4. பெந்தேகொஸ்தே சபைகளில்- குறிப்பாக சி.பி.எம் சபையில் உள்ள தவறான உபதேசங்கள்

சிலோன் பெந்தெகொஸ்தே மிஷன் (சி.பி.எம்) என்ற பெயர் மாறி, த. பெந்தெ கொஸ்தேமிஷன் என்று தற்போது அழைக்கப் படுகிறது. சென்னையிலே பெந்தெகொஸ்தே மார்க்கம் ஆரம்பமானதே இவர்கள் மூலமாய்த்தான். இந்த சபை யிலிருந்து பிரிந்து வந்த பாஸ்டர்.சுந்தரம், பாஸ்டர். பிரபுதாஸ், பாஸ்டர்.செல்லத்துரை, பாஸ்டர். ஹென்றி ஜோசப் போன்றோரால் தமிழ் நாடெங்கும் பெந்தெகொஸ்தே மார்க்கம் பரவியது. தவறான உபதேசங்கள் என்பது வேறு. கள்ள உபதேசம் என்பது வேறு. கள்ள உபதேசம் உள்ள சபைகள் கிறிஸ்தவ சபைகள் அல்ல. அவைகள் வருகையில் எடுத்துக்கொள்ளப்படாது அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலே அவைகளுக்கு முடிவு. சி.பி.எம் சபை ஒரு ஆவிக்குரிய சபை. எபி6:1,2ல் சொல்லப் படும் அடிப்படை உபதேசத்தில் கட்டப்பட்ட சபை. உலகிலுள்ள எல்லா ஆவிக்குரிய கிறிஸ்தவ சபைகளிலுமே 100க்கு நுôறு சரியான உபதேசங்கள் இல்லை. ஒருசில தவறான உபதேசம் நிச்சயம் இருந்தே ஆகும். ஆனாலும், இரட்சிக்கப்பட்ட பிள்ளைகள் இந்த சபைகளை ஆராய்ந்து பார்த்து புல்லுள்ள இடங்களைக் கண்டு (சங்23:2) ஆவியா னவருக்கு விட்டுக் கொடுத்து, உறுப்பினர் களாய் மாற வேண்டும். அப்போதுதான் பூமியிலே நுôறத்தனை ஆசீர்வாதமும், மறுமையிலே நித்திய ஜீவனும் கிடைக்கும் (மாற்10: 29,30). இல்லையெனில், பூமியிலே வாழப் பிறந்த நாம், ஆளப்பிறந்த நாம் (ஆதி1:28) , கவலையோடும், வியாதி யோடும், வேதனையோடும், வறுமை யோடும், அகால மரணமடைந்து போக வாய்ப்புண்டு. ஆனாலும் பரலோகம் போய்விடலாம்.
இந்த சபைகளில் என்னைக் கவர்ந்த நல்ல உபதேசங்களில் சில (1) மறுபடியும் பிறந்த தேவபிள்ûளைக்கு மட்டும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும். (2) தெய்வீக சுகம் என்பது பிள்ளைகளுக்குரிய அப்பமாகும். (3) பரிசுத்த ஆவியைப் பெற்ற தற்கு அடையாளம் அந்நிய பாஷையே. (4) மாறுபாடுள்ள சந்ததியை விட்டு வெளியே வரவேண்டும். (5) பூரண பரிசுத்தம் ஆக வேண்டும். (6) ஜெய ஜீவியம் வாழவேண்டும். (7) இரகசிய வருகை உண்டு. (8) உபத்திரவ காலமும் அந்திக்கிறிஸ்து ஆட்சியும் உண்டு. சில வாசகர்கள் கேட்டதினால் சி.பி.எம்சபை யிலுள்ள ஒருசில தவறான உபதேசங்களை தருகிறேன். வாசியுங்கள். சிந்தியுங்கள்.
(1) மறுபடியும் பிறக்கும் அனுபவமுள் ளவர்1யோ1:8,9ன்படி பாவ அறிக்கை பண்ணவேண்டும் என்ற உபதேசம் தவறு. வேதத்திலுள்ள 66 புத்தகங்களுமே கிறிஸ்தவர்களுக்காக எழுதப்பட்டதே ஒழிய இரட்சிக்கப்படாத உலகத்தாருக்கு அல்ல. 1யோ1:8-10ஐ வாசித்தால் யோவான் தன்னையும் இணைத்து  ""நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டால்'' என்று எழுதுகிறார். இது இரட்சிக்கப்பட்டவர்கள் பாவம் செய்யும்போது பண்ண வேண்டிய அறிக்கையே ஒழிய, இரட்சிப்புக்குள் வரும்போது பண்ண வேண்டியது அல்ல. எந்த மனுஷனும் இரட்சிக்கப்படும் போது அதுவரைக்கும் அவன் செய்த எல்லா பாவங்களையும் ஞாபகத்தில் வைத்திருக்க முடியாது. மொத்தத்தில் யோ16:8,9ன்படி, இயேசுவை விசுவாசிக்காத அந்த பாவத்தை அறிக்கையிட்டாலே (அப்2:37) இயேசு இதயத்தில் இல்லாமல் இருக்கும் போது செய்த அத்தனை பாவங்களும் மன்னிக்கப் படும். ரோ10:9,10ன்படி, பாவி என்று உணர்ந்து, நம் எல்லாப் பாவங் களையும் அவர் சுமந்து தீர்த்த இரட்சகர், இனி நான் பாவியல்ல என்ற பாவ மன்னி ப்பின் நிச்சயத்தோடு தேவ நீதியைப் பெற்று கொண்டாலே போதும் : அப்படிப் பட்ட ஆள் மறுபடியும் பிறந்திருக்கிறான். யோ 3:5ம் வசனத்தில் சொல்லப்பட்டபடி ஜல மாகிய வசனத்தால், ஆவியானவரால் மறுபடியும் நம் ஆவியில் புதுசிருஷ்டியாய் பிறக்கும் அனுபவமே இது (எசே 36:25,26; 2கொரி5:17; யோ3:3).
(2)மறுபடியும் பிறக்கிறவர் தேவ னோடும் மனுஷரோடும் ஒப்புரவாக வேண்டும் என் பதும் (2கொரி5:20; மத்5:21-26) திருப்பிக் கொடுக்கவேண்டும் என்பதும் (லுôக்19:8) தவறு. இதுவெல்லாம் இரட்சிக் கப்பட்ட பின்னே வர வேண்டிய அனுபவங் களாகும்.
(3) தெய்வீக சுகம் என்பது பிள்ளை களுக்குரிய அப்பம் என்பது சரிதான் (மத்15:26). ஆனால் தெய்வீக சுகம் என்று சொல்லி டாக்டர்களிடம் போக வேண்டாம்; மருந்து சாப்பிடுவது பாவம் என்றெல்லாம் போதிப்பது தவறு. அப்படி உபதேசிப்பவர் கள் கண்ணுக்கு கண்ணாடி ஏன் போடு கிறார்கள்? வெந்நீரில் ஏன் குளிக்கிறார் கள்? மின்விசிறி எத்ற்கு? சோப், டூத் பேஸ்ட், எல்லாம் எதற்கு? தேவ வசன மாகிய பிள்ளைக்குரிய அப்பம் இருக்கும் போது இவைகளால் வரும் நன்மைகளை எதற்கு என்று கேட்கலாமல்லவா ! தேவன் உலகத் தையும் உலகத்திலுள்ளவைகளை யும் படைத்ததே நமக்காகத்தான். நெல் மணியை விதைத்து பயிராக்கி, விளைவித்து அரிசியாக்கி சமைத்து உணவாக சாப்பிடும் நாம், தேவன் தந்த உலகப் பொருள்களை எடுத்து, அவர் தரும் ஞானத்தைக் கொண்டு மாத்திரை மருந்து கள் செய்து நம் உடல் ஆரோக்கியத்திற்கு உபயோகிப்பது எப்படி தவறாகும்? நன்மை யான எந்த ஈவும் அவர் தருவதுதானே (யாக்1:17). 1யோ2:13,14ன் படி, இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள், பிள்ளைகள் என்றும், வாலிபர் என்றும், பிதாக்கள் என்றும் மூன்று பிரிவுகளாய் இருக்கிறார் கள். வசனவிசுவாசத்தில் பூரணராயிருக்கும் பிதாக்கள் நிலையில் இல்லாதவர்கள், மருந்து மாத்திரை சாப்பிட்டாலும் சுகம் கிடைப்பது இயேசுவின் தழும்புகளால்தான்; டாக்டர்களால் அல்ல. டாக்டர்களுக்கு ஞானத்தைக் கொடுப்பதே தேவன்தான் என்ற விசுவாசத்தோடு செயல்படுவது பாவமல்லவே கிறிஸ்தவர்கள் எல்லாரும் பிதாக்கள் நிலைக்கு வரவேண்டும் என்பது தேவசித்தம். அதை நோக்கி நாம் நடை போடுவோம்.
(4) பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றதற்கு ஆவியானவர் தந்தருளும் வரத்தின்படியே அந்நிய பாஷை பேசுவது தான் அடையாளம் என்பது தவறு. வரம் மூலமாய் பேசும் அந்நியபாஷை வேறு பரிசுத்த ஆவியைப் பெற்றதற்கான அடை யாளமாகிய அந்நியபாஷை என்பது வேறு. வரம் மூலம் பேசும் பாஷை, வரமாகிய பாஷை ஆகும் (1கொரி12:10); நிச்சயமாய் அது உலக பாஷையாய்த்தான் இருக்க வேண்டும்; அது மற்றவர்களுக்குப் பிரயோ ஜனமாய் இருக்க வேண்டும். அப்படிப் பார்க்கும்போது, பரிசுத்த ஆவியைப் பெற்றேன் என்பதற்காக தற்காலத்தில் பேசப்படும் பாஷை அடையாளமாகிய பாஷை ; இது வரமாகிய அந்நிய பாஷைக்கு அடை யாளமுமல்ல. ஏனெனில் வரத்தை தேவன் தம் சித்தப்படி யாருக்கு வேண்டு மானாலும் தருவார் (1கொரி12:11). கள்ள உபதேச சபைப் போதகரும் வரமாகிய அந்நியபாஷை பேசியிருக்கிறாரே (இது குறித்து “தெரிந்து கொள்ளுங்கள்” என்ற ஆசிரியரின் புத்தகத் திலுள்ள“அந்நிய பாஷையா அடையாளமா?” என்ற செய்தியை வாசியுங்கள்)
(5) திருமணமாகாமல்தான் ஊழியம் செய்ய வேண்டும் என்று கூறுவது தவறு. அதுதான் மெல்கிசேதேக்கின் ஊழியமாம். இதற்கு ஆதாரமாய் லுôக்14:26,27ஐ சொல்கின்றனர். இந்த வசனங்கள் எபே 4:13ல் சொல்லப்பட்ட 5விதமான சபை ஊழியர்களுக்கு மட்டுமல்ல ; சபை விசுவாசி களாகிய சீஷர்கள் அனைவருக்கும் பொருந்தும். அக்டோபர் 2002 முழக்கத்தின் தலைப்புச் செய்தியிலேயே, சீஷர்கள் என்றால் விசுவாசிகள் என்று சொல்லிவிட்டு சீஷர்களுக்குரிய குணாதிசயங்களில் முதலாவதாக இதை எழுதியிருக்கிறேன். சீஷர்கள் எல்லோரும் திருமணம் முடிக் காமல் இருக்கவேண்டுமா? அப்படி யானால் படைப்பின் காரணம் பொய்யாய்ப் போகுமே! (மல்2:15; ஆதி1:28) இந்த சபையார் விசுவாசிகளுக்கு திருமணம் செய்வதும் தேவன், ஆதாம் முதற்கொண்டு நமது திருமணங்களை அங்கீகரிப்பதும் தவறாய்ப் போய்விடுமே! அப்படியே திரு மணம் செய்தபிறகு ஊழியத்திற்கு வரும் போது கணவன்-மனைவி பிரிந்து தான் வரவேண்டு மென்றால், அது மத்19:6ன்படி பாவமல்லவா! மனைவியைத் தான் வெறுக்க வேண்டு மென்று சொல்லியிருப்பதால் (லுôக்8:26) கணவனை வெறுக்க வேண்டாம் அல்லவா! அப்படியானால் கணவரோடு மண வாழ்க்கை யில் இருந்து கொண்டே பெண்கள் ஊழியம் செய்யலாமா? அன்றியும் தன் ஜீவனையும் வெறுக்க வேண்டுமென்றால், ஜீவனை விட்டுவிட்டு-அதாவது மரித்து-எப்படி இயேசுவின் பின் வருவது? யாக்கோபு எப்படி லேயாளை மனைவியாக்கிக் கொண்டிருந் தும், அவளை விட அதிகமாய் ராகேல்மேல் நேசம் வைத்திருந்தானோ அப்படியே உலகத்தை விட, மனைவி, தகப்பன், தாய், வீட்டை விட (லேயாள் போல் அவைகளும் நம்முடைய வைகள் தான்) தேவனையும், தேவனுடைய வார்த்தையையும் நேசிக்க வேண்டும் (ஆதி29:30,31) என்பதுதான் அதன் பொருள். மெல்கிசேதேக்கு முறை மைக்குட்பட்டவர்கள் திருமணம் முடிக்கக் கூடாது என்று எந்த வசனம் சொல்கின்றது? எபி9:11ஐ வாசியுங்கள். இங்கே இரண்டு முறைமைகள் சொல்லப்படுகின்றன. ஒன்று ஆரோனின் முறைமைகள் சொல்லப் படுகின்றன. அது என்ன? லேவி கோத்தி ரத்தில் பிறந்தவர்தான் ஆசாரியராக வேண்டும். இரண்டாவது மெல்கிசேதேக்கின் முறைமை. அது என்ன? நியாயப் பிரமாணச் சட்டப்படி, ஆசாரியரா காமல் ஆசாரியத்துவ முறைமை இல்லாத யூதா கோத்திர இயேசு, லேவி கோத்திர மல்லாத மெல்கிசே தேக்கு ஆபிரகாம் நாட்களில் ஆசாரியராய் இருந்ததுபோல, ஆசாரியரானார். ஆமென். (எபி9:12-22). இந்த முறைமையின்படியே 1பேது2:9ன்படி, லேவி கோத்திரத்தில் வராத நாம், தேவனின் பிள்ளைகளானபடியால் (யோ1:12) பிரதான ஆசாரியர் இயேசு வைப்போல் நாமும் ஆசாரியராய் இருக்கி றோம். அல்லேலுôயா! கிறிஸ்து வினிமித்தம் அண்ணகர்களாக நம் இஷ்டப்படி வாழலாம் (மத்19:12); ஆனல் அது சட்டமல்ல.
(6) கிறிஸ்து இயேசுவிலுள்ள பூரணத்தை அடைந்து கொள்வதற்கான சிலாக்கியம் புதிய ஏற்பாட்டு சபைக்கு மட்டுமே கொடு க்கப்பட்டுள்ளது (மத்5:48; கொலோ 1:28) என்று சொல்வது தவறு. எபி11:39,40ஐ வாசியுங்கள். நாம் பூரணமான பின்பு பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களும் நமக்குக் கிடைத்த விசேஷித்த மேன்மையினால் விசுவாசத்தைக் கொண்டு பூரணம் அடைகிறார்கள் என்பது சத்தியமே.
(7) ஜெயங்கொண்ட விசுவாசிகள்தான் புதிய ஏற்பாட்டு சபை என்றும், அவர்க ளுக்குத்தான் புதிய எருசலேம் என்றும் சொல்வது சரிதான் (1கொரி15:23: வெளி21:2). ஆனால் இவர்களல்லாமல், இரட்சிக்கப்பட்டவர்கள் என்ற ஒரு கூட்டம் இருப்பதாகவும் அவர்களுக்குத்தான் புதிய பூமி என்று சொல்வது தவறு. புதிய எருசலேமுக்கு சொந்தக்காரர்கள் அல்லாத எவரும் இரட்சிக்கப்பட்டவர்கள் என்ற கூட்டத்தில் வரமாட்டார்கள். அப்படிப் பார்த்தால் இரட்சிக்கப்பட்டு பின்மாற்றம் அடைந்தவர்கள் எல்லாருக்குமே புதியபூமி உண்டென்பது “இரட்சிப்பு-நித்திய ஜீவன்” என்ற வேத சத்தியத்திற்கு முரணான தாகும். இரகசிய வருகையில் கைவிடப்பட்ட இரட்சிக்கப்பட்டவன், அந்திக் கிறிஸ்து ஆட்சி யிலே இரத்தசாட்சியாய் மரித்தால் புதிய எருசலேம் நிச்சயம் உண்டு (வெளி20:4). மற்றப்படியானவர்களுக்கு நரகம்தான் உண்டு. இயேசுவை அறியாத காலங்களில் - நிலையில் இருப்பவர்கள், கிடைத்த சத்திய வெளிச்சத்தின்படி நடந்தவர்கள், சத்தியம் அறியாதபோது மனச்சாட்சிப்படி வாழ்ந்த வர்கள், 1000 வருட அரசாட்சி முடிந்தபின் கோகே மாகே யுத்தத்தில் சேராதவர்கள், தேவனால் முன்குறிக்கப்பட்ட நினிவே பட்டணத்தார், தென்தேசத்து ராஜஸ்திரி போன்றவர்கள் நிலை என்ன? இப்படிப் பட்டவர்களுக்குத்தான் புதியபூமி. மற்றப்படி இரட்சிக்கப்பட்டு அரைகுறையாய் நின்று, ஜெயஜீவியம் செய்யாத அத்தனை கிறிஸ்தவர்களும் நரகம்தான் செல்வர். துன்மார்க்கரும், இரட்சிக்கப்படாதவரும் இவர்களும் ஒரே கூட்டமே (1பேது4:17).
(8) ஜெயங்கொண்ட தேவ ஊழியர் 1,44,000 பேர்தான் சீயோன் போவார்கள் என்பது தவறு. சீயோன் என்பது பிதாவின் வீடு. அந்த வீட்டிற்குத்தானே சபையார் எல்லோரையும் கூட்டிப்போக மேகமீதில் இயேசு வருகிறார். அதுதானே இரகசிய வருகை (யோ14:1-4; 1தெச4:16). அப்படி யிருக்க எல்லா சபையாரும் சீயோனுக்கு போகமாட்டார்கள் என்பது தவறான உபதேசம். தேவ ஊழியர், விசுவாசி ஆகியோரடங்கிய சபை புதிய எருசலேமில் இருக்கும். அது சீயோனுக்கும், புதிய பூமிக்கும் லிப்டுபோல போய்க்கொண்டு வந்துகொண்டு இருக்கும். மற்றும் வெளி 7 மற்றும் 14ல் சொல்லப்பட்ட 1,44,000 பேர் இஸ்ரேலர்கள். வெளி 7ல் பூமியில் இருக் கிறார்கள். 14ல் பரலோகில் இருக்கிறார்கள். இவர்கள் 12 கோத்திரத்தார். பிதாவின் நாமம் தரிக்கப்பட்டவர்கள் (நாம் இயேசு வின் நாமம் தரித்துள்ளோம்) ஸ்திரீகளால் கறை படாத வர்கள் என்றால் திருமண மாகாதவர்கள் என்கிறார்கள். அப்படி  யானால் திருமணம் செய்வது கறையா? பாவமா? விவாக மஞ்சம் பரிசுத்தமுள்ளது (எபி13:4) என்ற வார்த்தை பொய்யா? ஸ்திரீகளால் கறைபடாதவர் என்றால் இந்த 1,44,000 பேரும் ஆண் களா? பெண்கள் சீயோனுக்குப் போக அருகதையே இல்லை யா? கற்புள்ளவர்கள் இவர்களே (வெளி 14:4) என்பதற்கு Virgins (கன்னியர்) என்று ஆங்கிலத்தில் உள்ளதே; அப்படி யானால் பெண்களும் இந்தக் கூட்டத்தில் உண்டல்லவா? இந்த 1,44,000 பேர் பற்றி “வெளியரங்கமாகாத தீர்க்க தரிசனங்கள்” என்ற ஆசிரியரின் நுôலை வாசித்து அறியுங்கள்.(Under Printing)
(9) மத்25:3,34,41 வசனங்களை வைத்து நித்திய  ஜீவனுக்குள் பிரவேசிக்கும் நீதிமான் களாகிய நாம்தான் செம்மறி யாடுகள் என்றும், பாவிகள் வெள்ளாடுகள் என்றும் போதிப்பது தவறு. இந்தப் பிரிக்கும் நிகழ்ச்சி இரகசிய வருகைக்குப் பிறகு பூமிக்கு இயேசு ஒலிவமலையில் கால் வைத்து வரும் 2ம் வருகையில் நடப்பது; மகிமையுள்ள ராஜாவாய் வரும்போது நடப்பது (மத்25:31); இரகசிய வருகையின் போது ராஜாவாய் வருவதில்லை; அப்போது தேவதுôதர்கள் தேவ ஜனங்களை மத்24:31; 25:32ன்படி கூட்டிச் சேர்ப்ப தில்லை என்பதை முதலில் அறியுங்கள். ஒலிவமலையில் இறங்கும் போதே இரட்சிக்கப்படும் இஸ்ரேலர் போக (வெளி1:8; ரோ11; அப்15) மீதமுள்ள உலக மக்கள்தான் அவர்கள். இதுகுறித்து இன்னும் விளக்கமாய் பழைய முழக்கங்களில் எழுதியுள்ளேன். “மீண்டும் கேட்போம்” பகுதியில் இனிமேலும் வரும்.
(10)நகை அணிந்தால், வெள்ளை உடை அணியாதிருந்தால், பூ வைத்தால் பரலோகம் கிடையாது என்பது தவறு. இதற்கு எந்த வசன ஆதாரமும் இல்லை. விக்கிரகங்கள் நிறைந்த நகைகளைத்தான் கழற்றி எறிய வேண்டும்; புதைக்க வேண்டும். மற்றப்படி நகையைப் போட்டு அழகு பார்க்கவேண்டும் என்பது தேவ சித்தம் (யாத்3:22). நகையிலே உடையிலே அலங்காரத்திலே பைத்தியமா யிராதே என்பதுதான் தேவனின் எச்சரிப்பு. சாப்பிடுவது தவறல்ல போஜனப் பிரியனாய் இருப்பது தவறு. அதுபோலத்தான் இதுவும். நகை போன்ற அலங்காரமில்லாமல் வாழ்வது நல்லது; திருமணமின்றி வாழ்வது போல! ஆனால் அது சட்டமல்ல.
இப்படி பல காரியங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். மொத்தத்தில், அடிப்படைச் சத்தியம் இருப்பதால் சி.பி.எம் சபையில் அங்கம் வகிப்பதில் தவறில்லை; அதிலுள்ள தவறான உபதேசங்கள் இல்லாத வேறு சபை அந்தப்பகுதியில் ஏதாவது இருந்தால் அதிலே இணைந்து கொள்வது நல்லது. சிந்திப்போம்! செயல்படுவோம்!! இது கடைசி காலம்!!!

5. இயேசுவுக்கு தழும்புகள் எப்படி வந்தன?

காயங்கள் ஆறினால் அவை தழும்புகளாகும். “அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசா53:5) என்று பழைய ஏற்பாட்டிலும், “அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்” (1பேது2:24) என்று புதிய ஏந்பாட்டிலும் எழுதப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டு வசனம் குணமானீர்கள் என்று இறந்தகாலத்தை உச்சரிக்க வைத்து நம்முடைய விசுவாசத்தை பெரிதுபடுத்துகிறது. இப்படிப்பட்ட அற்புதங் களைச் செய்யும் தழும்புகள் இயேசுவுக்கு எப்படி வந்தன? காயங்கள் இருந்திருந்தால்தானே தழும்புகள் வந்திருக்க முடியும்! நம்முடைய மீறுதல்களினிமித்தமே அவருக்கு காயங்கள் வந்தன (எசா53:5). எப்படி?
மாசில்லாத இயேசுவை எப்படியாவது விடுதலை பண்ணவேண்டுமென்று பிலாத்து எவ்வளவோ முயற்சித்தும், முடியாமல், பர்னபாஸ் என்ற கொடூரனை விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து சிலுவையிலறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான் (மத்27:26). வாரினால் அடித்தல் என்பது எதோ ஒரு சாட்டையாலோ, பெல்ட்டாலோ அடிப்பது அல்ல. ரோம சர்க்கார், பயங்கரமான தண்டனையை சரீரத்திலே கொடுக்க நினைத்தால் இப்படி வாரினால்தான் (Scourge) அடிப்பார்கள். இந்த வாரானது, ஒரு மரப்பிடியிலே இணைந்துள்ள 12 தோல் வார்களைக் கொண்டதாகும். ஒவ்வொரு தோல்வாரின் இருபுறமும், எலும்பு அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட, வெளித் தள்ளி யுள்ள கூர்மையான வளைந்த நிலையிலிரு க்கும் துண்டுகள் இணைக்கப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட வாரினால் அடிக்கும்போது கடுமையான வலியும், சதை பிட்கப்படுதலும் சர்வ சாதாரணமாய் நடக்கும். குற்றவாளி ஒரு மரத்திலே கட்டப்படுவான். பின் இந்த கொடூர மான வாரினால், ஆடையில்லாத வெறுமை  யான முதுகிலும், இடுப்பிலும் அடிப்பார்கள். சில சமயங்களில் முகத்திலும் குடல் பகுதிகளிலும் அடிப்பார்கள். ஒவ்வொரு அடியின்போதும், சதையானது பல இடங்களில் பிய்க்கப்பட்டு விழும். இது பயங்கரமான தண்டனையாதலால், குற்றவாளி அடிக்கடி மயங்கி விழுவான். சில நேரங்களில், கட்டப்பட்ட மரத்தின்கீழேயே மடிந்து போவான். இப்படிப்பட்டதான கொடூரத்தினால், குற்றவாளி உண்மையை ஒப்புக்கொள்ளவும், அவனிடமிருந்து உண்மை இரகசியங்களை தெரிந்து கொள்ளவும் இந்த முறையை பயன்படுத்தினார்கள். இயேசுவை இப்படி அடித்தார்கள் என்றால், பாவமில்லாத ஒன்றுமறியாத அவரிடமிருந்து என்னத்தை அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும்? (அப்22:24,25) பெற்றுக்கொண்டார்கள்?!
நியாயப்பிரமாண சட்டப்படி சவுக்கினால் 40 அடி வரைக்கும்தான் அடிக்கமுடியும் (உபா25:3). இதனால் யூதர்கள் இப்படியாய் அடிக்கும்போது 39 அடியிலேயே நிறுத்திவிடுவார்கள் (2கொரி11:23-25). இயேசுவை அடிக்க உபயோகித்த சவுக்கிலே, 12 தோல் வார்கள் இருந்திருந்தால், அதோடு அவரை 39முறை அடித்திருந்தால், 39*12=468 சதை வெட்டுகள் உருவாகியிருக்க வேண்டும். ஒருசில அடிகள் ஒரே இடத்திலேயே விழுந்திருந்தால், ஒவ்வொரு முறையும் எவ்வளவு ஆழத்திலிருந்து அவரின் சதைகள் கிழிக்கப்பட்டிருக்கும்; அவருடைய சரீரம் எவ்வளவு அந்தக்கேடடைந்திருக்கும்! (ஏசா52:14) எத்தனை வெட்டுக்கள் உருவாகியிருக்கும்! அவரது முதுகு உழுதநிலம் போல ஆயிற்று! சங்129:3ஐ வாசியுங்கள்.
இப்படியாய் உழுதநிலம் போல, சதைகள் பிய்க்கப்பட்டு, நம்முடைய ஆண்டவர், நமக்காய் காயங்கள் பட்டார்; அந்தக் காயங்கள் இன்று தழும்புகளாய் காணப்படுகின்றன; இயேசுவின் மரணம் நமக்கு ஜீவன்; அவரின் ஏழ்மைப்பிறப்பு நமக்கு ஐஸ்வர்யம்; அவரின் பாவச்சுமை நமக்கு விடுதலை; அவரின் வியாதிச் சுமை நமக்கு ஆரோக்கியம்; அப்படியே அவரின் இந்த பயங்கரமான அடிகளால் வந்த காயத்தின் தழும்புகளால் நமக்கு குணம்; சுகம்; விடுதலை. இது சரீர வியாதிகளால் வரும் வியாதியை மட்டுமல்ல; ஆவி, ஆத்மா, சரீரம் ஆகிய எல்லா வற்றிலும் வரும் ஆரோக்கியமில்லாத - தேவையில்லாத- அத்தனை காரியங்களும் மறைந்து போகும். ஆமென்! அவரின் தழும்பு களை விசுவாசிப்போம்; எண்ணிமுடியாத அற்புதங்களை பெற்றுக்கொள்வோம்! ஆமென்

6. வேளாங்கண்ணியில் நான் கண்ட அற்புதம்-அதிசயம்

“ரோமன் கத்தோலிக்க சபை, சி.எஸ்.ஐ சபை, லுத்திரன் சபை, போன்றவற்றில் பக்தியிருக்கிறது; சத்தியமில்லை. ஆனால் நமது பெந்தெகொஸ்தே சபைகளிலே சத்தியமி ருக்கிறது; பக்தியில்லை” என்று காலாகாலமாக சொல்லிக்கொண்டு வந்தேன். என்ன ஆச்சரியம் தெரியுமா? மார்ச் மாதம் காரைக்காலில் செமினாரை முடித்துவிட்டு, சுனாமியால் பாதிக்கப்பட்டு மறுமலர்ச்சி அடைந்திருக்கிற வேளாங் கண்ணியைப் பார்க்க சென்றபோது, மாதா கோவிலைப் பார்த்தேன். பெரிய கோவிலின் வெளிப்புற முகப்பில் “அதோ உன் தாய்” என்று எழுதப்பட்டிருந்தது. இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கி மரிக்கும் தருவாயில் யோவானைப் பார்த்து சொன்ன வார்த்தை இது (யோ19:27). இதுவரைக்கும், மனிதனாய்ப் பிறந்த வார்த்தையாகிய தேவனுக்கு தாயாக இருந்த மரியாள், அன்றுமுதல் இயேசுவுக்கு தாயாக இல்லாமல், யோவானுக்கு தாயாக்கப் பட்டிருக்கிறாள். ஏன்? மனித நிலையிலி ருந்தவர், மரித்து உயிர்த்தபின் தெய்வீக நிலைக்கு மாறுகிறார். தெய்வீக நிலையி லிருக்கிற தேவனுக்கு, தாய்-தந்தை யாரு மில்லை அல்லவா! அப்படியிருக்க, தெய்வீக நிலையிலுள்ள தேவனுக்கு தாய் என்று ஊரும் உலகும் மரியாளை எண்ணி, அந்த மரியாளுக்கு தேவனுக்கு மேலாய் மரியாதை யும்-மகத்துவமும் கொடுக்கக்கூடாது என்பதற் காக சொன்ன வார்த்தை இது. ள“அதோ உன் மகன்; அதோ உன் தாய்” - இயேசு ஏன் சொன்னார்? என்ற தலைப்பில் ஆசிரியரின் “கருகலான சத்தியம்” என்ற நுôலிலுள்ள செய்தியை வாசியுங்கள்ன. இப்படிப்பட்ட உண்மை புரிந்ததினாலல்லவோ, வேளாங்கண்ணி கோவிலில், இயேசு தேவனின் தாய் மரியாள் என்று சொல்லிப் பழக்கப்பட்ட கத்தோலிக்க மார்க்கம், இப்போது, “தேவனின் தாயல்ல; மரியாள் உன்தாய்-நமது தாய்” என்று வருவோருக்கு விளம்பரம் போட்டுக் காட்டுவது போல எழுதப்பட்டிருப்பது, உண்மையிலேயே அந்த மார்க்கத்தில் ஏற்பட்ட பெருத்த மாற்றம் என எண்ணு கிறேன்! இந்த மாற்றம் கடைசி நாளில் தேவன் செய்யும் அற்புதம்; உலகம் காணா அதிசயம். அல்லேலுôயா!
மட்டுமல்ல.. கோவிலுக்கு உள்ளே, பலிபீடம் என்று வைத்திருப்பார்கள். அதிலே ஒருசிலைகூட இல்லை.. மாதாவின் சிலைகூட இல்லை! என்னே அதிசயம்! தேவன் மாற்றுகிறார். மேலும், அந்த பலிபீடத்தின் இரு பக்கங்களிலும் மாதா சிலை இருந்தது. ஒருபுறத்திலிருந்த மாதா சிலையின்மேல் ஆர்ச் வடிவத்தில் ""இயேசு உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ அதன்படி செய்யுங்கள்'' என்ற வசனம் எழுதப்பட்டு இருந்தது. இந்த வசனம், கானாவூர் கல்யாணத்தில் மரியாள் சொன்ன வார்த்தை யாகும் (யோ2:5). இந்த மரியாளின் வார்த்தைப் படி அன்றைய வேலைக்காரர்கள் இயேசு சொன்னதைச் செய்தார்கள்; அதிசயம் நடந்தது. அல்லேலுôயா! இந்நாள்வரை, காட்சி தந்த மரியாள் சொன்னதையே சொல்லி அதன்படியே செயல்பட்டுக்கொண்டிருந்த கத்தோலிக்க மார்க்கம், இந்த கடைசி நாட்களில், “காட்சி கொடுத்த மாதா சொன்னபடியல்ல; இயேசு சொன்னபடி செய்யுங்கள்” என்று எழுதிக்காட்டி எல்லோருக்கும் போதிக்கும் நிலைக்கு வந்திருப்பது கண்டு ஆச்சரியப் பட்டேன்! “முந்தினோர் பிந்தினேராவார்; பிந்தினோர் முந்தினோராவார்” என்ற இயேசுவின் வார்த்தை (மத்19:30) நிறைவேறுகிறது கண்டு, மெய் சிலிர்த்துப் போனேன்! இந்த இயேசு; “மனந் திரும்புங்கள்; பாவமன்னிப்பின் நிச்சயத் தைப் பெற்றுக்கொள்ளுங்கள்; சீஷராகுங் கள்; ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங் கள்; பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டு ஊழியம் செய்யுங்கள்; விக்கிரக ஆராதனைக்கு விலகி ஓடுங்கள்; தேவனுடைய வார்த்தையை உறுதியாய்ப் பற்றிக் கொள்ளுங்கள்; இயேசு உயிர்த்தார் என்பதற்கு சாட்சியாய் வாழ்ந்து காட்டுங்கள்; மரியாள் உங்களுக்கு தாயைப் போன்றவள்” என்று பல போதனைகளைச் சொல்லி யிருக்கிறார். இந்த போதனைப்படி நடக்காதவர்கள் மரியாளின் நேசர்கள் அல்ல. மரியாள் சொன்னபடி, இயேசுவின் வார்த்தை யைக் கேட்டால் “குழந்தை ஞானஸ் நானம் இருக்காது; பாவ சங்கீர்த்தனம் நடக்காது; சிலை வணக்கம் தொடராது; உறுதிபூசுதல் இருக்காது;” ஆமென்!
இதை வாசிக்கும் தேவபிள்ளையே! மற்ற சபைகளில் “பக்தியிருக்கிறது; சத்தியமில்லை” என்று சொன்ன நான், இன்று அதையே 100க்கு 100 உறுதியாய்ச் சொல்ல வழியில்லை. கத்தோலிக்க மார்க்கத்திலும் சத்தியம் கொஞ்சம் கொஞ்சமாய் துளிர்விட்டு வளர்கிறது என்பதை உணர்கின்றேன். சகோ. பெர்க் மான்ஸ், குழந்தைசாமி, ராபர்ட் இளங் கோ, ஏஞ்சலிக்கா, சேவியராகிய நான், ஏ.வி.ராயன் போன்ற பலரை எழுப்பிய தேவன், இன்னும் எழுப்புவார்! அந்தக் காரியத்திற்காய் விசுவாசத்தோடு ஜெபிப் போம்! இயேசுவின் இரகசிய வருகையிலே இப்படிப்பட்ட கூட்டம் பெருகக்கடவது இயேசுவின் நாமத்தினாலே! அத்தோடு ""சத்தியமிருக்கிறது ; பக்தி யில்லை'' என்று காணப்படுகிற பெந்தெ கொஸ்தே ஆவிக் குரிய சபைகளில், சத்தியமும் மங்கிப்போய், பக்தியும் அற்றுப்போகும் நிலை வராதபடிக் கும் ஜெபிப்போம். இன்னும் இயேசு வர தாமதம் ஏன்? எல்லா மக்களுக்கும் சுவிசேஷம் சொல்லவேண்டும் என்பதற்காகவா? இல்லை.. இல்லை. மத்24:14ல் சொல்வது ராஜ்யத்தின் சுவிசேஷம்; நாம் சொல்வது இரட்சிப்பின் சுவிசேஷம். அது நடக்கப்போவது அந்தி கிறிஸ்துவின் ஆட்சியிலே! அந்தி கிறிஸ்துவின் ஆட்சிக்கு முன்னே சபையை கூட்டிக் கொண்டுபோக வந்தாக வேண்டும் (2தெச 2:7) 2பேது3:10ஐ வாசித்தால், இரட்சிக்கப்பட்ட சபையார் ஒருவரும் கெட்டுப் போகக்கூடாது என்று நம்மேல் நீடிய பொறுமையுள்ள வராயிருககிறார் என்று அறியலாம். எனவே நமது சபைகளிலும் பக்தியும் சத்தியமும் பெருகட்டும்! மற்ற பாரம்பரிய- பெயர்க் கிறிஸ்தவ சபைகளில் சத்தியம் வளரட்டும்! இயேசு சீக்கிரம் வருகிறார்! நான் வேளாங்கண்ணியில் கண்ட அற்புதமும், அதிசயமும் நுôற்றுக்கு நுôறு எங்கும் உண்மையாய் காணப்படட்டும்! அல்லேலுôயா!