விசேஷ செய்திகள்


"விசுவாச முழக்கம்" என்ற மாதந்திர பத்திரிகையில் வரும் செய்திகளை இங்கு அளித்திருக்கிறோம். உங்களுக்கு இப்பத்திரிகை வேண்டுமானால் எங்களுக்கு கடிதம்/மின்னஞ்சல்/SMS/தொலைபேசி மூலமாக தொடர்புகொள்ளலாம். 

ஜனவரி 2011 - விசேஷ செய்திகள்

March 3, 2011

1. ஆவியானவர் ஆள்தத்துவமானவரா?

                    ஒரே தேவன், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற மூன்று ஆள்தத்துவமாயி ருக்கிறார் என்று ஒரு பிரிவினரும், ”பிதாதான் குமாரன்;  பிதா தான் பரிசுத்த ஆவி; ஒரே ஆட்தத்துவமுள்ள தேவன் மூன்று பெயரில் செயல்படுகிறார்” என்று ஒரு பிரிவினரும்,”பிதா,குமாரன் என்ற இரண்டு ஆட்தத்துவம் உண்டு;ஆனால் பரிசுத்த ஆவியானவர் ஒரு சக்தியே” என்று ஒரு பிரிவினரும், “பிதாதான் தேவன்; இயேசு சிருஷ்டிக்கப்பட்டவர்; பரிசுத்த ஆவியானவர் என்பது ஒரு சக்தியே” என்று ஒரு பிரிவினரும், கிறிஸ்த வம் என்ற போர்வையில் செயல்படுவதை நாம் கண்கூடாய்க் காண்கின்றோம். இப்படி பல தரப்பட்ட பிரிவினைகள் மத்தியில் வேதம் ஆவியானவரைப் பற்றி என்ன சொல்கின்றது என்பதை ஆவியா னவர் நமக்கு வெளிப்படுத்துவாராக!
                   ஆவியானவர் ஆள்தத்துவமானவரா அல்லது ஒரு சக்தியா? இதுதான் இம்மாதச் செய்தி
                    (1)அவர் சிருஷ்டிப்பவர்;ஜீவனைத் தருபவர் (யோபு33:4). (2)ஊழியக்காரர்களை தம்முடைய ஊழியத்திற்கென்று நிர்ணயம் பண்ணி, நடத்தி வைக்கிறார் (அப்13:2). (3)எங்கு போய் போதிக்க வேண்டும் என்று வழிகாட்டுகிறார் (அப்8:29;10:19,20). (4)சில இடங் களுக்குப் போய் ஊழியம் செய்ய வேண் டாம் என்று தடை செய்கிறார் (அப்:16:6,7). (5)என்ன போதிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறார்(1கொரி2:13). (6)தீர்க்கதரிசனங்களை தீர்க்க தரிசி களுக்குள்ளிருந்து வெளிக் கொணர்கிறார் (அப்1:16; 1பேது:1:11). (7)பாவிகளோடு போராடுகிறார்(ஆதி6:3; ஏசா63:10). (8)போதிக்கிறார் (யோ14:17). (9)வரங்களை தமது சித்தத்தின் படியே பகிர்ந்து கொடுக்கிறார் (1கொரி 12:11). (10)பரிசுத்த வான் களுக்குள்ளே வாழ்கிறார் (யோ14:17; 1கொரி:6:19). (11)இயேசுவைக்குறித்து சாட்சி கொடுக்கிறார் (யோ15:26). (12)கண்டிக்கிறார் (யோ16:8). (13)வழிகாட்டியாய் இருக்கிறார் (யோ16:13). (14) இயேசுவை மகிமைப் படுத்துகிறார் (யோ16:14). (15)இவரைப் பரீட்சை பார்க்க முடியும் (அப்5:9). (16)இவரை எதிர்த்து நிற்கமுடியும் (அப்7:51). (17)தேற்றரவாளனாயிருக்கிறார் (அப்9:31). (18)நமது பெலவீனங்களில் உதவி செய்கிறார் (ரோ8:26). (19)நம்மை பரிசுத்தமாக்குகிறார் (ரோ15:15,16; 1கொரி;6;11). இன்னும் ஏராளம் சொல்லிக் கொண்டே போகலாம். இவ்வளவு காரியங்களையும் செய்கிறவர் ஒருஆள் தத்துவ மானவராயில்லாமல் எப்படி ஒரு சக்தியாய் இருக்கமுடியும்? சிந்தியுங்கள்! 
                    மேலும் இந்த ஆவியானவர் கர்த்தரே என்று 2கொரி3:17-ல் சொல்லப்பட்டுள் ளது. பிதாவாகிய தேவனும் கர்த்தர்; வார்த்தையாகிய தேவனும் கர்த்தர். ஆமென். மத்28:18,19ன்படி, இவர் தேவத்துவத்தில் ஒருவர் என்றும், தேவனுக்கு சமமானவர் என்றும் அறிகி றோம். மட்டுமல்ல.. சபையிலே நாம் ஆசீர் வாதம் அளிக்கும் போது பிதாவையும், இயேசுகிறிஸ்துவையும், பரிசுத்த ஆவியா னவரையும் சமமாய் சொல்கிறோ மல்லவா!(2கொரி13:14). அப்5:3,4ஐ வாசித்தால் பரிசுத்த ஆவியாகிய தேவன் என அறிகிறோம். வார்த்தையாகிய தேவனாகிய இயேசுவை, மனிதனாய் கருவாக-உருவாக வைத்தவர் பரிசுத்த ஆவியானவர் என்பதால் இவர் தேவன் தானே! வார்த்தையாகிய தேவனும், பரிசுத்த ஆவியாகிய தேவனும் உரையாடு வதை சக1:7-2:17ல் வாசிக்கும் போது, இவர் ஆட்தத்துவமான தேவன்தான் என்று உறுதியாய் சொல்லமுடியும். புது சிருஷ்டிப்பை-ஆவிக்குரிய இரட்சிப்பை-மறுபிறப்பை ஆவியானவர் கொடுப்பதால் (யோ3:3,5) அவர் தேவன் தாமே!
                    மட்டுமல்ல.. வேதமே இவரால் ஏவப்பட்டுதான் எழுதப்பட்டிருக்கிறது (2தீமோ3:16&2பேது1: 21) என்பதால் இவர் ஆள்தத்துவமான தேவன்தான். இவர் எங்கும் நிலைத்திருப்பவர்(Omnipresent)    சங்139:7-13; சர்வவல்லமையுள்ளவர் (லுôக்1:35; ரோ15:13,19); சகலத்தையும் ஆராய்ந்து அறிந்தவர் (1கொரி 2:10). 
                    இப்படிப் பட்டவரின் குணாதிசயங் களை, மேன்மையை, சிறப்பை பல உவமானங்களினால் சொல்லப் பட்டிருக் கிறது. (1) தண்ணீர் (2)நெருப்பு (3) காற்று (4) எண்ணெய் (4) மழையும் பனியும் (6) புறா (7) சத்தம் (8) முத்திரை. எனவே சர்வ வல்லவரான ஆவியானவர் ஆட்தத்துவ மானவர்தான் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை. ஆமென். 
                    மேலும் தேவன் என்ற வார்த்தை (ஆதி:1:1) மூல எபிரேய பாஷையில் ஏலோஹிம் என்று உள்ளது. நம் மொழியில் ஒருமை என்றும், ஒன்றுக்கு மேற்பட்ட எல்லாமே பன்மை என்றும்தான் உள்ளது. ஆனால் எபிரேய பாஷையிலே,ஒன்று, இரண்டு, இரண்டுக்கு மேற்பட்ட பன்மை என்று மூன்று பிரிவாய் உள்ளது. இதிலே ஏலோஹிம் என்ற வார்த்தை இரண்டுக்கும் மேற்பட்டவர்களைக் குறிக்கிறது என்பதால், தேவன் என்ற வார்த்தை மூன்று நபர்களை கண்டிப்பாய் குறிக்கிறது என்றும், வேதவார்த்தைகளை தியானிக்கும்போது அது, பிதா, குமாரன், பரிசுத்தஆவி ஆகிய மூவரையும் குறிக்கிறது என்றும், ஆவியான தேவன் ஆட்தத்துவமுள்ள வர்தான் என்றும் உறுதிப்படுத்தி விசுவா சிக்க முடியும். அல்லேலுôயா! 1யோ:5:7; மத்: 3:16,17; யோ:16:5-7 போன்ற பல வசனங்களை தியானித்தால் ஒரே தேவன் மூன்று ஆள்தத்துவமாய் இருக்கிறார் என்றும், அதிலே பரிசுத்த ஆவியானவரும் ஆள் தத்துவமானவர்தான் என்றும் அறியலாம். 
                    Father is He who brings forth salvation;Son is He who arranges or executes that wgich the Father brings forth salvation;Holy Spirit is He who applies to the that which was provid

2. 2011-ல் இயேசு வருவாரா?

                    கடந்துபோன 2010ஐ சற்று திரும்பிப் பாருங்கள். எத்தனையோ கஷ்டங்கள், நஷ்டங்கள், கண்ணீர்கள், கவலைகள், வியாதிகள், தரித்திரம். ஆனாலும் தேவன் எல்லா வற்றிலும் ஜெயம் பெறச் செய்து, கிருபையாய் புதிய ஆண்டை காணச் செய்தார். சென்றஆண்டு இருந்த பலர் இந்த ஆண்டு இல்லை. நாமோ பாக்கிய வான்கள். அல்லேலுôயா! கடந்த வருஷத் தை மறந்துவிட்டு, நாம் இரட்சிக்கப் பட்ட நாளை-வருஷத்தை- நினைவு கூறுங்கள். 
                    வேதத்திலே தேவன் யாரை எல்லாம் தெரிந்து கொண்டார் தெரியுமா? போரடித்த கிதியோன், கழுதையை தேடிய சவுல், ஆடு மேய்த்த தாவீது - மோசே, மீன் பிடித்த பேதுரு, கிறிஸ்தவர்களை கொல்லப்போன சவுல், இப்படியாய் ஏராளமானோர். நம்மையும், நாம் வியாதியில் கிடக்கும் போது, தரித்திரத்தில் தவிக்கும்போது, தோல்வியில் துவளும்போது, கைவிடப்பட்ட நிலையில், நிம்மதியில்லாத நேரத்தில், நாத்திகனாய் இருந்தபோது அந்நிய தெய்வங்களின் பிடியில் கிடந்த போது தேவன் கண்டெடுத்தார்; இரட்சித்தார்; தன்னுடைய பிள்ளையாக்கினார். அல்லே லுôயா! இப்படியாய் நம்மை இரட்சிக்க-காப்பாற்றத் தான் வார்த்தையாகிய தேவன் 2011 ஆண்டுகளுக்குமுன் இயேசுவாய் இப்பூமிக்கு வந்தார். அதுவும் சொன்ன படியே வந்தார்; சொன்னபடியே மரித்தார்; சொன்னபடியே உயிர்த்தார்; சொன்னபடியே பரலோகம் போயிருக்கிறார்; சொன்னபடியே மீண்டும் வருவார். அல்லேலுôயா! வருகிற வர் 2011-ல் கூட வரலாமே ! வெளிச்சத்தின் பிள்ளைக ளாயிருக்கிற நாம் உலக நிலையையும், காலத்தையும், நேரத்தையும் பார்க்கும்போது (1தெச:5:1-6) 2011-லேயே இயேசு வருவது சாத்தியமாய்த் தோன்று கின்றது. அந்த  தேவனை, இந்த ஆண்டிலே சந்திக்க ஆயத்தமா? கைவிடப்பட்டாயானால், அந்திக் கிறிஸ்து வின் 7ஆண்டு அட்டகாச ஆட்சி, தேவனின் கோபாக்கினை போன்றவை களில் மாள வேண்டும், மடிய வேண்டும். 
                    வேதத்திலே இரட்சிக்கப்பட்ட-அழைக்கப் பட்ட அநேகர் தங்கள் மாம்ச இச்சை களினால், பாவத்தால், கீழ்ப்படியாமையால், மேட்டிமை யால், வசனத்தை மீறி நடந்த மையால், விழுந்து போனார்கள், அப்படி விழுந்துபோன பலர் எழுந்ததாக சரித்திரமே இல்லை. நீதிமான் 7 தரம் விழுந்தாலும் எழுந்தரிப்பான். ஆனாலும் அந்தோ பரிதாபம் சவுல் என்பவன் கீழ்ப்படியாமையால், மக்கள் மத்தியில் கிடைக்க வேண்டிய பெருமையால் வீழ்ந்து போனான். அப்படியே இச்சையால், அந்நிய நுகப் பிணைப்பால், வீழ்ந்து போனான் ஞானி சாலமோன்; பொருளாசை யால் அப்போஸ் தலன் யூதாஸ்காரியோத்து வீழ்ந்து போனான்;  இவர்களொல்லாம், பரம அழைப்பின் பந்தயப் பொருளை இழந்து போனார்கள்; நித்திய ஜீவனை இழந்து போனார்கள்; தேவ உறவை, பாதுகாப்பை, ஆசீர்வாதத்தை, இழந்து போனார்கள்; எப்போதும் நம்முடைய தேவனுக்குப் பிடிக்காதது விக்கிரக ஆராத னையும், அந்நிய நுகப்பிணைப்பும் தான். விபச்சாரம். பொருளாசை போன்ற எல்லாமே இதிலே அடங்கிவிடும். இதை வாசிக்கும் தேவ பிள்ளையே! நீ எப்படி இருக்கிறாய்? இயேசு கீக்கிரம் வருகிறார்! நீ ஆயத்தமா?
                    2011-க்கு முன் நம் இயேசு இரட்சகராய் வந்தார். இப்பொழுதோ, நியாயாதிபதியாய், பட்சிக்கிற அக்கினியாய் வருகிறார் (வெளி: 22:12; 2கொரி:5:10). அந்த நாள் மிக கொடிய நாள்!  2011ல் உன்னையும் என்னையும் அழைக்க ""இரகசிய வருகை'' நடந்தால், மேலே சொன்ன தீங்கிலிருந்து தப்பிக்க (ஏசா57:1)நீ ஆயத்தமா? 
                    ஒரு குதிரை வண்டிக்குள்ளே ஒரு சிறு பையன் விளையாடிக்கொண்டிருந்தான். திடீரென அந்தப் பகுதியிலே துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு குதிரையானது வண்டியோடு ஓட்டமெடுத்து, செங்குத்தான மலைமேல் ஏறி கீழே விழுந்துபோகிறநிலை; உள்ளிருக்கும் சிறுவன் அழுகையும் கதறலுமாயிருக் கிறான். அந்தப் பையனின் சத்தம் கேட்டு, அந்தப் பகுதியிலே மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவன், ஓடோடி வந்து, வண்டியைப் பிடித்திழுத்து நிறுத்தி, பையனைக் காப்பாற்றி னான். நாட்கள் கடந்தன. வண்டிக்குள்ளிருந்த சிறுவன் வாலிபனாகி, குடிவெறியில் ஈடுபட்டு, கொலை செய்து, கோர்ட்டில் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறான். நீதிபதி அவனுக்கு துôக்குத் தண்டனை விதித்தார். அப்போது அவன், நீதிமன்றமே பார்க்கும்படி, குற்ற வாளிக் கூண்டிலிருந்து ஓடிவந்து நீதிபதியின் காலில் விழுந்து “ஐயா! என்னைத் தெரிய வில்லையா! நீங்கள் காப்பாற்றின ஜீவன் நானே! இப்போதும் என்னைக் காப்பாற்      றுங்கள்” என்று கெஞ்சினான். கொஞ்சம் கொஞ்சமாய் ஞாபகத்தை வரவழைத்துக் கொண்ட நீதிபதி, ""தம்பி, அன்று நான் இரட்சகராய் வந்தேன். காப்பற்றினேன்; மீட்டேன்; இன்று நான் நியாயாதிபதியாய் நிற்கிறேன். என்னால் உன் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது” என்றார். இப்படித் தான், இயேசு நியாயாதிபதியாய் வரப் போகிறார்! அன்றைக்கு இரட்ச கராய் வந்தார்! நித்திய ஜீவனைத் தந் தார்.மறுபடியும் பட்சிக்கிற அக்கினியாய் வருவாரே! அப்பொழுது யாருக்கும் போக்குச் சொல்ல இடமில்லை; தப்பித்துக் கொள்ள வழியில்லை. அதுதான் 2ம் வருகை பகிரங்க வருகை. 
                    அவரின் இரகசிய வருகையிலே கல்ல றைகள் திறக்கப்படும்; கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்தரிப்பார்கள்; பிறகு உயிரோடிருக்கும் நாமும் மறுரூபமா வோம். இந்த விசுவாசத்தில்தான் ஆபிர காம், தேவனின் கானான் தேசத்திலே கல்ல றை வாங்கினான்; தானும் சாராளும் அடக்கம் பண்ணப்பட்டார்கள். ஈசாக்கும் அங்கேயே அடக்கம் பண்ணப்பட்டான். எகிப்திலிருந்த யாக்கோபு தன்னை தேவனின் தேசத்திலே-பாலஸ்தீனா விலேதான் அடக்கம் பண்ண வேண்டி னான். எகிப்தில்-பாபிலோனில் வாழ்ந்த யோசேப்புகூட, தன் எலும்பை கானானிலே-பாலஸ்தீனாவிலே புதைக்கச் சொன்னான். அப்படியே இஸ்ரேலர்கள் எகிப்திலிருந்து விடுதலையாகி வரும்போது மறக்காமல்-விசுவாசத்தோடு யோசேப்பின் எலும்பு களையும் கொண்டு வந்தார்கள். ஏன் தேவ மனுஷர்கள் பாபிலோன் பகுதியை விட்டுவிட்டு, பாலஸ்தீனாவில் அடக்கம் பண்ணச்சொன்னார்கள்? அவர்களின் விசுவாசம் “இயேசு வருவார் பாபிலோன் கல்லறைகள் திறக்கப்படாது; தேவன் தந்த பூமியில் உள்ள கல்லறைகள் திறக்கப்பட்டு உயிர்த்தெழுவோம்” என்பதுதான். 
                    இதை வாசிக்கும் தேவ பிள்ளையே! நீ எங்கேயிருக்கிறாய்? எப்படியிருக்கிறாய்? பாபிலோனிலா? பாலஸ்தீனாவிலா? நீ இருக்குமிடம் எங்கே? ஜீவனுள்ளோர் இருக்கும் தேசமாகிய, விடுதலை நாயக னின் கிறிஸ்தவ சபையா? அல்லது இரட்டை வேடம் போடும் கூட்டமா? நீ ஆயத்த மாயிருந்தால் தான் உன் நடை, உடை, பாவனையே மற்றவர்களை கிறிஸ்துவுக்குள் கொண்டுவர முடியும்! நீ குணப்பட்டு மற்றவர்களை ஸ்திரப்படுத்து! (லுôக்22:32). வீழ்ந்து போகாதே! கீழ்ப்படியாமை, பெருமை, இச்சை, அந்நிய நுகப்பிணைப்பு, பொருளாசை எல்லாம் உன்னை அழைக் கிறதா? ஆதி:17:1-லே ஆபிரகாமுக்குச் சொன்னபடி உனக்கும் தேவன் சொல்கிறார் “திடமனதாயிரு”. ஆபிரகாம் அப்படியே வாழ்ந்து காட்டினான். உன் நிலை என்ன? இன்றைய தேவனின் முழக்கம்: “2011-ல் இயேசு வரலாம்!  இரகசிய வருகைக்கு ஆயத்தமாகு! ஆயத்தமாக்கு!” இந்த ஆண்டு முழுவதும் இந்த வார்த்தை உனக்குள் ரீங்காரமிடட்டும்! ஆமென்.

3. புத்தாண்டு கொண்டாட்டம் தேவையா ?

       புத்தாண்டு தேவையா ?டிசம்பர் 31 இரவு 12 மணி முதல், உலகம் முழுவதும், அனைத்து மதத் தாரும், நாத்திகரும் புத்தாண்டுவிழா கொண்டாட ஆரம்பிக்கின்றனர். வேதம் மற்றும் நியாயப் பிரமாணப்படி சூரியன் அஸ்தமனம் ஆன உடனேயே அந்த நாள் முடிந்து, அடுத்த நாள் ஆரம்பமாகிறது. சாயங்காலமும், விடியற்காலமுமாகி ஒவ்வொரு நாளும் முடிந் ததை ஆதி1ல் சொல் வதை வாசியுங்கள். (see லேவி 23:24) மட்டுமல்ல... ஆப்,சீவ், சிவான் போன்று மாதங்கள் இஸ்ரேலருக்கு நியாயப் பிராமாணத்தில் கொடுக்கப்பட்டன. ரோமன் காலண்டர்படி ஜனவரி, பிப்ரவரி என்று மாதங்களும், இரவு  12 மணிக்கு ஒரு நாள் முடிந்து, அடுத்தநாள் ஆரம்பம் என்றும் ஆக்கப்பட்டது. இதை உலகமே ஏற்றுக்கொள்வதால், அதனால் எந்த கிறிஸ் தவ சத்தியமும் கெட்டுப் போகா திருப் பதால்,நாமும் இந்த ரோமன் காலக் கணி ப்பை ஏற்றுக் கொள்கிறோம். மேலும் இந்த வருஷக்கணக்கில் உலக சரித்திர மற்றும் அரசியலறிஞர்களின் ஒப்புதலின் படி, ஜனவரி 1ல் வருஷம் பிறப்பதாகவும், அது கி.பி, கி.மு. என்றும் நடைமுறைப் படுத்தப் பட்டது. கி.மு, கி.பி. என்பது கிறிஸ்து பிறந்த தற்கு பின்,கிறிஸ்து பிறந்ததற்கு முன் என்று அர்த்தமல்ல. கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ் துவுக்கு பின் என்று பொருள். அப்படி இல்லா திருந்தால், கி.பி.1ம் ஆண்டு, ஜனவரி 1ல் தான் இயேசு பிறக்க வேண்டும். சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கி.பி.1ம் ஆண்டு இயேசு பிறந்ததாய் கணிக்காமல், கி.மு. 4ல் இயேசு பிறந்திருக்கலாம் என்று அனுமானிக்கிறார் கள். மேலும், உலக மெங்கும் உள்ள கிறிஸ் தவர்கள் ரோமன் கத்தோலிக்கரின் ஏற் பாட்டுப்படியே, ஜனவரி 1ல் இயேசு பிறந்தார் என்று கொண்டாடாமல் டிசம்பர் 25ல் கொண்டாடுவதையும் சிந்திக்க வேண்டும். இந்த சிந்தனையில் நாம் மேலும் ஆராய் வோம். கிறிஸ்து பிறந்து 2011 ஆண்டுகள் ஆகின்றன என்று உலகமே சொல்லி விழாக் கொண்டாடு கிறார்கள் என்றால் அதுடிசம்பர் 25லேயே கொண்டாட வேண்டு மல்லவா! ஜனவரி 1ல் அவர்கள் கொண் டாடுவது கிறிஸ்து பிறந்ததை அல்ல; கிறிஸ்து வுக்குபின் (A.D) 2011வது ஆண்டு ஆரம்பிக் கிறது என்று தான். ஆக, உலகமே கிறிஸ்து பூமிக்கு வந்து 2011 ஆண்டுகள் ஆகின்றன என்று சாட்சியிடும் போது தேவனுக்கு அது மகிமைதானே! இந்த நிலையில் நாம் ஒன்றை அறிந்து கொள்வோம். காஞ்சி காமகோடி பீடாதி பதிகளின் வேண்டு கோளின்படி முன்னாள் முதல்வர் ஜெய லலிதா அவர்கள் ஜனவரி 1ம் நாளை அலு வலக நாளாக்கினார்கள். (Working Day) அன்று இரவு எந்த இந்துக் கோயில் க ளையும் திறக்க விடவில்லை. ஏன்? காலா காலமாக டிசம்பர் 25 (கிறிஸ்மஸ்)ம் விடு முறைதான்; ஜனவரி 1ம் விடுமுறை தான். டிசம்பர் 25ஐ அலுவலக நாளாக்க வில் லையே ஏன்? டிசம்பர் 25ல் இயேசு பிறந் தாரா என்பதே ஒத்துக்கொள்ள இயலாததது என்பதாலா? அல்லது காந்தி ஜெயந்தி போல கிறிஸ்து ஜெயந்தி என்று கொண்டாடு வதால், கிறிஸ்து தெய்வம் என்ற நிலையில் இல்லா மல் மனிதன் என்ற நிலையில் வைத்து அந்த நாளை எடை போட்டு, அதில் கை வைக்கவில்லையா? சிந்தியுங்கள். ஜனவரி 1ல், இயேசு பூமிக்கு வந்து 2011 ஆண்டுகள் என்று சரித்திர வல்லுநர்கள் சொன்னபடி  கொண்டாடும் போது, தேவன் பூமிக்கு வந்ததை அறிந்தோ
அறியாமலோ பறை சாற்றி, நம் தேவனுக்கு மகிமை வருவதால் அந்த நாள் அலுவலக நாளாயிற்று.
ஆமென். ஆக, புத்தாண்டு விழா எல்லோ ரும் கொண்டாடி, தேவன் பூமிக்கு வந்து 2011 ஆண்டுகள் ஆகின் றன என்று  சொல் வது தேவனுக்கே மகிமை யாவதால் நமக்கும்  சந்தோசம் தானே! (இன்றைய முதலமைச்சர் பழைய படி ஜனவரி 1ம் நாளை விடுறை யாக்கியிருப்பது நாமறிந்ததே)
        இந்த நிலையில், உலகத்தார் போல நாமும் கிறிஸ்துவுக்குப்பின் 2011 என்று சொல்லி, கிறிஸ்துவை முன்னிறுத்தி புத்தா ண்டு விழா கொண்டாடுவதில் தவறில்லை. அந்த விழா ஆத்ம ஆதாய விழாவாய், சுவி சேஷ விழாவாய் இருக்க வேண்டும். மற்றப் படி, முழு இரவு ஜெபம், வாக்குத்தத்த அட்டை வழங்குதல், பிரியாணி, புத்தாடை, பண்டம், பலகாரம், என்பதிலேயே திளைத்து, குடும்பம், உறவினர், நண்பர்கள், என்ற வட்டத்திலேயே பாரம்பரியமாய் அந்த நாளை ஆசரிக்கக் கூடாது. இது தேவன் தந்த விழா அல்ல; இது ரோ 14:21ன் படி ஆசரிக்கப் படவேண்டிய விழா! கண்டிப்பாய் நாம் ஆசரிக்க வேண் டிய விழா, தேவன் தந்த திருவிருந்து பண் டிகை தான் (1கொரி5:7,8). மற்றபடி, சுவி சேஷ ஊழியத்திற்கு என்று இந்த நாளை, ஜனவரி 1ஐ ஆதாயப் படுத்திக் கொள்ளலாம். (ரோ14:6) ஆமென். அல்லேலூயா!

 

டிசம்பர் 2010 கேள்வி-பதில்கள்

January 5, 2011

ரெத்தினம்,மணப்பாறை
(1) இரட்சிப்புக்கான அன்னியபாஷைவேறு, ஆவியானவரின் வரத்தினால் பேசும் அன்னியபாஷை வேறு என்று சொல்கிறீர். வேத ஆதாரம் தரவும். அர்த்த மில்லாமல் பாஷை இல்லையே (1கொரி 14:10)
Answer:
அப்பட...


Continue reading...
 

டிசம்பர் 2010 - விசேஷ செய்திகள்

January 5, 2011

ஆவியானவர் "டிக்டேட்(Dictate)'' பண்ணி எழுதப்பட்டதுதான் வேதமா?
        வேத வாக்கியங்கள் எல்லாம் இரட்சிக்கப் பட்ட தேவ மனுஷன் தேறினவ னாவதற்கு எழுதப்பட்டது. எந்த நற்கிரியையும் செய்யத் தகுதியாக்க எழு...


Continue reading...
 

நவம்பர் 2010 கேள்வி-பதில்கள்

December 4, 2010

ஏ.வி. ராயன், தூத்துக்குடி
(1) 1பேது 2:2ன் படி கிறிஸ்து இவ்வுலகில் பாடுகள் பட்டு பரலோகம் சென்றது போல வே நாமும் பரலோகம் செல்ல பலபாடுகள் அனுபவிக்க வேண்டுமா? நாம் பாடுகள் அனுபவிக்க வேண்டாம் என்ற...


Continue reading...
 

நவம்பர் 2010 - விசேஷ செய்திகள்

December 4, 2010

 "கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்'' - இது சரியா?
                யோபு என்ற தேவ மனுஷனின் எருது கள், கழுதைகள், ஒட்டகங்கள் போன்ற வற்றை எதிரிகள் கொள்ளை யடித்து விட்டனர், வேலையாட்கள் வெட்டிப் போட...


Continue reading...
 

அக்டோபர் 2010 கேள்வி-பதில்கள்

November 6, 2010

சுரேஷ், அழகுமலை, திருப்பூர்
(1) எபிரேயு மொழியிலிருந்து பைபிளை தமிழுக்கு மொழி பெயர்த்தது யார்?
Ans:
 புதிய ஏற்பாடு, சீகன்பால்க் ஐயர் மூலமும், பழைய ஏற்பாடு, பெஞ்சமின் சூல்ச் மூலமும்
17ம் நூற்றாண...


Continue reading...
 

அக்டோபர் 2010 - விசேஷ செய்திகள்

November 5, 2010

இரட்சிக்கப்படாமல் மரித்தவர்களுக்கு மறுபடியும் இரட்சிப்பு உண்டா? 
                   1பேது3:19,20; 4:6; 1கொரி15:29 போன்ற வசனங்களை வைத்து, மரித்த பின்னும் இரட்சிக்கப்படுகிறதற்கு தருணம் உண்டு என்று சிலர் நம்ப...


Continue reading...
 

ஜூலை 2010 கேள்வி-பதில்கள்

October 6, 2010
Test
Continue reading...
 

ஜூலை 2010 - விசேஷ செய்திகள்

September 27, 2010

தேவனின் நாமத்தை தரித்துக் கொள்வது எப்படி?
                        நம் தேவன் ஒருவரே (God ஏலோகிம்); ஒரே தேவன் மூன்று ஆள்தத்து வமாயிருக் கிறார் (1யோ 5:7;1தீமோ2:5; எபே4:5,6). தேவன் ஒருவர் என்பதால் அவருக்கு தனிப்பட்ட பெ...


Continue reading...
 

ஆகஸ்ட் 2010 - விசேஷ செய்திகள்

September 19, 2010

ஆராதனைக்கு இசை தேவையில்லையா?


                          இசைக்கு மயங்காதது ஒன்றுமில்லை. இசையோடு பாடல் சேர்ந்து விட்டால் அது இன்னும் மகிமைப்படுகிறது. பாடலிலுள்ள கருத்துக்களை, ஈர்க்கும் படியாய் வெளிக் ...


Continue reading...
 
 
 

Make a Free Website with Yola.