ஒரே தேவன் இருவராய், மூவராய் ஒரே நேரத்தில்-ஒரே காரியத்தில்-ஒரே வசனத்தில் வெளிபட்டுள்ளரா?

                  தேவன் ஒருவரே என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை. ஒரே தேவன் மூன்று ஆள்தத்துவமாயிருக்கிறார் என்று ஒரு கூட்டமும், ஒரே தேவன் இரண்டு பேராய் இருக்கிறார் என்று ஒரு கூட்டமும், ஒரே தேவன் இரண்டு ஆள்வடிவில் வெளிப் பட்டார் என்று ஒரு கூட்டமும், ஒரே தேவன் ஒருவர்தான் என்று ஒரு கூட்டமும் கிறிஸ்தவ வட்டாரத்தில் பலவாறாய் கருத்துக்கள் நிலவி வருகின்றன. இதனால் உபதேச மாறுபாடுகள் உருவாகி, ஆவிக்குரிய சபை- கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்ட சபை- வளர்ந்து பெருக முடியாமல் நலிந்து போகின்றது. பவுல் அப்போஸ்தலன் சொல்கிறபடி, “இப்படி போதிக்கிற கூட்டங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும் படிக்கு மார்க்க பேதங்களும் உண்டாயிருக்க வேண்டும்” (1கொரி11:19) என்பதால், இந்தக் கடைசி காலத்தில், உத்தம போதகம்- ஆரோக்கியமான உபதேசம்-இன்னதென்று ஆவியானவர் விளக்குவாராக! வேத வசனத்தின் மூலமாய்த்தான் ஆவியானவர் விளக்குவார் என்று நாம் அறிந்திருக் கிறோம் (யோ16:13-15; 14:26). வேதத்தின் மூலமாய் எது உண்மையென்று பார்ப் போம் ! காதுள்ளவன் கேட்கக்கடவன். 
                  ஒரே நேரத்தில், ஒரே செயல்பாட்டில் ஒரே வசனத்திலே மூவர்:- (1) “பின்பு தேவன் (எர்க் -ஏலோகிம்-இரண்டிற்கும் மேற்பட்டவர்கள்-பன்மையில் ஒருமை) நமது சாயலாகவும், நமது ரூபத்தின் படியேயும் மனுஷனை உண்டாக்கு வோமாக” (ஆதி1:26) (2)”அப்பொழுது கர்த்தர் (கஞதஈ - தேவன்- எர்க் -ஏலோகிம்)......... நாம் இறங்கிப்போய் ஒருவர் பேசுவதை மற்றவர் அறியாத படிக்கு அங்கே அவர்கள் பாஷையை தாறுமா றாக்குவோம் என்றார்” (ஆதி11:7). (3)இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது, வானத்திலிருந்து பிதாவின் குரல்; பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல் இறங்கி வந்தார் (மத்3:16,17). (4)ஸ்தேவானைக் கல் எறிந்து கொல்லும்போது பரிசுத்த ஆவியினால் நிறைந்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலது பாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டான் (அப்7:55). (5)”பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர்; பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே. இம் மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்” (1யோ5:7). (6)”நான் பிதாவை வேண்டிக் கொள்ளுவேன், அப்பொழுது என்றைக்கும் உங்களுடனே இருக்கும் படிக்கு சத்திய ஆவியாகிய வேறெரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்” (யோ14:16). (7)”என் நாமத்தினால் பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக் குச் சொன்ன எல்லாவற்றையும் உங்க ளுக்கு நினைப்பூட்டுவார்” (யோ14:26). (8)”ஆகையால்..., பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து..,” (மத்28:19) (9) “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும்,பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும் உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக” (2கொரி13:14). (10)”கர்த்தராகிய தேவனு டைய ஆவியானவர் என்மேலிருக்கிறார். சிறுமைப்பட்டவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்க கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார்” (ஏசா61:1; லுôக்4:17-20). (11)”இப்போழுதோ கர்த்தராகிய ஆண்ட வரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார்” (ஏசா48:16). இன்னும் ஏராளம் சொல்லிக்கொண்டே போகலாம். வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்.
                  ஒரே நேரத்தில், ஒரே செயல்பாட்டில், ஒரே வசனத்திலே இருவர் :- (1)”ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக் கைக்கெள்ளுவான், அவனில் பிதா அன்பாயிருப்பார். நாங்கள் அவனி டத்தில் வந்து வாசம் பண்ணுவோம்” (யோ14:23). (2)”இரண்டு பேருடைய சாட்சி உண்மை என்று நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறதே. நான் என்னைக்குறித்து சாட்சி கொடுக்கிறவனாய் இருக்கிறேன். என்னை அனுப்பின பிதாவும் என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறார்” (யோ8:17,18). (3)”என் பிதா என்னை மகிமைப் படுத்து கிறவர், அவரை உங்கள் தேவ னென்று சொல்லுகிறீர்கள்” (யோ8:54). (4)”கர்த்த ரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்” (ஏசா53:10). (5)”நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக” (1கொரி1:3). (6) “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாய் இருப்பதை கொள் ளையாடினபொருளாக எண்ணாமல், தம்மைத் தாமே வெறுமை யாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்” (பிலி2:6,7). (7)”அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் கர்த்தருக்கும் அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங் களாயின” (வெளி11:15). (8)”குமாரனை நோக்கி தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்கு முள்ளது...  ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை  ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் பண்ணினார்” (எபி1:8,9). (9)”அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியா னவராலே வனாந்தரத்திற்கு கொண்டு போகப்பட்டார்” (மத்4:1). (10)வார்த்தையான தேவனை மனிதனாய்க் கருவாக வைத் தவர் ஆவியானவர் (மத்1:18; லுôக்1:35). (11)”இந்த சங்கதிகளைக் குறித்து நாங்கள் அவருக்கு சாட்சிகளாய் இருக்கிறோம். தேவன் தமக்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள்” (அப்5:32). (12)”உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென் றும் ...அறியீர்களா?” (1கொரி6:19). (13)”நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். நான் போகிறது உங்க ளுக்கு பிரயோஜன மாயிருக்கும். நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களி டத்தில் வாரார்” (யோ16:7). (14)”தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில்  அன்புகூர்ந்தார்” (யோ3:16). (15)”ஒருவன் பாவம் செய்வானானால் நீதிபராராய் இருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராய் இருக்கிறார்” (1யோ2:1). (16)”இவரோ பாவங்களுக்காக ஒரே பலியை செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து, இனித் தம்முடைய சத்துருக்களை தமது பாதபடியாக்கிப் போடும் வரைக்கும் காத்துக் கொண்டிருக்கிறார்” (எபி10:12,13; 1:13).இன்னும் ஏராளம் சொல்லிக் கொண்டே போகலாம். வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்.
                  இதை வாசிக்கும் தேவபிள்ளையே! ஒரே தேவன், பிதா,வார்த்தை, பரிசுத்த ஆவி என்ற மூன்று ஆள்தத்துவமாய் ஒரே நேரத்தில்-ஒரே காரியத்தில்- செயல் படுகிறார் என்று அறிகிறோமல்லவா! வார்த்தையாகிய தேவனும், பரிசுத்த ஆவியாகிய தேவனும் பூமிக்கு வந்து விட்டார்கள்; பிதாவாகிய தேவன்தான் இன்னும் வரவில்லை. 1000 வருட அரசாட்சிக்குப் பிறகு-வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புக்குப் பிறகு, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை கிறஸ்து ஒப்புக் கொடுப்பார் (1கொரி 15:24). அந்த ராஜ்யம் புதிய வானம் புதிய பூமியில் உருவாகும்போது பிதா பூமிக்கு வருவார். அப்போது தேவத்துவம்-திரித்துவம்-பழ்ண்ய்ண்ற்ஹ்- ஈங்ண்ற்ஹ் எல்லாமே எல்லாருக்கும் புரிந்துவிடும். ஆமென். நாமோ, மூவரும் ஒன்றாயிருப்பதை ஆவி யிலே விசுவாசிக்கிற நாமோ, இரகசிய வருகையில் எடுபட்டுப் போகும் போது பரலோகிலே கண்கூடாய் கண்டு மகிழப்போகிறோம். ஆமென்! அல்லே லுôயா! இதை விசுவாசிக்கிற-தியானிக்கிற-தேவ மனுஷனாய் நீயிருந்து இரகசிய வருகைக்கு ஆயத்தமாயிருக்கிறாயா? இயேசு சீக்கிரம் வருகிறார்! ஆயத்தமாகு!! ஆயத்தமாக்கு!!!

அதிசயங்கள் உன் வாழ்வில் நடக்குமா?
         அற்புதம் வேறு; அதிசயம் வேறு. அதிசயம் என்பது இயற்கைக்கு அப்பாற் பட்டு நடக்கும் காரியம். நன்ல்ங்ழ்ய்ஹற்ன்ழ்ஹப் ற்ட்ண்ய்ஞ்ள். பட்ண்ள் ண்ள் ள்ண்ஞ்ய்ள் ஹய்க் ஜ்ர்ய்க்ங்ழ்ள். “அதிசயம்” (ஏசா9:6; நியாயா 13:18) என்னும் நாமம் கொண்ட நம் தேவ னால் நடப்பது அதிசயம். கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதித்தால் அது அதிசயம்; மரித்தவன் உயிர்த்தெழுந்தால் அது அதிசயம். நாய் வாலை நிமிர்த்த முடியுமா? நம் தேவ னால் எல்லாம் கூடும்; அவரால் கூடாதது ஒன்றுமில்லை (லுôக்1:37). இதுவரைக்கும் உலகத்தில் நடக்காத, கேள்விப்படாத காரியங்களை எல்லாம் நடப்பிக்க வல்லவர் நம் ஆண்டவர். அல்லேலுôயா! குருடர் பார்ப் பெதும், செவிடர் கேட்பதும், ஊமையர் பேசு வதும் அற்புதம் (ஙண்ழ்ஹஸ்ரீப்ங்).அதிசயம்அதுவல்ல.
         “இல்லாதவைகளை இருக்கிறவைகள் போல் அழைக்கிறவர்” (ரோ4:17) நம் அதிசய தேவன். விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும் தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவரும் நம் அதிசய தேவன் (மத்25:24). “நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள்; மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் இந்தப் பள்ளத் தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும்” என்று கர்த்தர் சொல்லுகிறார் (2ராஜா3:17). இதுதான் நம் தேவன் செய்யும் அதிசயம். நம் வாழ்க்கையில் எத்தனையோ காரியங்கள் நடக்குமா என்ற கேள்விகள் ஏராளம் எழும்பலாம்; ஒன்றும் ஒன்றும் இரண்டு என்ற உலகநியதி மூன்று என்று ஆகுமா? உலக நியதி மாறாதோ? இப்படியாய் கேள்விகளோடே பதிலின்றி ஏமாற்றத்தோடு மரித்தவர்கள் ஏராளம்; ஏராளம். கன்னியின் வயிற்றில் இயேசுவைப் பிறக்க வைத்த ஆண்டவர் இன்றும் ஜீவிக்கிறாரே! கடல்மேல் நடந்தவர், கடலைப்பிளந்தவர், எரிகோவைத் தகர்த்தவர் நம் அதிசய தேவன் அல்லவா! உலக சட்டங் கள், உலக ஞானங்கள், உலக உபாயங்கள் எல்லாம் இந்தக் காரியம் முடியாது என்று சொல்லலாம்; உன்னைப் படைத்து, இரட்சித்த வரால் முடியாது என்ற வார்த்தையே இல்லை. அல்லேலுôயா! “நிலா நிலா ஓடிவா என்பது அன்றைய பாட்டியின் பாட்டு; அந்த நிலாவி லேயே அளவெடுத்துப் போடுகிறான் அதிசய பிளாட்டு” இது உலக   அறிவுக்கு வேண்டு மானால் அதிசயமாயி ருக்கலாம்; ஆனால் தேவன் நடத்தும் அதிசயமோ நம் புத்திக்கு எட்டாதது; நம்மால் நினைத்துப் பார்க்க முடியாதது. நம் தேவனின் அதிசயங்கள் உன் வாழ்வில்நடக்கஉனக்குத் தேவை வசனமுள்ள விசுவாசக் கிரியை. ஆமென்.
         (1)சீரிய ராஜா சமாரியாவை முற்றுகை போட்டதால் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பிள்ளையையே தின்கிற அளவுக்குப் பஞ்சம். இஸ்ரேல் ராஜா அனுப்பி வைத்த ஆளிடம், “நாளைக்கு காலையில் சமாரியாவிலே விலைவாசி தலைகீழாய் மாறிப்போகும்; செழிப்பு கொடி கட்டிப் பறக்கும்” என்று எலிசா கூறுகிறான். ராஜாவுக்கு கைலாகு கொடுக்கிற பிரதானி, “இதோ கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா?” என்றான். அதற்கு தேவனின் அதிசயத்தை விசுவாசித்த எலிசா, “உன்னு டைய கண்களினாலே அதைக் காண்பாய்; ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய்” என்றான். அன்று இரவு வந்து, காலை விடியப்போகிறது, சாப்பாட்டுக்கு இல்லாமல் வாடிய 4 குஷ்டரோகிகள், அதிகாலமே இருட்டோடே எழும்பி சீரிய ராணுவத்திற்குள் நுழைந்து ஏதாவது கிடைக்குமா என்று போனார்கள். அதிசயம் என்ன தெரியுமா? ஆண்டவர் சீரியரின் ராணுவத்திற்கு இரதங் களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா ராணுவத்தின் இரைச் சலையும் கேட்கப் பண்ணினதினால், ஏத்திய மற்றும் எகிப்திய ராஜாக்களின் உதவியோடு இஸ்ரேலின் ராஜா போருக்கு வருகிறான் என்று எண்ணி, தங்கள் பாளையத்தை அப்படியே விட்டுவிட்டு தங்கள் பிராணன் மாத்திரம் தப்பும்படி ஓடிப் போனார்கள். ஒவ்வொரு கூடாரத்திற் குள்ளும் குஷ்ட ரோகி கள் நுழைந்து வெள்ளி, பொன், வஸ்திரங் களை எடுத்துக்கொண்டு, அங்கு புசித்தும் குடித்தும் சந்தோஷித்தனர். அவர்கள் உள்ள த்திலும் தேவன் அதிசயத்தை செய்தார். அதனால் அவர்கள் பொழுது விடியு முன்னே, தாங்கள் கண்டனுபவித்த காரியங் களை ராஜாவுக்கு சொல்ல ஓடி வந்தனர். கேட்ட ராஜாவுக்கு விசுவாசம் வரவில்லை. ராஜாவின் ஊழியக் காரன் ஒருவன் சொôன்னபடி இரண்டு இரதங்களைக் கொண்டு சீரிய ராணுவத்தை தொடர்ந்தனர். சீரியரோ தங்கள் பொருட்களை எல்லாம், வழிஎல்லாம் இரைத்துப் போட்டுவிட்டு தீவிரித்து ஓடினர். இஸ்ரேல் ஜனங்கள் புறப்பட்டு, சீரியரின் பாளயத்தைக் கொள்ளையிட்டனர். என்னே அதிசயம்! எலிசா சொன்னபடியே அன்று காலையிலே விலைவாசி தலைகீழாய் மாறியது; செல்வம் செழித்தது இஸ்ரேலிலே. ராஜாவுக்கு கைலாகு கொடுக்கிற பிரதானி, ஒலிமுக வாசலிலே ஜனங்கள் நெருக்கி மிதித்ததினால் மாண்டு போனான் (2ராஜா 6:24-7:16). அதிசய தேவன் தன் பெயருக் கேற்றபடியே அதிசயங்களை இன்றும் காணச் செய்வார்! அது உன் கண்களுக்கு ஆச்சரிய மாயி ருக்கும்! அல்லேலுôயா! உனக்குத் தேவை வசனவிசுவாசக் கிரியை மட்டுமே! ஆமென்.
         (2) விசுவாசி சூனேமியாளை, 7 வருஷம் பஞ்சம் வருவதால், வேறு நாட்டுக்கு அனுப் புகிறான் எலிசா. அவளும் தேவ மனுஷனின் வார்த்தையை விசுவாசித்துப் போனாள். 7 ஆண்டுகளுக்குப்பிறகு திரும்பி வந்தவள், தன் வீடு, வயல், போன்றவை களைப் பெற்றுக் கொள்ள ராஜாவிடம் முறையிடச் சென்றாள். அங்கே என்ன அதிசயம் தெரியுமா? எலிசாவின் வேலைக் காரன் கேயாசியிடம், எலிசா செய்த அற்புதங்களைக் கேட்டுக் கொண்டிருந்தான் ராஜா. இவள்தான் அந்த ஸ்திரி என்று கேயாசி சொன்ன உடனே, ராஜா இவளிடத்திலும் விசாரித்தான். அவளுக்கு ஒரு பிரதானியை நியமித்து, அவளுக்கு உண் டான எல்லாவற் றையும், அவள் தேசத்தை விட்டுப்போன நாள்முதல் அன்று வரைக்கும் உண்டான அந்த வயலின் வருமானம் அனைத்தையும் அவளுக்குக் கிடைக்கும்படி செய்தான். இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 7 ஆண்டுகளாய் கர்த்தர் அவளைக் காப்பாற்றியது ஆச்சரியம்! கேயாசி, ராஜாவிடம் பேசிக்கொண்டிருந்தது அதிசயம்! அவள் நிலத்தையும் வருமானத் தையும் பெற்றுக் கொண்டது மகா அதிசயம்! உலகத்திற்கு அப்பாற்பட்ட காரியங்களைச் செய்கிற அதிசய தேவன் இன்றும் ஜீவிக்கிறார்! அல்லேலுôயா!
         இந்த அதிசய தேவன் 2011 ஆண்டு களுக்கு முன்னாலே கன்னியின் வயிற்றில் பிறந்தது அதிசயம்; சிலுவையிலேயே மரணத் தை ஜெயித்தது அதிசயம்; சொன்னபடியே 3ம்நாள் உயிர்த்தெழுந்தது அதிசயம்; அக்கிரமங்களினாலும் பாவங்களி னாலும் மரித்திருந்த நம்மை, அவரோடுகூட உயிர்ப் பித்து, தான் இன்னார் என்று காட்டியது அதிசயம். இந்த அதிசய தேவனை விசுவாசி! விசுவாசித்ததை அறிக்கையிடு! இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியம் உன் வாழ்வில் நடக்கும்! அல்லேலுôயா!
""காற்றை நாம் காணமாட்டோம்
மழையையும் பார்க்கமாட்டோம்
வாய்க்கால்கள் நிரப்பப்படும்- நம்ம
வாய்க்கால்கள் நிரப்பப்படும்” 
         இயேசுவின் பிள்ளைகள் நாங்கள் ; எப்போதும் மகிழ்ந்திருப்போம் !''
         விசுவாசிப்போம்! அறிக்கையிடுவோம்! பாடுவோம்! பொறுமையோடு காத்திருப் போம்! 
         அதிசய தேவன் அதிசயங்களை செய்தே தீருவார்! அல்லேலுôயா!
         இயேசு சீக்கிரம் வருகிறார்! ஆயத்த மாவோம்!! ஆயத்தமாக்குவோம்!!!

தற்கொலை  செய்யலாமா?

         வாழ்க்கையிலே தோல்விகள், தாங் கொண்ணாத் தொல்லைகள், நிம்மதியில்லா நேரங்கள், எதிர்காலமே சூன்யமாய்த் தோன்றும் சமயங்கள், தன்மானம் இழந்து தலைகாட்ட முடியா நிலைமைகள், தீராத வியாதிகள், திக்கற்ற தன்மைகள், பொருளாதார சிக்கல்கள், காதல் தோல்விகள், கடன் பிரச்சனைகள், காலமெ ல்லாம் கண்ணீர் மயங்கள்- இப்படிப்பட்ட நேரங்களில் இந்த உலக வாழ்வு எதற்கு என்று சொல்லி தற்கொலை செய்து கொள்பவர்கள் ஏராளம்; ஏராளம். தாங்கள் மாத்திரமல்ல; தங்கள் குடும்பத்தையே கொன்றுவிட்டு தாங்களும் மரிக்கிறவர்கள் ஏராளம். “வாழ வழியில்லை; வாழ்ந்தும் பயனில்லை” என்று உயிரை மாய்க்கிறார்கள். யாருக்கும் தொல்லையின்றி, இப்படி தற்கொலை செய்வது சரி என்றே பலருக்குப் படுகின்றது. இது குறித்து வேதம் என்ன சொல்கின்றது என்று பார்ப்போம். வேத வாக்கே தேவ வாக்கு. ஆமென்.
         மாசில்லா ஆட்டுக்குட்டியை காட்டிக் கொடுத்தேனே என்று கதறி, கிடைத்த வெள்ளிக்காசை ஆசாரியனிடம் வீசி எறிந்து விட்டு, செய்த குற்றத்திற்கு பிராயச் சித்தமாய் நான்று கொண்டு செத்தான் யூதாஸ். “மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார் உயிர் நீப்பின் மானம் வரின்” என்ற வள்ளுவரின் கருத்துப்படி மரித்துப்போனான். இந்த யூதாஸ்- அநீதத்தின் கூலியால் மரித்த யூதாஸ்- தனக்குரிய இடத்துக்குப் போனான் என்று வேதம் சொல்கின்றது (அப்1:24). ஆண்டவர் இயேசுவால் அப்போஸ் தலனாக்கப்பட்டவன்; ஆண்டவருக்கு பொருளாளராய் இருந்தவன்; அகால மரணத்தை தானே உண்டாக்கிக் கொண்ட தால் பாதாளம் போனான். எபி 11ல் இல்லாமல் போனான்; கேட்டின் மகனாகிய பாவமனுஷன் என்று அழைக்கப்பட்டான் (யோ17:12).
         தேவனால் முதன்முதலில் ராஜாவாய் அபிஷேகம் பண்ணப்பட்டவன் சவுல்; அவன் கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்ப்படியவில்லை; இரண்டகம் பண்ணினான்; முரட்டாட்டம் பண்ணினான் (1சாமு15:22-24). ராஜ அபிஷேகம் எடுபட்டுப் போயிற்று; ஆட் கொண்டிருந்த ஆவியானவர் நீங்கினார்; பொல்லாத ஆவியால் கலக்கப்பட்டான்; அஞ்சனக்காரியைத் தேடினான். பெலிஸ் தரிடம் தோல்வியைக் கண்டான். எதிரியால் சாவதைவிட தானே சாகலாம் என்று தற்கொலை செய்து மரித்தான் (1நாளா10:13). எபி 11ல் விசுவாசிகள் பட்டியலில் இடம் பெறாமல் போனான்.
         இதை வாசிக்கும் தேவ பிள்ளையே! தற்கொலை என்பது நரகத் தண்டனைக்கு உகந்த பாவம் என்று அறிகிறோம். அவன் உயிரை அவனே மாய்க்கிறான்; இதிலென்ன பாவம்? இது கேள்வி. மனுஷன் தேவனுடைய சாயலின்படியும் ரூபத்தின் படியும் உண்டாக் கப்பட்டவன். மனுஷனுடைய இரத்தத்தில்தான் மாம்ச உயிர் இருக்கிறது. இந்த இரத்தம் சிந்தப்பட்டால் (கொலையோ, தற்கொலையோ எப்படியோ?!) உயிர் போகிறது; மனிதன் மரிக்கிறான். இதனால் தேவன் வாஞ்சித்துப் படைத்த தேவ சாயல் இந்த பூமியில் இல்லாமல் போகிறது. இதனால் தேவனுக்குக் கோபம் (ஆதி9:5,6). மட்டுமல்ல, இப்படிப்பட்ட வர்கள்மேல் தேவனின் கோபாக்கினை வெளிப்படுகிறது. இம்மையிலும் அகால மரணம்; மறுமையிலும் பொல்லாத நரகம். இந்த பூமியிலே வாழ்ந்து தேவனுக்கு சாட்சியாய் (ஆதி1:26-28), நீண்ட நாட்கள் வாழ வேண்டுமென்ற (சங்91:16) தேவனின் வாஞ்சையை நிர்மூலமாக்கி, தேவனின் படைப்பையே இபபடிப்பட்ட மரணத்தால் அசிங்கப்படுத்துகிறான். இந்த பூமியை ஆள உண்டாக்கப்பட்டவன் இந்த பூமியை விட்டு சுயமாகவே மாண்டு போகலாமா? கொலை செய்யப்படுவது என்பது மற்றவர்களால்! தானே கொலை செய்து கொள்தல் என்பது விருப்பத்தோடு, தேவனை- தேவசாயலை அவமதிப்பது / மறுதலிப்பது ஆகும். ஆக, தற்கொலை என்பது கொலை செய்யப் படுவதைவிட மிகவும் மோசமான ஒன்று என அறிகிறோம். இதிலிருந்து- இந்தப் பயங்கரமான பாவத்திலிருந்து- விடுதலை ஏதும் உண்டா?
         மாற்10:29,30ன்படி, இம்மையிலே நுôறத்தனை ஆசீர்வாதமும் மறுமையிலே நித்திய ஜீவனும் பெற்று அனுபவிக்க வேண்டும் என்பதுதான் தேவ சித்தம். உலகத்தில் உபத்திரவங்கள் உண்டு; உலகத்தை ஜெயித்த ஆண்டவரை விசுவாசித்து திடன் கொள்ளுங்கள் என்கிறார் இயேசு (யோ16:33). உன் ஆத்மா வாழ்ந்தால்தான் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்க முடியும் (3யோ2). ஆக ஆத்மா வாழ வார்த்தை தேவை.(யாக்1:21;ரோ12:2) தேவனுடைய வார்த்தையால் போஷிக்கப்பட்டு, விசுவாசத் தோடு வளரும் பிள்ளைக்கு தோல்வியே இல்லை. ஆமென். விசுவாசிக் கிறவன் பதறான்; விசுவாசிக்கிறவன் வெட்கப் படான். வாழ்க்கை என்பது போராட்டம்தான். மேடுகள் உண்டு; பள்ளங்கள் உண்டு. தாண்ட வேண்டிய வைகளை தாண்டு; மிதிக்க வேண்டியவைகளை மிதி; உனக்கு மான் கால்கள் கொடுத்தது ஜெயிக்கத் தானே! ஜெயங்கொள்ளுகிறவனுக்கே ஜீவகிரீடம். அல்லேலுôயா! தோல்வியே வெற்றிக்கு முதல்படி என்று விசுவாசத்தோடு எதிர் நோக்குகிறவன், எதிர்நீச்சல் போடுகிறவன், தற்கொலை செய்யான். தன் ஜீவனுக்காக இயேசுவை அறியேன் என்று மூன்றுமுறை மறுதலித்து சபித்த பேதுருவே, சேவல் கூவியபோது இயேசு சொன்ன வார்த்தையை நினைந்து, இயேசுவை நோக்கிப் பார்த்து மனங்கசந்து அழுது மன்னிப்புப் பெற்று பிரதான அப்போஸ்தலனாய் வாழ்ந்து காட்டினானே! தேவனின் இருதயத்திற்கேற்ற தாவீது தன் போராட்ட ஜீவியத்தில் தற்கொலை செய்யாமல் விசுவாசத்தோடு எதிர்நீச்சல் போட்டு சாட்சியாய் இன்றும் வாழ்கிறானே! அல்லேலுôயா! “ஆண்டவரே1 என்னை எடுத்துக் கொள்ளும். ஏன் இந்த உபத்தி ரவம்?” என்று சொல்வதும் தற் கொலைப் பாவத்தோடு சோந்ததுதான். எலியாவும் இப்படித்தான் புலம்பினான் (1ராஜா19:4); இருதய எண்ணத்தை கிரியையிலே கொண்டு வர, அவனை அழைத்த ஆண்டவர் விடவேயில்லை. உன்னையும் இப்படித்தான் தேவ பிள்ளையே! யோனாவும் அப்படித்தான் இருந்தான் (யோனா4:8). அவனையும்கூட தேவன் காத்தாரே! தற்கொலை என்பது ஒரு நிமிஷம்! அதன் பலனோ சதாகாலமும் அக்கினியும் கந்தகமும் எரிகிற கடல். வசனப்படி வாழ்கிற வாழ்வோ விசனமில்லாத வாழ்வு; வெற்றி வாழ்வு; ஆரோக்கிய வாழ்வு; அதுதான் தேவன் விரும்பும் தெய்வீக வாழ்வு!
         இதை வாசிக்கும் தேவபிள்ளையே! உன்னை தேவன் படைத்ததன் நோக்கம் புரிகிறதா? நீயும் வாழவேண்டும்; மற்றவர் களையும் வாழ வைக்க வேண்டும் இயேசு வின் நாமத்தினால். இந்த ஊழியத்திற்கு அழைக்கப்பட்ட நீ (மத்28:18-20) பிசாசின் கண்ணி வெடிக்குள் மாட்டி தற்கொலைப் பாவத்தில் வீழ்கிறாயா? உன் கண்ணீரைத் துடைப்பவர் நம் ஆண்டவர்; உன்னோடுகூட இருந்து கைவிடாமல் வழிநடத்துபவர் நம் ஆண்டவர் ; பூமிக்கு வந்து இரத்தம் சிந்தி மரித்ததே உன் வாழ்விற்காகத்தானே! இவ்வுலக வாழ்வு ஒளியாய் இருந்தால்தானே மறுவாழ்வு பேரொளியாய் இருக்கும்! இன்றே தீர்மானி! நம் தேவனை- தேவனின் வார்த்தையை-விசுவாசித்து ஜீவிப்பவன் வெட்கப்பட்டுப் போவதே இல்லை! அல்லே லுôயா! விசுவாசம் வெற்றியைத் தரும்! தற்கொலைப் பாவம் உன்னை அணுகாது! உனக்காய் சிலுவையிலே உயிரைக் கொடுத் தவரின் பிள்ளையல்லவா நீ! ஆமென்!

உலகம் ஏன் சரியாகவில்லை?

         உலகம் அலங்கோலமாயிருக்கிறது; உண்மையும் உத்தமமும் இல்லை; நீதியும் நேர்மையும் இல்லை; எங்கும் கொலை, கொள்ளை, விபச்சாரம், வேசித்தனம், எத்தல், ஏமாற்றம், நன்றியின்மை, அன்பில்லாமை. இப்படிப்பட்ட உலகத்தில் மாற்றம் வருமா? எப்போதுதான் இந்த உலகம் சரியாகும்?
         ஒருநாள், ஒரு அப்பா, வீட்டிலே ஆபீஸ் வேலை பார்த்துக் கொண்டிருக்கையில் அவருடைய மகன் வந்து அடிக்கடி தொந்தரவு கொடுத்துக் கொண்டேயிருந்தான். எப்படி அவனை சமாளிப்பது என்று நினைத்து, தன்னிடமிருந்த ஒரு உலகப் படத்தைக் கிழித்துப் போட்டு, இந்த துண்டு பேப்பரை எல்லாம் ஒன்றாக்கி, உலக ஙஹல்ஐ சரி பண்ணிக் கொண்டுவா என்று அவனிடம் சொன்னார். “உலகப்படம் கிழிந்துபோய் பல துண்டுகளாய்ப் போயின; இவனால் சரி பண்ணவே முடியாது” என்று அப்பா நினைத் தார். என்ன ஆச்சரியம்! பத்தே நிமிடத்தில் அவன் சரிப்படுத்திக் கொண்டு வந்து கொடுத்தான். “இது எப்படி ஆயிற்று?” என்று அப்பா கேட்டார். “இது என்ன பெரிய காரியம்? உலகப்படத்திற்கு  பின்னாலே மனிதப்படம் இருந்தது; மனிதனின் கை, கால், தலை எல்லாவற்றையும் ஒன்றாக்கி மனித னை சரியாக்கினேன். அதை அப்படியே திருப்பிப் பார்த்தேன்; உலகம் சரியாயிருந்தது” என்று பதிலளித்தான் மகன். 
         இதை வாசிக்கும் தேவ பிள்ளையே! இது நான் படித்த கதைதான். ஆனால் இதன் மூலமாய் ஒரு சத்தியம் வெளிப்படுகின்றது. பிசாசின் பிடிக்குள் இருந்து அழிந்து கொண் டிருக்கும் உலகத்தை சரியாக்க வேண்டு மென்றால்- செப்பனிட வேண்டுமென்றால்- நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டுமென் றால், இங்கே வாழும் மனிதர்கள் சரியாக வேண்டும்; மனிதர்களுக்குள்ளே ஒரு நல்ல மனமாற்றம் உருவாக வேண்டும். மனிதன் மாறினால் உலகமே மாறும். ஆமென். மனிதர்களுக்குள்ளே இப்படிப்பட்ட ஒரு மாற்றத்தை உருவாக்கி, இந்த பூமியை பரலோக ராஜ்யமாக மாற்ற வேண்டும் (மத்6:10) என்பதற்காகத்தானே, 2011 ஆண்டுகளுக்கு முன் இயேசு பூமிக்கு வந்தார்; நமக்காய் ஜீவனைக் கொடுத்தார். அதை விசுவாசிக்கிற ஒவ்வொரு மனிதனும் மாறுதலடைகின்றான். மனிதன் மாறும்போது இந்த உலகமே மாறும்! அல்லேலுôயா! இந்த மாற்றத்திற்கு-சரிப்படுத்துகிற வேலைக்கு த்தானே உன்னையும் என்னை யும் தேவன் தெரிந்து கொண்டிருக்கிறார்; அழைத்து மிருக்கிறார். அவரின் அழைப்பை உறுதிப் படுத்திக் கொண்டு, தொடர்ந்து இயேசுவின் பணியில் முன்னேறுவோம்! ஆமென்! உலக மாற்றம் நம் கையில் இயேசுவின் நாமத்தினால்! அல்லேலுôயா!.