ஆராதனைக்கு இசை தேவையில்லையா?


                          இசைக்கு மயங்காதது ஒன்றுமில்லை. இசையோடு பாடல் சேர்ந்து விட்டால் அது இன்னும் மகிமைப்படுகிறது. பாடலிலுள்ள கருத்துக்களை, ஈர்க்கும் படியாய் வெளிக் காட்ட இசை பயன்படுகின்றது. பாடல் என்றாலே இசையோடு இணைந்ததுதான். இரண்டையும் பிரித்தால் சுவையில்லை. தமிழில் கூட இயல், இசை, நாடகம் என்று மூன்றாய் பிரிக்கப்பட்டு. இசையை மையத்தில் வைக்கப்பட்டு, அந்த இசை, இயற்றமிழ் நாடகத்தமிழ் மூலமும் வெளிப் படுகின்றது. இதுதான் இசையைப் பற்றிய தற்கால உலக நிலவரம். ஆனால் ஆவிக் குரிய ரீதியில் பார்த்தால், பெரும்பாலான சபைகளில் ஆராதனை, இசையோடு (Music) இணைந்தே உள்ளது. கிறிஸ்து வின் சபை போன்ற ஒரு சில சபைகள் ''ஆராதனைக்கு கிறிஸ்தவ சபையில் இசை தேவையில்லை; கூடாது'' என்று வாதிடுகின் றனர். இது குறித்து ஆவியானவர் சொல்வ தைக் கேட்போம்.
                          தேவ ஆராதனைக்கு தேவனின் விருப் பப்படி லூசிபரால் பரலோகிலே உபயோகப் படுத்தப்பட்டது இசையாகும் (எசே 28:14) துதி, தோத்திரங்கள் மத்தியில் இசை பெரும் பங்கு வகித்தது. இப்படிப்பட்ட துதிகளின் மத்தியில் நம் தேவன் வாசம் பண்ணுகிறார். ஆமென். அவன் வீழ்ந்து போன பின்னே, அவனுக்கு தேவனால் கொடுக்கப்பட்ட இசைத்தாலந்தையும் பூமிக்கு கொண்டு வந்தான். யாருக்கும் கொடுத்தை திரும்பி எடுக்கிற தேவன் நம் தேவன் அல்லவே! கொடுப்பதில் தான் நம் தேவன் வள்ளல். அல்லேலூயா! 1 யோ 3:12ன்படி பிசாசின் மகனான காயீனின் பரம்பரையில் வந்த யூபால் மூலம் பூமியிலே அந்த இசையை உட்புகுத்தினான். பிசாசு (ஆதி 4:21) தேவனை ஆராதிக்கப் பயன்படுத்திய இசை யை பிசாசானவன், ராக், பாப் என்ற பல இசைகளாகவும், காபரே டான்ஸ் போன்ற களியாட்டங்களுக்கு ஏற்றபடியாக வும் ஆக்கி, இசைக்கு மயங்கும் மனிதர் களை சினிமா போன்ற இசைகளில் மயங்க வைத்து மது, மாது, கொலை, கொள்ளை, விக்ரக ஆராதனை, களியாட்டம் போன்ற பாவங்களில் உலகத்தை மாற்றி விட்டான். இப்படிப்பட்ட மோசமான இசையால், இசைப் பாடல்களால் கெட்டுப் போனவர்கள் ஏராளம். கிறிஸ்தவ சபைப் பாடல்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் வஞ்சிக்கப் பட்டிருக்கிறார்கள். ஏசா 5:11-13; ஆமோஸ் 6:3-6; தானி 3:5 போன்ற வசனங்களை வாசித்தால் சாத்தான் எப்படியெல்லாம் தேவ னுக்கு விரோதமாய், பாவத்துக்கு நேராய் இசை மூலம் நடத்துகிறான் என்று அறிய லாம். நாமும் சபைகளில் இசையோடு கூட நடனமாடி துதிக்கிறோம். தாவீது அப்படித் தானே! (2 சாமு 6:20-23). இந்த ஆராத னையை கிண்டல் செய்த மீகாளுக்கு மகிமையாயிராமல் தாவீது அவளோடு சேராததால் வாழ்நாள் முழுவதும் அவள் பிள்ளையில்லாதிருந்தாள் என்பதையும் வாசித்து விட்டு, தாவீதுக்கும் மேலாய் அலங்கோலமாய் ஆடுவது. பாடுவது, இசைப்பது, சிரிப்பது, அழுவது, விசிலடிப்பது போன்றவை எல்லாம் சபைகளிலே நடக்கின்றன. இதுவும் பிசாசின் வேலையே! இதனால் தான் ஆராதனைக்கு இசை வேண்டாம் என்று சொல்கின்றார்களோ என நினைக்கிறேன்.
                          இசையை பரலோகில் உற்பவித்த தேவன், பூமியில் அதை நன்மைக்காகவே நடப்பிக்க சித்தம் கொண்டார். அதனால் தான் தாவீது இசைத்தான். அசுத்த ஆவி ஓடிற்று (1 சாமு 16:23). ஏழாம் நாள் எரிகோ கோட்டை விழுந்தது (யோசு 12,13,20) இசையினாலேயே யோசபாத் ராஜாவின் காலத்தில் மோவாபியர். அம்மோனியர் போன்ற எதிரிகள் வீழ்த்தப்பட்டனர் (2 நாளா 20:21,22) ஆக, பிசாசின் கிரியைகளை ஒழிக்க தேவன் இசையை பயன்படுத்தி யிருக்கிறார். இந்த இசை தேவன் தரும், தேவன் விரும்பும், தேவனுக்கு மகிமையான, வசனத்தோடு கூடிய பாடல்கள் நிறைந்ததாக (Spiritual Songs) இருந்திருக்கிறது. ஆமென். மட்டுமல்ல, இசையானது தேவ னைத் துதிக்க வேதத்தில் பயன்படுத்தப்பட்டது (2சாமு 6:5;1 நாளா 16:41,42:2 நாளா 7:6:29:25,26) கண்டிப்பாய் இசைத்து ஆராதிக்க வேண்டு மென்று தேவன், சங் 98:5;33:2,3; 82:2,3;108:1-02;150:3-5 போன்ற பல வசனங்களில் கற்பனையாய்க் கொடுத்திருக்கிறார். இந்தக் கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பாவி என்பது உண்மைதானே!
                          இப்படிச் சொன்னாலும் பழைய ஏற்பாட்டு முறைமைகளும், சட்டங்களும் நமக்குத் தேவையில்லை, புதிய ஏற்பாட்டில் இசையை ஆராதனைக்கு உபயோகிக்கலாம் என்ற கற்பனை உண்டா? என Church of Christ போன்ற சபையார் கேட்கின்றனர். பரலோகிலேயே துதிக்க இசையைத் தேவன் புகுத்தியிருக்க, அதற்கு விரோதமாய் பேசுவது பிசாசின் ஆவிதானே! சரி... அவர்கள் கேள்விப்படியே புதிய ஏற்பாட்டு 27 புத்தகங்களையும் பார்ப்போம். வெளி 5:8ல் 24 மூப்பர்கள் பரலோகிலேயே இசைக் கருவி வாசிக்கிறார்கள். 1,44,000 பேர் வாசிக்கிறார்கள். (வெளி 14:1-5) மகா உபவத்திரவ பரிசுத்தவான்கள் வாசிக்கிறார் கள். (வெளி 15:2) மட்டுமல்ல... மகிழ்ச்சி யாயிருந்தால் சங்கீதம் பாடு என்று யாக் 5:13 சொல்கின்றது. சங்கீதம் என்றாலே பாடலுடன் கூடிய இசை என்று பொருள். இதை சங்கீத வித்வான்களிடம் கேட்டாலே சொல்வார்கள். ஆங்கிலத்தில் சங்கீதம் என்பதை டள்ஹப்ம் என்று போடப்பட்டுள்ளது. எபிரேய மூலபாஷையில் மிஸ்ஜ்மோர் (Mizmour) என்று உள்ளது. இதன் பொருள் Instumental Music - A Poem set to notes - Psalm என்று உள்ளது. ஆக சங்கீதம் என்பது இசையோடு கூடிய பாடல் என அறிகிறோம். எபே 5:19; கொலோ 3:16 போன்ற வசனங்களை வாசித்தால், புத்தி சொல்ல, சங்கீதங்களினால் போதிக்க வேண்டும் என்று அறிகிறோம். கவலை வரும் போது, விடுதலைக்கு, சமாதானத் திற்கு, மகிழ்ச்சிக்கு இசையை, உபயோகிக் கலாம். இதை வாசிக்கும் தேவபிள்ளையே ! தெய்வீக இசையை தேவ வசனம் நிறைந்த பாடல்களோடு இணைந்து வாசியுங்கள்; கேளுங்கள். நமக்கும் இளைப்பாறுதலு ண்டு; மற்றவர்களையும் ஆத்ம ஆதாயம் செய்யலாம்; தேவனையும் மகிமைப்படுத்த லாம். ஆராதனையில் இசை தேவை என்ற விருப்பம், புதுசிருஷ்டியாய் (2 கொரி 5:17) மாறியிருக்கிற, மறுபடியும் வசனத்தினால் பரிசுத்த ஆவியைக் கொண்டு பிறந்த (யோ 3:3,5) ஆவியிலேயே, பரிசுத்த ஆவியைக் கொண்டு உருவாகட்டும்! அதற்காய் ஒப்புக்கொடுத்து செயல்படு! மற்றப்படி உன் அறிவாகிய ஆத்மா, மனம், உள்ளம், சிந்தனை இவைகளிலிருந்து உருவாகவே கூடாது; இது பிசாசால் தவறாய் வழி நடத்த ஏதுவாகும். 1கொரி6:12ன் படி எதற்கும் அடிமையாகாதே ! (Even to Music)
                          தானி 12:4ன்படி இந்த கடைசி காலத்தில் அறிவு பெருகிப்போனதால், பலருடைய கேள்விகள் நியாயமானதாய், தேவ நீதிக்கு ஏற்றதாய் இருப்பதில்லை. புதிய ஏற்பாட்டில், இசைத்து ஆராதனை செய்யலாம் என்று வசனம் உண்டா? என்பது ஒரு கேள்வி. பரலோகிலேயே இன்றும் இசை இருக்கிறது... என்றும், புதிய ஏற்பாட்டுசபைகளிலும் ஆதி அப்போஸ்தலர் காலத்திலேயே கைக்கொள்ளப்பட்டன என்றும், மேலே சொன்னபடி விளக்கினா லும் அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராய் இல்லை. அப்படிப்பட்டவர்களிடம் நாமும் சில கேள்விகள் கேட்கலாமா? (1) புதிய ஏற்பாட்டில் முழுக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்று வசனம் வெளிப்படையாக உள்ளதா? இல்லாத போது நாம் முழுக்கு ஞானஸ்நானம் கொடுக்கக்கூடாதா? (2) ஜெபமே ஜெயம் என்று புதிய ஏற்பாட்டில் வசனம் உண்டா? இல்லாத போது ஜெபமே ஜெயம் என்று சொல்லக்கூடாதா? (3) இரகசிய வருகை உண்டு என்று புதிய ஏற்பாட்டில் வசனம் இல்லையே பின் ஏன் அதைப் பிரசங்கிக்க வேண்டும்?(4) புதிய ஏற்பாட்டில் கருத்தர ங்கு நடத்த வேண்டும், உபவாசக்கூட்டம் வைக்க வேண்டும் என்றெல்லாம் வசனம் நேரிடை யாக உண்டா? பின் ஏன் இவைகள் செய்யப்படுகின்றன? இப்படி பல கேள்வி களை கேட்க முடியும். இவைகளுக் குப் பதில் நேரிடையாய் வசனம் ஏதும் இல்லா விட்டாலும் வேதவாக்கியங்களை தியானிக் கும் போது இவைகளுக்கான பதில்கள் கிடைத்துவிடும். அல்லேலூயா!
                          அப்போஸ்தலர்கள் அப்பம் பிட்டார்கள் என்றுதானிருக்கிறது. திராட்சை ரசம் பானம் பண்ணினார்கள் என்றில்லை. 1 கொரி 11ல் கூட இயேசு சொன்னதைத்தான் பவுல் சொல்கிறானே ஒழிய அப்போஸ்தலர்கள் செய்தார்கள் என்று இல்லை. அதனால் நாம் ரசம்பானம் பண்ண வேண்டாமா? அப்போஸ்தலர்கள், பிதாகுமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தார்கள் என்ற வசனம் இல்லாததால் நாமும் அப்படிக் கொடுக்க வேண்டாமா? அப்போஸ்தலர்கள் செய்தார்களா என்று பார்க்காமல் வேதத்தின் அடிப்படையில் சரியாய் இருந்தால் நாம் செய்யலாமே! தவறில்லையே! பவுல் மொட்டையடித்து பிராத்தனை பண்ணினான் என்பதால் நாமும் பண்ணலாமா? இயேசுவின் உபதே சமும், அப்போஸ்தலர்களின் உபதே சமும் தான் நாம் பின்பற்ற வேண்டி யது (மத் 28:20;ரோ6:17;யூதா17; அப்16:4). சமயம் கிடைக்கும் போதெல்லாம், தனியாகவோ, சகோதரர்களாகவோ, சபைகளில் மட்டு மல்ல, எங்கும் எல்லா இடங்களிலும் இசைத்துப் பாடி ஆராதிக்கலாம். கட்டிடமல்ல சபை ; 2,3 பேர் இயேசுவின் நாமத்தினால் கூடியுள்ள இடமெல்லாம் சபைதான். சபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்.
                          இதை வாசிக்கும் தேவபிள்ளையே! தேவநாமமகிமைக்காய், தேவன் விரும்புகிற படி இசையோடு ஆராதிப்போம்! வசனம் வெறுப்பதை நாமும் வெறுப்போம்! இயேசு சீக்கிரம் வருகிறார்! பரலோகமாதிரியை இங்கேயே கைக்கொண்டு தேறுவோம்! ஆமென்!


பழிவாங்கும் யோவாபைப்போல கிறிஸ்தவன் இருக்கலாமா? 

               தாவீதின் சகோதரியாகிய செருயாவின் மூத்த மகன் யோவாப், தாவீது எப்ரோனில் ராஜாவானபோது அவனிடம் வந்து சேர்ந்தான். எபூசியரை இவன் முறியடித்த போது, தாவீது இவனை இராணுவத் தலைவனாக்கினான். தாவீதின் நாளெல்லாம் சேனாதிபதியாயிருந்து யுத்தங்களை நடத்தினான். ராஜாங்க விஷயங்களில் ஆலோசனைக் காôரனாயுமிருந்தான். இப்படிப்பட்ட நல்லமாவீரன் யோவாபினிடத் திலும் பழிவாங்கும் தன்மை புரையோடிக் கிடந்தது. ஆதி முதல் இன்றுவரை தேவன் நமக்குக் கொடுக்கும் புத்திமதி - அறிவுரை - என்னவென்றால் பழிவாங்குவதும் பதிலளிப்பதும் தனக்கு உரியது (உபா 32:35) என்பதாகும். தேவனுக்குரிய அதிகாரத்தை அவர் கையளிக்காமல் (delegation) நாமே எடுத்துக்கொண்டு செயல்படுவது தேவ துரோகம், மகாபாவம். கர்த்தர் சொல்கிறார்:- "உன்னைத் தொடு கிறவன் என் கண்ணின் கருவிழியைத் தொடுகின்றான்''(சக 2:8) நம் தேவன் நம் மேல் எவ்வளவு அன்பும் ஐக்கியமும் வைத்திருக்கிறார் பார்த்தீர்களா? இதை விசுவாசிக்கிற எவனும், பதிலுக்குப்பதில் செய்யவே மாட்டான்; கர்த்தர் மேல் பாரத்தை வைக்காமல் கலங்கித் தவிக்கமாட்டான். கிருபையின் தேவன் ரோ 12:19ல் சொல்வதைப் பாருங்கள். "'நீங்கள் பழி வாங்காமல், கோபாக்கினைக்கு இடங் கொடுங்கள்''. எவன் நமக்கு விரோதமாய் அநியாயமாய் - அபாண்டமாய் - செயல் படுகின்றானோ அவன்மேல் கோபாக்கினை தேவன் மூலமாய் விழ நாம் இடங்கொடுக்க தேவன் விரும்புகிறார். இது தேவன் செய்யப் போகும் நியாயத்தீர்ப்பு.  ஒருவேளை நியாயத்தீர்ப்புக்கு முன்பே அவனுக்குள் மனமாற்றம் உண்டானால், நம்முடைய பழிவாங்கும் காரியம் அதற்கு தடையா யிருந்து, தேவனுடைய ராஜ்யத்தில் ஒருவன் சேர்வதை தடுத்து விடும் அல்லவா. ""நமது மனமாற்றம்; நமது இரட்சிப்பு'' இதற்காகத் தானே தன் ஜீவனையே தேவன் தந்தார்! என்னே அவரது அன்பு! (ரோ 5:8)
                ஒருமுறை ஒரு யுத்தத்தின்போது, சவுலின் தளபதி அப்னேர், யோவாபின் தம்பி ஆசகேல் என்பவனை கொன்று போட்டான் (2சாமு2:23). இதனால் பழிவாங்கும் எண்ணம் யோவாபுக்குள் வளர்ந்தது. அதற்கான காலத்தையும் நேரத்தையும் பார்த்துக்கொண்டிருந்தான். சவுல்மரித்தபின் சவுலின் மகன் இஸ்போசேத்தை தாவீதுக்கு எதிராய் ராஜாவாக்கி மகிழ்ந்த தளபதி அப்பேனர் (2 சாமு 2:8,9) அந்தராஜாவின் மேல் ஏற்பட்ட மனத் தாங்கலால், தாவீதோடு ஐக்கியமாக வந்தான், தாவீதும் சந்தோசமாய் ஏற்றுக் கொண்டு விருந்து வைத்து அனுப்பினான். விஷயமறிந்த யோவாப், தாவீதுக்கு தெரியாமல் அப்னேரை ஆள்விட்டு அழைத்து வந்து, தன்தம்பியின் இரத்தப் பழியை வாங்க, அவனை வயிற்றில் குத்திக் கொன்றான் (2சாமு3:27). தாவீதோ மனங்கலங்கி அழுதான்.
                தாவீதின் மகன் அப்சலோம், தன் சகோதரி தாமாரை கற்பழித்த தன் சகோதரன் அம்னோனை கொன்று போட்டு, ராஜா தாவீதுக்குப் பயந்து ஓடிப் போய் விட்டான். யோவாபின் முயற்சியால் அப்சலோம் எருசலேம் வந்தும், 2 வருஷம் தாவீதை அப்சலேம் காண முடியவில்லை. யோவாபின் மூலமாய் தாவீதை காண முடிவெடுத்து 2 முறை யோவாபை அழைத்து வர ஆள் அனுப்பியும் வராத தால், யோவாபின் வாற்கோதுமை நிலத்தை அப்சலோம் தீக்கிரை யாக்கினான் (2சாமு 15:30). அதற்குப்பின் யோவாப் அப்ச லோமையும் தாவீதையும் சந்திக்க வைத்தான். அப்ச லோமோ தாவீதுக்கு விரோதமாய் ஆள் சேர்த்து, ராஜாவாக எத்தனித்து தாவீதை கொல்ல வகை தேடிய காலத்தில், அமாசா என்பவனை யோவா புக்கு பதிலாக இராணுவத் தலைவனாக் கினான் அப்ச லோம். இதனாலும், வாற் கோதுமை தோட்டம் அழிக்கப்பட்டதாலும் பழிவாங்கும் பிசாசின் எண்ணம் யோவாபுக் குள் வளர்ந்தது. அப்சலோமின் கூட்டத்திற் கும் தாவீதின் மக்களுக்கும் யுத்தம் நடந்தாலும் அப்சலோமை உயிரோடு கொண்டு வரவே தாவீது யோவாபிடம் வேண்டினான். அப்சலோம் ஒரு கர்வாலி மரத்தில் தலைமாட்டித் தொங்கிக் கொண்டிருந்த போது, யோவாப் தாவீதின் வேண்டு தலையும் பொருட்படுத்தாமல் அவனைக் கொன்று போட்டு தன் பழிவாங்குதல் படலத்தை நிறைவேற்றிக் கொண்டான். (2ராஜா 18:14,15) அன்பின் தேவனின் இருதயத்திற்கு ஏற்ற தாவீது, அப்சலோமின் மரணத்தை எண்ணி கலங்கினான்.
               சேபா என்பவன் தாவீதுக்கு எதிராய் ராஜாவாய் எழும்பிய போது, ஆலோசனைக் காய் இஸ்ரவேலின் பிரபுக்களை தளபதி அமாசா மூலம் தாவீது வரச்சொல்லி அனுப்பியும் 2 நாளைக்குள்ளே அமாசா வராத போது, அவனை நேரிலே கண்டு சுகமாயிருக்கிறாயா என்று கேட்டுக் கொண்டே அமாசா வை கொன்று பழி தீர்த்துக் கொண்டான். (2சாமு20:9,10) மட்டுமல்ல... சாலமோனுக்கு வரவேண்டிய ராஜ்ய பாரத்தை தாவீதின் மகன் அதோ னியா எடுத்துக் கொள்ள முயலும் விஷயத் திலும் யோவாப் உதவி செய்தான் (1ராஜா1:7) கூடவே இருந்து, உத்தமனாய் நடந்து, தாவீதுக்கு தெரியாமலே, பழிவாங்கும் தன்மையால், குணத்தால், அப்னேர், அப்சலோம், அமாசாவைக் கொன்றதையும், அதோனியா ராஜாவாக வர உதவியதையும் தாவீது உணர்ந்து சாகும்போது, யோவாபை கொன்று போட வேண்டும் என்று சால மோனிடம் அறிவுரை சொன்னான் (1ராஜா2:5,6) கர்த்தரின் பழிவாங்கும் செயலை யோவாப் எடுத்துக் கொண்டதால், தாவீது சொன்ன படியே சாலமோன் அவனை கொன்று போட்டான் (1ராஜா2)
                இதை வாசிக்கும் தேவ பிள்ளையே! நீ நல்ல உண்மையும் உத்தமுமானவனாய் இருக்கலாம்; உன் எஜமானுக்காய் உயிரை யும் கொடுக்கலாம்; ஆனால் பழிக்குப் பழிவாங்கும் தன்மை மட்டும் உன்னி டம் இருந்தால் நீ தேவனுடைய வார்த் தைக்கு விரோதியாயிருக்கிறாய், யோவாபுக்கு வந்த பொல்லாத முடிவே வந்து சேரும். எவ்வளவு பெரிய எதிரியானாலும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள், ஆசீர்வதிக்க வேண்டியதே யன்றி சபியாதிருங்கள். கூடுமானால் உங்களாலான மட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாய் இருங்கள். பழிவாங்குதல் கர்த்தருக்குரியது, அவரே பதில் செய்வார், நீங்கள் பழிவாங்காமல் கோபாக்கினைக்கு இடங் கொடுங்கள் (ரோ12:14-21) தீமையி னாலே நீங்கள் யோவாபைப் போல் வெல்லப்படாமல், தீமையை நன்மை யினாலே வெல்லுங்கள்! ஆமென்!


கிறிஸ்தவன் ஒவ்வொரு நாளும் பாவமன்னிப்பு பெற வேண்டுமா?

                 யார் கிறிஸ்தவன்? சீஷர்கள்தான் கிறிஸ்தவர்கள் (அப் 11:26). இயேசுவின் வார்த்தையைப் பின்பற்றுகிறவர்கள் சீஷர்கள் (ஊர்ப்ப்ர்ஜ்ங்ழ்ள்). எந்த வார்த்தை யை? அநேக வார்த்தைகள் இருந்தாலும், அவரை முதன் முதலாய் பின்பற்றுகிறவன் அவரின் மரணத்தையும் உயிர்த்தெழுத லையும் விசுவாசித்து, ""இவரே பாவம், சாபம், பிசாசு ஆகியவைகளிலிருந்து விடுதலை தரும் இரட்சகர், இவராலே பரலோகம் நமக்குச் சொந்தம் என்று கூறும் வார்த்தைகளை விசுவாசிப்பான்'' (ரோ 10:9,10; யோ 3:3,5;1 பேது 1:23, யாக் 1:18;1 கொரி 6:11) மொத்தத்தில் இரட்சிக்கப் பட்டவன்தான் கிறிஸ்தவ சபையைச் சார்ந்தவன் (அப் 2:47) இரட்சிக்கப்படும் போது - மறுபிறப்படையும்போது - பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்று நீதிமான் என்று அழைக்கப்படுகின்றான். அல்லேலூ யா! எந்த பாவத்திற்கான மன்னிப்பை பெறுகிறான்? நம் எல்லாருக்கும் தெரிந்தபடி பொய், களவு, விபச்சாரம், கொலை, இச்சை, லஞ்சம், லாவண்யம் போன்றவைதான் பாவம். ஆனால் இதற்கு மேலே ஒரு பிரதான பாவம் ஒன்று உண்டு. அதுதான் இயேசுவை விசுவாசித்து ஏற்றுக் கொள்ளப் படாதது (யோ 16:8,9) இந்த ஒரே பாவத்தால் தான் மனிதகுலமே மேலே சொல்லப்பட்ட அத்தனைபாவங்களையும் செய்கிறது. இந்த ஒரு பாவத்தின் மன்னிப்பை பெற்று விட்டாலே மற்ற எல்லாப் பாவங்களி லிருந்தும் ஆட்டோமேட்டிக்காக விடுதலை கிடைத்துவிடும், ஆரம்பத்தில் இரட்சிப்புக்குள் வரும் போது, ""நான் இயேசுவை விசு வாசிக்காத பாவி, அதனாலே அநே பாவங்களை என் வாழ்வில் செய்தேன் என்று ஒவ்வொருவனும் ஒப்புரவா கிறான்''. மற்றப்படி அதுவரை நாம் செய்த அநேக பாவங்களை ஒவ்வொன்றாய் ஒன்று விடாமல் அறிக்கை செய்யவே முடியாது. தேவனும் அப்படி அறிக்கை செய்ய கேட்கவில்லை.
                 இயேசுவை விசுவாசிக்காத தலையாய பாவத்திலிருந்து விடுதலையாகி மற்ற எல்லாப்பாவங்களும் இந்த விடுதலையால் கழுவப்பட்டபடியால், நீதிமானாய் ஆனவன், கிரியையினால் அல்ல, விசுவாசத்தினாலும் தேவ கிருபையாலுமே நீதிமான். நீதிமா னென்ற பட்டம் நீதிமானாய் வாழ்வ தால் அல்ல, நீதிமானாய், பட்டத்தின் படி வாழ்ந்து சாட்சியாயிருக்க வேண் டும் என்பதற்காகத் தான். இந்த நீதிமான் மாமிசம், பாவம், பிசாசு என்கிற பொல்லாத உலகில் வாழ்வதால், அறிந்தோ அறியாம லோ மற்ற உலகப்பாவங்களை செய்ய வாய்ப்பு உண்டு. மற்றப்படி, இயேசுவை ஏற்றுக் கொள்ளாத பிரதான பாவத்தை அவன் மறுபடியும் செய்யவே முடியாது; அப்படி செய்து விட்டால் அவன் மறுபிறப்பை - இரட்சிப்பை - கிறிஸ்தவன் என்ற பெயரை இழக்கிறான். அவன் மறுபடியும் புதுப்பிக்கப் படுகிறது கூடாத காரியம் (எபி6:6) ஆக இரட்சிக்கப்பட்டு கிறிஸ்தவன் என்று சொல் பவன், பிரதான பாவம் அல்லாத மற்றப் பாவங்களை செய்ய வாய்ப்புண்டு. நம் தேவன் சர்வாதிகாரி அல்ல, நமக்கு சுயாதீனத்தையே கொடுத்திருக்கிறார். இருதயமாகிய ஆவியிலே புதுசிருஷ்டி யானவன், தினந்தோறும் தன் ஆத்மா-சிந்தனை-உணர்வு-அறிவு-மனம்- போன்ற வற்றில் தினந்தோறும் மறுரூபமாக வேண்டும் (ரோ12:2;யாக்1:21) அப்படி மறுரூபமாக்கத்தான் சபையும், சபை கூடுதலும், சபையிலே 5 விதமான ஊழியங் களும் உள்ளன. (எபே 4:11-13). இயேசு கிறிஸ்து வரும் போது நம் ஆவி, ஆத்மா, சரீரம் மூன்றிலும் குற்றமற்றவர் களாய் இருக்க வேண்டும். (1தெச5:23) வேதம் சொல்கிறது. தேவனால் பிறந்த எவனும் பாவத்தில் நிலைத்திரான்; தரித்திரான் (1யோ3:9) அப்படியானால் பாவம் செய் வான்; ஆனாலும் அதிலிருந்து விடுதலை யாகி தினந்தோறும் மறுரூபமாவான்.
                 இப்படி விடுதலையாவதற்கான வழி தான் பாவ மன்னிப்பை பெறுவதாகும். இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவன் பாவ மன்னிப்பு பெறுவது எப்படி? 1 யோ 1 : 8-10ன் படி நம்முடைய பாவங்களை ஒவ்வொன்றாய் அறிக்கையிட்டு அதை விட்டுவிடுவேன் என்று உறுதியளித்தால் எல்லாப் பாவங் களுக்கும் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படல் கிடைக்கும். நம் தேவனால் மன்னிக்கப்படக் கூடாத பாவங்கள் ஒன்றுமே இல்லை. இந்த மன்னிப்பை எப்போது பெற வேண்டும்? எப்பொழுதெல்லாம் அறிந்தோ, அறியாமலோ தேவ வார்த்தைக்கு விரோதமாய் பாவம் செய்கிறோமோ அப்பொழுதெல்லாம். நேரமும் நினைவும் ஒத்துவரவில்லை என்றால் இரவில் படுக்கும் போதாவது அறிக்கையிட்டு பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு காலமோ நேரமோ தேவை இல்லை. பெரும்பாலும் இயந்திரம் போல பணியாற்றும் மனிதன் அப்போ தைக்கப் போது மன்னிப்பு பெறுவது இயலாமற் போகலாம். இயலாமற்போக வாய்ப்புண்டு. அதனால் தான் சபை கூடிவரும் போது பாவ அறிக்கை செய்து பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற வேண்டும் என்ற நியதி உண்டு. இது வாரம் ஒரு முறையோ, தினமுமோ இருக்கலாம். இயேசுவாகிய வார்த்தையால் விசுவாசித்து பிறந்த கிறிஸ்தவன், அதே வார்த்தையால் அனுதினமும் கழுவப்படுகின்றான். பூரண புருஷராய் மாறுகிறான். வருகைக்கு ஆயத்தமாகிறான்.
                 இப்படி பாவமன்னிப்பை பெறுவதைத் தான் ""வாராவாரம் சர்ச்சுக்குப் போய் பாவமன்னிப்பு பெற்று விட்டு, பின் தேவனுக்கு விரோதமாய் பாவஞ் செய்கிறான்'' என்று உலகத்தார் கிண்டல் பண்ணுகின்றார்கள். இந்த நிலை ஏன்? மன்னிப்பு பெற்ற பாவத்தை மீண்டும் செய்வ தால் தானே! ஏன் மீண்டும் செய்கிறான்? தேவனுடைய வித்தாகிய வசனம் இருதய த்தில் இருப்பதை அப்போதைக் கப்போது மறந்து பிசாசின் பக்கம் செல்வதால். இந்த நிலை நீடிக்க, நீடிக்க, நம்மை பற்றிய புறஜாதியாரின் கணிப்பு சரியாகி விடும்; கிறிஸ்தவன் என்ற பெயர் சூட்டியிருப்பது வீணாய்ப்போம். எனவே தான் மலைப் பிரசங்கத்தில் இயேசு சொன்னபடி, இருதயமாகிய ஆவியிலே யே பாவம் உருவாகும் போதே அபார்ஷன் பண்ணிவிட்டால் சரீரத்தில் வெளிப்படவழி இல்லை அல்லவா! (மத் 5:28) எனவே, பாவ அறிக்கையை சமயம் கிடைக்கும் போதெல்லாம் செய்யக் கற்றுக் கொண்டு, பூரணப்புருஷராவோம்; வருகை யில் இணைந்திடுவோம்.
                 இதை வாசிக்கும் தேவபிள்ளை யே! இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவன் பாவ மில்லை என்று சொன்னால் அவனுக்குள் சத்திய மாகிய இயேசு இல்லை (1 யோ 1:8) பாவம் செய்கிறவன் அப்போதைக்கப் போதோ, சபையிலோ பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்று பூரணகிறிஸ்தவனாக மாற வேண்டும். மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகி, இயேசுகிறிஸ்துவின் வருகை யில் இணûந்திடுவோம்! ஆமென்!
(குறிப்பு : இந்த பாவம் இயேசுவை ஏற்றுக் கொள்ளாத பாவம் அல்ல என்று முந்தி அறிக! உலகப் பாவம் பெருகப் பெருக, ஒரு நாள் இரட்சிப்பையே இழந்து, பிரதானப் பாவத்தையே செய்ய நேரிடும் என்பதையும் அறிக)


நம் கண்ணீர் பரலோகத்தில்தான் துடைக்கப்படுமா?
          நிறைய கிறிஸ்தவர்களின் உள்ளத் திலே ""இந்த உலக வாழ்க்கை கண்ணீரும் கவலையும் தான், பரலோகில்தான் கண்ணீர் மாறும்'' என்று எண்ணிக் கொண்டு கஷ்டத்தின் மத்தியிலே தங்களைத் தாங்களே தேற்றிக் கொள்கிறார்கள். பாவம், அறியாமை யினாலே தேவ ஜனங்கள் சங்காரம் ஆகிறார்கள் (ஓசி4:6) உலகத்தில் உபத்திரவம் உண்டு. உண்மைதான். ஆனால் ""திடன் கொள்ளுங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன்'' (யோ16:33) என்று சொன்ன தேவனின் ஆறுதல் வார்த்தையை ஏன் மறக்கிறார்கள். தேவன் உனக்காகத்தானே உலகத்தை ஜெயித்தார். பின்னே ஏன் உனக்கு கண்ணீர் ? விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண மாட்டாயா? (யோ 11:40) கெட்ட குமாரன் திரும்பி தன் அப்பாவிடம் வந்த பின்னும், முன்பு போல கண்ணீ ரோடும், கவலையோடும் இருந்தானா? வந்த அன்றே அவனுக்கு உயர்ந்த வஸ்திரம்; கைக்கு மோதிரம்; காலுக்கு பாதரட்சை; கொழுத்த கன்று; ராஜ உபசரிப்பு (லூக் 25:22,23) அப்படி யானால் ராஜாதி ராஜா வீட்டுப் பிள்ளை ஏன் கலங்க வேண்டும். கலங்காதே! திகையாதே என்று தேவன் சொன்ன வார்த்தையை விசுவாசிக்க வில்லையா? இயேசு தன்னுடைய தேவ சமாதானத் தையே உனக்கு வைத்து விட்டுப் போயிருக் கிறாரே மறந்து போனாயா?
""மேகங்கள் நடுவினிலே என் நேசர் வரப் போகிறார்.
கரம்பிடித்து அழைத்துச் செல்வார், இயேசுகண்ணீரெல்லாம் துடைப்பார்''
என்ற பாட்டை வைத்து, வருகைக்குப்பின் தான் கண்ணீர் மாறும் என்று நினைக்கி றாயா? அதே சகோ. பெர்க்மான்ஸ் பாடிய
 ""கடன் தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்
 கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார்''
    என்ற பாட்டின் அர்த்தமென்ன? முன்னுக் குப் பின் முரணாய் அவர் பாடுவாரா? இல்லையென்றால் அதன் பொருள் என்ன? இயேசு உன்னோடே இருக்கிறார். உன் கடன், வியாதி, பாவம், சாபம் எல்லாம் அவர் நீக்கி இவ்வுலகிலே யே கண்ணீர்கள் துடைக்கிறார். அப்படி யென்றால் பரலோகில் துடைக்கும் கண்ணீர் எது? வியாதியோடு இருப்பவ னுக்கு பரலோகில் போய்தான் வியாதி மாறி கண்ணீர் தீருமா? இல்லை. இல்லை... பூலோகிலே சிலுவையிலே நம் எல்லா ருடைய கண்ணீருக்கும் முற்றுப் புள்ளி வைத்து விட்டார். வெளி 7:9-17ஐ வாசியுங்கள். வெள்ளை அங்கி தரித்து, குருத்தோலை பிடித்து, பரலோக சிங்காச னத்தில் நிற்கும் மிகுந்த உபத்திரவத்தி லிருந்து பரலோகிற்கு இரத்த சாட்சியாய் மரித்தவர் களின் கண்ணீரை தேவன் துடைப்பார். ஏன் அவர்களுக்கு கண்ணீர்? இரத்த சாட்சியாய் கூட மரிக்க வேண்டிய கட்டாய மென்ன? நீயும் நானும் மனம் திரும்பி பாவ மன்னிப்பைப் பெற்று இயேசு வின் பிள்ளையாய் வசனப்படி ஜீவிக்கும்படி வழி நடத்த தேவனால் அனுப்பப்பட்ட ஊழியக்காரர்களாகிய இவர்கள், உனக் காகவும் எனக்காவும் தானே கண்ணீர் விட்டு கதறியிருப்பார்கள்; அதனால்தானே ஊழியத் தில் இரத்த சாட்சியாய் மரித்திருப் பார்கள். அவர்கள் பரலோகிலே உன்னை யும் என்னையும் கண்டு ஆனந்த மடை வார்களே! அப்போது தான் அவர்கள் கண்ணீர் துடைக்கப்படும். இப்படியாய் நீயும் உன் நண்பர்களுக்காய், உறவினர் களுக்காய் தினமும் அழுதால், அதன் பலனை பரலோகில் நீ காண்பாய், எதிர் பாராதவர்கள் பரலோகில் இருக்கக் கண்டு நீ மகிழ்வாய். உன் கண்ணீ ரெல்லாம் துடைக்கப்படுகிறது. மற்றபடி உன் உலக ரீதியான கண்ணீரெல்லாம் இங்கே யே துடைக்கப்படும்.