாராய் இருக்கிறார். உன் வாழ்வு துôணாய், பாறையாய், மாணிக்கமாய், கானானாய், சிங்காரமாய் மாறும்! உன் மூலமாய் வெளிப்படப்போகும் சாட்சி, வேத வசன வேந்தன், இயேசுவுக்கு மகிமையாய் இருக்கப்போகிறது. அல்லேலுôயா!

3. தசம பாகம் கிறிஸ்தவன் கொடுக்க வேண்டுமா?

            “கொடுங்கள்; கொடுக்கப்படும்” (லுôக் 6:38) என்பது இயேசுவின் கட்டளை. இப்படிக்கொடுப்து இரண்டு வகைப்படும். ஒன்று தசமபாகம்; இன்னொன்று காணிக் கை. தசமபாகம் மனிதனுக்கு உரியதல்ல அது தேவனுக்குரியது (லேவி 27:30). கடந்தகால வருமானத்திலிருந்து கர்த்தருக் குரிய 10-ல் ஒரு பங்கை கொடுப்பது தசம பாகம். மற்றப்படி, உன்னுடைய மீதமுள்ள பணத்திலிருந்து-எதிர்காலச் செலவுக்குரிய பணத்திலிருந்து- விசுவாசத்தோடு கொடுப் பது  காணிக்கை. தேவனுக்குரியதை தேவனு க்கு செலு த்தாமல் வஞ்சித்தால் சாபம் வருமென்று மல்3:8,9 சொல்கின்றது. இது நியாயப் பிரமாணக்காரர்களுக்குரிய சாபம் என்று சிலர் வாதிடுகிறார்கள். கலா3:13ஐ வாசித்தால் ""நியாயப்பிரமாண சாபத்தி லிருந்து இயேசு நம்மை நீங்கலாக்கி மீட்டார்'' என்று அறிகிறோம். அப்படி யானால் இந்தப் பாவமும் சாபமும் புதிய ஏற்பாட்டு மக்களுக்கும் வந்து சேரு மல்லவா! ஆபிரகாமின்-ஆபிரகாம் சந்த தியின்-ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் நமக்கு உண்டு என்றால் (கலா3:7-9) சாபம் மட்டும் இல்லையோ? ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் நியாயப் பிரமாணக்காரர் களுக்கு முன்னால் வைத்திருக்கிறார்; நமக்கு முன்னால் இல்லையா? (உபா11:26-28;30:15,19) நமக்குமுன் இல்லை என்றால் ஏன் அந்த ஆசீர்வாதங்களை-வாக்குத் தத்தங்களை -பிரசங்கிக்கிறீர்கள்; அட்டை களை விநியோகிக்கிறீர்கள்? சிந்தியுங்கள். ஆசீர்வாதமும் சாபமும் இரண்டுமே நிபந்த னைக்குட்பட்டதுதான் (conditional). இதைச் செய்தால் இது பலிக்கும். ஆமென். மல்3:10,11ல் சொல்லப்பட்ட ஆசீர்வாதங்கள் கிறிஸ்தவர்களுக்கு வேண்டாமென்றால், தசமபாகம் நாம் செலுத்தவேண்டியதில்லை.
           அப்படியானால் நியாயப் பிரமாணக் கிரியையை கிறிஸ்தவன் செய்ய வேண்டு மா? இது ஒரு கேள்வி. “விபச்சாரம் செய் யாதே; கொலை செய்யாதே; அந்நிய நுகப் பிணைப்பு கூடாது” என்று நியாயப் பிரமா ணத்தில் சொல்லப்பட்டபடி நம்முடையகிரி யைகள் இருக்கவேண்டுமா, வேண் டாமா?  ஏன் இருக்க வேண்டும் நியாயப் பிரமா ணம்தான் நமக்கு இல்லையே! ஆவியா னவர் சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக்கடவன். நியாயப்பிரமாணத்திலே நிழலாய் சொல்லப்பட்டவைகள், இயேசு கிறிஸ்துவினாலே நிஜமானபடியால், (கொலோ 2: 16,17) அப்படிப்பட்ட நிழல்கள் நமக்குத் தேவையில்லை. மேலே சொன்ன- நியாயப்பிரமாணத்தில் உள்ள- எந்தக் காரியங்கள் நிழலாய் இருந்தது? இயேசு வால் நிஜமானது? ஒன்றுமில்லையே. அப்படியே தசம பாகம் கொடுப்பது என்பது நிழலுமில்லை; நிஜமுமில்லை. நியாயப் பிரமாணம் கொடுக்கப்படும் முன்பே, நம் விசுவாசத்தகப்பன் ஆபிரகாமும் யாக் கோபும் கொடுத்தார்கள் (ஆதி14:18; 28:20-22). அந்தக் காரியம் நியாயப் பிரமாணத் திலும் தொடர்ந்தது; இன்னும் தொடர்கிறது; சிலுவையிலே நிஜமாகி ஒழிந்து போக வில்லை. அப்படியே விருத்தசேதனமும் ஆபிரகாம் காலத்திலேயே உருவாக்கப்பட்டு, நியாயப்பிரமாணத்திலும் சொல்லப்பட்டது. ஆனால் புதிய ஏற்பாட்டு மக்களுக்கோ அது தேவையில்லை என்று ஆதி அப்போஸ் தலர்களால் நிர்ணயிக்கப்பட்டதால் (அப்15:5, 19:20;1கொரி7:19) அது நமக்கு தேவை யில்லை.ஆனால் தசமபாகம் நமக்கு தேவையில்லை என்று எங்குமே அப்போஸ் தல உபதேசம் இல்லை. கொடுக்கவேண்டும் என்று இயேசு சொன்னார்(மத்23:23); பவுல் கால கிறிஸ்தவர்கள் கொடுத்தார்கள் என்று பவுலும் எழுதுகிறான் (எபி7:8) ஊழியக் காரனும்-லேவியனும் கொடுக்கவேண்டும் என்று பவுல் உறுதிப்படுத்துகிறான். 
           ஆசீர்வாத வாழ்க்கை- செழிப்பான வாழ்க்கை- இந்தப் பூமியிலே கிறிஸ்தவன் வாழாத படிக்குத்தான் தசமபாகம் நியாயப் பிரமாணத்திற்குரியது என்று துர் உபதேசம் எழும்புகிறது (ள்ங்ங்மாற் 10:29, 30). இப்படிப்பட்ட வர்கள் தாங்களும் கொடுப்பதுமில்லை; கொடுத்து ஆசீர்வாதம் பெறுகிறவர்களையும் விடுகிறதுமில்லை (ள்ங்ங்மத்23:13). ""தேவ னை சோதிக்காதே'' என்று சாத்தானிடம் கட்டளையிட்ட ஆண்டவர் “சோதித்துப்பார்” என்று தன்னு டைய பிள்ளைகளிடம் கட்டளை யிடுகிறார் (மத்4:7; ஜ்ண்ற்ட் மல்3:10); ""சோதித்துப்பார்த்து மல்3:10,11ல் சொல்லப்பட்ட ஆசீர்வாதங் களைப் பெற்றுக் கொள். மல்3:12ல் உள்ள சாபங்களிலிருந்து நீங்கலாயிரு'' என்று ஆண்டவர் சொல் கிறார். என்னே தேவனின் அன்பு! இவர்களோ இரட்சிக்கப்பட்ட நம்மை சாத் தானுக்கு சமமாக்கி “தசமபாகம் கொடுத்து சோதித்து பார்க்காதே” என்று சொல்லி தேவனுக்கு விரோதமாய் கனைக் கிறார்கள். இப்படிப்பட்ட கள்ள உபதேசக் காரர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள். தசம பாகம் கொடுப்பது பற்றி நியாயப் பிரமாணம் சொல்வது (1) லேவியருக்கான தசமபாகம் (லேவி 27:30-34) (2) லேவியர் வாங்கும் தசம பாகத்தி லிருந்து ஆசாரியர் களுக்கான தசம பாகம் (எண்25-28) (3) எல்லா இஸ்ரேலரும் ஒவ்வொரு 3வது வருடமும் தசமபாகத்தில் தசமபாகத்தை லேவியர், ஏழைகள், அந்நியருக்கு கொடுப் பது (உபா14:22-29). இயேசு கிறிஸ்து வினாலே ஆசாரியத்துவமும் முறைமை களும் மாற்றப்பட்டபடியால், (எபி7:12) நாமெல்லாரும் ராஜாக்கள்; ஆசாரியர்; லேவியர் (1பேது2:9). அல்லே லுôயா! எனவே இந்த மூன்று நியாப் பிராமாண சட்டங்களும் நம்மைக் கட்டுப்படுத்தாது. தேவனுக்குரிய தசமபாகம், ஊழியர்களின் உதவிக்கும்- உபயோகத் துக்கும் மட்டும் தான் ஆபிரகாம் முதல், நியாயப் பிரமாண காலம்முதல், இன்றுவரை, உலக ஊழியம் இருக்கும் வரை கொடுக்கப்பட வேண்டும் என்பது தேவசித்தம்; தேவதிட்டம். இந்த சித்தத்திற்கு விரோதமாய் செயல்படுபவன் அக்கிரமச் செய்கைக் காரன் (Lawlessness)-வசனமில்லாதவன்-வசனப்படி நடக்காதவன் (மத்7:21-23).
           நியாயப் பிரமாணத்திலே பல முறைமை கள்  தசமபாகம் கொடுப்பதிலே இருந்தன என்று பார்த்தோம். நாம் எப்படிக் கொடு ப்பது? இது கேள்வி. இன்றைய தேதியில் ஆலயமும் இல்லை; லேவியரும் இல்லை. நம்முடைய விசுவாசத் தகப்பன் ஆபிரகாம், மெல்கிசேதேக் என்ற ஊழியனிடம் கொடுத் தான்.அதையே நாமும் பின் பற்றலாம். ஏனெனில் இப்போது மெல்கிசே தேக்கின் முறைமையின் படிதான் இயேசு பிரதான ஆசாரிய ஊழியம் செய்கிறார். அல்லேலுô யா! இதற்கு அனுசரணையாய் மல் 3:10ல் தேவனுடைய ஆலயத்தில் ஆகாரம் உண்டா யிருக்கும்படி பண்ட சாலையிலே (Godown) தசமபாகம் கொடுக்க வேண்டும் என்று உள்ளது. 1கொரி3:16: 6:19; மத் 16:18 ன்படி நமது சபையே அந்த ஆலயம். வசன ஆகாரம் இங்கிருந்து உலகமெங்கும் போக சபையிலேயே தசமபாகம் கொடுக்க வேண்டும். சபையிலே தரவேண்டும் என்றால் பாஸ்டரிடம்தான் (மேய்ப்பர்) என்று பலர் நினைக்கிறார்கள். இயேசுவின் கட்டப் பட்ட கிறிஸ்தவ சபையில் 5விதமான ஊழியர்கள்-ஊழியங்கள்- உள்ளன (எபே 4:11-13). இவை 5ம் எல்லா சபைகளிலும் இருப்பதில்லை. அப்படி இல்லாத சபை களில், இந்த 5ஊழியங்களும் உருவாக ஜெபித்து, அங்கேயே தசமபாகம் கொடுக்க வேண்டும். 5ஊழியங்களும் உருவாக-வளர-ஏது இல்லை என்றால், ஒவ்வொரு ஊழிய த்திற் கென்று, தசமபாகத்தை பிரித்துக் கொடுக்கலாம் தவறில்லை. எப்படியோ கிறிஸ்துவின் ஆவிக்குரிய சபை வளர வேண்டும் அவ்வளவுதான். (ஆவிக் குரிய ஊழியத்திற்கு மட்டுமே கொடுக்க வேண்டும்; மற்றபடி, பாரம்பரிய-பெயர்க் கிறிஸ்தவ சபையாருக்கோ, ஸ்தாபன ங்களுக்கோ,  அவர்களின் மிஷினரி களுக் கோ கொடுப்பது தேவ சித்தத்திற்கு மாறா னது என்று அறிக.)
           இதை வாசிக்கும் தேவபிள்ளையே! 2கொரி 8மற்றும்9ல் உள்ளது தசமபாகம் அல்ல என்றும், அது தர்மப்பண காணிக்கை என்றும் பழைய முழக்கத்தில் எழுதியிருக் கிறேன். எனவே அந்த வசனங்களை காட்டி பிசாசானவன் ஏமாற்ற நினைப்பான். ஏமாந்து போகாதே! ஆவியானவர் சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துவாராக! (மேலும் விளக்கங்களுக்கு ஆசிரியரை தொடர்பு கொள்க அல்லது 2வது சனி செமினாருக்கு வாருங்கள்.)