பெயர் போடாத வாசகர்
(1)பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வாஞ்சையில்லாத ஆவிக்குரிய சபை ஊழிய ருடன் இணைந்து ஊழியம் செய்ய லாமா?
Answer:
 ஊழியர் என்றாலே பரிசுத்தஆவி பெற்றே ஆக வேண்டும் (அப்1:8; 10:38). பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வாஞ்சையில்லாத வர்கள் விசுவாசிகளுமல்ல; ஊழியருமல்ல; அப்படிப்பட்ட வர்களோடு ஊழியம் செய்வது மகா தவறு.
(2)பரிசுத்தஆவியைப் பெற்றுக் கொள்ளாத வர்கள் பிசாசைத் துரத்துகிற வல்லமைக்காக, உபவாசித்து ஜெபம் செய்யலாமா?
Answer:
செய்யலாம்.
(3)ஆவியின் கனிகள் 9ம் பரிசுத்தஆவியைப் பெற்றுக் கொள்ளாதவர்களிடம் இருக்குமா?
Answer: 
 ஒன்றிரண்டு இருக்கலாம்; 9ம் பரிபூரணமாய் காணவேண்டும் என்றால் பரிசுத்தஆவியைப் பெற்றுக் கொண்டே ஆகவேண்டும்.
நிர்மலா சேகர், வேளச்சேரி, சென்னை.
(1)விசுவாசத்தில் ஆரோக்கியமுள்ளவர்களாக இருக்கவேண்டுமே என்று தவறுகளை கண்டித்து புத்தி சொல்லும் போது, நம் சபையை விட்டு வேறே சபைக்கு ஓடுகிறார்கள். அங்கே அந்த போதகர் கடிந்து சொல்லும் போது வேறொரு சபை; திருந்துவதுமில்லை; வளர்வதுமில்லை. நம்மைப்ற்றி கோள் சொல்லித்தான் திரிகின் றனர். இது தேவையா நமக்கு? ஜெபத்தில் வைத்து விடுவோம் கர்த்தர் சரியாக உணர்த் துவார் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன் சரியா?
Answer: 
 கண்டித்து புத்தி சொல்வது நம் கடமை. அதைக் கேட்காதவர்களுக்காய் நாம் ஜெபிப்பது நம் தலையாய  கடமை.
(2)தீங்கு வராததற்கு முன்னே நீதிமான் எடுத்துக் கொள்ளப்படுகிறான் என்பதன் சரியான விளக்கம் தரவும் (ஏசா57:1).
*ஏசா57:1 முழுவதையும் வாசியுங்கள். “தீங்கு வராததற்கு முன்னே நீதிமான் எடுத்துக் கொள்ளப் படுகிறான்”, என்பது இரகசிய வருகையைக் குறிக்கிறது. “தீங்கு வருவது” என்பது வரப்போகும் 7 ஆண்டு உபத்திரவ காலத்தைக் குறிக் கிறது (வெளி3:10; 1தெச1:10). இஃதல்லாமல், சங்91:16ல் சொல்லப் பட்டபடி நீடித்த நாட்களாய் வாழ்ந்து, தீங்கு ஏதுமின்றி, தேவனே எடுத்துக் கொள்ளும் தற்காலசரீரமரணம்என்றும்எடுத்துக்கொள்ளலாம்.

பெயர் எழுத தைரியமில்லாத வாசகர்.
(1)ஓய்வு நாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக என்ற கர்த்தருடைய கட்டளை யை மறந்து விட்டாயா? பின் ஏன் சி.எஸ்.ஐ சபையின் போதனையான ஞாயிற்றுக் கிழமை யை "ஓய்வு நாளாய் ஆசரிக்க வேண்டும்' என்பது கள்ள உபதேசம் என்கிறாய்? 
Answer: இயேசு மரித்தது வெள்ளிக்கிழமை; மரித்ததும் ஓய்வுநாள் ஆரம்பமாயிற்று (லுôக்23:54). இயேசு உயிர்த்தது வாரத்தின் முதலாம்நாளாகிய ஞாயிற்றுக்கிழமை; இது ஓய்வு நாள் முடிந்து வருகிறது (மத்28:1). ஆக ஓய்வு நாள் என்பது சனிக்கிழமைதான்; ஞாயிற்றுக்கிழமை அல்ல. ஞாயிற்றுக்கிழமையை ஓய்வுநாளாய் ஆசரிக்க வேதம் சொல்லவில்லை. போப்தான் கட்டளை யிட்டார். எப்படியோ, மொத்தத்தில் ஓய்வுநாள் ஆசரிப்பு கிறிஸ்தவனுக்கு அல்ல; அது 10 கற்பனைகளடங்கிய நியாயப் பிரமாணக் காரர்களுக்கு, நியாயப்பிரமாணம் சிலுவையோடு ஒழிந்தது (எபே2:14).
(2)அறுப்பின் பண்டிகையை கண்டிப்பாய் ஆசரிக்க வேண்டும். உன் எல்லாப் பொருளா லும் கர்த்தரைக் கனம் பண்ணு என்ற வார்த்தையை மறந்து விட்டாயா?
Answer: 
 மரியாதைக் குறைவாய் என்னை நீங்கள் கேள்வி கேட்டாலும் நான் பதில் சொல்வேன். ஏனெனில் நான் ஆவிக்குரிய கிறிஸ்தவன். லேவி 23ல் சொல்லப்பட்ட 8 நியாயப்பிரமாணப் பண்டிகைகளும் கிறிஸ்துவுக்கு நிழலாட்ட மானவை. நிஜமாகிய கிறிஸ்து வந்த பிறகு, நிழலை ஆசரிக்கத் தேவையில்லை (கொலோ2:16,17). இல்லை.. நான் ஆசரித்தே தீருவேன் என்று நீங்கள் அடம்பிடித்தால் நிஜமாகிய கிறிஸ்துவை விசுவாசிக்காத பாவிகள் நீங்கள்தான்.
(3) பல பாஷை பேசுகிறேன் என்று சி.எஸ்.ஐ, கத்தோலிக்க சபைகளில் இல்லை; AG சபை போன்ற பெந்தெகொஸ்தே சபைகளில் தவளை கத்துகிற மாதிரி கத்தாதே!
Answer: 
 சி.எஸ்.ஐ சபையைச் சார்ந்த மோகன். சி.லாசரஸ், கத்தோலிக்க சபை Fr.இக்னீஷியஸ் போன்ற பலரும் அந்நிய பாஷை பேசுகிறார் களே! பெந்தெகொஸ்தே சபையார் பேசுவது மட்டும் தவளை சத்தமா? (அப்2:13ன்படியான யூதரா தாங்கள்?)

பாஸ்டர். சாம். சார்லஸ், மதுரை.
(1)ஆவிக்குரிய தலைவர்கள் கூடி நடத்தும் நற்செய்திக் கூட்டங்களுக்கு, நோட்டீஸில் இயேசுகிறிஸ்துவின் படம் பிரிண்ட் பண்ணி விநியோகிப்பது அவசியமா? இயேசுவின் நாமத்தைச் சொல்ல, இயேசுவைப்போல படம் பிரிண்ட் பண்ணுதல் அவசியமா? 
Answer: 2கொரி5:17ஐ வாசித்தால், இயேசுவைப் பார்த்த பவுலே, “இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்” என்று சொல்லி யிருக்க, இயேசுவைக் காணாத அவர்கள் யாரோ ஒருவருடைய போட்டோவை இயேசு என்று சித்தரிப்பது தவறில்லையா? விக்கிரகத்தை உருவாக்குவதும் தவறு; வணங்குவதும் தவறு (ரோ1:22). இந்த விஷயத்தில் ஆவிக்குரிய சபையாரே மாறாத பட்சத்தில் மற்றபாரம்பரிய சபையார் எப்படி மாறுவர்?

அபிஷேக், துôத்துக்குடி.
(1)திமிங்கிலங்களும் லிவியாதானும் ஒன்றா? ஒன்றானால், திமிங்கிலம் நெருப்பை வெளியிடுமா? (யோபு14:19)
Answer: 
 லிவியாதான் என்பது திமிங்கிலம் போன்ற கடல்வாழ் ஜீவனில் மிகவும் பெரியது. யோபு 41-ல் வரும் லிவியாதான் என்பது மேட்டிமைமிகு பிசாசுக்கு உவமானம் (See யோபு41:15 in English with யோபு41:34).  பிசாசு நெருப்பை மட்டுமல்ல. எதையும் வெளியிடத்தக்க பெலன் கொண்டது. இங்குள்ள லிவியாதான் என்பது சாத்தானே என்று Dakes Bible, Berkeley & Young versions, Muffat  போன்றவை விளக்குகின்றன.

எஸ்றா அமல்ராஜ், திருச்சி-15.
(1)பிதாவும் இயேசுவும் வேறு வேறு நபர்களே. மூவரும் ஒருவர் என்றால் நிச்சயம் ஆண்டவர் நாங்கள் மூவரும் ஓரே ஆள் என்று கூறியிருப்பார். இயேசுதான் பிதா என்றால் உங்கள் கருத்துப்படி சங்102:22; 1தீமோ6:16 போன்ற வசனங்கள் தவறு என்று ஒத்துக் கொள்கிறீர்கள். திரித்துவ மார்க்கத்தைக் குறித்து பவுல், 2தீமோ4:2-4ல் சொன்னதற்கு நீங்களே சாட்சி. வெளி7:10ல் சிங்காசனத்தில் வீற்றிருப்பவர் தேவன் மற்றும் ஆட்டுக் குட்டியானவர்; 3வது நபரை தேவன் மறந்து விட்டாரா? பரிசுத்த ஆவி தேவனுடைய வல்லமையே தவிர 3வது நபர் அல்ல. சத்தியத்தை அறிந்துகொள்ள யாவே தேவன் உங்களுக்கு பிரகாசமுள்ள மனக்கண்களைத் தர தொடர்ந்து ஜெபிக்கிறேன்.
Answer: 
 உங்கள் ஜெபத்திற்கு நன்றி. சத்தியத்தை நுôற்றுக்கு நுôறு அறிந்தவன் ஒருவனுமில்லை. அந்த கூட்டத்தில் என்னைப்போலுள்ள எல்லோருடைய மனக்கண்களும் பிரகாசமாக வேண்டும். நீங்கள் எந்த கூட்டமோ அறியேன். பிதாவும் இயேசுவும் பரிசுத்த ஆவியானவரும் ஒருவர்தான் என்று சொல்லும் இயேசுநாமக் காரர்களைவிட நீங்கள் வித்தியாசமானவர்கள்.  ஆவி என்பது தேவனுடைய வல்லமையே என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் பரிசுத்த ஆவியானவர் என்பவர் ஆள்தத்து வமான தேவன்தான். (இதைக் குறித்து ஆசிரியரின் “கருகலான சத்தியம்” என்ற புத்தகத்தில் உள்ள “தேவனின் ஆவியும், பரிசுத்த ஆவியானவரும் ஒன்றா?” மற்றும் “ஆவியானவர் ஆள்தத்துவமானவரா?” என்ற செய்திகளை தயவுசெய்து வாசியுங்கள்). வேத சத்தியத்தைப் புரிந்து கொள்ளுங்கள். மூவரும் ஒரே ஆள் அல்ல; மூவரும் ஒன்றாயிருக் கிறார்கள் (1யோ5:17). ஆமென். இந்த வசனம் அடைப்புக் குறிக்குள் உள்ளதால் மூலபுத்தகத் தில் இல்லை என்று வாதிடுவோர், ஆங்கில பைபிளில் நிறைய வசனங்கள் அடைப்புக் குறிக்குள் உள்ளனவே அவைகள் எல்லாம் மூலபுத்தகத்தில் இல்லையா? மட்டுமல்ல..இந்த வசனம் ஆங்கில பைபிளில் அடைப்புக் குறிக்குள் இல்லையே காரண மென்ன? யோவான் கையால் எழுதிய மூல நுôலே தற்போது இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த நுôலிலிருந்து தான் வழி வழியாய் எழுதப்பட்டன. அவைகளில் ஒரு சிலவற்றில் இந்த வசனம் இருக்கிறது; ஒரு சிலவற்றில் இல்லை. பிஷப் கார்த்தேஜ், தப்சஸ் விஜிலியஸ், The Codex montfortii and the Vulgate போன்றோர் இது யோவான் எழுதிய வசனம்தான் என்கின் றனர்.பூலோகிலே சாட்சிகள் மூன்று என்பது மூல புக்கில் உண்டென்றால், பரலோகிலே சாட்சியிடும் மூன்றும் இருந்தே ஆகவேண்டும். தேவன் என்றால் எபிரேய மொழியில் “ஏலோகிம்” இரண்டுக்கு மேற்பட்டவர் களைக் குறிக்கிறது என்பது புரிந்தால், GOD- தேவன்- என்று வருமிடங்களிலெல்லாம் 3 ஆள்தத்துவமுள்ள ஒரே தேவனைக் குறிக்கிறது என உணரலாம். God, LORD, Lord (தேவன், கர்த்தர், ஆண்டவர்) என்பதெல்லாம் 3 ஆள்தத்துவமுள்ள ஒரே தேவனைக் குறிக்கிறது. இம்மூவருக்கும் காரணப்பெயர் “யேகோவா” (கர்த்தர்) தான் என்று அறிய வேண்டும். தேவனாகிய கர்த்தர் என்றால் ஒரு நபரைக் குறிக்கிறது. சங்102:22; 1தீமோ6:16ஐ இந்தக் கருத்திலேதான் விசுவாசிக்கிறேன். 2தீமோ4:2-4ல் திரித்துவ மார்க்கத்தைப் பற்றி பவுல் எழுதவில்லை என்பதை முந்தி அறிக. இரண்டு ஆட்தத்து வமான ஆதாமும் ஏவாளும் ஒரே மாம்ச மாயிருக்கிறார்கள் என்ற இரகசியம் புரிந்துவிட்டால் திரித்துவம் என்பதும் புரிந்துவிடும் (ஆதி2:24; எபே5: 31,32). வெளி7:10ஐ வாசித்த உங்களுக்கு 3வது நபரான ஆவியானவர் மனிதர்களோடு பூமியில் இருக்கிறார் என்பதை உணர முடியவில்லையே! (இது குறித்து இன்னும் அறிய மாதாந்திர 2வது செமினாருக்கு வாருங்கள்).

வினோத், வள்ளவிளை, KK dt
(1)"சில வசனங்கள்-வார்த்தைகள் தமிழ் மொழி பெயர்ப்பில் தவறாய் உள்ளது. ஆங்கில வேதாகமமோ, கிரேக்க வேதாகமமோ படித்தால் புரிந்துகொள்ள முடியும் "என்று சொன்னால்', நம்மிடத்தில் உள்ள பைபிளை வைத்துத்தான் பேசவேண்டும்; ஆவியானவர் மொழி பெயர் ப்பில் தவறுவதற்கு விடமாட்டார்' என்று சொல்வது சரியா?
Answer: 
 தமிழ் மொழிபெயர்ப்பு செய்தவர்கள் இரட்சிக்கப்பட்ட ஆவிக்குரியவர்கள் அல்ல; தரங்கம்பாடியைச் சார்ந்த சமஸ்கிருதம் அறிந்த படித்த அதிகமான பார்ப்பனர்களை வைத்துத் தான் எழுதப்பட்டது. எனவே தவறு இருக்கலாம் மொழிபெயர்ப்பில். “ஆவியானவர் டிக்டேட் பண்ணி எழுதப்பட்டதா?” என்ற செய்தியை (நவம்வர்10 விசுவாச முழக்கம்) வாசித்து தியானித்தால் தற்போது பாதுகாத்து வைக்கப்பட்ட மூலப்பிரதிகளிலே தவறுகள் இருப்பதை உணரலாம். நிறையப்பேர் நரகம் நோக்கிப் போகின்றனரே (ஆவியைப் பெற்ற இரட்சிக்கப்பட்டவர்கள் கூட) ஏன்?ஆவியானவர் பாவம் செய்வதற்கு வழிவிடுகிறாரா? சிந்தியுங்கள். “நம் தேவன் நம்மை அடக்கி நடத்தும் அராஜக எஜமானனோ, ஆண்டவனோ அல்ல”.. என்பதை நாமும் உணர்ந்தால் இப்படி கேள்விகள் வராது. எங்கெல்லாம் ஒரு மொழியில் படிக்கும்போது கருத்து ஒத்து வராமல் தெரிகிறதோ, அங்கெல்லாம், ஆங்கிலம் மற்றும் மூலமொழி வேதத்தை ஆராய்ந்தறிவதுதான் உசிதம்.

(2)பிசாசை நரகத்தில் தள்ளப்பட்ட பிறகு, அநேக காலங்கள் கழித்து மன்னிப்பாரா?
Answer: 
 அப்படியானால், நரகத்தில் தள்ளப்படும் பாவிகளையும் மன்னிப்பாரா என்ற கேள்வி எழுமே! வெளி20:10 ன்படி பிசாசானவன் சதாகாலங்களிலும் (Eternal ) வாதிக்கப்படுவான் என்று அறிகிறோம். மேற்கொண்டு வேதம் எதுவும் சொல்லவில்லை.

(3)பெந்தெகொஸ்தே கிறிஸ்தவர்கள் தேவனை கண்டிராததால், அவர்கள் ஆராதிக்கும்போது, உள்ளத்தில் அநேக விக்கிரகங்களுக்கு ஆராதனை செய்வார்கள் என்று ஒரு புஸ்தகத்தில் வாசித்தேன். இதற்கு நாம் என்ன சொல்வது?
Answer:
இதற்கு ஆதாரம் ஏதும் உண்டா? இரட்சிக்கப்பட்ட ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் யோ4:24 ன்படி தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்வார்கள். தேவனை ஒருவனும் கண்டதில்லை (1தீமோ6:16). ஏதோ ஒரு வழியில் எதையோ கண்டு, தெய்வம் என்று நம்பினால் தானே நீங்கள் சொல்லும் புஸ்தகத்தில் எழுதியபடி ஆராதனை செய்யமுடியும்!

(4) GEM பற்றி உங்கள் கருத்து என்ன? அதற்கு உதவலாமா? 
Answer: சகோ.அகஸ்டீன் ஜெபக்குமார் மூலம் நடக்கும் GEM மிஷினரி ஊழியம் ஆவிக்குரியது ;அதற்கு உதவலாம்.

(5) தன்னை அழிக்க வருகிற ராஜாவுக்கு எலிசா விருந்து வைக்கிறார்; ஆனால் பாவம் அறியாத பிள்ளைகள் ஏளனம் பண்ணும் போது கரடிகளால் பீறிப்போடுகிறாரே ஏன்? 
Answer: 2ராஜா2: 23,24; 6:13-23ஐ வாசியுங்கள். நிந்தித்த பிள்ளைகளை காரணத்தோடு சாபமிட்டான். அவன் சாபம் பலித்தது; மிருகத்தால் மரித்தார்கள். எலிசா கரடியை அனுப்பவில்லை; சாபத்தின் பலன் அது (ள்ங்ங்   நீதி26:2). பிள்ளைகள் என்று இருப்பதால் பாவமறியா பிள்ளைகள் என்று எடுக்கமுடியாது. ஏனெனில் 28 வயது ஈசாக்கு, 39 வயது யோசேப்பு, 19 வயது இஸ்மவேல் எல்லாம் பிள்ளைகள் என்றுதான் அழைக்கப் பட்டார்கள் (ஆதி22:12; 41:12; 21:17). எனவே எலிசா சபித்ததால் நிச்சயம் இவர்கள் விவரம் அறிந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். அடுத்து, ராஜா வரவில்லை; ராஜாவின் வீரர்கள் எலிசாவை அழிக்க அல்ல; பிடிக்க வந்தவர்கள். தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டு போனதால்தானே எலியாவையும் பிடிக்கவில்லை; அதன்பின் அந்த ராணுவம் இஸ்ரேல் தேசத்திற்கும் வரவில்லை. மனம் மாறுபவர்கள்மேல் அன்பு காட்டுவது தெய்வீக மல்லவா! அதைத்தான் எலியா செய்தான்.

(6)ஆக்ஸிடெண்ட் போன்ற காரியங்களில் அரசாங்கம் நமக்காக வழக்காடும்போது, நாம் எதிர்தரத்தாரை மன்னித்து விட வேண்டுமா?
Answer: 
 மன்னிப்பு எப்போது என்றால், எதிர் தரப்பினர் மன்னிப்பு கேட்டால் மட்டுமே! கேட்காத பட்சத்தில் நாம் பழிக்குப்பழி வாங்காமல் நம் வழியிலேயே போகவேண்டும். அவர்கள் நம்மைத் தேடிவந்து மன்னிப்புக் கேட்டால் மட்டுமே மன்னிக்க வேண்டும். இதைத்தான் பாவிகள் விஷயத்தில் தேவன் செய்கிறார்.

ஏ.வி.ராயன், துôத்துக்குடி.
(1)1பேது2:21ன்படியான கிறிஸ்துவின் அடிச்சுவடு என்ன?
Answer:
1பேது2: 21-24வரையிலான அவரது செயல்முறைகள்தான் மாதிரி; நாம் பின்பற்றவேண்டிய அடிச்சுவடு.

(2)கள்ளன், எத்தியோப்பிய மந்திரி, சிறை அதிகாரி போன்றோர் பாவ அறிக்கை செய்யாமல் ஞானஸ்நானம் பெற்றார்கள். தற்போது ஞானஸ்நானம் பெற, முன் செய்த பாவங்களை அறிக்கையிட வேண்டுமென சில ஊழியர்கள் கூறுகிறது சரியா? 
Answer: தவறு; வேதத்திற்கு புறம்பானது. இது குறித்து “இரட்சிக்கப்படுவதற்கு பாவஅறிக்கை தேவையா?” என்ற செய்தியை “விசுவாசித்தேன்! ஆகையால் பேசுகிறேன்” என்ற ஆசிரியரின் புத்தகத்தில் வாசித்தறியுங்கள்.

(3)நம் தேசத்திலும் நமக்கு ஒரு அடையாள எண் கொடுக்கப்போகிறார்களாம்.இது அந்திக்கிறிஸ்துவின் வருகைக்கான முன் அடையாளந்தானே?
Answer: 
 இருக்கலாம்.

(4)விசுவாச முழக்கம் (18) பக்கம் 11 கேள்வி 2ன் பதிலில், வெளி20: 12ஐக் காட்டி சாத்தானைக் கட்ட இயேசுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று போடப்பட்டுள்ளது. சாத்தானின் வல்லமையை இயேசு மனிதனாய் இருக்கும்போது கட்டியது போல, சீடர்கள் யோ14: 12ன்படி சாத்தானின் கிரியைகளை கட்ட முடியாதா? 
Answer: நிச்சயம் சாத்தானின் கிரியைகளைக் கட்ட முடியும்; ஆனால் சாத்தானை, சீஷர்களாகிய நாம் கட்ட அதிகாரமே இல்லை.

(5) விசுவாச முழக்கம் (18) பக்கம் 13ன் 4ம் கேள்விக் கான பதிலில் இயேசு யூதாவாகப் பிறந்தார் என எழுதி, இயேசு யூதா கோத்திரத்தில் பிறந்தார் என எழுதியிருப்பது தவறான அர்த்தம் கொடுப்பதாக உள்ளதே!
Answer: 
 இயேசு யூதா கோத்திரத்தில் யூதனாகவே பிறந்தார். அதனால்தான் யூத ராஜசிங்கமானார். யூதன் தானே இஸ்ரேலை ஆளவேண்டும்! 1000 வருட அரசாட்சியில் ஆளப்போகும் இயேசு அதனால்தான் யூதனாக- யூதாவாகப் பிறந்தார்.