ஏ.வி.ராயன், துத்துக்குடி.
(1)யோ6:40ல் இயேசுவினிடத்தில் விசுவாச மாய் இருக்கிறவன் மட்டுமே நித்திய ஜீவனைப் பெறுவான் என்று கூறியிருக்க, காட்சிகளில் வந்த மாதா சொன்னவை களையும் விசுவாசித்து நடந்தால்தான் நித்திய ஜீவனைப் பெறமுடியும் என போதிப்பது எவ்வளவு அபத்தம் என்பதை செய்திமூலம் விசுவாச முழக்கத்தில் விளக்க முயற்சிக்கக்கூடாதா?
Answer:
பல செய்திகள் பல முழக்கங்களில் இதுபற்றி எழுதியிருக்கிறேன். வசனத்திற்கு விரோதமாய் என்ன சொன்னாலும் அது பிசாசின் வார்த்தை. பாக்கியவதி மரியாளின் பெயரை உபயோகித்து, பிசாசானவன் காட்சி என்ற பெயரில் வேதவசனத்தை அறியாத மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான். அந்த காட்சி களில் வருவது மாதா அல்ல; பிசாசுதான் மாதா என்ற போர்வையில் வெளிப்படுகிறான்.

(2)இயேசு மனித வித்தினால் பிறவாதபோது கலா:3:16-ல் ஆபிரகாமின் சந்ததி இயேசு என எழுதியது எப்படி?
Answer:
ஆபிரகாமின் சந்ததி என்றால் ஆபிரகாமின் பரம்பரையில் பிறந்தவர் என்று பொருள். மனித வித்தினால் பிறவாவிட்டாலும் மனிதனாய் பிறந்தார்.ஸ்திரியிடம் பிறக்கிற வர்கள்தான் மனிதர்கள் (கலா:4:5). மரியாளின் சந்ததியும் (பரம்பரை), யோசேப்பின் பரம்பரையும் ஆபிரகாம் வழியில்தான் வந்தது என மத்1 மற்றும் லுôக்3-ல் உள்ளதாக நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். எடுத்து வளர்த்த (ஹக்ர்ல்ற்ங்க்) பிள்ளையாய் இருந்தாலும்கூட, அந்தப் பெற்றோரின் பரம்பரை-சந்ததி என்றுதானே சட்டம் சொல்லுகிறது. புறஜாதி யிலிருந்து வந்த நாமும் தத்துப்பிள்ளை என்றாலும், இயேசுவின் வம்சம்தானே; சந்ததிதானே; பரம்பரைதானே!

(3)ரோ:4:5ன்படி தேவனை விசுவாசிக்கிறதே கிரியை என்றாகாதா?
Answer: ரோ:4:5ஐயும், ஆதி:15:6ஐயும் தியானி யுங்கள்.விசுவாசம் என்பது நீதியாக எண்ணப்படும். ஆனால் கிரியையில்லாத விசுவாசம் செத்ததாகும் (யாக்:2:19). யாக்:2:20-24ஐ வாசித்தால்,ஆபிரகாமின் விசுவாச நீதி கிரியைகளினாலேதான் வெளிப்பட்டு பூரணப்பட்டது! நம்முடைய இரட்சிப்புகூட இருதயத்திலே விசுவாசித்து வாயிலே அறிக்கை என்கிற நீதி வெளிப் பட்டால்தான் பூரணப்படும் (ரோ:10:9,10).

(4)பாடுகள், வியாதிகள், துன்பங்களை தன் பிள்ளைகளுக்கு தேவன் அனுமதித்து, சிட்சித்து, சரியான வழிக்கு அவர்களைத் திருப்புகிறார் என ஒரு ஊழியர் எழுதியுள் ளார். இப்படிப்பட்ட ஊழியர்கûளை சரியான வழிக்குத் திருப்புவது எப்படி?
Answer:
அப்படி எழுதியவர் தேவனைப்பற்றி, தேவசித்தத்தைப்பற்றி அறியாமல் செயல் படுகிறவராவார். கிறிஸ்துவினிமித்தம் பாடுகள், துன்பங்கள் வரலாம். இதை தேவனே விட்டுக்கொடுக்கிறார்; இது புத்தி புகட்ட அல்ல; தன் நாமம் மகிமைப்பட. மற்றப்படி பாவம்,சாபம், பிசாசு போன்றவற்றால் வரும் எந்த பொல்லாத சோதனைகளையும் தேவன் அனுமதிப்பதுமில்லை; அவைகளைக் கொண்டு சிட்சிப்பதும் இல்லை; (யாக்:1:13). விடுதலை நாயகனாம் இயேசு ரட்சகர், சிலுவையிலேயே, அவரே சுமந்து தீர்த்து நமக்கு வெளிப்படுத்தி இருக்கிறாரே! தவறான கள்ள உபதேசங்களைப் போதிப்பவர்களை ஆவியானவர்தான் சகல சத்தியத்திற்குள்ளும் வழி நடத்தவேண்டும்(யோ16:13): அப்படிப்பட்ட காரியத்திற்காய் ஜெபிப்பதும்; ஆரோக்கியமான உபதேசத்தை, அவர்களை பின்பற்று வோருக்கு வெளிக்காட்டுவதுமே நம்மேல் விழுந்த கடன்.இதைத்தான் நாங்கள் செய்கிறோம்.

(5)ரோ:10:14;கலா:2:19; 3:11எபே:2:14 போன்றவைகளால்,நியாயப்பிரமாணத்தால் இரட்சிப்பு இல்லை என்று கூறிய பவுல், அப் 21-ல் நியாயப்பிரமாணத்தை அனுசரிக்கி றவராக ஏன் காட்ட வேண்டும்?
Answer:
நியாயப்பிரமாணம் பற்றிய தெளிவான போதனை பெந்தெகோஸ்தே வட்டாரத்தில் இல்லாததால்தான் இப்படிப்பட்டகேள்விகள் எழும்புகின்றன. நியாயப்பிரமாணம் பாவமா? இல்லையே! அது தேவன் கொடுத்தது. அந்த நியாயப்பிரமாணத்தை அனுசரித்த எபி 11-ல் உள்ள தேவ பிள்ளைகள் எல்லாம் இரட்சிக்கப் பட்டவர்கள் இல்லையா?அவர்களுக்கு பரலோகம் சொந்தமில்லையா? உண்டு. எப்படி? தேவனை-தேவனுடைய வார்த்தை யை-இரட்சிப்பின்பலியை-விசுவாசித்து செயல்படுகிற அத்தனை நியாயப் பிரமாணக் காரர்களும் பரலோகத்திற்கு சொந்தக் காரர்கள்.இரட்சிப்பு என்னும் தேவனுடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்காமல்- உலகக்கானானிலும் பிரவேசிக்காமல் போன நியாயப்பிரமாண இஸ்ரேலர்களிடம் இருந்த குறை-பாவம்-குற்றம் என்ன?வசன விசுவாச மில்லை (எபி:3:18,19). ஆக, நியாயப் பிரமாணத்தை அனுசரிப்பது பாவமல்ல, வசன விசுவாசமில்லாமல் அனுசரிப்பதே பாவம். அப்:21:20-28ஐயும், 1கொரி:9:18-23ஐயும் தியானியுங்கள். எப்படி பவுல் செயல்பட்டாலும், 1கொரி:9:21ன்படி, கிறிஸ்துவின் பிரமா ணத்துக்குட்பட்டவனாகவே செயல்படுகிறான். ஆமென். நியாயப் பிரமாணப்படி, ஓய்வு நாட்களை ஆசரிக்கும் இரட்சிக்கப்படாத யூதர்களின் ஜெப ஆலயத்திற்கு பவுல் போகவில்லையா! (ள்ங்ங்அப்:17:1,2)சிந்தியுங்கள்.நியாயப்பிரமாணம் பாவமல்ல. நியாயப்பிரமாணக்கிரியை மாத்திரம் கொண்டவர்களே சாபத்திற்குட் பட்டவர்கள். இயேசு வந்த பின்பு, நியாயப் பிரமாணக்கிரியைக்காரர்கள் நீதிமான்களே இல்லை என்பதால், அந்தக்கிரியையை தன்சிலுவை மரணத்தோடு ஒழித்து, கிறிஸ்துவின் பிரமாணம்-விசுவாசப் பிரமாணம்-புதிய ஏற்பாட்டுப்பிரமாணம் தந்து வழிநடத்துகிறார். அல்லேலுôயா!

(6)""கேள்வி-பதில்'' பகுதி ஒன்றில், ""தேவனால் பிறந்த எவனும் தொடர்ந்து பாவம் செய்யான்; பாவத்தில் நிலைத் திரான்'' என எழுதிவிட்டு, ""இரட்சிக்கப் பட்டவன் சாகும் வரை பாவம் செய்து கொண்டிருப்பான்'' என எழுதியதை ஜீரணிக்க முடியவில்லை. இயேசுவைப்போல் பாவம் செய்யாது நாம் வாழமுடியாதா?
Answer:
இயேசுவைப்போல் பாவம் செய்யாது நாம் வாழவேண்டும் என்பதற்காகத்தானே இயேசு பூமிக்கு வந்து மரித்து உயிர்த்தார். 1யோ:1:8-ன்படி இரட்சிக்கப்பட்ட நமக்குள் பாவமுண்டு. இருதயமாகிய ஆவி மாத்திரம் இரட்சிக்கப்பட்ட நிலையில், மனமாகிய ஆத்மா தினந்தோறும் மறுரூபமாகிக்கொண்டேயிருப்பதால் (ரோ:12:2), இயேசு வரும் வரை குற்றமற்றதாய் மாறிக்கொண்டேயிருக்கும் (1தெச:5:23). அதுவரைக்கும் பிசாசின் பூமியில், பாவத்தில் விழுந்து எழுந்து வாழ வாய்ப்புண்டு. 7 தரம் (எத்தனை தரம்) விழுந்தாலும் நீதிமான் எழுந்தரிப்பான் (நீதி24:16). இரட்சிக்கப் பட்டவன் பாவமே செய்யமாட்டான் என்றால், சபை எதற்கு? 5 விதமான ஊழியம் எதற்கு? 66 புத்தகம் எதற்கு? “தேவன் ஒருவர் தவிர, நல்லவன் ஒருவனுமில்லையே” என்று இயேசு சொன்னதை (லுôக்:18:19) தியானி யுங்கள்.உலகில் அநேக பாவங்கள் உள்ளன. ஒருபாவம் செய்து மன்னிப்பு பெற்றவன் அதிலிருந்து விலகி இருக்கவேண்டும் என்பது தேவனின் வாஞ்சை. அப்படி மாறினவன் வேறொரு பாவம் செய்ய வாய்ப்புண்டே! விபச்சாரம், குடி, கொலை, திருடு, பொய் இது மட்டும்தான் பாவமா? விசுவாசத்தால் வராத யாவும் பாவமாயிற்றே! நன்மை செய்யாததே பாவமாயிற்றே! (ரோ:14:23; யாக்:4:17; 1யோ:5:17)

நிக்கோலாஸ், சென்னை-63.
(1)தங்களுடைய டிச-10 முழக்கத்தில் எழுதியபடி 2ம் வருகையில் நடக்கும் (வெளி:19:21) யுத்தம்தான் 3ம் உலக மகா யுத்தமாயிருக்கும் என்பதை பல வழிகளில் புரிந்துகொண்டேன். ஆனால் சில பத்திரிக்கை கள் ""அதுவல்ல 3ம் உலக மகாயுத்தம் அதற்குமுன் ஒன்று வரும்'' என எழுதுகின்றனர். தயவுசெய்து விளக்கவும்.
Answer:
மொத்தம் உலகில் எத்தனை உலக மகாயுத்தம் நடக்குமென யாரும் கூறவில்லை. முதல் இரண்டு யுத்தங்களை அறிந்தவர்கள், ஒரு அணுகுண்டாலே பாதி உலகை அழிக்கமுடியும் என்று தெரிந்தவர்கள், 3ம் உலக மகாயுத்தத்தோடு பூமி அழிந்து சீர்குலையும் என்று கணித்து அதுதான் இறுதியுத்தம் என்கிறார்கள். இது அவர்களின் விஞ்ஞான அறிவுக்கொத்த அனுமானம். இதை சரியென்று நிதானித்தால், அர்மெக தோன் யுத்தம்தான் 3ம்உலக-இறுதி மகாயுத்தம்-என்று சொல்ல வாய்ப்புண்டு. ஏனென்றால், அஞ்ஞானம் மலிந்திருக்கும் இந்த பூமியில் வேதத்திலே சொல்லப்பட்ட கடைசியுத்தம் இதுதான். எனவே இதை நாம் 3ம் உலக மகாயுத்தம் என்று சொல்லலாம். மேலும், இந்த யுத்தம் அந்திக்கிறிஸ்துவின் கூட்டத்தாருக்கும் எருசலேமுக்கு துணை போகும் ராஜாக்களுக்கும் இடையிலே நடப்பது. எருசலேம்  அப்போது பிடிபடும். இயேசுகிறிஸ்து வந்துதான் இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவார் என்பதால் இது உலக மகாயுத்தம்தான்.

வினோத், K.K.Dt
(1)இயேசு நம்மோடு சபை பெர்க்மான்சுக்கு உங்கள் பத்திரிக்கை போகிறதா? இந்தப் பத்திரிக்கை மூலமாய் ஆவியானவர் அவரோடு பேசினால், அவரின் கிளை சபைகளில் சொல்லி அது எங்களுக்கு உபயோகமாய் இருக்காதா?
Answer:
பத்திரிக்கை அவருக்குப் போகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பே மதுரையில் நாங்கள் 3நாள் செமினார் வைத்தபோது, சகோ. பெர்க்மான்ஸôல் அனுப்பப்பட்ட ஒருவர் அங்கு வந்து, சிறிய வடிவில் அப்போதிருந்த ஆராய்ச்சிப் புத்தகங்களை வாங்கிச் சென்றார் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.ஒருசில கருத்தில் அவரின் ஒரு சில பாடல் வித்தியாசமாய் இருந்தாலும், எங்களின் முழுசத்தியத்தை அவர் பாடல்மூலம் வெளிப்படுத்துகிறார் என்பது மட்டும் உண்மை.

(2)பிதா,குமாரன், பரிசுத்தஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்க இயேசு சொன்னார். அப்போஸ்தலர்கள் இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்திருக்கிறார்கள். ஆகையால் தேவனின் நாமம் இயேசு. இது சரியா?
Answer:
இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தார்கள் என்று ஒரு வசனம்கூட இல்லை.விசுவாசிகள் இயேசுவின் நாமம் தரித்து-இயேசுவின் நாமத்தினால்-ஞானஸ்நானம் பெற்றார்கள் என்றுதான் வசனம் உள்ளது.தேவன் அண்ட சாராசாங்களையெல்லாம் படைக்குமுன்னே இருந்தவர்.அப்போது அவருக்கு இயேசு என்று பெயர் இருந்ததாக வசனமே இல்லை. ஒரே தேவனுக்கு பெயரில்லை; பெயர் தேவையுமில்லை.மற்றப்படி அவர் மூன்று ஆட்தத்துவமாய் செயல்படும்போது, பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்ற காரணப் பெயர்கள்தான் இருந்தன. 2011க்கு முன் மனிதனாய் பிறந்த வார்த்தையானவருக்குத் தான் மனிதரீதியாய் இயேசு என்று பெயரிடப்பட்டது.மற்றப்படி,ஆதியிலிருந்து தேவனின் நாமம் இயேசு அல்ல.

(3)இயேசுவின் மகிமையை பரலோகில் வைத்துவிட்டு மனித சாயலாக பூமியில் பிறந்தார். இது சரியா?  
Answer:
பிலி:2:6,7ஐவாசியுங்கள். மகிமையை பரலோகில் வைத்துவிட்டு வரவில்லை. தேவனுக்குச் சமமாய்,தேவரூபத்திலிருந்த வார்த்தையாகிய தேவன்,தம்மை வெறுமை யாக்கி, அடிமையின் ரூபமெடுத்து (மகிமையும் ரூபமும் மாற்றப்பட்டது) மனிதரானார். அவ்வளவுதான்.

(4) ஸ்தேவானின் சாட்சியின் போது, வலதுபாரிசம் என்பது உன்னத இடம்!? சரியா?
Answer:
ஆம்!உன்னத இடமான பரலோகிலுள்ள பிதாவின் வலதுபுறமாகும்.எபி:10:12,13 போன்ற வசனங்களை வாசித்தால், உயிர்த்து பரலோகம்போன இயேசு, 2ம் வருகை வரைக்கும் பிதாவாகிய தேவனின் வலது புறம்தான் அமர்ந்து பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார்.(1யோ:2:1,2)ஸ்தேவான் மரிக்கும்போது வலதுபுறம் உள்ள இயேசுவையும் தேவனுடைய மகிமையையும் கண்டான் (அப்:7: 55,56).

(5) சிலுவையில் இயேசு ""என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்? என்ஆவியை உம்மிடத்தில் ஒப்படைக்கிறேன்'' என்று கூறியது நமக்கு முன்மாதிரியாகும். ஸ்தேவானும் அப்படித்தான் கூறி மரித்தான்.
Answer:
ஸ்தேவான் அப்படி மரித்தபோது, வானத்தில் தேவன் இருந்தாரல்லவா! அப்படியே இயேசு கூறும் போதும் பரலோகில் தேவன் இருந்திருக்க வேண்டுமல்லவா! “நமக்கு முன்மாதிரி” என்றால், இல்லாத ஒருவரிடம் இயேசு பேச வேண்டுமா? இதுவா மாதிரி? சிந்தியுங்கள்.

(6) இயேசு ஒருஇடத்திலும் நாங்கள் மூன்று ஆள் தத்துவமாய் இருக்கிறோம் என்று சொல்லவில்லையே! ங்யோ:14:16; 16:5-7 போன்ற வசனங்களில் “பிதா, நான்,வேறொரு தேற்றரவாளன்” என்று மூன்று பேரை சொல்லவில்லையா?
Answer: யோ: 14; 23-ல் பிதாவும், நானும் (நாங்கள்) வாசம் பண் ணுவோம் என்று இரண்டு பேரை சொல்லவில் லையா? இன்னும் ஏராள வசனங்கள் உள்ளன.      

நிர்மலா சேகர், சென்னை-41
(1)இயேசு மணவாளன்;நாம் மணவாட்டி.ஒரு சகோதரியின் அதிகாலை ஜெபத்தில், கணவன் தன் மனைவியிடம் அன்புகூறுவது போலெல்லாம் இயேசு செய்வாராம். இது பேத்தல் என்றேன்! நீங்கள் ஜெபத்தில் தரித்திருந்தால்தான் இதை உணர்வீர்கள் என்கிறாள். இது பிசாசின் (இச்சையின் ஆவி) தந்திரங்களில் ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
Answer:
உங்கள் எண்ணம் மிகவும் சரியே! சகோதரியிடம் புருஷன் போல வந்து அன்புகூர்ந்தார் என்றால் என்னிடம் எப்படி? ஆண்புணர்ச்சியாய் இருக்குமா?அல்லது என்னிடம் வரும்போது பெண்ணாக வந்து லீலைகள் செய்வாரா? காலம் கடைசி காலம்! ஜாக்கிரதையாயிருங்கள்!

(2)சகோ.தாயப்பன் அவர்களின் CD மற்றும் புத்தகங்களை அனுப்புகிறேன். நிச்சயமாக அவரது எளிய நடை அநேக இந்துக்களை ஆண்டவரண்டை வழிநடத்தும் என்பது என் எண்ணம். படித்துவிட்டு சொல்லுங்கள்.
Answer: உங்கள் எண்ணம் நிறைவேறினால் அதனால் மகிழ்ச்சியடையும் முதல்ஆள் நான்தான். (எனக்கு அனுப்பியதற்கு நன்றி)

(3) தீர்க்க தரிசனம் சொல்லும் ஒருவர், 2010 ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு கேடான வருடம் என்று சொன்னபடியே, அநேக கடத்தல்கள், சிசுக்கொலைகள், கேடுகள் சென்ற ஆண்டு வந்தன. சரியாகத்தானே சொல்லியுள்ளனர்! (தீர்க்கதரிசனங்களை அற்பமாய் எண்ணாதிருங்கள்)
Answer:
1கொரி14:22-ன்படி புதிய ஏற்பாட்டில் தீர்க்கதரிசன வரம், விசுவாசிகளுக்குத்தான். பொதுவான உலகிற்கு அல்ல. பொதுவாய் சொல்வது ஜோஷ்யம்; ஆருடம். குழந்தை களுக்கு மகா கேடுகள் இந்த கடைசிகால ஒவ்வொரு ஆண்டிலும்தான் நடக்கின்றது.! வேதவசனம் சொல்லும் தீர்க்க தரிசனங் களைத்தான் அற்பமாய் எண்ணக்கூடாதே ஓழிய தீர்க்கதரிசன வரங்களை அல்ல. வரங்களின் ஊடே பிசாசும் தன் கைவரிசையை காட்டும் காலமிது. ஜாக்கிரதை!