26-1-11ல் பண்ருட்டி, அண்ணா கிராமம். வானவில் தேவாலயத்தில் நடந்த
கருத் தரங்கில் கேட்கப்பட்ட கேள்விகள்
(1)இயேசுகிறிஸ்து வாழ்ந்த 33.5 ஆண்டு களில் மரியாளைப் பார்த்து எத்தனை முறை அம்மா என்று அழைத்துள்ளார்?
Answer:
 அம்மாவைப் பார்த்து, உலகில் மனிதனாய் வாழ்ந்த காலம் வரைக்கும் எத்தனையோ முறை அம்மா என்றுதான் அழைத்திருப்பார். யோ2:4;19:26 போன்ற வசனங்களில் “ஸ்திரியே” என்று மரியாளை இயேசு அழைத் ததை வைத்து இந்தக் கேள்வி கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். மரியாளிடம் மட்டுமல்ல மற்றப் பெண் களிடமும் இப்படித்தான் அழைக்கிறார் (மத்15:28;யோ4:21). தேவதூதன்கூட யோ 20:15-ல் இப்படித்தான் அழைக்கிறான். ஸ்திரியே என்பது அவர்கள் மொழியில் உயர்வான-மதிப்பு மிகுந்த- வார்த்தையாகும். நம் நாட்டில் “தாய்க்குலமே”, “அம்மையே” என்று சொல்வது போலாகும். ஆங்கிலத்தில் “மேடம்” என்று சொல்வது போலாகும். “சார்” என்றால் “ஐயா”; “மேடம்” என்றால் “அம்மா” அல்லது “அம்மையே” என்று அர்த்தமாகும். ஆக, “ஸ்திரியே” என்பது, அம்மா ஸ்தானத் திற்குரிய வார்த்தை யாகும். ஊழியத்திற்கு வந்ததால் தான் அம்மா உறவு இல்லாமல் இப்படி அழைத்தார் என்று சிலர் சொல் கின்றனர். சிலுவையிலே தொங்கும்போது அம்மா உறவில்தானே அழைத்தார்! உலகத்திலே ஊழியனாய் இருக்கும் வரைக்கும் எல்லோருக் கும் அம்மா, அப்பா உறவு நிச்சயம் இருக்க வேண்டும். ஆமென்.

(2)R.C சபையார் ஏன் மரியாளை ஓவியமாக வரைந்தும், சிலையாக வடித்தும் வணங்குகிறார்கள்?
Answer:
 ஆண்டவனையே பெற்றெடுத்த தாய் என்பதால் மரியாளுக்கு இவ்வளவு முக்கியத் துவம் கொடுக்கிறார்கள். தேவன்தான் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்றும், (1தீமோ 3:16), மரியாள் நம்மைப்போல் மனுஷியாய் பிறந்தவர்தான் என்றும், ஆண்டவருக்கு மரியாள் அடிமை என்றும் (லுôக் 1:38), “இயேசு சொல்கிறபடி செய்யுங்கள்” என்று மரியாள் சொன்னபடி (யோ 2:5) இயேசுவே சொன்ன வார்த்தைகளுக்கு கீழ்ப்படிய வேண்டுமென்றும், R.C  சபையார் அறியாத தால் அப்படிச் செய்கிறார்கள்; ஒருசிலர் அறிந்தே விக்கிரக ஆராதனை செய்கிறார் கள்.

(3)கடைசிக் காலத்தில் போலியான ஊழியக் காரர்கள் தோன்றுவார்கள் என்று கூறப் படுகிறது. அப்படியானால் அவர்களை  எப்படி நாம் தெரிந்துகொள்வது?
Answer:
 அடிப்படை வேத வசனத்திற்கு-மூல உபதேசத்திற்கு (எபி 6:1,2)-மாறாய் போதிக்கிற அத்தனை பேரும் கள்ள உபதேசக்காரர்கள். வசனம் நமக்கு தெரிந்தால்தான் அவர்களை நாம் தெரிந்து கொள்ள முடியும். ஆசிரியரின் “தெரிந்து கொள்ளுங்கள்” என்ற நுôலிலுள்ள “கள்ள உபதேசங்கள்-வசனவிளக்கம்” என்ற செய்தியை வாசியுங்கள். ஒருசிலர் நல்ல உப தேசங்களை ஊருக்கும் உலகுக்கும் போதித்து விட்டு, தங்கள் சொந்த வாழ்க் கையில் போலியாய் வாழ்வதும் உண்டு. இவர்களைத் தேடி கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு, யார் வழி யாய் எந்த உபதேசம் வந்தாலும் அது வேத வார்த்தைதானா என்று பகுத்தறிந்து கைக்கொள்வதே மிக முக்கியம். ஆட்களைப் பாராதே! ஆண்டவனின் வார்த்தையையே பார்!

(4) இந்த உலகம் தீயினால் அழிக்கப்படும் முன்பு இயேசுவின் வருகை இருக்குமா? அல்லது பின்பாக இருக்குமா?
Answer:
 இயேசு முதலாம்முறை பூமிக்கு வந்தது போல, 2ம்முறை பூமிக்கு வரும் வருகைக்குப் பின் 1000 வருட ஆட்சி பூமியில் நடக்கும்; அதன்பின்தான் இந்த பூமி தீயினால் அழிக்கப் படும். மத்திய ஆகாயத்திற்கு இயேசு வந்து, சபையை கூட்டிக்கொண்டுபோகும் இரகசிய வருகையோ, 2ம் வருகைக்குமுன் 7ஆண்டு அந்திக்கிறிஸ்துவின் ஆட்சிக்கு முன்பு நடக்கும் (2தெச 2:7,8).

(5) பூமி இன்னும் 50லட்சம் ஆண்டுகள் இருக்கும் என்று புவியியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். அப்படியிருக்க இயேசு எப்போது வருவார்?
Answer:
  இயேசு வந்து இந்த பூமியை அழிப்பார் என்ற உபதேசம் பரவியிருப்பதால்தான் இப்படிப்பட்ட கேள்விகள் எழும்புகின்றன. இந்த பூமி அழியவே அழியாது. ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறும் (மத் 5:5; சங் 37:39) அவ்வளவுதான். உபா7:9ஐ வாசித் தால், இஸ்ரேல் மக்களே 1000 தலைமுறை மட்டும் (1000*35 வருஷம்/தலை முறை= 35000 வருஷம்) இருக்கப் போகிறார் களே! இயேசு வந்தபின் தீயினால் இந்த சகாப்தம் அழிக்கப்படுமே ஒழிய, பூமியை அழிக்க இயேசு வரப் போவதில்லை. இயேசு வரக்கூடிய காலம் இந்தக்காலம்தான் என்று உலக நிகழ்ச் சிகள் காட்டுகின்றன. வேதம் என்றைக்கும் விஞ்ஞானத்திற்கு ஒத்தே போகும்.

(6 )விசுவாசிகளுக்கு பிரச்சனை வருமா ஏன்?
Answer:
 உலகத்து அதிபதியாம் பிசாசின் பூமியில் நாம் வாழும் வரைக்கும் நமக்கு பிரச்ச னைகள் உண்டு. யோ16: 33ன்படி நிச்சயம் இயேசுவின் நாமத்தினால் ஜெயம் உண்டு.

(7) நீதி 26:4,5ஐ விளக்குக?
Answer:
 ”கருகலான சத்தியம்” என்ற ஆசிரியரின் நுôலிலுள்ள “மூடனுக்கு பதில் கொடுக்க லாமா?” என்ற செய்தியை வாசித்தறியுங்கள். எப்பொழுதெல்லாம் பதிலளிக்க லாமோ அப்பொழுதெல்லாம் பதில் கொடுக்க வேண்டும்; எப்போதெல்லாம் பதிலளிக்கக் கூடாதோ அப்போதெல்லாம் பதில் கொடுக்கக் கூடாது. இரண்டிற்கும் ஞானம், அறிவு, வேத வசனத்தோடு தேவை.

(8) ஆவிக்குரிய சபையின் அடையாளங்கள் என்ன?
Answer:
  வெளி2,3ஐ வாசித்தால் 7 ஆவிக்குரிய சபைகள் வருகின்றன. அதை தியானியுங்கள். ஆவிக்குரிய சபை என்றால் அந்நிய பாஷை பேசும் சபை என்பதல்ல; ஆவியானவரால் நடத்தப்பட்டு, அவர் போதிக்கும் சத்தியங் களை ஆவியிலே உட்கொண்டு அதன்படியே செயல்படுகிற சபைதான் ஆவிக்குரிய சபை.

(9) ஆரோனைப்போல அழைக்கப்பட்டால் ஊழியம் செய்யலாம் என்று வேதம் சொல் கிறது. ஆனால், ஒரு சபையிலே இருந்து இன்னொரு சபையிலே வந்து, கவர் மெண்ட் வேலை செய்து கொண்டு, ஒரு சபை இருக்கிற ஊரிலேயே இன்னொரு சபை கட்டி நடத்தலாமா? 
Answer:  கர்த்தருக்கு சித்தமானால், தேவனின் ஊழிய அழைப்பு இருந்தால், எந்த ஊரிலும் சபை நடத்தலாம்; கவர்மெண்ட் வேலையோ வேறு எந்த வேலையோ செய்து கொண்டோ, வேலையே செய்யாமலோ ஊழியம் செய்யலாம் தவறில்லை. அழைப்பு மிக முக்கியம்; அவரின் நடத்துதல் முக்கியம். 

(10) ""இயேசு தேவனாயிருந்தால் ஏன் முழங்கால் படியிட்டு ஜெபம் செய்கிறார். எனவே அவர் ஒரு தீர்க்கதரிசிதான்'' என்று இஸ்லாமியர் சொல்கிறார்களே!
Answer:
  இயேசு தீர்க்கதரிசியாக மட்டுமல்ல... ஆசாரியராக, ராஜாவாக பிரதிபலிக்கிறார். வார்த்தையாகிய தேவன், இயேசு என்ற பெயரில் மனிதனாய் வந்தார். மனிதனாய் வாழ்ந்தார். எனவே மனிதர்களைப் போல செயல்பட்டார். அதிலே ஒன்றுதான் அவர் ஜெபம் செய்தது. உயிர்த்தெழுந்த ஆண்ட வரை, “என் ஆண்டவரே தேவனே” என்று தோமா சொன்னபோது அவர் அதை ஏற்றுக் கொண்டாரே! எனவே அவர் தேவன்தானே!

(11) இஸ்லாமியர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்க வேதத்தின் அடிப்படையில் என்ன போதனை தேவை?
Answer:
 எல்லாவற்றுக்கும் மேலாய், சொன்ன படியே பிறந்து, சொன்னபடியே மரித்து, சொன்ன படியே உயிர்த்து, மரணத்தை ஜெயித்த சரித்திர புருஷர் இயேசு ஒருவர்தான் என்பதால் அவரேதேவன்; அவரைப்போல் வேறு யாராவது இருந்தால் இயேசு தேவனல்லவே! பாவங் கள் மன்னிக்கப்பட, இந்த இயேசுவின் இரத்தம் மூலம் பரலோகம் போக, இம்மையிலே நுôறத்தனை ஆசீர் வாதமும், மறுமையிலே நித்திய ஜீவனும் பெற, தேவையானது இயேசுவின் மேல்- இயேசுவின் வார்த் தையின் மேலுள்ள விசுவாசம்தான். ஆக, இயேசு அல்லாமல் தெய்வம் ஏதுமே இல்லை.
(மேற்கண்டபடி சுவிசேஷம் அறிவிக்கலாம்).

(12) இயேசுகிறிஸ்து வந்து 2000 வருடத் திற்கு மேலாகியும், உலகம் முழுமையாய் சந்திக்கப்படாததற்கு என்ன காரணம்?
Answer:
  உலகம் சாத்தானின் சிறைக்குள் இருந்துகொண்டு, மனக்கண் திறக்கப்பட ஒப்புக்கொடுக்கத் துôண்டும் ஆவியான வருக்கு விட்டுக்கொடுக்காமல் இருப்பதால், உலகம் முழுமையாய் இரட்சிக்கப் படவில் லை. மத்24:37; லுôக்17:28ன்படி மக்களின் நிலை இருக்கிறது. இயேசுவாகிய நல்வழி யைக் கண்டுகொள்ள உலகம் எள்ள ளவும் உணர்வில்லாதிருக்கிறது. செவி கொடுப் பவன் மாத்திரமே இரட்சிக்கப் படுகிறான்.

(13) நான் சுவிசேஷ ஊழியத்திற்கு சென்ற இடத்தில், 3கி.மீ சுற்றளவுக்குள் (i) ஒரு இடத்தில் யேகோவாயீரே (கர்த்தர் மட்டுமே; இயேசு இல்லை) என்று ஒரு சபையும், (ii) மற் றொரு இடத்தில் இயேசுவுக்கு சிலை வைத்து வணங்கும் சபையும், (iii) மற்றொரு இடத்தில் இயேசுவை ஆவியில் வணங்கும் சபையும் இருக்கின்றன. இதைக்காணும் புறஜாதி மக்கள் குழம்பிப் போக மாட்டார்களா?
Answer:
 மார்க்க பேதம் இருப்பது நல்லது; அதனால் உண்மையான மார்க்கத்தை அறிய முடியும் (1கொரி 11:19)என்று பவுல் சொல்வதால், புறஜாதி மக்கள் குழம்பிப்போக வாய்ப்பில்லை. உண்மையான சத்தியம் என்றைக்கும் நிலைத்திருக்கும். ஆமென்.

(14) உண்மையான சபை எது?
Answer:
  எபி 6:1,2ன்படியான மூல உபதேசம் உள்ள சபைதான் கிறிஸ்தவசபை. அந்த கிறிஸ்தவ சபைகள் தங்களுக்கு வெளிப் படுத்தப்பட்டுள்ள சத்தியத்தின்படி நடந்தால் அவைகள் உண்மையான சபைகள். ஆரோக்கியமான உபதேசம் உள்ள கிறிஸ்தவசபைதான் மேலானசபை.

(15) குடும்ப வாழ்வு ஆசீர்வாதமாய் அமைய எப்படி இருக்க வேண்டும்?
Answer:
  வசனமுள்ள வாழ்வுதான் வளமான வாழ்வு. வசனமில்லாத வாழ்வு விசனமான வாழ்வு. எனவே வசனத்தில் கட்டப்பட்ட வர்களாய் வாழும் குடும்பத்தில் ஆசீர்வாதம் தானாய் மலரும். ஆமென்.

(16) பிதா குமாரன் பரிசுத்தஆவி மூன்று கடவுளா? எப்படி ஒரே கடவுள்?
Answer:
  ஒரே தேவன் மூன்று ஆள்தத்துவமாய் செயல்படுகிறார். God-தேவன்-என்றாலே மூல பாஷையில் ஏலோஹிம் என்று உள்ளது. ஏலோஹிம் என்றால் இரண்டிற்கு மேற் பட்டவர்கள் என்று பொருள். ஒரே மனிதன் ஆவி, ஆத்மா, சரீரம் என்ற மூன்று வழிகளில் இருந்தாலும் இம்மூன்றும் ஒரே மனிதன்தான். அப்படியே தேவனும். பரலோகிலே மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் (1யோ 5:7) யோ 14:16; மத்3:16,17; அப்7:55; 2கொரி13:14; மத் 28:19 போன்ற வசனங் களும் 3 ஆட்தத்துவத்தை உறுதிப்படுத்து கின்றன. “நம்முடைய தேவனாகிய (ஏலோஹிம்) கர்த்தர் (யேகோவா) ஒருவரே கர்த்தர் (The LORD our God is one LORD) -உபா6:4” இந்த வசனத்தை ஆவியான வரின் ஒத்தாசையோடு தியானியுங்கள். மூல பாஷையில் உள்ளபடியே ரோமன் கத்தோ லிக்க பைபிளில், 10 கற்பனை யின் முதலாம் கற்பனையில் “உன் தேவனாகிய கர்த்தர் நாமே” (யாத் 20:2) என்று பன்மையில் போடப்பட்டிருக்கிறது என்பதை அறியுங்கள்.

(17) இயேசு 3 1/2  வருடம் ஊழியம் செய் தார். மீதி வருடம் எங்கே இருந்தார்?
Answer:
  லுôக்2:39-52ன்படி நாசரேத்துôரில் தாய் தந்தையருடன் வாழ்ந்தார் என அறியலாம்.

(18)ஸ்தேவானை ஏன் ஆண்டவர் காப்பாற்ற வில்லை? 
Answer: இயேசுவை சிலுவை மரணத்திலிருந்து ஏன் ஆண்டவர் காப்பாற்றவில்லை? அவர் இரத்த சாட்சியாய் மரிக்கவேண்டும் என்பது தேவ சித்தம். எனவேதான் ஆண்டவர் காப்பாற்றவில்லை.

(19) அந்நியபாஷை கண்டிப்பாக பேச வேண்டுமா?
Answer:
  பரிசுத்த ஆவியைப் பெற்றதற்கு அடையாளமான அந்நியபாஷையை கண்டிப் பாய் பேசியே ஆகவேண்டும் (அப்2,8,10,19). ஆவியானவர் தமது சித்தத்தின்படி வரமாகிய அந்நியபாஷையை (1கொரி 12:11) தருவதால், அவருடைய சித்தப்படி பேசலாம்.

(20) சிம்சோன் எப்படி 1000 பேரை கொன்று இருக்க முடியும்?
Answer:
  சிம்சோன் பராக்கிரமசாலியாக இருந்தாலும், அவனிடத்தில் அவன் விசுவாசப்படியே தேவவல்லமையும் வெளிப்பட்டதாலேதான் இப்படி ஆயிற்று.

(21) ஏன் யோவானுக்கு மட்டும் அனைத்து பரலோக காரியங்களை தேவன் வெளிப் படுத்த வேண்டும்?
Answer:
  அவன் இயேசுவின் மார்பில் சாயும் அன்பு சீஷன். “நான் வருமளவும் இவனி ருக்க எனக்கு சித்தமானால் உனக்கென்ன?” என்று இயேசு பேதுருவிடம் சொல்லியதால், அவரின் பகிரங்க வருகையையாவது ஆவிக்குரிய ரீதியில் அவனுக்கு காட்டுவது தகுதியாயிருந்தது. எனவே தேவன் வெளிப் படுத்தின விசேஷத்தில் அவனுக்கு மட்டுமே வெளிப்படுத்து கிறார். மத் 16:28ல் சொல்லிய அனைவரும் 2ம் வருகையைக் காண மத் 17ல் வழிவகுத்தார் என்று அறிக (ள்ங்ங் 2பேது1:16-19).

(22) பொன், பொருள் வேண்டாமென்று பொருத்தனை செய்த பின்பு மீண்டும் அவற்றை அணியலாமா?
Answer:
  பொருத்தனை என்பது பழைய ஏற்பாட்டு மக்களுக்குரியது. என்றைக்கு இயேசு கிறி ஸ்து, தன் ஆவி, ஆத்மா, சரீரம் மூன் றையும் பொருத்தனையாய் நம் நிமித்தம் ஒப்புக் கொடுத்தாரோ (ஏசா 53) அன்றுமுதல் அவரு க்கு ஈடாய்-இணையாய்-நாம் எதையுமே பொருத்தனை பண்ண முடியாது;  தேவையு மில்லை. எனவே நீங்கள் பொருத்தனை பண் ணியதை மாற்றி உங்கள் இஷ்டப்படி, தேவை ப்பட்டால் நகை அணியுங்கள். இல்லை யென்றால் நகை போடாதீர்கள். எதைச் செய்தாலும் ரோ14:21ன்படி செய்யுங்கள்.

(23) படிப்பறிவு இல்லாத காலத்தில் எப்படி பைபிள் எழுதப்பட்டது?
Answer:
  படிப்பறிவு உள்ள மோசே காலம் முதல் எழுதப்பட்ட வேதம்தான் நம்மிடமுள்ளது.

(24) இயேசு இந்த உலகில் பிறக்குமுன்னே யாரை வணங்கினார்கள்?
Answer:
  இயேசு பிறக்குமுன்னே மட்டுமல்ல; என்றென்றும் இருக்கும் தேவனை (ஏலோஹிம்) த்தான் ஏலோஹிம், எல்ஷடாய் யேகோ வா, அதிசயம் என்ற பல பெயர்களில் வணங்கினார்கள்.

(25) இவ்வளவு காலமாக இயேசுவே தெரியாமல் மடிந்த நல்ல ஜனங்கள் பரலோகம் போவார்களா?
Answer:
  பரலோகமும் போகமுடியாது; நரகமும் போகமாட்டார்கள். அவர்கள் நீதிமான்கள் என்றால், புதிய பூமியில் வாழ வாய்ப்புண்டு. ஆனால் இயேவை அறியவில்லை என்று தற்காலத்தில் யாரும் போக்குச்சொல்ல வழியில்லை.

(26) கிறிஸ்மஸ் தினத்தன்று ஆராதனைகூட வைக்கக்கூடாதா?
Answer:
  வைக்கலாம் தவறில்லை; அதற்காக காலை 5மணிக்கு ஏன் வைக்கவேண்டும்? அன்று ஆராதனை வைப்போர், தீபாவளி, பொங்கல், ரம்ஜான், ஆயுதபூஜை, போன்ற விடுமுறை நாட்களிலும் வைக்கலாமல்லவா! டிசம்பர் 25-ல் மட்டும் ஏன் அவ்வளவு ஈடுபாடு?

(27) அநேக சபைகளில், ""சொந்த சபையில் பெண் கொள்வதில்லை'' அது தவறா?
Answer:
 மகாதவறு. தேவன், அந்நிய நுகப்பிணை ப்பையும், விக்கிரக ஆராதனையையும் மட்டுமே மிகப்பெரிய பாவமாக கருதுகிறார். அதுதான் யோ16:8,9க்கடுத்த மரணத்துக் கேதுவான பாவம். (1யோ5:16) சொந்தசபை என்றால், உள்ளுர் சபை என்பதல்ல; உலகிலுள்ள எல்லா ஆவிக்குரிய சபை களையும் குறிப்பதாகும். இந்த ஆவிக்குரிய சபைகளில் பெண் பார்த்துக்கொடுக்க வேண்டியது பாஸ்டர்களின் கடமையாகும்.

S.சைமன், E-Mail.
(1)இயேசுகிறிஸ்துவால் உருவாக்கப்பட்ட முதல் சபை எது?
Answer:
  அதுதான் ஆதி அப்போஸ்தல கால கிறிஸ்தவ சபையாகும்.

(2) அந்த சபையின் முதல் பாஸ்டர் யார்?
Answer:
 பிரதான ஆசாரியர்உயிர்த்தெழுந்த இயேசுவும், பின் வந்த பிரதான அப்போஸ் தலர் பேதுருவுமாகும்.

(3) இயேசுவுக்கு பின்னால் தற்போது வந்தவர்கள் யார்?
Answer:
  12 அப்போஸ்தலர்களும், பவுல், பர்னபா, மாற்கு, தீமோத்தேயு,தீத்து போன்றவர்களும், 1முதல் 21ம் நுôற்றாண்டு வரை நிற்கும் ஊழியர்களாகிய நாமும் சேர்ந்து தான்.

ஜார்ஜ் வில்சன், திருச்செங்கோடு
(1)""இவைகள்தேவனுடையவார்த்தைகளா?'' என்றதலைப்பில்நீங்கள்சொல்லவிரும்புவது என்ன?
Answer:
  வேதம் படித்து தியானிக்கும் விசுவாசிகள், ஆவியானவரைக் கொண்டு அறிந்து உணர் ந்து பதில் கண்டுபிடித்து, ஆரோக்கி யமான உபதேசத்தில் வளரவேண்டும் என்பதற்காக எழதப்பட்டது(இது குறித்து, டிச'10 விசுவாச முழக்கம் (18)ல் உள்ள ""கருகலான சத்தியம்'' செய்தியை வாசியுங்கள்)