ரெத்தினம்,மணப்பாறை
(1) இரட்சிப்புக்கான அன்னியபாஷைவேறு, ஆவியானவரின் வரத்தினால் பேசும் அன்னியபாஷை வேறு என்று சொல்கிறீர். வேத ஆதாரம் தரவும். அர்த்த மில்லாமல் பாஷை இல்லையே (1கொரி 14:10)
Answer:
அப்படி நான் எங்கும் சொன்னதாகத் தெரியவில்லை. பரிசுத்த ஆவியைப் பெற்ற தற்கு அடையாளமான அந்நிய பாஷை வேறு, வரமாகிய அந்நிய பாஷை வேறு என்றுதான் சொல்லியிருக்கிறேன். வரமாகிய அந்நியபாஷை விசுவாசிகளுக்கு அடை யாளமாயிருக்கிறது. இது ஆத்ம ஆதாய த்திற்காய்; இதற்கு அர்த்தம் சொல்ல வேண்டும். (1கொரி 14:22,27,12:10) பரிசுத்த ஆவி பெற்றதற்கான அடையாள மாகிய அந்நியபாஷையானது, மனுஷரிடத் தில் பேசுவதல்ல தேவனிடத்தில் பேசுவது, பக்திவிருத்திக்கானது, அர்த்தம் சொல்லத் தேவையில்லை (1கொரி 4: 2,4) இது குறித்த 2 உதாரணங்களை அப் 10:44-66;19:6ல் அறியலாம். இந்த பாஷை தனக் கும் தேவ னுக்கும் தெரியப் பேசுவ தாகும். (1 கொரி 14:28) அப் 2ல் பேசப்பட்ட அந்நிய பாஷை, இந்த 2 விதமான பாஷை களாகும். வரமாகிய அந்நியபாஷை ஆவி யானவர் தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்து கொடுப் பார். எல்லோருக்குமல்ல (1கொரி 12:11)

(2) நான் பிரமாணங்களை அழிக்க வர வில்லை என்று இயேசு சொல்லியும் அவ ரோடு சிலுவையில் பிரமாணங்களும் மரி த்து விட்டது என்பதும், அன்னிய பாஷை யில் இரண்டு வகை என்பதும், இரகசிய மாய் இயேசு வருவார் என்பதும் - உமது சொந்த கற்பனைகளை உபதேசங் களாக போதித்து, வீணிலே ஆராதனை செய்வ தாகப்படவில்லையா? (மத் 15:9, மாற் 7:7)
Answer:
  படவில்லை. வேதவசனத்தின்படியான உண்மைச் சத்தியங்களை உலகுக்குக் காட்டிக் கொண்டிருக்கிறேன். அவ்வளவு தான். எனவே இன்றும் சொல்வேன், என்றும் சொல்வேன், (1) நியாயப் பிரமாணம் கிறிஸ்துவோடு சிலுவையில் ஒழிந்துவிட்டது. (2) அந்நியபாஷையில் இரண்டு வகை உண்டு. (3) இயேசு சபையை எடுத்துக் கொள்ள வருவது இரகசிய வருகையே. இவைகளைப்பற்றி ஆசிரியரின் ஆராய்ச்சிப் புத்தகங்களிலும், பழைய முழக்கங்களிலும் விளக்கமாய் எழுதப்பட்டிருக்கிறது. இன்னும் உங்களுக்கு என்னோடு இது குறித்து பகிர்ந்து கொள்ள வேண்டுமானால் 2வது சனி செமினாருக்கு வாருங்கள். அல்லது இடம் தேதி குறிப்பிட்டு என்னை அழையு ங்கள்; இலவசமாய் வந்து பேசத்தாயர்.

(3) தாவீது உடன்படிக்கைப் பெட்டியை கண்ட பரவசத்தில், தேவனுக்கு முன்பாக பக்தியுடன் மெய் மறந்து ஆடிப்பாடு வதும், உமது தேவ மனிதர்? தந்தை ? (மத் 23:9,10) பெர்க்மான்ஸ், மேடை களில், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில், நடன கோஷ்டிகளுடன் மெய் மறந்து ஆடிப் பாடுவதற்கும் உள்ள வேறுபாட்டை விளக்கவும். இது சரியானதா?
Answer: 
 சகோ. பெர்க்மான்ஸ் ஆடுவதை, உங்களைப்போல் நான் அதிகம் பார்த்த தில்லை. யார் எப்படி ஆடினாலும் தாவீ தைப் போல, பரவசப்பட்டு, பக்தியுடன் மெய்மறந்து ஆடுவது தவறல்ல, ஆடலாம்.

சரோஜா சத்தியநேசன், மும்பாய்
(1) நான் ஏசாவை வெறுத்து யாக்கோபை நேசித்தேன் என்பதன் விளக்கம் என்ன?
Answer: 
 வெறுத்தல் என்பது Actual Hate அல்ல ஏசாவை விட யாக்கோபை அதிகம் நேசிக் கிறேன் என்பதாகும். இது Idiom of preferenceஆகும். லூக்14:25-27ல் சொல்லப்பட்ட ""வெறுத்தலை'' தியானித் தால், புரிந்துவிடும். மேலும் ஏசா, வேசிக் கள்ளன், சீர்கெட்டவன் (எபி12:16) தேவ னுக்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லை என்று நாமறிவோம். மல் 1:1,2 ; ரோ 9:13 போன்ற வசனங்களில் ஏசா, யாக்கோபு என்று உள்ளதெல்லாம், அவர்களின் சந்ததி யாராகிய ஏதோமி யரையும், இஸ் ரேலரையும் குறிக்கிறது என அறிகிறோம்.

வினோத், வல்லவிளை
(1) சுனாமி இயற்கையால் வருவது என்று சொல்லக்கூடாதா?
ன்இயற்கையாய் காலங்கள் மாறுகின்றன, மழை, வெயில், காற்று வருகின்றது. இரவு பகல் வருகின்றது. இவைகளெல்லாம் Natural Law. இயற்கை விதிப்படி - தேவ னால் நடை முறைப்படுத்தப் படு கின்றன. இவைகள் எல்லாம் சாதாரணமாய் நடப்பவை. இப்படி நடப்பவை அசாதாரண மாய் மாறும் போது தான் புயல், சுனாமி போன்றவை வருகின்றன. நன்மையான வகைள் எல்லாம் தேவனால் நடக்கின்றன. (யாக்1:17) பொல்லாத வைகளெல்லாம் பிசாசால் நடக்கின்றன. (யாக்1:13, யோ10: 10) சுனாமி பொல்லாதது. இப்படிப்பட்ட காரியங்களால் தேவனும் தண்டனை கொடுப்பார். ஆனால் அது மற்றவர் களுக்கு எச்சரிப்பாய் இருக்க, முன்கூட்டியே தம்முடைய பிள்ளைகளுக்கு சொல்லி விட்டுச் செய்வார். (See நோவா கால ஜலப் பிரளயம், சோதோம் கொமாரா அழிப்பு)

(2) ஆதி 32:20க்கும் உபா 9:21க்கும் முரண்பாடு ஏன்?
Answer: 
 ஆதி32:20 அல்ல, யாத்32:20. இங்கே முரண்பாடு ஏதுமில்லை. பொடியாக்கி தண்ணீரில் தூவினான் என்று யாத் 32:20ல் உள்ளது. எங்கே உள்ள தண் ணீரில் தூவினான் என்பதை விளக்கும் படியாய் மலையிலிருந்து ஓடுகிற ஆற்று நீரில் என்று உபா9:21ல் உள்ளது. ஆற்றுத் தண்ணீரில் ஏன் தூவினான் என்று விளக்கும்படியாய் ""இஸ்ரேலர் எல்லாரும் (புருஷர் மாத்திரமே 6 லட்சம் பேர்) குடிக்கும்படியாய் என்று யாத்32:20ல் உள்ளது. ஆக ஒவ்வொரு வசனத்திலும் அதிகப் படியான கருத்துக்கள் சொல்லப் பட்டுள்ளன. அவ்வளவுதான்.

(3) யாக்கோபு தன் மாமனிடத்திலிருந்து அபகரித்தது ஏன்? (ஆதி 30:37-43)
Answer: 
 லாபானுக்கும், யாக்கோபுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் தனக்கு லாபம் கிடைக்கும் படியாய் தனக்கு தெரிந்த டெக்னிக்கை - வியூகத்தை யாக்கோபு பயன்படுத்தினா னேயல்லாமல், அபகரிக்கவில்லை.

(4) யூதா தன் மருமகளோடு தவறாக நடந்த போதும், யோசேப்பு கோத்திரத்தை இயேசு தேர்ந்தெடுக்காமல், யூதா கோத்திரத்தை தெரிந்தெடுத்தது ஏன்? (ஆதி 38:24-26)
Answer: 
 யாக்கோபு, தீர்க்கதரிசனமாய் யூதாவில் இயேசு பிறப்பார் என்றும், யூதா ஆளும் கோத்திரம் என்றும் ஆதி49:10ல் சொல்லியி ருக்கிறான். இதுபோல உள்ள தீர்க்கதரி சனங்களின்படி இயேசு யூதாவாக பிறந்தார். யூதாவழியில் வந்த தாவீ தோடு தேவன் (2சாமு7) செய்த உடன் படிக்கையின் படி, இயேசு யூதா கோத்திரத்தில் பிறந்தார். இஸ்ரேலில் பிறந்து ஆள (ராஜா வாய்) வேண்டிய ஆண்டவர் (எண் 24:17-19) அதிலுள்ள 12 கோத்திரங்களில், தாவீது ராஜா இருதயத்திற்கேற்றவனாய் இருந்த படியால் (அப்13:22) தாவீதின் குமாரனாய் ராஜாவாக பிறந்தார். லூக் 2ல் உள்ள வம்சாவழி அதற் காகவே சாலமோன் வழியாய் வந்திருக்கிறது. (மத்1-ல் நாத்தான் வழி) யூதாவைப் போல் பலர் இஸ்ரேல் கோத்திரங்களில் தவறு செய்திருக்கிறார்கள். தாவீது கூட அப்படித் தான். ஆனால் யூதாவும் தாவீதும் அந்த தவறுக்குப் பிறகு அதேபோல தவறு செய்ய வே இல்லை (ஆதி 38:2; 1 ராஜா 15:5) உல கில் எத்தனையோ கோத்திரங்கள் - ஜாதிகள் இருந்தும் இஸ்ரேலரைத் தெரிந்து கொண்டது போல, 12 கோத்திரத்திலும் யூதாவை தேவன் தெரிந்து கொண்டி ருக்கிறார். (""யூதா கோத்திரத்தில் இயேசு ஏன் பிறந்தார்?'' என்ற செய்தியை ஆசிரியரின் ''கருகலான சத்தியம்'' என்ற நூலில் வாசிக்கலாம்.)

(5) ஏது தரத்தில் யாக்கோபு தேவனோடு போராடி மேற்கொண்டான்? (ஆதி 32:28)
ன் ஆதி 32:24-32 முழுவதும் வாசித்தால், தேவன் மனித ரூபத்தில் (புருஷன் - ம்ஹய் ) வந்து, யாக்கோபோடு போராடியிருக்கிறார் என அறிகிறோம். ஏனெனில் மகிமையின் தேவனை ஒருவரும் நேருக்கு நேராய் காண முடியாதே ! (1 தீமோ 6:16, யாத் 33:20)

ஏ.வி.ராயன், தூத்துக்குடி
(1) 1கொரி 1:5:7ன் படி கொரிந்து சபையார் உபதேசத்தில் சம்பூர்ணமானவர்கள், தேவ கிருபை பெற்றவர்கள், வரங்களின் நிறை வானவர்கள். ஆனால் 6:7,8ன் படி வழக் காடுகிறவர்கள், குற்றம் செய்கிறவர்கள், அநியாயத்தை சகிக்கிறதில்லை, நஷ் டத்தை தாங்காதவர்கள். தற்போதைய சபையில் கிறிஸ்துவின் சரீர உறுப்புகளிலும் இம் முரண்பாடு காணப்படுகிறது. என்ன காரணம்?

Answer:  உபதேசம் இருந்தாலும் அதைக்கைக் கொள்ளாவிட்டால் பிரயோஜனமென்ன? தேவகிருபை இருந்தால் அதை விசுவாசிக்கி றவர்களுக்கு நன்மைகள் உண்டு, வரங்கள் இருந்தால் ஆத்ம ஆதாயம் பெருகலாம். மற்றப்படி, ஆவியின் கனி நீதியின் கனி இருந்தால் மாத்திரமே நீங்கள் சொல்கிற காரியங்கள் சபைகளில் இல்லாதிருக்கும், அப்படிப்பட்டவர்கள்தான் பரலோகத்திற்கு சொந்தக்காரர்கள்.

(2) வசனமுழக்கம்41-பக்கம் 4ல் சாத்தா னைக் கட்ட இயேசு ஒருவருக்கே அதி காரம் உண்டு என எழுதியிருக்கிறது. சாத்தா னின் வல்லமையைக் கட்ட விசுவாசிகளு க்கு அதிகாரமில்லையா? யோ14: 12ன் படி இயேசு சாத்தானைக் கட்ட முடியு மென் றால் அவரை விசுவாசிக்கிற சீஷன் அவ றைக் கட்ட முடியாதா?
Answer: 
 சாத்தானைக் கட்ட தேவன் இயேசுவுக்கு மாத்திரமே அதிகாரமுண்டு என்று வெளி 20:1,2ஐக்காட்டி அந்த முழக்கத்தில் எழுதியி ருக்கிறேன். மனிதனாய் வந்து வாழ்ந்த இயேசுசாத்தானைக்கட்டவேஇல்லை.எனவே யோ14:12ன் படி அவரின் விசுவாசி களாகிய நாமும் கட்ட முடியாது. சாத்தான் 1000வருட ஆட்சிக்கு முன்புதான் கட்டி அதள பாதா ளத்தில் போடப்படுவான். அதுவரைஅவனை யாரும் கட்ட முடியாது. அதி காரமுமில்லை. ஆனால் அவனுடைய வல்லமையையோ, கிரியைகளையோ நாம் கட் டிப்போடமுடியும். அதற்கேற்றப்படி நாமும் வல்ல மையைப் பெற்றாக வேண்டும் (See மத் 17:21)

(3) ஏசா 42:19ஐ விளக்கவும்
Answer: 
 இதிலே சொல்லப்பட்டவர்கள் இஸ்ரேலர் கள். இஸ்ரேல் மக்களின் நிலையை தேவன் விவரிக்கிறார்.
(4) 2கொரி1:21ன் படி நம்மை தேவன் ஏற்கெனவே அவரை விசுவாசிப்பதால் அபிஷேகம் செய்திருக்கிறார் என்பதை விசுவாசித்தால் நாம் அபிஷேகம் பெற்றி ருக்கிறோம். சரியா? அப்படி யானால் அபி ஷேகத்திற்கென்று தனியாக சபை யினைக் கூட்டி ஜெபிக்க வேண்டியதில் லையே !
ன் பல பெந்தகொஸ்தே சபைகளில் அபிஷேகம் பெறுவது என்றாலே பரிசுத்த ஆவியைப் பெறுவது என்று மட்டும் போதிக்கப்படுவதால், இதுபோன்ற கேள்வி கள் எழுகின்றன. அபிஷேகத்திலே பல உண்டு. 2 கொரி 1:21ல் சொல்லப்பட்டது இரட்சிப்பின் அபிஷேகம். இதைத்தான் 1 யோ 2:27ல் சொல்லப்பட்டுள்ளது. மற்றப் படி பரிசுத்த ஆவியைப் பெறுகிறதும் ஒரு வகையான அபிஷேகமே! அதற்காகத்தான் அதிகமாய் சபை கூட்டப்படுகிறது. ஆமென்.

(5) சில ஆவிக்குரிய சபைகளில் திரு விருந்து புசிக்கு முன் 1கொரி11:20-32 வசனங்களை போதகர், எல்லாரும் கேட்க வாசித்து அதன்பின் திருவிருந்து கொடு ப்பது, சிலர் பாவத்தோடு, இருக்கிறார்கள் என்ற விசுவாசத்தினால் தானே! எல்லோ ரும் திருவிருந்து புசிக்க பரிசுத்தமா யிருக்கிறார்கள் என ஏன் விசுவாசிக்க முடியவில்லை (ரோ 14:23)
Answer: 
 எல்லோரும் பாத்திரமாய் - பரிசுத்தமாய் பானம் பண்ணியிருந்தால், அநேகர் பல வீனமும், வியாதியுள்ளவர்களும் அநேகர் நித்திரையும் அடைந்திருக்க தேவை யில்லையே! (1கொரி11:29,30) எனவே தான் எல்லோரும் பாத்திரமாக வேண்டுமென்று 1கொரி11:20-32ஐ வாசிக்க வேண்டியிருக் கிறது. விசுவாசமின்றி செய்யும் கிரியை கள் பாவம் தானே! யூதாசைப் போல சிலர் திரு வருந்தில் பங்கு கொள்ள வாய்ப்புண்டே !

(6)இரட்சிக்கப்பட்டவர்களின் பாவங்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதனால் இறுதி தீர்ப்பில்தானாகமன்னிக்கப்படுமா?
Answer:
1யோ1:7-10 வசனப்படி இரட்சிக்கப் பட்டவர்களின் பாவங்கள் அப்போதைக்கப் போது மன்னிக்கப்படுகின்றன. இறுதி தீர்ப்புவரை மன்னிப்புக்காக காத்திருக்கத் தேவையில்லை.

(7) ஆவிக்குரிய விசுவாச சபைமக்கள், இதர ஆவிக்குரிய சபை நற்செய்தி கூட் டங்களில் கலந்து கொண்டு தெளிவு பெறு வது சரியா? ஒழுங்கை மீறும் செயலா?
Answer: 
 சங் 23:2ன் படி புல்லுள்ள (வசனமுள்ள - வசன ஆகாரமுள்ள) இடங்களில் போய் மேய்வது சரிதான்; தவறில்லை.

(8)ஒரு கத்தோலிக்க பங்கு குருவெளியிடும் நவம்பர் 2010 மாத இதழில்அயோத்திநில அலகாபாத் கோர்ட்தீர்ப்பின்போது,மக்கள் அமைதி காத்ததற்காக, நாம் கடவுளு க்கும், இறை தூதர் அல் லாவுக்கும் நன்றி சொல்வோம் என எழுதி யுள்ளார். இது பற்றி விசுவாச முழக் கத்தின் கருத்து என்ன?
Answer: 
 அயோத்தி நிலம் பற்றி நாங்கள் சிந்திக் கவே இல்லை. ஆனால் அது சம்பந்தமாய் சமாதானம் கெட்டுவிடக்கூடாது என்பது தான் எங்கள் விருப்பம். இந்த சமாதானம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதால் தான் வரும். அவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அதுதான் நிரந்தர மானது.

(9) சாத்தான் பெயரில் கோவில்கட்டி மக்கள் வழிபட மாநகராட்சி அனுமதி கொடுக்குமா?
Answer:
இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ கோவில்கள், சபை எல்லாமே மாநகராட்சி அனுமதி பெற் றா கட்டப்படுகின்றன? ஒன்றிரண்டைத் தவிர.

ஸ்டீபன் ஆரோக்கியதாஸ், திண்டுக்கல்.
(1) யாக்கோபின் மனைவியாகிய ராகேலின் கர்ப்பத்தை அடைத்தது யார்? (ஆதி29:31; 30:2,22) அவளுக்குத் தேவன் செவி கொடுத்து அவள்கர்ப்பம் தரிக்கும்படி செய்தார் (ஆதி 30:22) என்று வசனம் ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்? கர்த்தரோ அவள் (அன்னாள்) கர்ப்பத்தை அடைந்தி ருந்தார் என்று 1சாமு1:5-6ல் சொல்கிறதே, நீங்களோ, விசுவாச முழக்கம் நவ 10ல் கர்த்தர் கர்ப்பத்தை அடைப்பதில்லை என்று சொல்கிறீர்கள் எப்படி? விளக்கம் தேவை.
Answer: 
 இந்த இதழில் உள்ள ""வேத வார்த்தையும் தேவ சித்தமும்'' என்ற தலைப்பிலுள்ள செய்தியை தயவு செய்து தியானியுங்கள் ஆதி 30:2ல் கர்ப்பத்தை தேவன் அடைத்தார் என்று சொல்வது தேவனல்ல, யாக்கோபு தன் அறிவின்படி சொல்கிறான். 1 சாமு 1:5-6ல் கர்த்தர் கர்ப்பத்தை அடைத்திருந்தார் என்பது தேவனின் வார்த்தை என்றால், தேவன், ஆதாம் ஏவாளைப் படைத்த நோக்கம் வீணாகிறதல்லவா! ஆதி 1:28; மல் 2:15; ஏசா 66:9; சங் 113:9 போன்ற வேத வார்த்தைகள் தவறாகிவிடுகிறதல்லவா! எந்த வசனமும் நற்கருத்தில் ஜோடில்லா திராது என்பதை அறிந்து, தேவசித்தம் இன்னதென்று உணர்ந்து, வசனத்தை தியானியுங்கள், உண்மைசத்தியம்புரியும்.

பாஸ்கர், செங்கல்பட்டு
(1). Dr. ஜஸ்டின் பிரபாகரனின் ஆராய்ச்சி புத்தகங்கள் மற்றும் சி.டி. (பாடல் & செய்தி) எல்லாம் எங்கே கிடைக்கும்?
Answer:
பாஸ்டர் வாக்கர்ரூபன் (044-26343936) மற்றும் பாஸ்டர். ராஜசேகரன் (9894 563593, 04142277230) ஆகியோரை தொடர்பு கொள்ளுங்கள்.