ஜெயமேரி ஜோசப், மும்பை.
(1) வசனமுழக்கத்தில் “கள்ள உபதேச சபைகள்” என்ற தலைப்பில், 10ம் வரியில், “அப்பம்தான் இயேசுவின் சரீரம்; ரசம்தான் அவரின் ரத்தம்” என்று எழுதியுள்ளீர்கள். இது கள்ள உபதேசம் என்பதை இந்த பாமர மண்டைக்கு விளங்கும் படியாக சொல்லவும். 1கொரி11:24,25ல், “இது உங்களுக்காகப் மீட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது” என்றும் “இந்தப்பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கை யாயிருக்கிறது” என்றும் எழுதப்பட்டதன் அர்த்தம் என்ன?

Answer: 1கொரி11:24,25,26ஐ மறுபடியும் முழுவதுமாய் வாசியுங்கள். நமக்காகப் பிட்கப்பட்ட இயேசுவின் சரீரத்தையும், சிந்தப்பட்ட இரத்தத்தையும் நினைவுகூறும்படி இதைச்செய்ய இயேசு கட்டளையிட்டார். 1கொரி11:29ஐ தியானித்தால், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறிந்து போஜனபானம் பண்ணவேண்டும் என்று உள்ளது. ஆகவே இந்த அப்பம் அவருடைய சரீரமல்ல; இந்த ரசம் அவருடைய இரத்தமல்ல; உண்மையான சரீரத்தையும் இரத்தத்தையும் நிதானித்தறிந்து, அதற்கு அடையாளமாய்-நினைவாய் இதைப் போஜனபானம் பண்ணவேண்டும். இந்த அப்பம் பிய்க்கப்பட்டதுபோல இயேசுவின் சரீரம் பிய்க்கப்பட்டது என்று விசுவாசித்து போஜனம் பண்ணவேண்டும். (this do in rememberance of me” என்ற வார்த்தையை விசுவாசியுங்கள்) ரோமன் கத்தோலிக்க சபையிலே இது சரீரமும் இரத்தமும்தான் என்று சொல்லி, இதை வணங்கி (விக்கிரக ஆராதனை) “இதை சாப்பிடும்போது கடிக்காமல் விழுங்கவேண்டும், கடித்தால் இரத்தம் வரும்” என்று பயமுறுத்தி உபயோகிக் கிறார்கள். இதை திருவிருந்து என்று சொல் லாமல் திருப்பலி என்று சொல்வதால் இந்தநிலை ஆயிற்று.

பெயர் எழுத பயப்படும் வாசகர்.
(1) 66 புத்தகம் கொண்ட பைபிளைத்தான் நம்பவேண்டுமென்று கடவுள் சொன்னாரா? தயவுசெய்து “பொது மொழிபெயர்ப்பு” பைபிளை படித்து அறிவுபெறும். I, II மக்கபேயர் உள்ள முழுபைபிளை படியும். கடவுள் மலாக் கியா வரை வெளிப்பாடு கொடுத்தாராம். பின்பு இயேசு பிறப்புவரை அதை நிறுத்தி விட்டாராம். ஆக 400 வருடம் இருண்ட கால மாம். இதற்கு பைபிளில் ஆதாரம் காட்ட முடியுமா?

Answer:  தள்ளுபடி ஆகமங்களான மக்கபேயர் I & II புத்தகங்களையும் சேர்த்துத்தான் பைபிள் என்று சொல்கிறீர்களா? மக்கபேயர் I & II ல் தேவ சத்தியத்திற்கு மாறான கருத்துக்கள் இருப்பதால் அது தள்ளப்பட்டது என்று உமக்குத் தெரியாதா? நான் வைத்திருக்கிற 66புத்தகத்தோடு, தள்ளுபடியில்லாத வேறே சத்திய ஆகமங்கள் இருந்தால் அவைகளை பைபிள் என்று ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. இஸ்ரேலரின் வரலாற்றைப் படித்தால், மல்கியாவிற்கு பிறகு யோவான்ஸ்நானன் வரை கிட்டத்தட்ட 400-500 ஆண்டுகளாய் ஒரு தீர்க்கதரிசியும் எழும்ப வில்லை என அறிகிறோம். அந்நிய நுகப் பிணைப்பு, விக்கிரக ஆராதனை போன்ற பயங்கரமான பாவங்களால் இஸ்ரேல் சமுதாயம் அந்தக் காலக்கட்டத்தில் மங்கிப் போயிருந்தது. ஆபிரகாம் முதல் வாக்குத்தத்தம் பண்ணிய உண்மையுள்ள தேவன், யோவான் ஸ்நானன் மூலமாய் இஸ்ரேலில் அணைந்த விளக்கை எரிய வைத்தார். இது சரித்திர உண்மை.

(2) ஸ்திரியே என்றுதான் பெண்களை கூறுவீரோ? முதலில் அந்த பழைய தமிழ் பைபிளை விட்டுவிட்டு, புதிய நடைமுறை தமிழ் அடங்கிய பொது மொழிபெயர்ப்பை படியும். இயேசுகூட மக்களுக்குப் போதிக்கும்போது புரியும் விதத்திலேயே போதித்தார். நீர் தமிழ் நாட்டில்தான் வாழ்கிறீர்! முதலில் தமிழ் பேச கற்றுக்கொள்ளும். பின்னர் போதியும்.
Answer:  நீங்கள் சொல்லும் புதிய பொது மொழி பெயர்ப்பு பைபிளில், தேவசித்தத்திற்கு-சத்தியத்திற்கு-இசகு, பிசகு ஏற்படாமல் இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள நான் என்றும் தயார். எனக்கு தமிழ்பேசத் தெரியவில்லை என்று சொல்கிறீர்! இந்த அளவுக்கு-உண்மைச் சத்தியத்தை சொல்லும் அளவிற்கு-தமிழ் பேச தேவன் கொடுத்த கிருபைக்கு ஸ்தோத்திரம்.

(3) பிப்ரவரி மாத கேள்வி-பதில் நேரத்தில் “நம்முடைய தேவனாகிய கர்த்தர் (யேகோவா) என்று எழுதியிருக்கிறீர்”. இது தவறு. யாவே என்றுதான் யூதர்கள் உச்சரித்தனர். “அல்லேலுôயா” என்றுதான் உள்ளது. ‘யா’ என்றால் “யாவே” என்பதாகும். நீர் சொல்வதுபோல் ‘யேகோவா’ என்றால் “அல்லேலுôயே” என்று தானே சொல்லவேண்டும்! தேவனின் பெயரை-வார்த்தையை-எதிர்ப்பதை நிறுத்திவிடும். இல்லையேல் அழிந்துபோவீர் எச்சரிக்கை.

Answer:  யாத்6:3,4ல் யேகோவா என்னும் நாமத்தில்தான் வெளிப்பட்டார் தேவன். Jehovah என்று ஆங்கிலத்திலும், யாவே (Yahweh - YHWH) என்று எபிரேய மொழியிலும் உச்சரிக்கப் படுகிறது. “LORD” என்று எங்கெல்லாம் வருகிற தோ அது யேகோவா அல்லது யாவே என்று அர்த்தமாகும். நாம் எபிரேய மொழி உச்சரிப் பிலும் சொல்லலாம்; ஆங்கில உச்சரிப்பிலும் சொல்லலாம்; தவறில்லை. Jesus என்று ஆங்கிலத்திலும், இயேசு என்று தமிழிலும், yehoshua என்று எபிரேயத்திலும், Joshua என்று கிரேக்க மொழி யிலும் சொல்வ தில்லையா? எனவே, யேகோவா என்று சொல்வதில் தவறில்லை. நியாயப் பிரமாணக் கார இஸ்ரேலர் சொன்னபடியாவே என்றுதான் சொல்லவேண்டும் என்று கட்டாய மில்லை. காரணப் பெயரான இந்த தேவ நாமத்தை விசுவாசத்தோடு அர்த்தம் புரிந்து உச்சரித்தால் போதும்! அல்லேலுôயா என்ற தமிழ்வார்த்தை Hallelujah (அல்லேலுôயா) என்று எபிரேயத் திலும்; Alleluia என்று கிரேக்கத் திலும் உச்சரிக்கப்படுகிறது. Hail-El-Jah (Hail-God the creator   ஏல்  - Jehovah) Hail to the creator and to Jehovah அதாவது சிருஷ்டிகரும் இரட்சகரு மானவருக்கு புகழ்ச்சி என்று பொருள். எனவே நியாயப்பிரமாணக் காரரைப்போல நினைத்துக் கொண்டு அழிந்து போக வேண்டாம். தேவன் விரும்புவதெல்லாம் விசுவாசமுள்ள தேவ புத்திரரைத்தான். ஆமென்!

(4) கிறிஸ்தவசபைகளை விட்டுவிட்டு, முஸ்லீம்கள், இந்துக்களுக்கு விடை சொல்லப் பாரும். கிறிஸ்தவ சபைகளிலும் கத்தோலிக் கர், யேகோவா சாட்சிகள், 7ம்நாள் போன்ற நுôதன போதனையாளர்கûளை கண்டியும். இதுவே சரியானது. பின்னும் 2ம் வருகையைப் பற்றியும் போதியும்.
Answer:  நமது கடந்த 18 ஆண்டுகால முழக்கத்தை சரியாக விடாது படித்திருந்தால் புரியும். நீங்கள் மேலே சொல்லும் அத்தனை பேரையும் கண்டித் திருக்கிறேன். மட்டுமல்ல... கிறிஸ்தவசபை பூரண புருஷராகும் பொருட்டு, எபே4:11,12ன்படி, அவைகளில் உள்ள தவறான, ஆரோக்கிய மில் லாத, கள்ள, பாரம்பரிய உபதேசங்களை கண்டி த்து உணர்த்துகிறேன். இதுதான் தேவன் என்னை அழைத்த அழைப்பு. 2பேது 3:9ஐ வாசித்தால், சபையார் மனந்திரும்ப வேண்டுமெ ன்று, நம் நிமித்தம் நீடிய பொறுமையாயிருப்ப தால்  வருகை தாமதமாகிறது என அறிகிறோம். எனவே சபையில் எழுப்புதல், மறு மலர்ச்சி உண்டாகவும் ஊழியம் செய்கிறேன். ஆமென்.

(5) சங்44:18-19ல் ஆண்டவரே அவர்களை நொறுக்கினார் என்று உள்ளதால்- ஆண்டவரும் மனிதர்களை சில துன்பங்களில் சோதிக்கிறார் என்று ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். அஃதில்லாமல் சாத்தானே அவர்களை பாம்புகள் உள்ள இடத்தில் விட்டான் என்றால் அது அப்பட்டமான பொய்.
Answer:  பொல்லாங்கினால் சோதிக்கிறவன் பிசாசு என்று யாக்1:13ல் சொல்லியிருக்க, அவன் தொழிலை நம்தேவன் செய்கிறார் என்று சொல்வது தேவதுôஷணம் அல்லவா! சோதனைக்காரன் பிசாசுதானே! தேவன் சோதிக் கிறவர் அல்ல; பரீட்சை பார்க்கிறவர் (Not tempt but test). மத் 6:10ல் சொல்லப்பட்ட தேவசித்தம் புரிந்தால் போதும்; அதுதான் பூமியில் நிறைவேற பாடுபடுகிறாரே ஒழிய சாத்தானின் சித்தமல்ல; மூலபாஷையில் “பாம்புகள்”
என்றில்லை. “Dragons” என்று உள்ளது. தேவன் நொறுக்குவதுமில்லை; தள்ளுவது மில்லை. இஸ்ரேலரின் பாவத்தால் ஏற்பட்ட சாபங்கள் இவைகள். தேவசித்தம் புரியாமல், சங்கீதக்காரன் எழுதியவை இவை. வச 23ஐ படியுங்கள். “நம்மை உண்டாக்கிய தேவன் உறங்குவது மில்லை; துôங்குவதுமில்லை” என்ற சத்தியத் திற்கு மாறாய் தாவீது பாடியது புரியவில்லையா? இயேசு வந்த பிறகுதான் (எபி1:1,2) எல்லா மறைபொருளும் வெளிப் படுத்தப்பட்டுள்ளது (லுôக்12:2). பழைய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் பலர் இப்படியேதான் எழுதி உள்ளார்கள். புதிய ஏற்பாட்டில் வெளிப் பாடு உண்டு; வெளிச்சம் உண்டு; இப்படிப்பட்ட மாறான வார்த்தைகள் இல்லை. அல்லேலூயா.

பாஸ்டர்.சந்தோஷ்குமார், திருக்கோயிலுôர்.
(1)தசமபாகம் நியாயப்பிரமாண சட்டமல்ல என்று கூறியிருப்பது வேதத்திற்கு புறம்பானது. லேவி27:30ல் இது எந்த சட்டம்? தேவன் நியாயப்பிரமாண காலத்தில் இதை சட்டமாக் கினார். ஆக இது நியாயப்பிரமாண சட்டம். புதிய ஏற்பாட்டு உபதேசம் இயேசு கொடுத்த உடன்படிக்கை. எந்த ஒரு அப்போஸ்தலரும் தசமபாகம் கொடுக்க வேண்டும் என்று போதிக்கவில்லையே! அப்போஸ்தலகால கிறிஸ்தவர்கள் நிலங்களை விற்று 10ல்1 கொடுக்கவில்லை (அப்4:34,35). உனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று தசமபாகம் கொடு என்று இயேசு சொல்லவில்லை. சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான்; பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான் (தசமபாகம் கொடுக்கிறவன் அல்ல 2கொரி9:6,7).

Answer:  ஆபிரகாமும், யாக்கோபும் வாழ்ந்த காலம் நியாயப்பிரமாண காலமல்ல; அப்போதே தசமபாகம் கொடுத்தனர் (ஆதி14:20;20:22). நியாயப்பிரமாணத்திற்கு முன்பிருந்த தேவ காரியங்களை- நியாயப்பிரமாணத்தில் தேவன் இணைத்திருக்கிறார். ஆதி 39:9ஐ வாசித்தால் விபச்சாரம் செய்யாமல் யோசேப்பு வாழ்ந்தான்; இதுவும் நியாயப்பிரமாணத்தில் இணைக்கப் பட்டிருக்கிறது. ஆதி 4ல் காயீன் கொலை செய்தது பாவம் என்று அறிகிறோம். இதுவும் நியாயப் பிரமாணத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது. ஆபிரகாம் முதல் விருத்தசேதனம் கட்டளையிடப் பட்டது; இதுவும் நியாயப்பிரமாணத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது. இதுபோல பல காரியங்கள்-நியாயப்பிரமாணத்திற்கு முன்பிருந்து கைக்கொள்ளப்பட்டவை. நியாயப்பிரமாணத்தில் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் புதிய ஏற்பாட்டில், இவைகளில் எவைகளெல்லாம் தேவையில்லை என்று இயேசுவின் உபதேசமும் (மத்28:20) அப்போஸ்தல உபதேசமும் (ரோ6:17; யூதா1:3;அப்16:4) சொல்கின்றதோ, அவைகளை நாம் கைக்கொள்ளத் தேவையில்லை. விருத்தசேதனம் தேவையில்லை என்பதால் நாம் கைக்கொள்வதில்லை (கலா6:15;1கொரி7:19). தசமபாகம் தேவையில்லை என்று யாரும் சொல்லவில்லை. மத்23:23ல் “தசமபாகம் கொடுப்பதையும் விட்டுவிடாதிருக்க வேண்டும்” என்று இயேசு சொன்னார். எபி7:8ன்படி, பவுல் காலத்திலேயே தசமபாகம் வாங்கப்பட்டிருக்கிறது. ஆபிரகாமின் ஆசீர்வாதம் இஸ்ரேலர்களுக்கு மட்டுமல்ல... கிறிஸ்து இயேசுவினால் நமக்கும் உண்டு (கலா3:7,9). யோவேல்2:28ன்படி பரிசுத்த ஆவியைப் பெறுவதுகூட (இஸ்ரேலருக் குரியது) நமக்கு உண்டு என்று கலா3:14ன்படி அறிந்து அதைப் பெற்றும் அனுபவிக்கிறோம். ஆசீர்வாதங்கள் எல்லாமே நிபந்தனைக்குட் பட்டவை. அப்படியே மல்3:10ன்படியான ஆபிர காமின் மாம்ச சந்ததிக்குரிய ஆசீர்வாதம் வேண்டுமென்றால் தசமபாகம் கொடுத்தே ஆக வேண்டும். அப்போஸ்தலகாலக் கிறிஸ்தவர்கள் தங்களுக்குரிய எல்லாவற்றையும் மொத்தமாய் கொண்டுவந்து கொடுத்து மொத்தமாய் ஒரே இடத்தில் அனுபவித்தார்கள். ஆனால் நாகரீகம் வளர வளர, கிறிஸ்தவர்கள் சிதறடிக்கப் வளர வளர, கிறிஸ்தவர்கள் சிதறடிக்கப் படும்போது இந்த கம்யூனிசம் போன்ற கொள்கை செல்லுபடியாகவில்லை. இந்த கொள்கை தேவன் கொடுத்த சட்டமுமல்ல; தற்போது Children of God என்ற சபை இப்படியே அனுபவிக்கிறது. இப்படி எந்த ஆவிக்குரிய சபையும் அனுபவிக்க வில்லை. மத் 19ல் வாலிபனை, அவனது பொருளாசை யைத்தான் பரீட்சை பார்த்தாரே ஒழிய வேறொன்றும் அல்ல. விற்று தரித்திரருக்குத்தான் கொடுக்கச் சொன்னார். நாமும் நம்முடைய தெல்லாம் விற்று தரித்திரருக்கு கொடுத்து விட்டுத்தான் இயேசுவின் பின் போக வேண்டுமா? சிந்தியுங்கள். அடுத்து 2கொரி8:9ல் விதைப்பது, அறுப்பது, உற்சாகமாய் கொடுப்பது எல்லாமே, எருசலேமிலுள்ள ஏழை பரிசுத்தவான் களுக்கு வசூலிக்கப்படும் தருமப் பணமே ஒழிய, காணிக்கையோ, தசமபாகமோ அல்ல என்று அறியுங்கள். வேதத்தின்படி, தசமபாகம் தேவனுக் குரியது (லேவி27:30). அதைக் கொடுத்தே ஆகவேண்டும்; ஆசீர்வாதமும் பெற வேண்டும்; அஃதல்லாமல் காணிக்கை நமது விருப்பப்படி 100க்கு 100கூட கொடுக்கலாம். அது நமது விருப்பப்படி. ஆமென்.

(2) தசமபாகம் நியாயப்பிரமாணம் இல்லை யென்றால் 7ம்நாள் ஆசரிப்பவர்கள்கூட அது நியாயப்பிரமாணம் இல்லை என்று கூறுவார் கள். அறிக்கையை மாற்றவும்.
Answer:  நியாயப்பிரமாணச் சட்டத்தில் தசமபாகம் கொடுப்பதை சேர்க்கும் முன்னேயே தசமபாகம் கொடுக்கப்பட்டது. அதுபோல 7ம்நாள் ஆசரிப்பு நியாயப்பிரமாணத்திற்கு முன்னேயே ஆசரிக்கப் படவில்லையே! அப்படி ஆசரித்திரு ந்தால் அவர்கள் சொல்வது சரியே. நெகே9:13,14; யாத்20:8-10 போன்ற பல வசனங்களின்படி சீனாய்மலையில் நியாயப்பிரமாணம் கொடுக்கும் போதுதான் 7ம்நாள் ஆசரிப்பும் சட்டமாய் கொடுக்கப்பட்டது. இது கொலோ2:16,17; எபே2:14,15 போன்ற பல வசனங்களின்படி, நாம் ஆசரிக்கத் தேவையில்லை என்று உறுதியா கின்றது. எனவே நான் எனது விசுவாச அறிக் கையை மாற்றத் தேவையில்லை. உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். ஆமென்.

பீட்டர் அசோக்குமார், தொட்டபாளையம்.
(1)இரட்சிக்கப்பட்டு 11 வருடமான என் அண்ணன் சீர்திருத்தக் கல்யாணம் செய்தார். ஆனாலும் இந்து வைபவங்கள் இடம் பெற்றன. அவரின் எதிர்கால வாழ்க்கை ஆசீர்வாதமாக இருக்குமா?
            
Answer: கிறிஸ்துவை-கிறிஸ்துவின் வார்த்தையை விட்டு துôரப்போன யாவரும் சாபத்திற்கு உட்பட்டவர்கள்தான். கலா3:13ஐ விசுவாசித்து அவர் மனந்திரும்பி வந்தால் தேவாசீர்வாதம் உண்டு. இல்லையேல் பிசாசு தம் சித்தப்படி நடத்திச் செல்வான் (லுôக்4:4,5).

(2) எனது அண்ணன் அரசில் பணி செய்வதால் இப்படிச் செய்தேன் என சாக்குபோக்கு சொல்கிறார்கள். தேவன் மன்னிப்பாரா?
Answer: தேவனுக்கு சாட்சியாய்-பகிரங்கமாய் கிறிஸ்தவனாய் இருக்கவேண்டுமென்பது தேவசித்தம். மத்10:32,33ன்படி, அவர் மனம் மாற வில்லை என்றால், தேவன் அவரை அறி யேன் என்று சொல்லும் நிலை வரும். ஏசாபோல சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப் போட்டு விட்டார். உதவிவரும் கன்மலையை விட்டுவிட்டு, கவர் மென்ட்டைப் பார்க்கிறார். தைரியமாய் கெஜட்டில் மதம்மாறி, அரசுக்கு தெரிவித்துவிட்டு, கிறிஸ்தவ திருமணம் முடித்திருக்கலாமே! இத னால் அவருக்கு வேலை பறிபோகவே போகாது. இப்போதும் குடி முழுக வில்லை; அதே காரியத் தை இப்போதும் செய்து தன்னை கிறிஸ்தவ னென்று காட்டி தேவனோடு ஒப்புரவாகலாம்.

(4) என் பாஸ்டர் தங்களைப்போல சத்தியத்தை மிக sharp ஆக பிரசங்கிக்கிறவர். ஆனால் இதைக்கண்டு கொள்ளவில்லையே அவருக்கு ஏதும் வேத வெளிப்பாடு கிடைத்திருக்குமா? 
Answer:  வசனத்திற்கு மிஞ்சிய வெளிப்பாடு யாருக்கும் கிடைக்காது. வேதத்தின்படி, இது பாவம்தான். ஏன் அவர் இதைக் கண்டு கொள்ளவில்லை? இன்னும் அவருக்கு தருணம் உண்டு. ஒன்று உன் அண்ணனை சபையைவிட்டு நீக்கி சபை யாரை சத்தியத்துக்குள் கொண்டு செல்ல வேண் டும். அல்லது அவரை மனந்திரும்ப வைத்து, கிறிஸ்தவன் என்று ஊருக்கும், அரசுக் கும் காட்டி சபையிலே சத்தியத்தில் நடத்த வேண்டும். வெறுமனே மௌனமாய் இருப்பது தேவதுரோகம்.

எஸ்றா அமல்ராஜ், திருச்சி.
(1) திரித்துவ உபதேசம் திருச்சபைக்குள் R.C சபை மூலம் நுழையும் என்று ஆண்டவர் பதிவு செய்துள்ளார். மத்13:33ல், ஸ்திரி என்பது R.C சர்ச்; மூன்றுபடி மாவு என்பது திரித்துவத்தில் அடக்கிவைத்தல்.

Answer:  R.C சபையானது திருச்சபையில் ஒரு அங்கமே அல்ல. மத்13:33ல் உள்ள ஸ்திரி தேவனுடைய ராஜ்யத்திலுள்ள சபைதானே ஒழிய R.C சபை அல்ல. மாவு என்பது தேவனுடைய வார்த்தை (மத்4:4; யோ6:47-63). 3படி மாவு என்பது ஒருவீட்டு சமையலுக்கு தேவையானது (ஆதி18:6). புளிக்க வைத்தல் என்பது கெட்ட-கள்ள-தவறான உபதேசத்தை தேவ வார்த்தை யோடு சேர்த்து மொத்த சபை உபதேசத்தையும் கெடுத்தலாகும். ஆக, தேவ ராஜ்யத்திலுள்ள சபைகளிலும் கள்ள உபதேசம் முழுவதுமாய் நிறைந்திருக்கும் என்றுதான் உள்ளதே ஒழிய, திரித்துவம் என்ற கொள்கை தான் அடக்கி வைக்கப்படும் என்று வேதம் சொல்லவில்லை. திரித்துவம் என்பது ஆதி1:1லேயே எர்க் - ஏலோஹிம் என்று உள்ளது. அது இடையில் வந்தது அல்ல.