1. அந்திகிறிஸ்து எங்கிருந்து வருவான்?

1யோ4:3; 2:8; மத்24:24ன்படி, அநேக அந்தி கிறிஸ்துவின் ஆவிகள் இப்பொழுதே கிரியை செய்கின்றன. ஆயினும் அசல் அந்திகிறிஸ்து, 2தெச 2:6-8ன்படி, பரிசுத்த ஆவியான வரின் வல்லமையோடுகூடிய ஜெபத்திலே நின்று தடை செய்யும் சபை, இரகசிய வருகையில் எடுபட்ட பின்னரே வெளிப்படுவான். இவன் எங்கிருந்து வருவான்? சிலர் இஸ்ரேலி லிருந்தும், சிரியாவிலிருந்தும், ரோமிலி ருந்தும் எழும்புவான் என்று கணிக்கின் றனர். வேதம் சொல்வதைப் பார்ப்போம்.
தானி 2ல் உள்ள நேபுகாத்நேச்சார் சொப்பனம், தானி 7ல் உள்ள தரிசனம், வெளி13ல் உள்ள தரிசனம் எல்லாம் முதலில் கவனிப்போம். சரித்திரப்படி, பாபிலோன், மேதிய-பெர்சிய, கிரேக்கம், ரோம் என்னும் நான்கு சாம்ராஜ்யங்கள் எழும்பிவிட்டன. கடைசி ரோமராஜ்யம் கி.பி 364ல் கிழக்கத்திய ரோம் என்றும், மேற்கத்திய ரோம் என்றும் இரண்டாய் பிரிந்தது. மேற்கத்திய ரோம் கி.பி 471ல் வீழ்ந்து போனது. கிழக்கத்திய ரோம் கி.பி 1453ல் வீழ்ந்து போனது. இதைத்தான் சாவுக்கேதுவான காயம் என்று வெளி13:3 சொல்கின்றது. இந்த காயம் சொஸ்த மாக்கப்பட்டு பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடு இதைப்பார்த்து பின்பற் றும் காலம் வரப்போகிறது. அதுதான் விழுந்துபோன ரோமராஜ்யம் திரும்பவும் உயிர்மீட்சி அடைவதாகும். இதுகுறித்து வெளி17:8-11ஐ வாசித்தால், எகிப்து, அசீரியா, பாபிலோன், மேதிய-பெர்சிய, கிரேக்க என்ற 5பேரும் விழுந்தார்கள். 6வது ரோமராஜ்யம் வெளிப்படுத்தல் விஷேசம் எழுதும்போது இருக்கிறது. 7வது சாம்ராஜ்யம், அதாவது Revival Rome Kingdom(காயம் சொஸ்தமாகி ஆச்சரியமாய் நிற்கும்) எழும்பப்போகிறது. இந்த புதுப்பிக்கப்பட்ட ரோமராஜ்யம்தான், தானி 2ல் சொல்லப்பட்ட 10 விரல்களுக் கொத்த 10 ராஜாக்கள் இணைந்து இரும்பும் களிமண்ணும்போல எழும்புவ தாகும். இதுதான், தானி9:27ல் சொல்லப் பட்ட 7ஆண்டுகள் ஆளப்போகும் வரப் போகிற பிரபுவாகிய அந்திக்கிறிஸ்து என்கிற மிருகம். இந்த 10ராஜாக்களின் கூட்டமைப் பாகிய Rivival Rome Kingdom தான் வெளி17:16ன்படி போப் மார்க்கத்தையே அழித்துப்போடும். முதல்31/2 ஆண்டுகள், இந்த கூட்டமைப்பாகிய ரோம ராஜ்யமாகிய மிருகம் யூதர்களோடு உடன்படிக்கை பண்ணி தேவாலயத்தை கட்ட உதவும்; இரகசிய வருகையில் விடுபட்டுப் போன கிறிஸ்தவர்களை துன்புறுத்தும். கடைசி            31/2 ஆண்டில், தானி7:8ல் சொன்ன சின்னக் கொம்பு (10ல் 3ஐ தள்ளி ஒன்று) எழும்பும். இதுதான் 7ஆவதிலிருந்து தோன்றும் 8வது மிருகம். இதுதான் மகாபயங்கரமான அந்திகிறிஸ்துவாகிய மிருகம். இப்போதுதான் இஸ்ரேலருக்கு இக்கட்டுகாலம் (எரே30:7); மத்24:15ல் சொல்லப்பட்ட பாழாக்குகிற அருவருப்பு இதுதான். இந்த நிலையில்தான் இயேசு வாகிய கல் உருண்டு வந்து (தானி2:44) அவனையும், அவனோடுள்ள ராஜ்யத்தை யும் அழித்துப்போடும் (வெளி19)
ஆக, வேத தீர்க்கதரிசனப்படி, புதுப்பிக்கப்பட்ட 10 ராஜாக்களடங்கிய ரோம ராஜ்யமே வரப்போகும் அந்திகிறிஸ்தென் னும் மிருகமென்றும், அதிலிருந்து எழும்பும் ஒருகொம்புதான் மகா பயங்கர மான அந்திகிறிஸ்து என்றும் அறியலாம். இந்த புதுப்பிக்கப்பட்ட ரோம ராஜ்யத்தில் (Rivival Rome Kingdom) நிச்சயமாய் இஸ்ரேல் ராஜ்யம் இருக்காது என்றும், இஸ்ரேல் ராஜ்யத்திலிருந்து அந்திகிறிஸ்து எழும்பப் போவதில்லை என்றும் இந்த அந்திகிறிஸ்து யூதருக்கு ராஜாவாக மாட்டான் என்றும் திட்டமும் தெளிவுமாய் உணர முடிகிறது. தானி11:36லிருந்து தன்னிஷ்டப்படி செயல்படும் ராஜா எழும்புவானென்றும், தேவ கோபம் தீரு மட்டும் அவன் ஆட்சி கைகூடிவரும் என்பதால், இவன்தான் உலக கடைசி ராஜாவாகிய அந்திகிறிஸ்து என உணர லாம். தானி11:36-45ஐ வாசித்தால் மறுபடியும் வடதிசை (சிரியா), தென்திசை (எகிப்து) ராஜாக்களுக்கு யுத்தம் என்று பார்க்கிறோம். தானி11:40-43ஐ வாசித் தால், அந்திகிறிஸ்து சிரியா தேசத்தி லிருந்து எழும்புவான் என தெரிகிறது. வெளி13:1-2; 17:12-17 வசனங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.2தெச2ல் சொல் லப்பட்டபடியே இவன் பரிசுத்த ஆலயத்தி லேயே சிங்காசனம் போடுவான் என்று தானி11:45 சொல்கின்றது. இவனுக்கு இரண்டாம் வருகையிலே முடிவு உண்டு. (வெளி19:19-21; தானி7:11,26,27; 9:27; 2தெச2:8).
எசே21:25-27ஐ வைத்து இதில் வருபவன்தான் அந்திகிறிஸ்து என்கின்ற னர். அல்ல.. இவன் இஸ்ரேலிலே எழும்பும் கடைசி ராஜாவாகிய சிதேக்கியாவாகும். அவனுக்குப்பின் தேவனால் ஏற்படுத்தப் படும் யூதராஜா இயேசு வரும்வரை இஸ்ரேலிலே யாரும் இல்லை. ஆமென். யோ5:43ஐ வைத்துக்கொண்டு வேறொரு வன் என்று போடப்பட்டது அந்திகிறிஸ்து வாகிய இஸ்ரேல்ராஜா என்கின்றனர். தவறு. அந்த வசனத்தை முழுமையாய்ப் படியுங் கள். முதல்முறையாய், பிதாவின் வல்ல மை, மகிமை, மாட்சிமையோடு இயேசு, யூதர்களின் அரசாங்க ராஜாவாய் வரவில் லை; இரட்சகராய் வந்தார். அப்படியே வரப்போகும் வேறொருவனும் “யூதர்களின் அரசாங்க ராஜாவாய்” வரப்போவதில்லை என்பது வெள்ளிடை மலையாகும். அவன் பிசாசின் வல்லமையோடு மகிமையோடு வருவான். மேலும் தானி11:36-38ல் சொல்லி யிருப்பது அந்திகிறிஸ்து என்றும், வசனம் 37ல் ""தன் பிதாக்களின் தேவன்'' என்றபதம் உபயோகிக்கப்பட்டுள்ளதால், நிச்சயமாய் இந்த அந்திகிறிஸ்து யூத குலத்தான்தான் என்றும் சிலர் கணிக்கின் றனர். அலெக்சாண்டரின் ஆதிக்கம் தானி8:22ன்படி நான்காய் பிரியும் அதிலுள்ள சிரியா, எகிப்து நாடுகளுக்கிடை யேயுள்ள யுத்தம் பற்றி தானி11:5-19 வரை சொல்லப்பட்டுள்ளது. தானி8:9ல் உள்ள சின்னக்கொம்பாகிய அந்தியோகஸ் எபிபேன்ஸ் என்ற ராஜா செய்யும் அட்டகாசம்தான் தானி11:20-35ல் சொல்லப்பட்டுள்ளதே தவிர அந்திகிறிஸ்து பற்றி அல்ல. தானி11:36 முதல்தான் அந்தி கிறிஸ்து பற்றியது. தானி11:37ல் ""தன் பிதாக்களின் தேவன்'' என்றில்லை. “தன் பிதாக்களின் தேவர்கள்” என்று தமிழில் உள்ளது. இஸ்ரேலருக்கு ஒரே தேவன்தான் உண்டு; தேவர்கள் இல்லை. மேலும், இந்த வார்த்தை நஸ்ரீர்ச்ண்ங்ப்க் ஆண்க்ஷப்ங்  ல், “ஞ்ர்க்ள் ர்ச் ட்ண்ள் ச்ஹற்ட்ங்ழ்ள்” என்று பன்மையில் ‘எர்க்’ என்று போடாமல், ‘ஞ்ர்க்ள்’ என்று அந்நியதெய்வங்களை எழுதப்பட்டுள்ளதால் இவன் யூதாவிலிருந்து எழும்பும் அந்திகிறிஸ்து அல்ல என்றும், அவனைப்போலவே அட்டகாசம் பண்ணும், சிரியாதேச அந்தியோகஸ் எபிபேன்ஸ்தான் இவன் என்றும் அறியலாம்.
வரப்போகும் மேசியா ஆவிக்குரிய ராஜாவாய் மட்டுமல்ல; யூதர்களின் ராஜா வாகவும் வெளிப்படுவார் என்று இஸ் ரேலர் நம்பினர். முதல் வருகையில் ஆவி க்குரிய ராஜாவாய் வந்தவர் 2ம் வருகை யில் யூதர்களின் ராஜாவாய் வரப் போகி றார். எனவே அதற்குமுன் வரப் போகும் அந்தி கிறிஸ்து யூதராஜா அல்ல; புற ஜாதியி லிருந்து எழும்பும் ராஜா. இப்படி யான புறஜாதிராஜாக்களின் காலம் அர்மெக தோன் யுத்தத்தோடு முடியும் என்று வேதம் சொல்லியிருக்க, (லுôக் 21:24; ரோ11:25-29) அந்திகிறிஸ்து இஸ்ரேலிலிருந்து எழும்புவான் என்பது வசனத்திற்கு ஒவ்வாதது. வரப்போகும் அந்தி கிறிஸ்து வை இஸ்ரேலர், மேசியா என்று ஏற்றுக் கொள்வார்கள் என்று வசனமே இல்லை. ஆமென். எரே30:20-21ஐ வாசித்தால் இஸ்ரேல் தேசத்தை புற ஜாதி ராஜாக்கள் மிதிப்பார்கள் என்றும் இறு தியில் இயேசு வே ஆள்வார் என்றும் அறியலாம். ஆகவே, வரப்போகும் அந்தி கிறிஸ்து, Rivival Rome Kingdom -10 ராஜாக் கள் உள்ள சிரியாவிலிருந்து தான் எழும்புவான் என்று கணிக்க வாய்ப் புள்ளது. மற்றபடி யூதர்களிலிருந்து எழும்புவதாக வசன ஆதாரமே இல்லை எனலாம். இந்த அந்தி கிறிஸ்து ஆட்சியில் நாம் இராத படிக்கு ஆயத்தமாவோம்! ஆயத்தமாக்கு வோம்!! இயேசு சீக்கிரம் வருகிறார்!! அல்லேலுôயா!

2. இயேசு மரித்தாரா? உயிர்த்தாரா?
நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பூமிக்கு வந்தார் என்று கி.பி, கி.மு சரித்திரம் சாட்சி கூறுகிறது. ஆனால் “அவர் மரிக்க வில்லை; அல்லா உயிரோடு அவரை எடுத்துக் கொண்டார்” என்று முஸ்லீம்கள் போதிக்கின்றனர். “சீஷர்கள் இயேசுவை இராத்திரியிலே களவாய்க் கொண்டு போய் விட்டார்கள்” என்ற பேச்சு யூதருக்குள்ளே இன்றுவரைக்கும் பிரசித்த மாயிருக்கிறது (மத்28:11-15). இயேசு உயிர்த்தெழவே இல்லை என்று நாத்திகர்கள் வாதாடு கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், “இயேசு மரித்தாரா? உயிர்த்தாரா?” என்பதை நமது வேதம், விஞ்ஞானம், சரித்திரம், உலக காரியங்கள் போன்றவற்றை வைத்து ஆவியானவர் உறுதிப் படுத்துவாராக!
இயேசுகிறிஸ்துவின்மேல், ரோம சர்க் காரின் பிலாத்துவிடம் யூதர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளாவன:
(1)யூதருக்கு ராஜா என்கிறார் (மத்27:11) (2)கிறிஸ்து என்னப்பட்ட ராஜா என்கிறார் (லுôக்23:2) (3)ரோம ராயருக்கு வரி செலுத்த வேண்டாம் என்கிறார் (4)ஜனங் களை கலகப்படுத்துகிறார்(5)ஓய்வுநாள் கட்டளையை மீறுகிறார் (யோ5:18) (6)தம்மை தேவனுக்கு சமமாக்குகிறார். (7)தேவாலயத்தை இடிப்பேன் என்கிறார். பிலாத்து, அவரை நியாயப் பிரமாணப்படி நியாயந்தீருங்கள் என்று சொல்லும்போது, “ஒருவனையும் மரண ஆக்கினை செய்ய எங்களுக்கு அதிகார மில்லை” (யோ18:31) என்று பொய் சொன்னார்கள் யூதர்கள். லேவி24:14-16; உபா21:22,23ன் படி தேவதுôஷணம் பண்ணுகிற யாரையும் கொல்ல யூதர்க ளுக்கு அதிகாரம் உண்டு என்பதை மறைத்தார்கள். பிலாத்தும் சரியாய் நியாயப்பிரமாணத்தை அறிந்த பாடில்லை. கொல்ல அதிகாரம் இல்லையென்றால் இரண்டுமுறை ஏன் கல்லுகளால் கொல்ல முயற்சி செய்தனர்? (சென்ற மாதமுழக்க செய்தியை வாசியுங்கள்) சிந்தியுங்கள். இயேசு வாரினால் அடிக்கப்பட்ட பிறகு பிலாத்து, “இவரிடத்தில் ஒரு குற்றமும் அரசியல் ரீதியாக காணேன். நீங்களே போய் சிலுவையில் அறையுங்கள்” என்று சொல் லும்போதுதான் தங்களுக்கு அதிகாரம் உண்டு என்று ஒப்புக்கொண்டனர் (யோ 9:6,7). ஆனாலும் பாவமில்லாத இயேசுவை நியாயப் பிரமாணப் படி கொன்றால், “இஸ்ரேல் மக்களுக்கு மட்டுமே அவர் குற்றவாளி என்று தெரிய வருமே” என்றெண்ணி, உலகின் பாவங்களை சுமந்து தீர்க்க வந்தவரை, ரோமர் வல்லரசின் சிலுவை மரணம் எனும் தண்டனைமூலம் சாகடித்தால்தான் இவரின் மகிமை எவ்வளவு இழிவானது என்று உலகம் கண்டு அறிந்து கொள்ளும்  என்று எண்ணி, ரோம சர்க் காரிடம் ஒப்புக் கொடுத்தார்கள். ரோம அதிபதி பிலாத்துவோ இவரை விடுதலை பண்ணவே எத்தணிக்கிறான்.
அப்பொழுது “இயேசுவை விடுதலை பண்ணினால் நீர் இராயனுக்கு சினேகித னல்ல; தன்னை ராஜாவென்கிறவனெ வனோ அவன் ராயனுக்கு விரோதி; இராயன்தான் எங்களுக்கு ராஜா; இயேசு அல்ல” என்று யூதர்கள் சத்தமிட்டு சொன்னதும் (யோ19 :12,15,16), பிலாத்து, ரோம ராயனுக்குப் பயந்து சிலுவை யிலறைய ஒப்புக்கொடு த்தான். மட்டுமல்ல.. சிலுவையின்மேல், “நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா” என்று எழுதினான். இதைத்தான் ரோமன் கத்தோலிக்கர், இலத்தீன் பாஷையில் INRI (“Jesus of Nazareth, Rex of Jews”) என்று சிலுவை களில் போடுகிறார்கள். ஆக, சிலுவை யிலறைய ரோம சர்க்கார் ஒப்புக்கொண்டது என்பதை நம் வேதம் சொல்வது மட்டுமல்ல.. ரோம சாம்ராஜ்ய சரித்திரத் திலும் சொல்லப்பட்டுள்ளது; உலகமே ஒப்புக் கொண்ட சரித்திரத்திலும் இது இடம் பெற்று, நமது கல்விக் கூடங் களிலும் போதிக்கப்படுகிறது. எனவே இயேசு சிலுவையிலறையப்பட்டது உண்மையிலும் உண்மை.
இஸ்லாமியர்கள் சொல்லுகிறார்கள்: “இயேசுவை மரிக்கவிடாமலே அல்லா அவரை வானத்திற்கு எடுத்துக்கொண்டார்” என்று. இயேசு மரித்தார் என்று அறிந்து கொண்டுதான், அவரின் சரீரத்தை, யோசேப் பிடம் பிலாத்து ஒப்புவித்தான் (மாற்15:43, 44,45; மத்27:58; யோ19:31-34). கொல்லவே இயேசு சிலுவையில் அறையப் பட்டிருக்க, அவரை அல்லா எடுத்துக்கொண்டு போயிருந்தால் அந்த  விபரம் ரோம சரித்திரத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டு மல்லவா? இல்லையே! யூதர்களும் கண்டு அறிக்கையிட்டிருக்க வேண்டுமல்ல வா! அப்படியும் இல்லையே! சரித்திரப் பூர்வ மாகவும், வேதம் மூலமாகவும், இஸ்லாமி யரின் கருத்துக்கு ஆதாரமே இல்லை. ஒரு சில இஸ்லாமியரின் கருத்து: “இயேசுவுக்குப் பதிலாக அவரைப்போன்ற இன்னொருவர் தான் சிலுவையிலறையப்பட்டார்” என்பது காவல்துறையில்-அதுவும் விசேஷமாய் உளவு துறையில் பேர்போன ரோம சர்க்காருக்கு இந்த ஆதாரமில்லாத செய்தி மரியாதைக் குறைவைத்தான் உண்டாக்கும். மேலும், எந்த யூதர்கள் அவரை சிலுவை யிலறைந்து கொல்ல நினைத்தார்களோ, அதே யூதர்களே பிலாத்துவின் ஒப்புதலோடு அவரின் கல்லறையை முத்திரைபோட்டு காவல் காத்தார்கள் (மத்27:62-66) என்பதை இன்றுவரை யூதர்கள் யாரும் மறுக்க வில்லை என்பதால் அவர் மரித்து அடக்கம் பண்ணப்பட்டார் என்பது உண்மை யிலும் உண்மையே! மேலும், நாத்திகர் களும் இயேசு மரித்தார் என்பதை ஏற்கி றார்கள்; மறுக்கவில்லை.
மேலும், கல்லறையைப் பார்க்க வந்த ஸ்திரீகளுக்கு முன்னாலேயே கல்லறை யின் கல்லை தேவதுôதன் புரட்டினான்; அவர் உயிர்த்தார் என்று சொன்னான். உயிர்த்த இயேசுவும் அவர்களுக்கு முன்னே வெளிப் பட்டார் (மத்28:4-9). இவ்வளவையும் கண்களினால் கண்ட காவற்சேவகர்கள் பிரதான ஆசாரியரிடம் சொன்னார்கள்; சேவகருக்கு பணம் கொடுத்து, சீடர்கள் இயேசுவை திருடிக் கொண்டு போய்விட்டார் கள் என்று சொல்ல வைத்தார்கள். எனவே இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள் வரைக்கும் பிரசித்தமாயிருப்பதால், (மத்28:11-15) இயேசு கல்லறையில் இல்லை; வெளியேறினார் என்பது வெள்ளிடை மலை யாயிருக்கிறது; கொன்றவர்களே இன்று வரைக்கும் அதற்கு சாட்சி. சீஷர்கள் திருடினார்கள் என்பது உண்மையானால்: (1)கல்ல றை திறந்துதானே இருக்கவேண்டும்! மூடப்பட்ட கல்லறையை அல்லவா துôதன் திறந்தான்! (மத்28:2) (2) மூடியிருந்த கல் மிகவும் பெரிய கல்; சீஷர்கள் அந்தப் பெரிய கல்லைப் புரட்டுவது சேவகனுக்கு தெரியா திருக்க ஞாயமில்லையே! (மாற்14:6) (3)திருடிக்கொண்டு போகிறவர் கள் சுற்றி யிருந்த சீலையோடு அல்லவா துôக்கிக் கொண்டு ஓடியிருக்க வேண்டும்! ஆனால் சுற்றிய சீலைமட்டும் கல்லறை யில் இருந்ததே எப்படி? (லுôக்24:12;யோ 20:5,7). பகுத்தறிவுள்ளவர்களின் சிந்தனைப் படி, இயேசுவை சீஷர்கள் திருடிக்கொண்டு போனார்கள் என்பது நம்பத்தகுந்தது அல்ல. எப்படியோ இயேசு மூடிய கல்லறையிலிருந்து வெளியேறி யிருக்கிறார்; சொன்னபடியே மரித்து, சொன்னபடியே உயிர்த்தெழுந் திருக்கிறார். அல்லேலுôயா!
உயிர்த்தெழுந்த இயேசு பரமேறு முன்னே 40 நாட்கள் பலருக்கு காட்சி தந்து தன் உயிர்த்தெழுதலை நிரூபித் திருக்கிறார் என்று வேதம் சொல்லு கின்றது. (1)மகதலே னா மரியாளுக்கு (யோ20:11-18) (2)தேவதுôதனின் செய்தியைக் கேட்டு கல்ல றையை விட்டு வந்த ஸ்திரிகளுக்கு (மத்28:8-10) (3)பேதுருவுக்கு (லுôக்24:34) (4)எம்மாவூர் சீஷர்களுக்கு (லுôக்24:13-32) (5)தோமா அல்லாத மற்ற சீஷர்களுக்கு (லுôக்24: 36-43) (6)அடுத்த ஞாயிறு  தோமாவோடு இருந்த சீஷர்களுக்கு (யோ20:26-31) (7)கலிலேயா கடற்கரை யிலே (யோ21) (8)50க்கும் மேற்பட்ட சகோதரர்களுக்கு (மத்28:16-20) (9)இயேசு வின் சகோதரனான யாக் கோபுக்கு (1கொரி 5:7) (10)ஒலிவமலையில் பரமேறிய போது (அப்1:3-12). பரமேறிய பின்னே (1)பவுலுக்கு (1கொரி15:8) (2)ஸ்தே வானுக்கு (அப்7:55, 56) (3)பத்மு தீவில் யோவானுக்கு (வெளி1)
இயேசுவின் மரணத்தையும் உயிர்த் தெழுதலையும் இல்லை என்று போதிக்கும் இஸ்லாமியரின் குரான் அத்தியாயம் 19:33ம் வசனத்தில், குழந்தை இயேசு பேசிய வார்த்தையைப் பாருங்கள்: ""நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும், நான் உயிருடன் எழுப்பப்படும்நாளிலும் என்மீது ஸலாம் இருக்கிறது''. இயேசுவே  இப்படிச் சொன் னாரென்று குரானிலே எழுதி வைத்துவிட்டு, அதை மறைத்துப் பேசுவது எவ்வளவு பெரிய பாவம்? சிந்தியுங்கள். இயேசு அல்லாவின் வார்த்தை என்றும் (குரான் 3:39;3:45;4:71), அவர் அல்லாவின் உயிர் என்றும் (குரான்4:171; 21:91;66:12) சொல்லியிருக்க இவர் நிச்சயமாய் தேவ னென்றும், தான் சொன்னபடியே மரித்து, உயிர்த்தார் என்றும் தெளிவாய் விளங்கு கிறோம். மரணத்தை, தேவனைத்தவிர வேறுயாரும் ஜெயிக்க முடியாது என்பது ஊரறிந்த உண்மை. ஆமென்.மேலும், குரான்4:159ல் ""வேதமுடை யோரில் ஒவ்வொரு வரும், அவர் மரணிப்பதற்குமுன், அவரை நம்பாமல் இருக்கமாட்டார்கள்'' என்று உள்ளதால், வேதத்தில் யோ5:39ல் சொன்னபடி வேத வாக்கியங்களை ஆராய் ந்து பார்ப்போர் ஒவ்வொருவரும் இயேசுவின் மரணத்திற்கு முன் கண்டிப்பாய் நம்புவார்கள் எனப் பொருள் தருகிறது. எனவே இயேசு மரித்தார் என்று குரானிலும் உள்ளதை நாம் அறிகிறோம். அதே குரான்4:159வது வசனத்தில் இயேசு, கியாமத் நாளில்-நியாயத் தீர்ப்பின் இறுதி நாளில்-அவர்களுக்கு எதிரான சாட்சி யாயிருப்பார் என்று உள்ளதால், மரித்த இயேசு உயிர்த்து, பரலோகம் போய் மீண்டும் வருவார் என வெளிப்படை யாகவே எழுதப்பட்டுள்ளது. இயேசுவை துôதர் என்று கூறும் இஸ்லா மியர், குரான்3:144ஐ வாசித்தால், துôதர் முகம்மதுக்கு முன் வாழ்ந்த துôதர்கள் எல்லாம், “சென்று விட்டனர்”-அதாவது உலகத்தைவிட்டு கடந்துவிட்டனர்-மரித்து விட்டனர் என்று உள்ளதை அறியலாம். எனவே முகம்மதுக்கு முன் வாழ்ந்த இயேசு வும் மரித்தார் என அறியலாம். ஆக, இயேசு மரித்தார், உயிர்த் தார், மீண்டும் வருவா ரென்று குரானே சொல் கின்றது. மற்றப்படி, இயேசுவின் மகிமைக்கு இழுக்கு உண்டாகும் படி, முகமது, தனது சொந்தக் கருத்தாக சொல்லியிருப்பதை யாரும் ஏற்க வேண்டியதில்லை.
நமது வேதப்படியும், குரான்படியும், சரித்திரப்படியும் நிரூபணமான மரித்த இயேசு, உயிர்த்தார் என்பதற்கு உலக நடை முறைகள் சாட்சியாய் இருப்பதைப் பார்க் கலாம். (1)இயேசுவின் கல்லறை திறந்து கிடக்கிறது. (2)இயேசுவின் மரணத்தை திருவிருந்து ஆராதனை என்றும், நல்லநாள் (Good Friday - Good Day) என்றும் சொல் வதால் அவர் மரித்ததோடு அல்ல உயிர்த்து விட்டார் என்பதன் சந்தோஷமே (3)மரித்த நாளென்று சொல்லி கிறிஸ்தவன் கருப்பு பேட்ஜ் குத்தாததால் மரித்த இயேசு உயிர்த்து விட்டார்; துக்கமில்லை என்று பொருள். (4)ஒரு கிறிஸ்தவனும், உலக சரித்திரத் தலைவர்களின் கல்லறைக்குப் போய் மரியாதை செலுத்துவதுபோல, செலுத் தப் போவதில்லை. ஏன்? அவர் அங்கே இல்லை. (5)அவர் உயிர்த்த வாரத்தின் முதல்நாள், அனைத்து பள்ளிகள், அலு வலகம், தொழிற் சாலைகள் மூடப்படுகின் றனவே ஏன்? அன்றுதான் சங்118:22-24ன்படி உயிர்த்த சந்தோஷத்தின் நாள் (6)இறந்தவர்களுக்குத் தான் சிலை கள் வைக்க வேண்டுமென்பது நம் அரசின் சட்டம். எனவே இயேசுவுக்கு உண்மைக் கிறிஸ்தவர்கள் சிலை வைக்க வில்லை. அவர் உயிர்த்தார். (7)எந்த ஒரு மரித்த தலைவனையும் வருஷத்தில் மரண நாள் பிறந்தநாள் என்று 2நாள் தான் இணைந்து, நினைந்து தொண்டர்கள் கூடுவர். ஆனால் கிறிஸ்துவின் தொண்டர் களோ 52 உயிர்த்தநாளில் கூடுவதால் அவர் மரித்தார்; உயிர்த்தார் என்றுஅறியலாம். மட்டுமல்ல... நமது இந்து சகோதரர்கள்கூட தங்களது கிரியைகளால் தங்களை அறியாமலே இயேசு உயிர்த் தார் என்று பறை சாற்றுகின்ற சில காரியங் களைப் பார்க்கலாம். (1)இந்துக்களில் பாதிப்பேர் மரித்தோரை புதைக்கிறார்கள் ஏன்? இயேசு புதைக்கப் பட்டு உயிர்த்தது போல இவர்களும் உயிரடைவார்கள் என்ற நம்பிக்கையால் (2)புதைத்த பின் மூடிய மண்ணின் மேல் நவதானியம் விதைக் கிறார்களே ஏன்? கோதுமை மணி செத்தா லொழிய முளைக் காது என்ற வசனப்படி இயேசு மரித்து உயிர்த்ததுபோல, இத்தானி யமும் மரித்து உயிரடையும்; அப்படியே உள்ளிருக்கும் மரித்த மனிதனும் இயேசு போல உயிர டைவான் என்ற நம்பிக்கை (3) புதைப்போர் வடக்கு நோக்கி புதைக்கிறார் களே ஏன்? இயேசு வரும்போது, இயேசு உயிர்த்தது போல மரித்தோர் உயிரடை வார்கள் என்ற விசுவாசத்தில் இன்னும் அதிக மாகி, நமக்கு வடக்கே உள்ள ஒலிவ மலை யில் இயேசு இறங்கி வருவார்; அப்போது அதை இந்த கல்லறையில் உள் ளோர் கண்டு இயேசுபோல் உயிரடைய வேண்டும் என்ற நம்பிக்கை (4)புதைப் போரின் மேலுள்ள மாலைகளை கழற்றுகி றார்கள் ஏன்? இயேசுபோல உயிர்த்தெ ழும்போது அசிங்கமாய் எழும்பாதபடிக்கு எல்லாவற் றையும் அகற்றுகின்றனர் (5)3ம் நாள் கறி, மீன் சாப்பிடுவதற்கு காரணம் “இயேசு 3ம் நாள் உயிர்த்தார்” என்பதாலே (இஸ்லாமியர் அடக்கம் பண்ணிய அன்றே)  இன்னும் ஏராளம் சொல்லிக் கொண்டே போகலாம்.
இதை வாசிக்கும் தேவபிள்ளையே! இயேசு மரித்தார்; உயிர்த்தார்; ஜீவிக்கிறார்; மீண்டும் வருவார் என்று விசுவாசிக் கிறோம்! வேதமும், சரித்திரமும், குரானும்; புறஜாதி யாரின் கிரியைகளும், உலக நடை முறை களும் சாட்சியாயிருப்பதை அறியுங் கள். சொன்னபடியே பிறந்த இயேசு, சொன்ன படியே மரித்தார்; சொன்னபடியே உயிர்த்தார்; சொன்ன படியே மீண்டும் வருவார்; நம்மை அழைத்துச் செல்வார். அல்லேலுôயா!

3.""தந்தை சொல்மிக்க மந்திரமில்லை'' இது புறஜாதியானுக்கா? உனக்கா?

உலகிலே வாழும் இந்துக்கள், முஸ்லீம்கள், புத்தர்கள் போன்ற புறஜாதியா ரெல்லாம், தங்களின் பிதாக்களின் வார்த் தைகளை மந்திரமாய் எடுத்துக் கொண்டு கீழ்ப்படிந்து நடக்கிறார்கள். எவ்வளவுபெரிய ஐ.ஏ.எஸ் ஆபீசராக இருந்தாலும், பெற் றோர் சொல்படி, அமாவாசை, ராகுகாலம், எமகண்டம், நல்ல நாள், கெட்டநாள், சகு னம், நட்சத்திரம், வாஸ்து போன்ற பல காரியங்களை அப்படியே நம்பி கீழ்ப்படிந்து செயல் படுகின்றனர். செவ்வாய் கிரகத்தை கண்டடைந்தாலும், பெற்றோர் மூலம் பெற்றவை களை விட்டுவிடாமல், கல்லு களையும், கட்டைகளையும், ஐம் பெரும் பூதங்க ளையும் வணங்குகின்றனர்; தோப்புக் கரணம் போடுகின்றனர். இவை களை நேரடியாய்ப் பார்க்கிற நீ அவர் களின் கீழ்ப்படிதலைப் பற்றி சிந்திக் கிறாயா?
பவுல் எழுதுவதைப் பாருங்கள்: “அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப் பிரமாணத் தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாண மில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங் களே நியாயப் பிரமாணமாயிருக்கிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சியும்கூட சாட்சி யிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்ற மில்லையென்று அவர்களுடைய சிந்தனை கள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற் கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதெ ன்று காண்பிக்கிறார்கள்”. நியாயப் பிரமா ணத்தின் மூலாதாரமாகிய, தேவன் பேரில் அன்பு, மனுஷர்பேரில் அன்பு (மத்22:35-40) போன்றவைகளை, ஏதோ ஒரு வழியி லே, தங்கள் பெற்றோர்-பிதாக்கள்-போதித்த படி கீழ்ப்படிந்து புறஜாதியார் செயல் படுகி றார்கள். அது சரியா தவறா என்று சிந்தி யாதபடி, அப்படியே கைக் கொள்கிறார்கள். இப்படித்தான், பிதாக்களின் வார்த்தைக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று சாலமோன் ஞானியும் எழுதுகிறான் (நீதி4:1; 3:1; 1:8; 5:1). புறஜாதியார் பகுத்தறிவில்லாமல், முயலுக்கு 3கால் என்பதுபோல பிதாக்க ளின் வார்த்தைப்படி அப்படியே நடக்கிறார்கள். நாமோ, பகுத்தறிவுள்ள வர்களா யிருந்து, யூதா 22-25ன்படி செயல்பட்டு வருகை யிலே சேர்ந்து கொள்ளவேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
பகுத்தறிவில்லாமல், நம் தேவனை வணங்காதிருக்கும் ரேகாபியர், இப்படியாய் தங்களின் தகப்பனாகிய யோனதாபின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பதை எந்த அளவிற்கு நம் தேவன் மெச்சுகிறார் என்பதை எரே35ல் வாசியுங்கள். மோசே யின் மைத்துனனான, ஓபாபின் வழி வந்தவர்கள் இந்த ரேகாபியர் (எண்10:29; with நியா1:16; 4:11-17). யேகோவா தேவனை வணங்காமல், யூதா விலுள்ள வனாந்திரத்தில் தங்கினார்கள். நம் தேவனுக்கு விரோதியான யோனதாப் (2ராஜா10:15-17) என்பவனின் வார்த்தைப் படி கீழ்ப்படிந்து நடந்தார்கள். இதை தேவனே கண்டு, அவர்களின் நிலையை இஸ்ரேலருக்கு காட்டும்படியாய் அவர்களை சோதனை நிலையில் எரேமியாவை வைக்கச் சொன்னார். அதன்படி, திராட்ச ரசத்தினால் நிரப்பப்பட்ட குடங்களையும், கிண்ணங்களையும், அவர்களின் முன்னே வைத்து குடியுங்கள் என்றபோது, “நாங்கள் குடிக்கிறதில்லை; எங்கள் தந்தையின் சொற்படி கீழ்ப்படிந்து செயல்படுகிறோம்: பரதேசியாய் வாழ்கிறோம்; வீடு கட்டுவதில் லை; விதை விதைப்பதில்லை; திராட்சைத் தோட்டத்தை நாட்டுவதில்லை; கூடாரங் களில் குடியிருக்கிறோம்” (எரே 35:4-11) என்று பதிலுரைத்தார்கள். ""தந்தை சொல் லுக்கு ரேகாபியர் கீழ்ப்படிந்து நடக்கி றார்கள்; இஸ்ரேலர்களோ ஆவிக்குரிய தகப்பனாம் ஆண்டவனின் வார்த்தைக ளைக் கேட்டு, புத்தியை ஏற்றுக் கொள்கிற தில்லையோ?” என்று நம் தேவன் கேட்கிற சத்தம் (எரே35:13) உன் காதில் விழுகிற தா? ரேகாபியர் கீழ்ப்படிந்த காரியம்சரியோ தவறோ;ஆனால்அவர்கள்பிதாக்களின் சொற்படி செயல்படுகிற அந்த கீழ்ப்படி தலை மெச்சி, அவன் சந்ததி நிலைத்தி ருக்கும் என்று தேவன் சொல்கிறார் (எரே35:18,19). இதை வாசிக்கும் தேவபிள்ளையே! கீழ்ப்படிதலை எந்த அளவுக்கு தேவன் எதிர் பார்க்கிறார் பார்த்தாயா? அஞ் ஞானி களுக்கே இந்த ஆசீர்வாதம் என் றால், அவருடைய சொந்த ஜனம்-புத்தி ரன்-அவருடைய ஞானவார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து நடந்தால் எவ்வளவு பெரிய ஆசீர்வாதம் கிடைக்கும் தெரியுமா? கீழ்ப் படிந்தால், தேவனுக்குரியது நமக்கு; நமக்குரியது தேவனுக்கு. அல்லேலுôயா! ஏதேன் தோட்டத்திலே ஆதாமும் ஏவாளும் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப் படியாமல், பிசாசின் வார்த்தைப்படி செயல் பட்டதால் அல்லவோ சாபங்களையும் தண்டனைகளையும் பெற்றார்கள்; அது இன்றுவரை உலகத்தை ஆள்கிறது; அதிலி ருந்து இரட்சிக்கவே தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டு, இரத்தம் சிந்தி மரித்து, கீழ்ப்படிதலை நமக்கு கற்றுக் கொடுத்து, நமது சாபங்களையும் தண்ட னைகளை யும் சிலுவையிலே சுமந்து தீர்த்தார். அல்லேலுôயா! ஆனாலும் இன்னும் சிலர், தேவன் வியாதியை, வறுமையை, அகால மரணத்தை, சோதனையை கொடுக்கிறார் அல்லது அனுமதிக்கிறார் என்று போதிக்கி றார்கள்; சபையாரும் ஆமென் போடுகி ன்றனர். இவர்களுடைய மனக் கண்கள் பிரகாச மடைய ஜெபிப்போம் (எபே1:19).
ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் தேவ னே நமக்கு முன் வைத்திருக்கிறார் (உபா 11:26-28;30:15,19). நம்முடைய கீழ்ப்படித லினால் ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக் கொள்ளலாம்; கீழ்ப்படியாமையினாலே சாபத்தை சுதந்தரித்துக் கொள் ளலாம். ஆசீர்வாதமும் சாபமும் நம்முடைய கிரியைகளினாலே வருகிறது. இவைகள் நிபந்தனைக்குட்பட்டது (conditional). உபா 28ஐ வாசித்தால் ஆசீர் வாதங்கள் மற்றும் சாபங்களின் பட்டியலைப் பார்க்கலாம். வேதம் முழுவதும் எவையெல்லாம் சாபங் கள், எவையெல்லாம் ஆசீர்வாதங்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆசீர்வாதத்தை தேவன் வெறுமனே துôக்கிக் கொடுப்பதில்லை. நமக்கு முன்னே வைத்திருக்கிறார். நாம் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் வேதத்தில், ஆசீர் வாதம் கிடைக் கும் போதெல்லாம் தேவன் ஆசீர்வதிக்கி றார் என்று எழுதப்பட்டுள்ளது. அப்படி யே நாமே, வசனவிரோத-கீழ்ப்படியாமை யினால் எடுத்துக் கொள்ளப்படும் சாபத் தை, தேவன் கொடுத்தார் என்றும் எழுதப் பட்டுள்ளது. இப்படி விரோதமாய் பழைய ஏற்பாட்டு எழுத்தாளர் களே எழுதுகிறார்கள். உதாரணமாய், தரித்திரம், வியாதி, கடன் பிரச்சனை, மலடு, எதிரிகளால் அழிவு, வற ட்சி, அகாலமரணம் போன்றவை களெல் லாம் சாபம் என்றும், இவைகளை எல்லாம் கீழ்ப்படியாமையினாலே மனிதனே சுதந் தரித்துக் கொள்கிறான் என்றும் அறிந்து கொண்டால், பழைய ஏற்பாட்டு எழுத்தா ளர்கள், சாபத்தை தேவன் கொடுத்தார் அல்லது தேவன் கொடுப்பேன் என்று சொல்கிறார் என எழுதுவதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
புரியாமலே, புறஜாதியார், அவர்கள் பிதாக்களின் வார்த்தைப்படி கீழ்ப்படிந்து நடக்கும்போது, இரட்சிக்கப்பட்டு தேவ பிள்ளையாய் ஜீவிக்கும் நீ நமது ஆவிக்கு ரிய தகப்பனாம் ஆண்டவனின் வார்த்தைப் படி கீழ்ப்படிந்து நடந்து, ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக் கொள்ள வேண்டுமல்லவா! வசனமுள்ள வாழ்வு வளமான வாழ்வு; வசனமில்லாத வாழ்வுவிசனமானவாழ்வு! சாட்சியாய் இருக்கவேண்டிய நீ, இம்மை யிலே 100 மடங்கு ஆசீர்வாதத்தை பெற வேண்டிய நீ இஸ்ரேலரைப் போல கீழ்ப் படியாமையினாலே சின்னா பின்ன மாய்ப் போகாத படிக்கு, வசன விசுவா சத்தில் நிலைத்திரு! கீழ்ப்படிதலைக் கற்றுக் கொள்! கீழ்ப்படிதான் வாழ்க்கைக்கு மேல் படியைத் தரும். ஆமென்! ""தந்தை சொல் மிக்க மந்திரமில்லை'' என்பது உனக்குத் தான்