1. இயேசுவைக் கொல்ல கற்களை தூக்கியது ஏன்?


தேவபிள்ளையே! கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை கொல்லுவதற்காய் இரண்டு மூன்று தடவை யூதர்கள் கற்களை துôக்கினார்கள் என்றும், இயேசு மறைந்து விட்டார் என்றும் வேதம் கூறுகிறது. கல்லால் அடித்து இயேசுவைக் கொல்லும் படியாய் அவர் என்னதான் பாவங்களை செய்தார்? ஓய்வுநாளில் விறகு பொறுக்கி னவள் கல்லால் எறிந்து கொல்லப்பட்டாள். கையும் களவுமாய் பிடிக்கப்பட்ட விபச்சார ஸ்திரி, கல்லால் எறிந்து கொல்லப்படும் நிலைக்கு உட்பட்டாள். ஆனால், அந்த இரண்டு முறை கல்லெறிய இயேசு என்ன பாவம் செய்தார் என்று யூதர்கள் நிதானித்தார்கள் என்பதை ஆவியானவர் சொல்லக் கேட்போம்.
முதலாம் முறை: யோ8:31-59 வரை வாசியுங்கள். “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் - Before Abraham was, I am” என்று இயேசு சொன்ன உடனே, அவர்கள் அவர்மேல் கல் எறியும்படி கல்லுகளை எடுத்தார்கள். “ Before Abraham was, I was - ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருந்தேன்” என்று அவர் சொல்லாமல், “I am - நான் இருக்கிறேன்” என்று  சொன்ன தால், முட்செடியில் தேவன் சொன்ன வார்த்தை அவர்களுக்கு ஞாபகம் வந்திருக்கிறது See யாத்2:14; with யாத்6:2,3- யேகோவான. இயேசுகிறிஸ்து தன்னை யேகோவா-I am that I am - I am  -நான் இருக்கிறேன்-என்பதால் தன்னை தேவ னென்று சொல்லியதால் யூதர்களால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
2ம் முறை: யோ10:30-33 வரை வாசியுங்கள். “நானும் பிதாவும் ஒன்றா யிருக்கிறோம்” என்று இயேசு சொன்னதால், இயேசு மனுஷனாயிருக்க தன்னை தேவ னென்று சொல்லி, தேவதுôஷணம் சொன்னாரென்று யூதர்கள் நினைத்து கல்லெறிய கல்லுகளை எடுத்தார்கள் என்று அறிகிறோம். (See also யோ11:9).
இயேசுவை மேசியா என்று ஏற்றுக் கொள்ளாமல், அவரை சிலுவையிலறைந்து கொன்ற யூதர்கள், அவர் சொன்ன மேற்கண்ட வார்த்தைகளை உணர்ந்திருக் கிறார்கள்; தன்னைத் தேவனென்று சொல்கிறார் என்று புரிந்திருக்கிறார்கள்; “மனிதன் எப்படி தேவனாக முடியும்? இப்படிச் சொல்வது தேவ துôஷணம்” என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள். எப்படி யென்றால், லேவி24:10-16 வரை வாசித்தால், நியாயப்பிரமாணச் சட்டப்படி, கர்த்தருடைய நாமத்தை துôஷிக்கிறவன் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்பது முறைமை. ஏசா7:14; 9:6; ஆதி3:15; ஏசா11:1-2; 61 போன்ற பல வசனங்களின் கருத்துக்களை அறிய, யூதர்களின் மனக்கண் குருடாக்கப்பட்டிருந்த படியினால், தேவன்-வார்த்தையாகிய தேவன்-மாம்சத்தில் வெளிப்பட்டார் என்பதை அறியாதிருந்தார்கள் (see யோ1:14; 1தீமோ3:15). இந்த அறிவு இல்லாமல், நியாயப்பிரமாணச் சட்டத்தை துôக்கிப் பிடித்துக்கொண்டு, இயேசுவைக் கொல்ல கல்லுகளைத் துôக்கினார்கள். தேவ அறிவு-வேத அறிவு அவர்களுக்கு இல்லாத தினாலே யூதர்கள் ஓசி4:6ன்படி, அன்றும், இன்றும், என்றும் சங்காரமாகிக் கொண்டே இருக்கிறார்கள். இதை வாசிக்கும் தேவ பிள்ளையே ! கிறிஸ்தவன் என்று சொல்லிக் கொள்வோருக்கும் வேத அறிவு இல்லா விட்டால் சங்காரம்தான்; வேத அறிவு இல்லாத கூட்டம்தான் யூதர்களைப் போல, இயேசுவை, ஒரு மனிதனாக பாவித்து போதிக்கிறார்கள்.
இயேசு ஏன் 2 முறையும் மறைந்து கொண்டார்? இது கேள்வி! தீர்க்கதரிசிகள் சொன்னபடி, இயேசு உலகம் முழுவதுக்கும் தெரியும்படியாய் இரத்தம் சிந்தி சிலுவை யிலே மரிக்க வேண்டியிருப்பதால்  (மத்20:19; 26:2; யோ3:14; 12:32-33) அந்தவேளை வரும்வரை தன்னைக் காத்துக்கொண்டு, காத்திருந்தார். ஆமென் (மத்26:45). நியாயப்பிரமாணச் சட்டப்படியே, இவரை யூதர்களே கல்லால் எறிந்தே கொன்று போடலாமே, பின்னை ஏன் ரோம சர்க்காரின் சிலுவையிலே தொங்கவிட வேண்டும்? இதுவும் ஒரு கேள்வி. இதே கேள்வியைத்தான் பிலாத்து கேட்டான். அதற்கு, “மரண ஆக்கினை செய்ய எங்க ளுக்கு அதிகாரமில்லை” என்று யூதர்கள் சொன்னார்கள் (யோ8:31). இது யூதர்கள் சொன்ன அப்பட்டமான பொய். (லேவி 24:10-16; உபா 21:22,23)  ஜனக்கூட்டம் இயேசுவின் பின்னே ஏராளம் இருந்ததால், யூதர்கள் பயந்து, “இயேசு, ராயனுக்கு விரோதமாய் ராஜா நிலையில் கலகம் பண்ணுகிறார்” என்ற ஒரு பொய்க் குற்றச் சாட்டை அவிழ்த்துவிட்டு, அவரை சிலுவை யிலறைய வேண்டிய பொறுப்பை பிலாத்துவிடம் விட்டு, அந்த பிலாத்துவையே மிரட்டினார்கள். இரண்டாம் முறை பிலாத்து கேட்கும்போது “தேவனுடைய குமாரனென்று சொன்னபடியால், நியாயப்பிரமாணப்படி சாகவேண்டும்; இயேசுவோ, தன்னை ராஜா என்று சொல்கிறதால், ரோமராயனுக்கு இவர் விரோதி; அந்த விரோதியை பிலாத்துதான் சிலுவையிலறைய வேண்டும்; அப்படி சிலுவையிலறைய உத்தரவிடாவிட்டால், பிலாத்து, ராயனுக்கு விரோதி” என்று சொல்லி யூதர்கள் பிலாத்துவை பயமுறுத்தி னார்கள் (யோ19:6,7,12,15). தன்னுடைய பதவிக்காய் பயந்த பிலாத்து, மாசில்லாத இயேசுவை சிலுவையிலறைய ஒப்புக் கொடுத்தான் (மத்27:24-26). இயேசுவை ஒரு கொடூர குற்றவாளியாக்கி, பண்டிகை நாளிலும் விடுதலையாக்க முடியாத கலகக்காரன் என்று ஆக்கி, (யூதர்களுக் குள்ளே அவரை மரத்திலே தூக்கினால் அவர் நாமம் அந்த அளவுக்கு குறைக்கப்படாது என்று எண்ணி) 4-ம் உலக சாம்ராஜ்யத்தினாலே குற்றவாளி என்று சொல்ல வைத்து ரோம சிலுவையில் சாகடிக்க வற்புறுத்தினார்கள்.
 ஆக, இயேசுவைக் கல்லால் எறிந்து கொல்ல யூதர்கள் முனைந்ததற்கு காரணம், அவர் தன்னை தேவனென்று-தேவ குமார னென்று-தேவனுக்கு சமமாய்- சொன்ன தால் என்று அறிகிறோம். இந்த இயேசுவின் வார்த்தைகள், இரட்சிப்பை ஏற்காத யூதர்கள் மண்டைக்கு புரிந்திருக்க, தற்கால கள்ள உபதேசக்காரர்களுக்கும், புற மதத்தா ருக்கும் புரியவில்லையே என்பது தான் நமது வேதனை! இந்த வேதனைக்கும் விடிவு காலமுண்டு! அல்லேலுôயா! இயேசு சீக்கிரம் வருகிறார்! ஆயத்தமாவோம்! ஆயத்த மாக்குவோம்!

2. இந்த பூமியை நாம் அனுபவிக்கலாமா?

தேவன் படைத்ததெல்லாம் நமக்காக. “படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக; மனுவைப் படைத்தான் தனை வணங்க” என்று தாயுமானவர் பாடுகிறார். ஆதியிலே வானத்தையும் பூமியையும் படைத்த தேவன், அதை செழிப்புள்ளதாய், வாழ்வுக்கு ஏற்றதாய் ஆக்கி, 6ம் நாளில் மனிதனைப் படைத்து தேவன் சொன்னது: “இந்த பூமியை அனுபவி; ஆண்டுகொள்” (ஆதி1:28). இதே செழிப்பான நிலையிலே தான் கானானை இஸ்ரேலருக்குக் கொடு த்து “கால் மிதிக்கும் தேசமெல்லாம் உனக் குச் சொந்தம்” என்றார். இப்படிப்பட்ட தேவசித்தத்தோடு படைக்கப்பட்ட பூமி, இன்று சாத்தானின் ஆளுகையில், அனுபவத்தில் இருக்கிறது (2கொரி4:4, யோ14:30). எப்படி இது ஆயிற்று? லுôக்4:5,6ஐ வாசித்தால், ஆதாம் பிசாசுக்கு இந்த உலகை ஒப்புக்கொடுத்திருக்கிறான் என அறியலாம். எப்போது? தான் பாவம் செய்தபோது, தன்னுடைய பாவத்தால் அனுபவ பாத்தியத் தை மனிதன் இழந்தான். சாபத்தையும் தண்டனையையும் பெற்றுக் கொண்டான். இதனால் பூமி, பூமியிலுள்ளவைகள் எல்லாம் சாபத்திற்குள்ளாயின (ஆதி3: 17,18). மனிதன் அனுபவிக்க ஏற்படுத்தப்பட்ட பூமியை, மனிதன் இழந்து தவிப்பதைப் பார்த்துத்தான், முதலாம் வருகையிலேயே இயேசு காரியம் செய்யத் தொடங்கினார்.
லுôக்19:10ன்படி, இயேசு நாம் இழந்து போன பூமியின் அனுபவ பாத்தியத்தைத் தேடினார்; கண்டுபிடித்தார்; மத்28:18ன்படி சகல அதிகாரங்களையும் பெற்றுக் கொண்டார்; பிசாசிடமிருந்து உரிந்து கொண்டார் (கொலோ2:14,15). இந்த நிலையில் நமக்குத் தேவை இயேசுவா? இந்த பூமியா? இந்த பூமி நமக்கு சொந்த மல்ல; பரலோகம்தான் நம் தேசம் என்று பாடுகிறோம். ஆபிரகாம்கூட பரலோக தேசத்தையே நாடினான் (எபி11:10). நமக்கும் இந்த பூமியல்ல; இயேசுதான் சொந்தம். இயேசு சொந்தமானால் அவர் சிலுவை யிலே பிசாசிடமிருந்து உரிந்துகொண்ட இந்தபூமி நமக்காகும் அல்லவா! அவர் சித்தப்படி, இந்தபூமியை நாம் அனுபவிக் கலாம் அல்லவா! இயேசுவை சொந்த மாக்கும் முன்னே இந்த பூமி நமக்கு சொந்தமல்ல; இயேசு நமக்கு சொந்தமான பின்னே, அவரின் பூமி நமக்கே சொந்தம். சிலுவையின் ஜெயத்தால், அவரிடமிருக்கும் அதிகாரம், உரிமம், அனுபவப்பாத்தியம், எல்லாம் நமக்கு வந்து சேரும். அல்லே லுôயா ! இன்னும் இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர் கள் இப்படிப்பட்ட விசுவாசத்தோடு, இந்த பூமியை அனுபவிக்காமல், கஷ்டம், கவலை, கண்ணீரால் தவிக்கிறார்கள். “இந்த பூமி வேண்டாம் பரலோகம் போதும்” என்கிறார் கள். ஏன்? வசனத்தெளிவு இல்லை. ஆவியானவருக்கு விட்டுக் கொடுப்பதில்லை (யோ14:23). இந்த பூமி இப்போதைக்கு அழியாது. உபா7:9ன்படி, யாக்கோபு முதல் ஆரம்பமான இஸ்ரேல் மனித சமுதாயமே கிட்டத்தட்ட 1000 ல 35 வருடம்= 35000 வருடம் இந்த பூமியில் வாழுமென்றால், ஆவிக்குரிய இஸ்ரேலராகிய நமக்கு இது சொந்தமில்லையா? சிந்தியுங்கள். இயேசு வின் இரகசிய வருகையில் பரலோகம் போனாலும் திரும்பி வந்து வாழ வேண்டியது - ஆள வேண்டியது இங்கேதானே! எனவே இந்த பூமியை-தேவன் நமக்காய் கொடுத்த பூமியை-இப்போதிருந்தே நீ அனுபவித்தே ஆகவேண்டும். ஏதேனிலே ஆதாமும் ஏவாளும் பாவம் செய்யாததற்குமுன் அனுபவித்தபடியே! ஆமென்!
இப்படியாய் இந்த பூமியை அனுப வித்து மகிழ நாம் என்ன செய்ய வேண்டும்? மாற்10:29,30ன்படி, இந்த பூமியிலே நுôறத்தனை ஆசீர்வாதத்தோடு வாழ என்ன செய்யவேண்டும்?
(1) சாந்தகுணம் தேவை (மத்5:5; சங்37:11) :- அப்போதுதான் மிகுந்த சமாதானமும் மகிழ்ச்சியும் பூமியை சுதந்த ரிக்கும்போது- அனுபவிக்கும்போது-வரும். இந்த பூமியிலே இயேசு தமது சமாதானத் தை விட்டுவிட்டுப் போயிருப்பதால், பூமியை சுதந்தரிக்கும்போது தேவசமாதானம் கிடைக்கும். அதற்கு சாந்தகுணம் தேவை. மோசே சாந்தகுணமுள்ளவன்தான் (எண்12:3): ஆனாலும் கானான்பூமி கிடைக்கவில்லை. காரணம் என்ன? மேரிபா வின் தண்ணீரண்டையிலே சமாதானமில் லாமல் கலங்கிப்போய்விட்டான் (எண்27:14; 20:12). ஆக, சமாதானமும், மகிழ்ச்சியும் உடைய சாந்தகுணமுள்ளவனுக்கு இந்த பூமி சுதந்தரமாகும். அவனே இந்தபூமியை அனுபவிப்பான்.
(2) கர்த்தருக்கு காத்திரு (சங்37:9) :- பொல்லாதவர்களாயிருந்து அறுப்புண்டு போகாமல், கர்த்தர், சொன்னதைச் செய்கி றவர் என்ற விசுவாசத்தோடு பொறுமை யோடு காத்திருக்க வேண்டும். எகிப்தின் அடிமைத்தனத்திலும் 430 வருடங்களாய், தேவன் விடுவிப்பார் என்பதை விசுவாசித்து பொறுமையாய் காத்திருந்ததால் அல்லவோ இஸ்ரேலருக்கு விடுதலை கிடைத்தது. கானான்பூமி அவர்களுக்கு சுதந்திரமானது. இப்படியாய் இந்தபூமியை சுதந்தரித்து அனுபவிக்கும்போதுதான் ‘ஓ தேவனுக்கு மகிமை” என்று பாடி, அக்கரையில்- கானான் பூமியில் தேவனை வாழ்த்த முடியும். இந்த பூமியை அனுபவிக்க, பொறுமையோடு கூடிய விசுவாசம்; விசுவாசத்தோடு கூடிய காத்திருப்பு மிகமிக அவசியம்.
 (3) ஆசீர்வதிக்கப்பட வேண்டும் (சங்37:22) :- ஆசீர்வாத வாழ்க்கை வாழ்கி றவனே பூமியை சுதந்தரிக்கிறவன். Blessing is conditional. தேவனுடைய வார்த்தைப்படி வாழ்ந்தால் ஆசீர்வாதம்; இல்லையேல் சாபம் (உபா11:26-28; 30:15,19). தப்பித்தவறி சாபம் வந்தாலும் கலா3:13ஐ விசுவாசிக்கும்போது அது நம்மை அணுகாது. எது ஆசீர்வாத வாழ்க்கை? இதிலே உலகப்பிரகாரமான ஆசீர்வாதமும் உண்டு; ஆவிக்குரிய ஆசீர் வாதமும் உண்டு (எபே1:3- இதுகுறித்து, “ஆவிக்குரிய ஆசீர்வாதம் என்றால் என்ன?” என்ற ஆராய்ச்சி செய்தியை ஆசிரியரின் “கருகலான சத்தியம்” என்ற நுôலில் வாசியுங்கள்). தெய்வீக ஆரோக் கியம், பொருளாதார ஆசீர்வாதம், வெற்றி வாழ்க்கை போன்ற எல்லாமே ஆவிக்குரிய ஆசீர்வாதங்களாகிய இரட்சிப்பு, விசுவாசம், பரிசுத்தஆவியின் ஞானஸ்நானம், ஆத்மா வாழ்வு, மறுரூபம் போன்ற பலவற்றால் கிடைத்து, நாம் பூமிக்கடுத்த-அனுபவிக்க வேண்டிய- ஆசீர்வாதங்களாகும். இப்படிப் பட்டவன் பூமியை சுதந்தரிக்கிறான்-அனுபவிக்கிறான்.
(4) நீதிமானாய் வாழவேண்டும் (சங்37:29) :- நீதிமானாய் வாழ்பவனே பூமியை சுதந்தரிப்பான். ரோ3:23,24ன்படி இரட்சிக்கப்பட்ட நாமெல்லாரும் நீதிமான் என்ற பட்டம் பெற்றிருந்தாலும் நீதிமானாய் வாழவேண்டும். நீதிமானாய் நீ வாழ்வதால் உனக்கு நீதிமான் என்ற பட்டமில்லை; நீதிமா னாய் வாழவேண்டும் என்பதற்காகத்தான் அந்தப் பட்டம். நீதிமானாய் இஸ்ரேலர்கள் வாழாததால்தான் இன்றுவரை தேவன் தந்த கானான் பூமியை அனுபவிக்க முடியல்லை.
(5) கர்த்தருடைய வழியைக் கைக் கொள்ள வேண்டும் (சங் 37:34) :- இயேசுவே வழி. அந்த வழியை- அவரின் வார்த்தையை- உபதேசத்தை (மத்28:20) கைக்கொண்டால் இந்த பூமியை சுதந்த ரிக்க-அனுபவிக்க முடியும். ஆவியான வருக்கு விட்டுக்கொடுத்தால் மாத்திரமே தேவனின் வார்த்தையை கைக்கொள்ள முடியும்; இந்த பூமியை கைக் கொள்ள முடியும். ஆமென்!
இன்னும் ஏராளம் சொல்லிக்கொண்டே போகலாம்! தேவபிள்ளையே! சொந்தக் காரரின் மகன்-இந்தபூமியை அனுபவிக்கப் பிறந்த மகன்-இந்தபூமியை சுதந்திரமாய் கொண்ட மகன்-நீயல்லவா! இன்றே இதை விசுவாசி! செயல்படு. இந்தபூமி உனக்கே சொந்தம்! அல்லேலுôயா!

3. இஸ்லாமிய மதம் ஒரு கண்ணோட்டம்

“இஸ்லாம் என்றால் தேவ சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்தல்’ என்று பொருள். இந்த இஸ்லாம் என்ற வார்த்தையைப் பின்பற்றுகி றவர்கள்தான் முஸ்லீம்கள் என்றும் இஸ்லா மியர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அராபிய நாட்டில் உள்ள மெக்காவில் கி.பி 570ல் பிறந்த முகமதுதான் இஸ்லாமிய மதத்தை உருவாக் கினார். மெக்காவுக்கு அருகில் உள்ள ஹிரா (Hira) மலைக்கு அவர் யாத்திரை போகும்போது, தேவதுôதன் வந்து “அல்லா என்ற ஒருவரே தேவன்; நீ அவருக்கு தீர்க்கதரிசியாயிருந்து தேவசித்தத்தை பிரசங்கி” என்று சொன்னானாம். அன்றுமுதல் முகமது பிரசங்கிக்க ஆரம்பித்தார். அவர் சொல்வதை ஆரம்பத்தில் அங்குள்ளோர் நம்பவில்லை. யாத்ரீகர்களால் மெக்காவில் பணப்புழக்கம் அதிகமானதால், முகமதுவின் வார்த்தையை கேட்க ஆளில்லை. கி.பி 622ல் ஹிஜிரா என்றழைக்கப்படும் யுத்தத்தால் முகமதுவும் அவன் சீஷர்களும் மெக்கா விலிருந்து மெதினாவிற்கு துரத்தப்பட்டார்கள். இஸ்லாமியக் காலண்டர் அன்றிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. மெதினாவில் தொடர்ந்து முகமது போதித்தவைகள்தான் குரான் என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. முகமதுக்கு முன்பு இஸ்லாம் மதம் இல்லை என்று முந்தி அறிக.
இஸ்லாம்- அதாவது தேவசித்ததிற்கு ஒப்புக் கொடுத்தலுக்கு 5 விதமான பிரமாணங்கள் உள்ளன. (1) அல்லாவைத் தவிர வேற தேவன் இல்லை; முகமதுதான் அவரது செய்தியாளர் (Messenger). (2) ஒரு நாளைக்கு 5நேரம் ஜெபிக்கவேண்டும். (3) வருஷத்திற்கு ஒரு முறை யாவது ஏழைகளுக்கு உதவவேண்டும் (alams). (4) குறிப்பாக ரம்ஜான் மாதத்தில் காலை முதல் மாலை வரை உபவாசம் இருக்க வேண்டும். (5) வாழ்நாளில் ஒரு முறையாகிலும் மெக்காவிற்கு பரிசுத்த யாத்திரை செல்ல வேண்டும்.
பள்ளிவாசலிலேதான் குரானில் சொன்ன படி தொழுகை மெக்காவை நோக்கி செய்யப் படுகிறது. இஸ்லாமிய மதகுருவுக்கு இமாம் என்று பெயர். தொழுகையின்போது, இமாமுக் குப் பின்னாலே நீண்ட வரிசையில் நிற்க வேண்டும். புருஷர்களும், சிறுவர்களும் ஒன்றாகவும், ஸ்திரீகளும், சிறுமிகளும் தனியாகவும் நிற்பர். ஒவ்வொருவரும் இமாமை கவனித்து அவர் செய்வதை பின்பற்றுவார்கள். வெள்ளிக்கிழமைதான் அவர்களுக்கு முக்கிய நாள். இமாம் கொடுக்கும் செய்தியை கேட்க அன்றுதான் கூடுவர். ரம்ஜான் திருவிழா (Eldal-Fiter) தியாகத்திருவிழா (Eldal-Adha) என்ற இருபெரும் விழாக்களை இஸ்லாமியர் கொண்டாடுகின்றனர். சந்திரனை வைத்தே (Lunar System) அவர்கள் காலண்டர் இருப்பதால் அவர்களின் திருவிழாக்கள் ஒவ்வொரு வருஷமும் வெவ்வேறு தேதிகளில் வருகின்றன. பாரம்பரிய யூத குடும்பத்திலிருந்த கதீஜாவுடன் முகம்மது வாழ்ந்ததால், கிட்டத்தட்ட ஆதியாகமம் முதலான பழைய ஏற்பாட்டையே அவர் போதிக்கிறார். மேலும், மனைவி கதீஜாவின் சித்தாப்பாவின் மூலம், யூத - கிறிஸ்தவ வேத வாக்கியங்களை ஆதி முதல் அறிந்திருக்கிறார். இயேசுவை முகமது விசுவாசிப்பதில்லை. எனவே இயேசுவுக்கு நிழலாட்டமான பழைய ஏற்பாட்டுக் காரியங்களில் சிலவற்றை மாற்றிப் போதித்திருக்கிறார். உதாரணமாய் ஆபிரகாம் பலியிட்டது தன் மகனான இஸ்மவேலைத்தான் என்று போதிக்கப்படுகிறது. அவர்களின் கொள்கை “விசுவாசத்தால் நீதிமானாகிறான்; விசுவாசத் தாலேதான் அந்த நீதிமான் பிழைப்பான்” (ஆபகூக்2:4) என்ற கிறிஸ்தவ கொள்கைக்கு மாறாக “கிரியை யினாலேதான் நீதிமான் பிழைப்பான்” என்று போதிக்கப்படுகிறது.
அவர்கள் நம்பும் ஆதாம், ஏனோக்கு, நோவா, தாவீது, சாலமோன் போன்ற தீர்க்க தரிசியைப் போல இயேசுவும் ஒரு தீர்க்கதரிசி என்று நம்புகின்றனர். முகமது என்பவர்தான் அவர்களின் கடைசி தீர்க்கதரிசி. ஆனால் இயேசு ஒரு கன்னியின் வயிற்றில் பிறந்ததை நம்புகின்றனர். இயேசு மரிக்காமலே பரலோகம் போனாரென்றும், மறுபடியும் பூமிக்கு வந்து அந்திகிறிஸ்துவை அழிப்பாரென்றும், இந்த பூமியில் குடும்பமும் கோத்திரமுமாய் வாழ்வாரென்றும், இவர் தெய்வமல்ல என்றும் இஸ்லாமியர் நம்புகின்றனர். ஒருவனுக்கு ஒருத்தி என்பது தேவசித்தம் என்றாலும், இரக்கத்தின் நிமித்தம்-மற்றவர்களுக்கு உதவிடும் நிமித்தம் 4 மனைவிகளைக் கட்டிக்கொள்ளலாம் என்றும் போதிக்கப்படுகிறது. தருமக் காரியங்களால், உதவும் காரியங்களால், அன்பைக் காட்டுவதால் பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்குமாம். சொர்க்கலோகத்திலும் இங்கே எப்படி மனைவிகளோடு வாழ்ந்தோமோ அப்படியே வாழ்வோம் என்று நம்புகின்றனர். அவர்கள் நம்பிக்கை முழுவதும் முகம்மது சொன்ன வார்த்தையின் அடிப்படையிலானது.
(குறிப்பு: முகம்மது என்பவர் கத்தோலிக்க சபை விசுவாசியாய் - அனுதாபியாய் இருந்து, கொள்கை ரீதியாக வெளியேறி இப்படி ஒரு இஸ்லாமிய மார்க்கத்தை ஆரம்பித்தார் என்று ஒரு சிலர் கூறுகின்றனர்.)