விசேஷ செய்திகள்


"விசுவாச முழக்கம்" என்ற மாதந்திர பத்திரிகையில் வரும் செய்திகளை இங்கு அளித்திருக்கிறோம். உங்களுக்கு இப்பத்திரிகை வேண்டுமானால் எங்களுக்கு கடிதம்/மின்னஞ்சல்/SMS/தொலைபேசி மூலமாக தொடர்புகொள்ளலாம். 

மே 2011 கேள்வி-பதில்கள்

May 24, 2011

வினோத், வள்ளவிளை.
(1)யோவேல்1:6,7ன் விளக்கமென்ன?
Answer:
கடைசி நாளில் யூதாவுக்கு எதிராய் எழும்பும் அந்திகிறிஸ்துவைப் பற்றி சொல்லப் பட்டுள்ளது. இவன் சிரியாவிலிருந்து எழும்பு வான் என்று கணிக்கப்படுகிறது. யோவேல் 2:20ல் இதை வடதிசை சேனை என்று எழுதப்பட்டுள்ளது. நங்ங் எசே38,39; தானி11:41-45; 2தெச2:3-4; வெளி16:13-16; 19:11-21. திராட்சைச் செடி என்பது தெய்வீகத் தையும், அத்திமரம் என்பது அரசியலமைப் பையும் குறிக்கிறது. இவ்விரண்டையும் அழிப்பவனே வரப்போகும் பாழாக்குகிற அருவருப்பாகிய அந்திகிறிஸ்து.

(2)ரோ7:14-25ல் நியாயப்பிரமாணப்படி நடப்பதால் இப்படி சம்பவித்தது என்று எழுதுகிறாரா பவுல்?
Answer:
ரோ 1ம் அதிகாரம் தேவன் இல்லையென்று சொல்பவர்களுக்காகவும், 2ம் அதிகாரம் ஆத்திக புறஜாதி மக்களுக்காகவும், 3 முதல் 7 வரை நியாயப்பிரமாணத்தைக் கைக் கொள்ளும் இஸ்ரேலர் பற்றியும் எழுதப் பட்டடுள்ளன. 8ம் அதிகாரம் முதல்தான், இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களுக்குரியது. பவுல் நியாயப் பிரமாணத்தில் வாழ்ந்தாலும் அறிந்தோ அறியாமலோ, பாவம் செய்தபோது, விடுதலை செய்து நீதிமானாக வழி இல்லாதிருந்தான். இயேசுவே வழி என்று கண்டபின்தான் அவன் வாழ்க்கையிலே ஒரு பெரிய திருப்புமுனை உருவாயிற்று. நியாயப் பிரமாணம் ஆவிக்குரியதுதான்; ஆனாலும் ஒருவனையும் அது நீதிமானாக்க வில்லை. விடுதலை தரவுமில்லை.

(3)நம் ஆவியான மனிதனுக்கு வயது சொல்லப்படுமா? இல்லாவிட்டால் குழந்தை யாக மரிக்கிற ஆவி எப்படி இருக்கும்? அது கடவுளைப்பற்றி அறியாததால் பாவம் செய்ய வாய்ப்பில்லையா?
Answer: 
 நமது சரீரத்திற்கு வயது எதுவோ அதுதான் நமது ஆவிக்கும் வயது. அப்17:30ன்படி அறியாத காலங்களைப் பற்றி தேவன் கண்டு கொள்வதில்லை. எனவே சிறுபிள்ளை கள் நன்மை தீமை அறியத்தக்கதான வயதுக்குப் பின்தான் பாவம் செய்ய வாய்ப் புண்டு, அதிலிருந்துதான் பாவம் எண்ணப் படும். அதுவரைக்கும் மரிக்கும் பிள்ளை களுக்கு, பாதாளம் இல்லை. அவர்களுக்கு பரதீசோ, சொர்க்கமோ கொடுக்கப்படும் என்று நிதானிக்கப்படுகிறது.

(4) கொர்நேலியுவுக்கு இரக்கமாயிருக்க சித்தமாயிருந்த தேவன், மதர் தெரேசாவுக்கு ஏன் இரங்கவில்லை?
Answer:
மதர் தெரேசாமேல் தேவன் மிகுந்த இரக்கம் காட்டியதால்தான், கொர்நேலி யுவுக்கும் மேலாக தரும காரியங்களை அவர்கள் செய்தார்கள். கொர்நேலியு இரட்சிப்புக்கு ஒப்புக்கொடுத்தான். மதர் தெரே சா இரட்சிக்கப்படவில்லை. அவ்வளவு தான்.

(5) ஆமை, டால்பின் இவைகளை புசிக்க லாமா? இவைகளை உபத்திரவிக்கக்கூடாது என்று அரசாங்கம் சொல்கிறதே
Answer:
எவையெல்லாம் புசிக்கலாம்; எவை யெல்லாம் புசிக்கக்கூடாது என்பது இஸ்ரேல் மக்களுக்கு தேவன் தந்த சுகாதாரத்துக்கடுத்த நியாயப்பிரமாணம். அது நமது சூழ்நிலை, மனநிலை, உடல்நிலை, தேசநிலை எல்லா வற்றிற்கும் ஏற்றிருந்தால் அவைகளைப் நாமும் பின்பற்றுவதில் தவறில்லை. மற்றப்படி இயேசு சொன்னபடி “ராயனுக்குரியதை ராயனுக்கு செலுத்த வேண்டும்” என்பதால் அரசாங்க சட்டப்படி கீழ்ப்படிதல் நல்லது. நமக்கு கொடுத்திருக்கிறது சுயாயதீனப் பிரமாணம் தான் (யாக்1:25; 2:12).

(6) திராட்சைப்பழமோ, ரசமோ புசிக்கா திருந்தால், சிறு துளியாகிலும் தேவனோடு அன்பு காட்டுவதற்கு ஈடாகுமோ? (மாற் 14:25)
Answer:
மாற் 14:25ன்படி இயேசுதான் தம்முடைய பிள்ளைகளாகிய நாமில்லாமல், திராட்சைரசம் பானம் பண்ணுவதில்லை என்று நம்மீது உள்ள அன்பினால் சொல்லியிருக்கிறார். மற்றப்படி இரகசிய வருகைக்குப்பின் நம்மோடு சேர்ந்து அவர் பானம் பண்ணுவார். அதுவரை சபையாராகிய நாமோ 1கொரி11:25ன்படி அவருடைய மரணத்தை நினைவு கூறும் வண்ணமாய் அதைப் பானம் பண்ணியே ஆகவேண்டும்! அதுதான் நமது விசுவாசக் கிரியை! அப்படிப்பட்டவர்கள் தான் தேவனோடு அன்புள்ளவர்கள்.

(7) சில R.C பைபிளில் அப்8:37ஐ காணவில் லை. இவர்கள் வெளி22:18ஐ மறந்தார் களா?
Answer:
சில கைப்பிரதிகளில் (manuscripts) மட்டும் இந்த வசனம் இருப்பதால் தான் போடவில்லை என்று அந்தப் பக்கத்தின் கீழே விளக்கம் கொடுத்து, அங்கேயே அந்த வசனத்தை எழுதியிருக்கிறார்கள். வெளி 22:18ஐக் காட்டி குற்றம் சொல்வதில் அர்த்தமில்லை.

(8) யோசு4:9ல், அந்த கற்களை யோர்தானின் நடுவில் நாட்டினதாகவும், 4:20ல் கில்காலில் நாட்டினதாகவும் எழுதப்பட்டுள்ளதே, இரண்டும் ஒரே கல்லா?
Answer:
இரண்டு இடத்தில் நாட்டிய கற்களும் வெவ்வேறு 12 கற்களாகும் (யோசு4:3-8,19,20; யோசு4: 9,10)

பிபின், இருதாவூர், K.K.Dt.
(1) யோ21:22-24ஐ விளக்கவும்.
Answer:
யோவான் பத்மு தீவில் நாடு கடத்தப்பட்டு மடிந்து போனான். வச 23ல் இவன் மரிப்பான் என்று எழுதப்பட்டுள்ளது. ''இயேசு வரும்வரை யோவான் உயிரோடிருந்தால் உனக்கென்ன?'' என்று பேதுருவை கடிந்து கொண்டாரே ஒழிய அவர் வரும்வரை உயிரோடிருப்பான் என்று இயேசு சொல்ல வில்லை. (ஆசிரியரின் ""கருகலான சத்தியம்'' என்ற புத்தகத்தில் உள்ள ""யோவான் இன்னும் ஜீவிக்கிறாரா?'' என்ற செய்தியை வாசியுங்கள்.)

(2) தற்போது உலக வெப்பமயமாதல், தீவிரவாதம் பற்றி ஏதேனும் குறிப்புகள் வேதத்தில் உண்டா?
Answer:
செப்1:13-18 வசனங்களை வாசித்தால் புரியும். “ஆஸ்தி கொள்ளையாகும்; வீடுகள் பாழாய்ப் போகும்”- இது தீவிரவாதம். “அந்த நாள் உக்கிரத்தின் நாள்”;“அழிவும் பாழ்க் கடிப்புமான நாள்” “எரிச்சலின் அக்கினியால் தேசம் அழியும்”-அது உலக வெப்பமயம். இன்னும் பல வசனங்கள் உள்ளன. (ள்ங்ங் வெளி9:17,18)

(3) யோபு40,41ல் சொல்லப்பட்ட விலங்கு எது? அது தற்போது பூமியில் உள்ளதா? 
Answer: அவைகள், பிகமோத், லிவியாதான் போன்ற வை. பிகமோத் என்பது யானையைவிட பெரிய தாயிருக்கலா மென்றும், பழங்காலத்தில் இருந்திருக்கும் என்றும் கருதப்படுகிறது. தற்போது இருப்பதாக தெரிய வில்லை. லிவிய தான் என்பது கடலிலுள்ள பெரிய திமிங்கிலமா யிருக்கலாம் என கருதப்படுகிறது. லிவியாதான் என்ற பெயரில் சாத்தானைக் குறிப்பதாக 41ம் அதிகாரம் மூலம் அறியப் படுகிறது.

(4) மத்10:16 - பாம்பைப்போல் வினா என்றால் என்ன?
Answer:
வினா என்றால் ஜ்ண்ள்ங்-அறிவு.  பாம்பு தேவையில்லாமல் கடிக்க வெளிப்படாது. பாம்பை பழங்காலத்தவர்கள் தந்திரத்திற்கும், அறிவிற்குமான சின்னமாய் பயன்படுத் தினார்கள். நங்ங் ஆதி3:1; 2கொரி11:3. இது சாத்தானை சித்திரிப்பதாய் மத்23:33; வெளி12:9 சொல்கின்றது, இயேசு சொல்வதோ, தந்திரக்காரனாய் விழுந்து போகுமுன்னே இருந்த வலுசர்ப்பத்தின் அறிவு நமக்கு வேண்டும் என்பதாகும்.

(5) மத்10:34 - ஆண்டவர் இப்படிக் கூறு வதன் அர்த்தமென்ன?
Answer:
லுôக்12:49-53ஐயும் வாசியுங்கள். இயேசு பிரிவினையையோ, பட்டயத்தையோ கொடுக்க வில்லை. அவரின் சமாதான வார்த்தை யினால்-அவரை ஏற்றுக் கொள்வோருக்கும் ஏற்றுக் கொள்ளா தோருக்கும் குடும்பத்திலே சண்டைகள், சமாதானக் குறைவுகள், பிரிவினைகள் உண்டாகும் என்ற அர்த்தத்தில் இயேசு கூறினார்.

(6) மத்13:12ஐ விளக்கவும்?
Answer:
நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் நல்ல பலன் தருகின்றன. அதுபோல நல்லபடியாய் ஆவியிலே இரட்சிக்கப்பட்ட விசுவாசிகளுக்கு, வசனம் அதிகம் விதைக்கப்படும்போது, அவனது ஆவி பலங்கொண்டு, ஆத்மா மறுரூபமாகும்.  ஆவியிலே இரட்சிக்கப் படாதவனிடத்தில் விதைக்கப்பட்டால் பிசாசு எடுத்துக்கொள்வான். அது பாறையில், வழியருகே, வேலியில் விதைக்கப்பட்டது போலாகும்.

(7) பரலோகம்போக ஒருவர் கண்டிப்பாக பாஸ்டராகத்தான் இருக்கவேண்டுமா? உலகில் மற்ற வேலை பார்ப்பவர்கள் போகமுடியாதா?
Answer:
யார் அப்படிச் சொன்னது? இரட்சிக்கப்பட்ட அத்தனை விசுவாசிகளும் (பாஸ்டரும் விசுவாசிதான்) பரலோகம் போகலாம். பாஸ்டர் உத்தியோகம் என்பது சபையிலே கொடுக்கப்பட்ட ஊழியம் (எபே4:11-13). இவர்கள் இதிலே உண்மையும் உத்தமுமா யிருந்தால் பரலோகிலே விசேஷித்த கிரீடங்கள் கிடைக்கும்.

(8) மத்11:4ஐ விளக்கவும்
Answer:
தேவனுடைய ராஜ்யத்தை ஸ்தாபிக்க இயேசு வருமுன்னே எலியா தீர்க்கதரிசி வருவா னென்று மல்4:5,6 சொல்கின்றது. இங்கு சொல்லப்படும் யோவான்ஸ்நானன் இயேசு வின் முதலாம் வருகைக்கான வழியை ஆயத்தம் பண்ணும்படி மல்3:1ல் சொல்லப் பட்டவன். “இயேசுபிரசங்கிக்கும் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக் கொண்டு இயேசு கிறிஸ்துவை இஸ்ரேலர் விசுவாசித்திருந்தால், வருகிறவனாகிய முதல் எலியா இந்த யோவான் ஸ்நானன்தான்; இந்த வருகையே ராஜ்யத்தை ஸ்தாபிக்கும் வருகையாகி விடும்” என்று இயேசு சொல்கிறார். இஸ்ரேலர் ஏற்றுக் கொள்ளவில்லை; எலியாவும் அவனல்ல; இயேசுவின் அந்த வருகையும் பகிரங்க வருகை அல்ல. (இதுகுறித்து ஆசிரியரின் ""கருகலான சத்தியம்'' என்ற ஆராய்ச்சிப் புத்தகத்தில் ""யோவான் ஸ்நானன் எலியாவா?'' என்ற செய்தியை வாசியுங்கள்.

(9) மத்16:28ஐ விளக்கவும்?
Answer:
இயேசுவோடு நின்ற சீஷர்களில் சிலர், இவரின் இரண்டாம் வருகையைக் காணும் முன் மரிப்பதில்லை என்று இயேசு சொன் னார். அதன்படி 6 நாளைக்குப் பின்பு, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவரும் மறுரூபமலையில் இயேசுவின் இரண்டாம் வருகையை ஆண்டவர் காட்டினார்; அவர்கள் கண்டார்கள். இதைத் தான் 2பேது1:16-19ல் பேதுரு எழுதினான். (யோவான் இன்னும் ஜீவிக்கிறாரா? என்ற செய்தியை ஆசிரியரின் "கருகலான சத்தியம்'' என்ற நூலில் வாசியுங்கள்.)

(10) மத்19:16 - இயேசு நல்லவர்; அவர் ஏன் இப்படிக் கூற வேண்டும்?
Answer:
மத்19:17ல் இயேசு சொன்னதை ஆவி யானவ்ர் ஒத்தாசையோடு தியானியுங்கள். உலகிலே தேவன் மட்டுமே நல்லவர்; அவன் இயேசுவை “நல்லவர்” என்று சொன்னதால், இயேசு தன்னைத் தேவனென்று மறை முகமாகச் சொல்லுகிறார்.

(11) மாற்7:11 -  கொர்பான் காணிக்கை என்றால் என்ன?
Answer:
பெற்றோர்களை தங்களோடு வைத்து கவனிக்க இஷ்டமில்லாமல், அவர்களுக்கு உதவியும் செய்யாமல், அதற்குப் பதிலாக கடவுளுக்கு காணிக்கை கொடுப்பது என்று பரிசேயர்கள் சுயாதீனமாய் உருவாக்கின முறைமைதான் கொர்பான் காணிக்கை கொடுப்பது.

(12) மாற்7:27ஐ விளக்கவும்?
Answer:
இயேசுவை ஏற்றுக்கொண்ட இரட்சிக்கப் பட்டவர்கள் பிள்ளைகள்; இரட்சிக்கப்படாத வர்கள் எல்லாம் நாய்களைப் போன்றவர்கள். அப்பம் என்பது தேவனின் ஆசீர்வாதங்கள். வேதம் சொல்லும் எல்லா ஆசீர்வாதங்களும் அவருடைய பிள்ளைகளுக்கு மட்டும்தானே ஒழிய, மற்றவர்களுக்கு அல்ல. இந்த சத்தியம் CPM சபையில் போதிக்கப் படுகிற தற்காய் ஸ்தோத்திரம்.

(13) மனதில் தப்பான எண்ணங்கள் தோன்றினால் அதை மேற்கொள்வது எப்படி என்று விளக்குங்கள்?
Answer:
முதலில் உங்கள் தப்பான எண்ணங்களை ஆண்டவரிடம் ஒவ்வொன்றாய் தெரிவித்து விடுதலை கேளுங்கள். ஆவியானவரின் ஒத்தாசையோடு அவைகளை ஜெயிக்கத் தக்கதான பெலனைக் கொடுப்பார். இதை எந்த அளவுக்கு விசுவாசிக்கிறீர்களோ அந்த விசுவாசத்தின் அளவுப்படி உங்களுக்கு நடக்கும். விசுவாசத்திலே உறுதியும் பொறுமையும் தேவை.

ஏ.வி.ராயன், துôத்துக்குடி.
(1) ரோ3:5-8 ன்படி இரட்சிப்புக்குள் நடத்த ஒரு சத்தியத்தை திரித்து, சின்ன பொய்யை அவர்களுக்கு சொன்னால் அது பாவமா? உ.ம்:- நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டால் இவ்வுலகில் ஆபிரகாம்போல செல்வசீமானக வாழலாம் எனக்கூறுவது பாவமா?
Answer:
நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வது-பொய்சொல்வது-நாங்களல்ல என்று பவுல் கூறுவதைப் பாருங்கள் (ரோ3:8). எந்த பொய்யைச் சொன்னாலும் வேதத்தின்படி அது பாவம்தான். நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டால் இவ்வுலகில் ஆபிரகாம் போல செல்வச்சீமானாக வாழலாம் எனக் கூறுவது பொய்யல்ல; உண்மையிலும் உண்மை. இதைச் சொல்லுங்கள். see 2கொரி8:9; கலா3:7,9; ஆதி24:35.

(2) ரோ7:25ல் பவுல், தன் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலே பாவப்பிரமாணத்திற்கும் ஊழியம் செய்கிறதாக கூறி, ரோ8:2ல் ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் பாவப் பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கியதாக கூறுகிறது சரியா? இன்றைக்கும் இரட்சிக் கப்பட்ட கிறிஸ்தவர்கள் பாவப் பிரமாணத் திலிருந்து விடுதலையடைய முடியாதிருக் கிறார்களே காரணம் என்ன?
Answer:
பவுல் கூறியது சரிதான். கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்களிடம் இருந்தால் - அதன்படி அவர்கள் நடந்தால்-பாவப்பிரமாணத்திலிருந்து நிச்சயம் விடுதலை கிடைத்தே தீரும்.

(3) ரோ3:30ன் சரியான விளக்கம் என்ன?
Answer:
விருத்தசேதனம் உள்ளவர்களுக்கும், இல்லா தவர்களுக்கும் தேவன் பேரில் வைக்கும் விசு வாசம் கண்டிப்பாய் தேவை. அதுவே இருதிறத் தாரையும் நீதிமான் களாக்குகிறது (ரோ3:24).

(4) ""1யோ1:8ன்படி கிறிஸ்தவர்களும் இவ்வுலகில் இருக்கும்வரை சாத்தானால் பாவப்பிரமாணத்துக்கு அடிமைப்பட்டே வாழ்வார்கள்; அவ்வப்போது பாவத்தை அறிக்கையிட்டு மன்னிப்பு பெறவேண்டும்'' எனசிலர் போதிப்பது சரியா? 
Answer: மகா தவறு. இரட்சிக்கப்பட்டவன் பாவப்பிரமா ணத்திலிருந்து விடுதலை அடைந்து விட்டான் (ரோ8:2); அவன் அதற்கு அடிமையல்ல. அது அவனை ஆளாது. ஆனாலும் அவன் பிசா சின் உலகத்தில் வாழ்வதால், அறிந்தோ அறி யாமலோ பாவம் செய்ய துôண்டப்பட்டு பாவம் செய்கின்றான். இதிலிருந்து மன்னிப்பு பெற்றே ஆக வேண்டும். இது வேத நியதி.

(5) ஒரு மாதாந்திர கிறிஸ்தவ பத்திரிக்கை யில் ""தேவன் தன் பிள்ளைகளுக்கு வியாதி யை கொடுக்கமாட்டார்; தண்டிக்கமாட்டார்; குறை களை அனுமதிக்க மாட்டார்; தன் பிள்ளைகளை ஆசீர்வதித்துக் கொண்டே இருப்பார்'' என போதிப்பது உண்மையல்ல. பாவத்தில் விழுந்த கிறிஸ்தவனைத் திருத்த, அவனை வியாதி, வறுமை, போன்ற வைகளை கொடுக்கிறார் என்பதுதான் உண்மையா?
Answer:
அந்தப் பத்திரிக்கையில் போட்டிருப்பது சரியே! ஆனால் பாவத்தில் விழுந்தவனை சிட்சித்து நேர்நிலைப்படுத்த தேவன் உபயோகிப்பது அவ ரது வார்த்தையைத் தானே ஒழிய (சங்50:17; நீதி17:3எபி12:8;சங்105:19), அவர் சிலுவையில் ஒழித்த பிசாசின் கிரியைகளான வியாதி, வறுமை போன்றவைகளை அல்ல (1யோ3:8).

(6) சங்89:31ல் தேவ கட்டளையை மீறி நடந்த தால், சங்89:38-46 வசனத்தில் தேவனை அன்பற்றவராக,தண்டிக்கிறவராக காட்டி யிருப்பது எப்படி?
Answer:
சங்89:38-46ல் சொல்லப்பட்டதெல்லாம் தேவகட்டளையை மீறி நடந்ததால் இஸ்ரே லர்கள் சுதந்தரித்துக்கொண்ட சாபங்களாகும். ஆசீர்வாதத்தையும், சாபத்தையும் தேவனே நமக்கு முன்னே வைத்து, நாமே சுதந்தரித்துக் கொள்ளவேண்டும் (உபா11:26-28; 30:15:19). ஆசீர்வாதத்தை தேவனே தருகிறார் என்று எழுதுகிற எழுத்தாளர்கள், இப்படிப்பட்ட சாபத் தையும் தேவனே தருகிறார் என்று எழுதுகி றார்கள். இது சம்பந்தமாய் விசுவாச முழக்கம் (18) ல் உள்ள ""வேதம் ஆவியானவர் டிக்டேட் பண்ணி எழுதப் பட்டதா?'' என்ற செய்தியை வாசியுங்கள்.

(7) நியாயப்பிரமாணம் ஏற்கெனவே முடிந்த நிலையில் ஏன் 1யோ3:4ல் நியாயப் பிரமாண மீறுதல்பற்றி எழுதவேண்டும்?
Answer:
1யோ3:4ல் சொல்லப்பட்டது “கஅர”. “கஅர” என்றால் சட்டம்-கற்பனை-வசனம்-வேதம். வசனத்தை மீறுவதே பாவம் என்றுதான் எழுதப்பட்டுள்ளதே தவிர, மோசே மூலமாய் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தைக் குறிக்கவில்லை (நங்ங் 1யோ2:7).

 

மே 2011 - விசேஷ செய்திகள்

May 24, 2011

1. அந்திகிறிஸ்து எங்கிருந்து வருவான்?

1யோ4:3; 2:8; மத்24:24ன்படி, அநேக அந்தி கிறிஸ்துவின் ஆவிகள் இப்பொழுதே கிரியை செய்கின்றன. ஆயினும் அசல் அந்திகிறிஸ்து, 2தெச 2:6-8ன்படி, பரிசுத்த ஆவியான வரின் வல்லம...


Continue reading...
 

ஏப்ரல் 2011 கேள்வி-பதில்கள்

May 23, 2011

ஜெயமேரி ஜோசப், மும்பை.
(1) வசனமுழக்கத்தில் “கள்ள உபதேச சபைகள்” என்ற தலைப்பில், 10ம் வரியில், “அப்பம்தான் இயேசுவின் சரீரம்; ரசம்தான் அவரின் ரத்தம்” என்று எழுதியுள்ளீர்கள். இது கள்ள உபதேசம் ...


Continue reading...
 

ஏப்ரல் 2011 - விசேஷ செய்திகள் - II

May 23, 2011

4. பெந்தேகொஸ்தே சபைகளில்- குறிப்பாக சி.பி.எம் சபையில் உள்ள தவறான உபதேசங்கள்

சிலோன் பெந்தெகொஸ்தே மிஷன் (சி.பி.எம்) என்ற பெயர் மாறி, த. பெந்தெ கொஸ்தேமிஷன் என்று தற்போது அழைக்கப் படுகிறது. செ...


Continue reading...
 

ஏப்ரல் 2011 - விசேஷ செய்திகள் - I

May 23, 2011

1. இயேசுவைக் கொல்ல கற்களை தூக்கியது ஏன்?


தேவபிள்ளையே! கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை கொல்லுவதற்காய் இரண்டு மூன்று தடவை யூதர்கள் கற்களை துôக்கினார்கள் என்றும், இயேசு மறைந்து விட்டார் என்ற...


Continue reading...
 

மார்ச் 2011 கேள்வி-பதில்கள்

April 4, 2011

பெயர் போடாத வாசகர்
(1)பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வாஞ்சையில்லாத ஆவிக்குரிய சபை ஊழிய ருடன் இணைந்து ஊழியம் செய்ய லாமா?
Answer:
 ஊழியர் என்றாலே பரிசுத்தஆவி பெற்றே ஆக வேண்டும் (அப்1:8; 10:38). பரிசுத...


Continue reading...
 

மார்ச் 2011 - விசேஷ செய்திகள்

April 4, 2011

ஒரே தேவன் இருவராய், மூவராய் ஒரே நேரத்தில்-ஒரே காரியத்தில்-ஒரே வசனத்தில் வெளிபட்டுள்ளரா?

                  தேவன் ஒருவரே என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை. ஒரே தேவன் மூன்று ஆள்தத்துவமாயிருக்கிறார் என...


Continue reading...
 

பிப்ரவரி 2011 கேள்வி-பதில்கள்

March 3, 2011

26-1-11ல் பண்ருட்டி, அண்ணா கிராமம். வானவில் தேவாலயத்தில் நடந்த
கருத் தரங்கில் கேட்கப்பட்ட கேள்விகள்
(1)இயேசுகிறிஸ்து வாழ்ந்த 33.5 ஆண்டு களில் மரியாளைப் பார்த்து எத்தனை முறை அம்மா என்று அழைத்த...


Continue reading...
 

பிப்ரவரி 2011 - விசேஷ செய்திகள்

March 3, 2011

1. கனி கொடுக்கும் காலம் இல்லாவிட்டாலும் பழம் இருக்குமா?

           “அத்திப்பழம் காலமாயிராதபடியால் அவர் அவ்விடத்தில் வந்தபோது, அதில் இலைகளையல்லாமல் வேறொன்றையும் காணவில்லை” (மாற் 11:13). “இனி ஒரு...


Continue reading...
 

ஜனவரி 2011 கேள்வி-பதில்கள்

March 3, 2011

ஏ.வி.ராயன், துத்துக்குடி.
(1)யோ6:40ல் இயேசுவினிடத்தில் விசுவாச மாய் இருக்கிறவன் மட்டுமே நித்திய ஜீவனைப் பெறுவான் என்று கூறியிருக்க, காட்சிகளில் வந்த மாதா சொன்னவை களையும் விசுவாசித்து நடந...


Continue reading...
 
 
 

Make a Free Website with Yola.